குடும்பசண்டை என்பது இ ந்தக் காலத்தையது அல்ல
ராமன் ஏக பத்தினி விரதனுமல்ல .போற்றத்தக்க குணங்களைக் கொண்டவனுமல்ல .வால்மீகி ராமாயணம் முழுவதும் படியுங்கள்
⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐⍐
இராவணன் தங்கை சூர்ப்பனகை பொழுது போக்க செல்கிறாள்.அங்கே இராமனை காணுகிறாள்.அவனை காதலிக்கிறாள்…..இப்படி இராமாயணம் கூறிக் கொண்டு வந்து, தகாத முறையில் நடக்க முற்பட்டதால் தம்பி இலக்குவன் கொடிய தண்டனை கொடுக்கிறான்,என்று தொடருகிறது இராமாயணம்.
ஒருவனை ஒருத்தி காதலிப்பது என்பது மனிதன் தோன்றிய காலத்திலிருந்து வழக்கமாக உள்ளது யாவரும் அறிந்ததே. ஆனால்
கடவுள் அவதாரம், ஒரு பெண்ணுக்கு கொடுக்கும் தண்டனையா என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள். இந்த கொடூர சம்பவத்தை இராவணனுக்கு அவன் தங்கை தெரிவிக்கிறாள். கோபம் கொண்ட இராவணன் சீதையை சிறை பிடிக்கிறான்.
அது இராவணனின் தண்டனையே தவிர, இராமனுக்கு உணர்த்துவதற்காகவே தவிர சீதை மேல் காதல் கொண்டல்ல.
இவைகள் திரிவு படுத்தப்படுகின்றன. அனுமன் சீதையை இலங்கையில் சந்தித்தபோது, உங்கள் கவலையால் இராமன் மது, மாமிசத்தை விட்டு விட்டார், என்று கூறுவதை
வால்மீகி இராமாயணம் சுந்தர காண்டத்தில் சர்க்கம் 37 குறிப்பிடுகிறது.
ஆனால் இதை சோ அவ்ர்கள் குறிப்பிடும் போது, இராமன் மதுவல்ல தேனை அருந்தினார் என வக்காலத்து வாங்குகிறார். ஆனால் மாமிசம் பற்றி மறந்து விடுகிறார்.
மது விலக்கை தேன் விலக்கு என்று குறிப்பிடலாமா?
இந்த சமயத்தில் இருக்கு வேதத்தில் மதுவையும் மாமிசத்தையும் பயன்படுத்தியதை எழுதி வைத்திருக்கிறதே.
தமிழர்களுடன் போர் நடத்தியதையும், தமிழர்களிடம் இருந்து தங்களைக் காப்பாற்றும்படி யாகங்கள் நடத்தியதையும் குறிப்பிடுகிறதே,
அஸ்வமேத யாகம் சொல்லப்படுகிறதே ஏன் மறைக்கிறார்கள்?
நோக்கம் மூட நம்பிக்கை,
சாதி ,இவற்றை தமிழர்களிடம் பரப்பி, அவர்கள் கல்வியை அழிப்பதும்,
கல்வி கற்காது தடை செய்வதும் தான்.
வால்மீகி ராமாயணப்படி, ராமன், லட்சுமணன், சத்துருகன்களே யாருக்குப் பிறந்திருக்கிறார்கள் தெரியுமா?
குழந்தை இல்லாத தசரதன், 3 யாகப் பார்ப்பனர்களை அழைத்து தனது மனைவியை, அந்த 3 புரோகிதப் பார்ப்பனர்களிடம் ஒப்படைத்து தனது மனைவியிடம்,
நீ என்னைப் போலவே இவர்களையும் பாவி என்று கூறுவதாக வால்மீகி ராமாயணம் கூறுகிறது.
அப்படிப் பிறந்தவர்கள்தான் ராமன் உட்பட நான்கு சகோதரர்கள்.
வால்மீகி ராமாயணத்தில் உத்திர காண்டத்தில் இது குறிப்பிடப்படுகிறது.
ஆனால், கம்பன், இதை எல்லாம் மறைத்து விட்டான்.
‘சம்பூகன்’ என்ற சூத்திரன் – பார்ப்பன ருக்குரிய தவத்தை செய்ததாலேயே – பார்ப்பன தர்மம் கெட்டுப் போய்விட்டது என்று, ஜாதியில் குறைந்தவன் என்ற காரணத்தினால் ராமன் தன் வாளால் சம்பூகனை, தலையைச் சீவிக் கொன்றான்.
இவற்றைச் சொல்ல விரும்பாத கம்பன், உத்தர காண்டத்தை எழுதாமலேயே விட்டுவிட்டான்.
இராமன் ஏகபத்தினி விரதனா?
இராமன் சீதையை மனைவியாக, இளவரசியாக மணந்து கொண்டாலும் அவர் தன்னுடைய காமஇன்பத்திற்காக அரசப்பழக்க வழக்கங்களுக்கிணங்க இன்னும் அநேகப் பெண்களை மணந்து கொண்டார்.
இதை வால்மீகி இராமாயணத்தை மொழி பெயர்த்த சீனிவாசங்கையார், அயோத்தியா காண்டத் தின் 8ஆவது அத்தியாயத்தில் குறிப்பிடுகிறார்.
இது அவரின் கருத்தல்ல,மொழிபெயர்ப்பு.
கடவுள் இராமன் சொன்னான்,
பெண்களை நம்பக்க கூடாது. மனைவியிடம் இரகசியங்களைப் பேசக் கூடாது. இதுவும் வால்மீகி இராமாயணம் அயோத்தியா காண்டம், அத்தியாயம் 100 சொல்கிறது.
கல்யாணத்தின்போது சீதாவுக்கு 6 வயது. ராமனுக்கு 12 வயது.என்ன சொல்கிறார், வால்மீகி
இராமாயணத்தை ஆதாரம் காட்டி Dr.அக்னி ஹோத் ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.
ஆறு வயதில் அவளும் நோக்கி னாள்,அவனும் நோக்கினாள் -
இது கம்பன் தந்தது.
இவற்றை மறைக்க ஆரியத்திற்கு துணை போய்,
வால்மீகி இராமாயணத்தை கம்பர் மாற்றி எழுதியது ஏன்?
இந்திரனால் வன்புணர்வுக்கு உள்ளாக்கப்பட்டதால் , கௌதம மகரிஷியின் மனைவி அகலிகை,
மகரிஷியால் சாபமிடப்பட்டு கல்லாக இருந்த நிலையில் ,
இப்படிப்பட்ட குணத்துக்குரிய இராமனின் கால் பட சாப விமோசனம் கிடைத்ததாம்.
கெடுக்கப்பட்ட அகலிகைக்கு மன்னிப்பாம் ,
தொடப்படாத சீதைக்கு பல தண்டனைகள்.
எப்படிக் கதையளக்கிறார்கள்.
சீதை காட்டில் இருந்து மீண்டாள். கட்டிய புருஷனே அவளைத் தீக்குளிக்கச் சொன்னான்.
சொன்னது அவனளவில் நியாயம் என்றாலும்,
எந்தக் குற்றமும் செய்யாத சீதா, கணவன் தன் மீது சந்தேகப்பட்டானே என்று துடித்துப் போனாள்.
தீ கூட அவளைச் சுடவில்லை. ஆனால், வார்த்தைகள் சுட்டன.
வீட்டுக்கு வந்தாள். பட்டாபிஷேகம் முடிந்து சில காலம் கணவனுடன் சுகவாழ்வு.
இப்போது அவள் கர்ப்பிணி. அயோத்தியின் வாரிசுகளை[லவ, குச ] சுமந்து கொண்டிருக்கும் அவளை, யாரோ ஒரு குடிகாரன் மயக்கத்தில் தன்னை உணராத நிலையில் பிசத்தினான்
என்பதற்காக நிரந்தரமாக ஒதுக்கி வைக்கிறான் ராமன்.
என்ன கொடுமையப்பா இது! சீதைக்கு என்ன செய்கிறோம் என்பதே புரியவில்லை. "தனக்கு தானே நிகர் என்ற பெருமையுடைய தசரத சக்கரவர்த்தியின் குமாரர் ராமபிரான்,
எனக்கு செய்த இந்தக் கொடுமையை நீங்கள் கேள்விப்பட்டால் துவண்டு போவீர்களே!
என்ன செய்வேன்! ராமனின் ஆட்சி என்றாலே நல்லாட்சி என்று தான் பொருள்.
அந்த நல்லாட்சி நடத்துபவரின் மனைவியான எனக்கு மட்டும் ஏன் இந்த வனவாசத் தண்டனை? எதற்காக எனக்கு இந்தத் துன்பங்கள் வந்தன?"
சிந்தித்தாள் சீதை
உடனே
சீதை "லட்சுமணா! நீ நாடு திரும்பு.
உன் அண்ணனிடம், என்னைச் (சீதா) சொல்லிக் குற்றமில்லை, உங்களைச் சொல்லியும் குற்றமில்லை,
எல்லாம் என் விதி.
அது மட்டுமல்ல! ஒருவன் ஒரு பழியைச் சொன்னது என்பதற்காக, அதையும் ஏற்று என்னைப் பிரிந்தாரே உன் அண்ணன்!
இப்படி பழிக்கு அஞ்சுகிற உன் அண்ணனுடன் வாழ்வதை விட அவரை பிரிந்திருப்பதே மேல் என நான் சொன்னதாகச் சொல்"
என்று கோபத்தோடு சொன்னாள்.
(யாரோ ஒரு குடிகாரன் பேச்சை கேட்டு சீதையை துரத்திய இராமன்
கைகேயினால் தந்தையின் கூற்றினை செவிமடுத்து கானகம் புறப்பட இராமன் ,
கானகம் செல்லும்போது தெருநிறைந்த மக்கள் அவர்கள் அழுத நிலையில், இராமனைக் காடு செல்லவேண்டாம் என்று பலரும் கோஷமிட்டது மட்டும் ஏன் செவிமடுக்க முடியவில்லை.)
லட்சுமனன் தேர் மறைந்தது கண்டு,சீதை கதறினாள்.
கடவுளே
மனைவி என்ற உரிமையில்லாவிட்டாலும், ஒரு பெண் என்ற இரக்கசிந்தனையைக் கூட அந்த ராமனின் மனதில் இருந்து எடுத்து விட்டாய்!
இப்படி கொடுமை புரிந்த ராமனைப் பற்றி வாய் திறவாத இந்த உலகத்தை என் மீது மட்டும் களங்கம் சுமத்த வைத்தாயே! அது ஏன்? என்றெல்லாம் ஆவேசப்பட்டாள்...
லவகுசர்கள் அரண்மனைக்குள் வந்தனர்.
அப்பா
சீதாதேவியை அன்புத்தாயை வரச்சொல்வீர்களா? என்றனர்.
உன்னை இனியும் காட்டில் விட்டு வைக்க மாட்டேன். இங்கு வரவழைப்பேன். இலங்கையிலே, நீ தீயால் சுடப்பட்ட ரத்தினமாக வெளிப்பட்டதை நம்பாத அயோத்தி ஜனங்கள், இன்னும் ஒருமுறை நீ தீயில் எரிவதைக் காணட்டும். உன் கற்புத்திறன் இந்த ஜனங்களுக்கும் தெரியட்டும் என மனதில் எண்ணியவராய், லவகுசர்களிடம் நடந்ததைச் சொன்னார்.
லவகுசர்கள் கொதித்து விட்டனர்.
ஏ .........அப்பா ராமா! என்ன காரியம் செய்தாய்? அயோத்தி மக்கள் சந்தேகப்பட்டார்கள் என்றால் அதைப்பற்றி உனக்கென்ன கவலை!
அவர்களோடு சேர்ந்து நீயும் தானே சந்தேகப்பட்டு அனுப்பியிருப்பதாக உலகம் சொல்லும்!
உன் நெஞ்சம் என்ன கல்லா! மனைவியே இல்லாமல் அஸ்வமேதம் நடத்த உனக்கென்ன தகுதி இருக்கிறது? என கண்கள் சிவக்க கோபத்துடன் கேட்டனர்
அடே சித்தப்பா
சத்ருக்கனரே! மனைவியை வெறுத்து ஒதுக்கி, காட்டுக்கு அனுப்பியவன்,
கட்டியவள் மீது சந்தேகம் கொண்டு தீக்குளிக்கச் செய்தவன்,
எல்லாவற்றுக்கும் மேலாக துணையே இல்லாமல் யாகம் நடத்தி உலகாள நினைப்பவன்.
..இவனது ஆட்சி இந்த பூமியில் எப்படி வரலாம்?
ஒருவேளை, உமது சகோதரன், இந்த பூமியெங்கும் ஆட்சியைப் பிடித்தால், எல்லாருமே மனைவி மீது சந்தேகப்படுங்கள் என்று சட்டம் போட்டாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை.
அப்படிப்பட்ட ஒருவனுக்காக, சகோதரனான நீரும் புறப்பட்டு வந்து விட்டீர். என்ன அநியாயம்? என்றனர் லவகுசர்.
இப்ப ராமர் பரதனுக்கு சொன்னதை நினைவு கூறுங்கள்
Ayodhya kandam, Chapter 100/verse 49 "Women should not be trusted" and that "Secrets should not be confided to the wife"
தமிழர்களிடம் இவை எடுபடாது என்பதால் கம்பன் உண்மைகளை மாற்றி எழுதினார்.
இப்படி தமிழர்களின் வரலாறுகளை மறைத்து,தங்கள் போலிகளை புகுத்தி நம்மை போதையில் வைத்திருக்க முடிவு செய்தது ஆரியம்.
நாம் அதைக் கண்டு கொள்ளாது தொடர்ந்து ஏமாறிக் கொண்டிருக்கிறோம்.
கடலில் நம் நிலம் இருக்கிறது,20 ஆயிரம் ஆண்டுகள் பழமை வாய்ந்தது என்று சொல்லி பெருமை பேசிக் கொண்டால் போதுமா?
நம் வரலாறுகளை மறைத்து ஏமாற்றுவதை இனம் காண வேண்டாமா?
உண்மைகளை தெரிந்து கொண்டு இனியும் ஏமாறாமல் இருக்க வேண்டாமா?
பல வரலாறுகள் வட நாட்டவர்களால்,மத்திய அரசால்,ஆரியர்களால் மறைக்கப்பட்டு மாற்றப்பட்டு விட்டதற்குக் காரணம், 20 ஆயிரம் வருடங்களுக்கு மேற்பட்ட தமிழனின் நாகரீகம் தெரிந்து விடுமானால்,
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் வந்த ஆரியர்களின் உண்மைகள் தெரிந்து விடும் என்ற அச்சம் தான்.
அதனால் தான் வெளிநாட்டு ஆய்வாளர்கள் ஆய்வு முடிவுகளை வெளியிட்டும் கூட, கடலில் ஆழ்ந்து கிடக்கும் தமிழர் நாகரீக சிதைவுகளை வெளிக் கொணர மத்திய அரசு முன்வரவில்லை.
தொல்பொருள் ஆய்வுகளைக் கூட தங்கள் கட்டுப்பாட்டில் வைத்துக் கொண்டிருக்கிறது.
வெளி நாட்டவர்கள்,நம் நாட்டு நடுநிலை ஆய்வாளர்கள் ஆய்வு செய்ய, ஒப்படைக்க அல்லது அவர்கள் சுயாதீனமாக ஆய்வுகள் நடத்த ஏன் இந்திய அரசு அனுமதிக்க மறுக்கிறது?
குழப்பங்கள்
ராவணின் யாகசாலையில் பல காலம் பணிபுரிந்த அக்னிபகவான் பல பாவங்களை செய்து பல முனிவர்களையும் சாதுக்களையும் ராவணின் கட்டளைப்படி அழித்து வந்தார்.
இந்த பாவத்தை போக்க வேண்டும் என்றால் லட்சுமி தேவி தன்னுள் குதித்து பாவ விமோட்சனம் தர வேண்டும் என்று மகாவிஷ்ணுவிடம் முன்னரே கேட்டு கொண்டிருந்தார்.
அதன்படியே லட்சுமி தேவி சீதாவின் அவதாரமாக பிறந்தார்.
சீதாவின் தூய்மையும், பக்தியும் அக்னி பகவானில் மூழ்கி எழுந்திருக்கும் போது அவரது பாவங்களும் களையப்பட்டு மாயை சீதா தேவி உண்மையான சீதா தேவியாக உருவெடுத்து வெளியே வந்தார் என்றால் புராணம் கூறுகிறது. ஏனெனில் நெருப்பை சுத்தமாக்கும் வல்லமை படைத்தவள் மகா லட்சுமி தேவி.
என்று சிலர் கூறித் தப்பிக் கொள்கிறார்கள் .
இன்னும் சிலர் இப்படியும் வாதிடுவர்
எங்கு பார்த்தாலும், “சீதைக்கு அநீதி இழைக்கப்பட்டுவிட்டது. அவள் அடிமைபோல நடத்தப் பட்டாள்! கற்பிற்கு இலக்கணமாகத் திகழ்ந்த அவளுக்குக் காலம் முழுதும் கண்ணீரே பரிசாகக் கிடைத்து! இப்படிப்பட்ட அநீதி இழைத்தவனை, கொடுமைக்காரனை, அவதாரபுருஷன் என்றும், நேர்மையின் மறு உருவம் என்றும், அறநெறியாளன் என்றும் எப்படிப் போற்றமுடியும்?
“மனைவியை மதிக்கத் தெரியாதவனை மகேசன் எனப் புகழலாமா? ஒருமுறை தீயில் புகுந்து மீண்டவளை மீண்டும் எவனோ சொன்னான் என்று கானகம் அனுப்பிய கல்நெஞ்சனல்லவா இவள் கணவன்! அப்படியாவது அவளைக் கானகத்தில் நிம்மதியாக இருக்கவிட்டானா? மீண்டும் உன் கற்பை நிருபித்துக்காட்டு என்று சொல்லி, அவளை மனம் உடையச்செய்து, உயிர்துறக்கச் செய்துவிட்டானே!”
இந்தக் குழப்பத்தை ஏன் கூறுகிறேன் என்றால்
வாய் போற்றும் .வாய் தூற்றும்
அதாவது
ராமாயணத்தின் கடைசி அத்தியாயத்தில் ராமன் வனவாசம் முடிந்து அயோத்தியா திரும்புகிறான், அரசனாக முடி சூட்டப்படுகிறான். நகரத்தில் என்னவெல்லாம் நடந்து கொண்டிருக்கிறது என அரசவையில் இருப்போரிடம் விசாரிக்கிறான். ஊரில் இருப்பவர்கள் எல்லோரும் ராமனின் மனைவியின் நடத்தையை பற்றி கிசுகிசுப்பதாக சொல்லப்படுகிறது.
ராவணன் சீதையை கடத்திக் கொண்டு போன பிறகு, ராவணனின் அரண்மனையில் நான்கு மாதங்கள் என்ன நடந்தது என்பது மக்களுக்கு தெரியாது. ஊரில் அவருடைய நடத்தை குறித்த விவாதங்கள் நடக்கின்றன்; இப்படியான கறை படிந்த முத்திரையுடன் இருக்கும் ஒருவர் அரசருக்கு அருகில் அரியணையில் அமரக் கூடாது என்கிறார்கள் சிலர்.
இந்த செய்தியை கேட்டதும், சீதையை தன்னுடைய ராஜ்ஜியத்தில் இருந்து விலக்கி வைக்க நினைக்கிறான் ராமன். வனத்திற்கு செல்ல விரும்பும் சீதையை அங்கே கூட்டிப் போகும் லக்ஷ்மணன், ஏன் அவள் இனி அயோத்தியா திரும்ப முடியாது என்பதையும், உலகிற்கு அவள் ராமனின் மனைவி என்று சொல்லக் கூடாது என்பதையும் தெரிவிக்கிறான். இந்த செய்தியை கேட்டு உடைந்து போகும் சீதை, கதறி அழுகிறாள்.
வனத்தில், வால்மீகியின் ஆசிரமத்தில் தங்கியிருக்கும் சீதை, அங்கே ராமனின் மகன்களான லவனையும் குசனையும் பெற்றெடுக்கிறார். தன்னுடைய அடையாளத்தையும், அவர்கள் ராமனின் மகன்கள் என்பதையும் ரகசியமாக வைத்து அவர்களை வளர்க்கிறாள்.
தன்னுடைய ஆசிரமத்தில், வால்மீகி, ராமனை பற்றிய பாடலை ராமாயணமாக எழுதுகிறார். இந்த செய்தி லவன், குசன் வழியே ராமனுக்கு செல்கிறது. மேன்மை என்றால் என்ன, அரசனாக இருப்பது என்றால் என்ன, சீதையை ஊரைவிட்டு விலக்கி வைப்பது எப்படி அவருடைய பொதுமதிப்பை கெடுக்கிறது என்பதை ராமனுக்கு உணர்த்துவதற்காக இது நடந்திருக்கலாம். மரபுப்படி ராமன் ’ராமச்சந்திரன்’ என்று அழைக்கப்படுகிறான். ராமன் சூரியவம்சத்தை சேர்ந்தவனாக இருந்தாலுமே, அவன் சீதையை நடத்தும் விதத்தினால் அவனுடைய மதிப்பு நிலவினால் மறைக்கபடுகிறது என்பதை உணர்த்தவே அவனுடைய பெயரில் ‘சந்திரன்’ வருகிறது என ஒரு பழங்கதை சொல்கிறது.
ராமாயணத்தில் சீதை நாடுகடத்தப்படும் அத்தியாயம் சர்ச்சைக்குரிய ஒன்று. பலர் அப்படி ஒரு அத்தியாயமே ராமாயணத்தில் இல்லை;உண்மையில் ராமன் வனவாசம் முடிந்து அயோத்தியா திரும்பி முடிசூடப்படுவதோடு ராமாயணம் முடிந்தது,இந்த அத்தியாயம் பின்னாளில் வந்த இடைச்செருகல் என்பார்கள். வேறு சிலர், ராமன் தன் தனிப்பட்ட நலனை விடவும் மக்களை பெரிதாக மதித்தான் என்பதை நிறுவ இந்த கதையை முக்கியமானதாக நினைப்பார்கள். இப்போது, நீதி வேண்டி கேள்விகள் கேட்கப்படுகின்றன; போலிச் செய்தியினால் சீதைக்கு பெரும் அநியாயம் நடந்திருக்கிறது. சிந்தனையாலும், மனதாலும் தன் கணவரிடம் பக்தியோடு இருந்தவள் சீதை. ராவணனிடம் இருந்து விடுவிக்கப்பட்ட உடனேயே தன்னுடைய நடத்தையை நிரூபிக்க திக்குளிக்க துணிந்தவள் சீதை.
இருந்தாலுமே, நாம் வழக்கமாக பார்க்க தவறும் ஒரு விஷயத்தை கவனிக்க வேண்டும். ராமன் மறுமணம் செய்து கொள்ளவில்லை. அவன் ஒரு அரசனாக இருந்தாலும், அரச சடங்குகளை செய்ய வேண்டும், அரச பரம்பரைக்கு வாரிசு கொடுக்க வேண்டும் எனும் கடமை இருந்தாலுமே ராமன் மறுமணம் செய்யவில்லை. இதன் வழியே ராமன் சீதைக்கு தான் தன்னை அர்ப்பணித்திருந்தான் என்பது தெரிகிறது.
என்று வாதிடுவோரும் உண்டு
இந்து புராணங்களிலேயே தன்னுடைய மனைவிக்கு உண்மையாக இருக்கும் ஏக பத்தினி விரதனாக இருப்பது ராமன் மட்டும் தான். தனக்கு அருகில் சீதையின் பொன் சிலையை வைப்பதனால், சீதை சிந்தனையாலும் மனதாலும் பத்தினி என்பதை நிறுவுகிறான் ராமன். அவன் அளவில் சீதை தூய்மையானவள். இருந்தாலும், மக்கள் அவளை சந்தேகிப்பதனால், அவளை நாடுகடத்துகிறான். அரச அதிகாரத்தை நிறுவ மதிப்பும் மரியாதையும் முக்கியக் காரணியாக இருப்பதால், அரச விதிகளுக்கு கட்டுப்பட்டு, மக்களை மனதில் வைத்து சீதையை வெளியேற்றுகிறான்.
என்று ஒரு சிலர் வாதம்
உண்மைக் கதையைத் திரித்து ஒருவனை இறைவன் அவதாரம் என்பதும், மற்றொருவனுக்குப் பத்துத் தலைகளை மாட்டி வைப்பதும், இலங்கை மக்களை அசுரர்களாகவும் தமிழ் நாட்டு சிலரை வானரங்களாகச் சித்தரிப்பதும் 21 ஆம் நூற்றாண்டில் கற்பனைக் கதையாகக் கூட கருதப்படாது! சீதையின் அவல மரணத்தை மூடி மறைத்து, அதற்குக் காரண கர்த்தாவான இராமனை உத்தமக் கணவன் என்று பாரதம் பல்லாயிரம் ஆண்டுகளாகப் பாயிரம் பாடி வணங்கி வருகிறது. காட்டுக்குத் துரத்தப்பட்ட கர்ப்பவதி சீதா, இரட்டை ஆண் குழந்தைகளைப் பெற்று, வால்மீகி ஆசிரமத்தில் வாழ்ந்து இறுதியில் உயிரை மாய்த்துக் கொள்கிறாள். ஆனால் பாரத நாடு இராமனும் சீதாவும் இல்லறத்தில் ஒன்றாக வாழ்ந்த உன்னத தம்பதிகளாய்க் காட்டித் தொழுது வருகிறது!
அதாவது வட இந்தியர் இராம வம்சமாகவும் மற்றவர்களை இழிவாகக் காட்டுவதாகவும் கதைகள் உருவாக்கம் பெற்றுள்ளன .
மேலும் சமஸ்கிருதம் தெரிந்தவர்களுக்கு மட்டுமே இது புரியும்
சீதையை இராமன் முன் கொண்டு வருகிறார்கள். அவளைப் பார்த்த போதாவது இராமன் சொன்னதென்ன?
மனித மனம் படைத்த பாமர மனிதன் கூட துயரம் கவ்விய நிலையிலுள்ள மனைவியிடம் இராமன் சீதையிடம் நடந்து கொண்டதைப் போல நடந்து கொண்டிருப்பானா என்பது நினைத்துக் கூடப் பார்க்க முடியாத நிகழ்ச்சியாய்த் தோன்றுகிறது. இலங்கையில் சிறைப்பட்டிருந்த சீதையை இராமன் நடத்திய முறைமைக்கு வால்மீகி நேரடியாக ஏதும் ஆதாரம் அளிக்கவில்லை எனினும் அடியிற் காணும் பகுதியில் இராமன் தன் மனைவி சீதையிடம் சொல்கிறான் : (யுத்த காண்டம், சருக்கம் 115, சுலோகம் 1-23) “உன்னை சிறைப் பிடித்தானே அந்த எதிரியைக் கடும் போரில் தோற்கடித்து பணயப் பரிசாய் உன்னை மீட்டு வந்துள்ளேன். என் எதிரியை வீழ்த்தி தன் மதிப்பைக் காப்பாற்றியுள்ளேன். என் போர்த் திறத்தை மக்கள் கண்டு மெச்சினர். என்னுடைய உழைப்பு பலனளித்திருப்பது எனக்கு பெருமகிழ்ச்சி அளிக்கிறது. இராவணனைக் கொன்றிடவும் அவனால் ஏற்பட்ட அவமானத்தை துடைத்திடவுந்தான் நான் இங்கு வந்தேனே ஒழிய உனக்காக நான் இப்பெருந் தொல்லையை மேற்கொள்ளவில்லை.”
இராமன் சீதையிடம் இதைவிடக் கொடுஞ்செயல் வேறு என்ன செய்திருக்க முடியும்? இராமன் அதோடு நிற்கவில்லை, சீதையை நோக்கி மேலும் கூறுகிறான்: “உன் நடத்தையை நான் சந்தேகிக்கிறேன். இராவணன் உன்னைக் களங்கப்படுத்தி இருக்க வேண்டும். உன்னைப் பார்க்க எனக்கு பெரும் எரிச்சலூட்டுகிறது. ஓ, ஜனகனின் மகளே! உனக்கு விருப்பமுள்ள இடத்திற்கெங்காவது நீ போய்ச் சேரலாம். உன்னோடு எனக்கு எந்தத் தொடர்புமில்லை. போரிட்டு உன்னை மீண்டும் மீட்டு வந்தேன். என்னுடைய நோக்கம் அவ்வளவே! உன்னைப் போன்ற அழகிய பெண்ணொருத்தியை இராவணன் சும்மா விட்டிருப்பானா என்பதை என்னால் நினைத்துக் கூடப் பார்க்க முடியவில்லை.”
இப்படிப்பட்ட இராமனை சீதை அற்பத்தனமானவன் என இகழ்ந்திடுவது இயல்பே. தான் கவர்ந்து சென்ற சீதையை இராவணன் களங்கப்படுத்தியிருப்பான் என்ன எண்ணத்தை-சிறைப்பட்டிருந்த வேளையில் தன்னை சந்திக்க வந்த அனுமன் மூலம் சொல்லியனுப்பி-அதன் அடிப்படையில் சீதையை கை கழுவி விடுகிறேன்-என்று இராமன் புலப்படுத்தி இருந்தால் இவ்வளவு சிரமத்திற்கு இடமிருந்திருக்காது-“நானே தற்கொலை செய்து என்னை மாய்த்துக் கொண்டிருப்பேனே”-என்று சீதை வெளிப்படையாக சொல்கிறாள்.
தன் புனிதத்தை நிரூபித்திட முன்வருகிறாள். அதன்படி சீதை அக்னிப் பிழம்பில் இறங்கி எவ்வித சேதாரமுமின்றி வெளிவருகிறாள். அவள் மேற்கொண்ட சோதனையின் மூலம் அவள் புனிதமானவள் என்பதைக் கடவுள்களே மெச்சிப் பாராட்டினார்கள். அதன் பின்னரே தன் மனைவி சீதையை இராமன் மீண்டும் அயோத்திக்கு அழைத்துப் போகிறான்
அயோத்திக்கு அரசனாக இராமனும், அரசியாக சீதையும் கொலுவேறிய கொஞ்ச காலத்திலேயே சீதை கர்ப்பிணியாகிறாள். நாட்டில் அவதூறு பேசுவோர் சிலர், சீதை கருவுற்றிருப்பதைக் கண்டு அவளுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில், இராவணனிடம் சிறைப்பட்டிருந்த காலத்திலேயே சீதை கருவுற்றிருக்க வேண்டும் என்றும், அப்படிப்பட்ட நடத்தை கெட்ட ஒருத்தியை தன் மனைவி என மீண்டும் நாட்டுக்கு திரும்ப அழைத்துக் கொண்டு வந்ததற்காக இராமனைப் பழித்துப் பேசினர் என அரசவைக் கோமாளியான பத்ரன் என்பவன் தன் காதிற்பட்ட அவதூறு வார்த்தைகளை இராமனிடம் சொல்கிறான். இராமனும் இவ்வித வதந்திகளைக் கேட்டுத் தாள முடியாத அவமானத்தில் அமிழ்ந்து போனான் என்பது இயல்பே. எனினும் அக்களங்கத்தைக் கழுவிட இராமன் மேற்கொள்ளும் அணுகுமுறையோ இயல்புக்கு மாறானதாக உள்ளது
நிறைமாத கர்ப்பிணியாக உள்ளவளை உணவின்றி, இருக்க இடமின்றி, முன் தகவல் ஏதுமின்றி மக்கள் நடமாட்டமில்லாத காட்டில் கொண்டுபோய் விட்டு விட்டதானது நாணயமற்ற சதியாகும்.
எனவே குடும்பசண்டை என்பது அந்தக் காலத்தையது அல்ல



கருத்துகள்
கருத்துரையிடுக