இன்றைய உலகில் குடும்பத்தில் கொலைகள் ஏன் ?
^^^^^^^^^^^^^^^^^^^^^
வாழ்க்கையில் என்னைச் சுற்றி எத்தனையோ ரசிக்கத்தக்க நிகழ்வுகள் இருக்கின்றன. அதைப் பார்த்து ரசிக்க ஒரு வாய்ப்பைத் தருகிறது பொறுமை. எந்தவிதச் சலசலப்பும் இன்றி பொறுமையைக் கடைப்பிடிப்பவர்கள்தான் நன்மதிப்பைச் சம்பாதிக்கின்றனர்; வாழ்க்கையில் பல சிகரங்களைத் தொடுகின்றனர்.
‘பதறாத காரியம் சிதறாது’ என்பது போல நிதானத்தை உருவாக்கிக்கொள்ளும்போது பிரச்சினைகளுக்குத் தீர்வு காணவும் வாழ்க்கையின் சிக்கல்களைக் களையவும் பல வழிகள் பிறக்கின்றன.
அகழ்வாரைத் தாங்கும் நிலம்போலத் தம்மை
இகழ்வார்ப் பொறுத்தல் தலை.
அல்லவா ?
பொறுமை கடலினும் பெரிது. பொறுத்தாரே பூமியாள்வார் என்பதெல்லாம் பழமொழி. செயல்படுகிறவன் ஒருசெயலை நேர்த்தியாய், சரியான நேரத்தில் செய்து முடிப்பான். அதுவே பொறுமையில்லாதவனிடம் இராது. குறித்த நேரத்தில் செய்யவும் முடியாது. ஒரு இடத்திற்கு போக வேண்டியிருந்தால் கொஞ்சம் முன்னதாக கிளம்ப வேண்டும். இன்னும் நேரம் இருக்கிறது என்று சரியான நேரத்தில் கிளம்பினால் என்னாகும். பதைபதைப்பு உண்டாகும். அந்த அவசர கதியில் பொறுமை இழந்து இன்னும் பாதகமான செயல்கள் தான் அரங்கேறும்.
தானங்களில் எத்தனையோ தானங்கள் இருக்கிறது. அத்தனை தானங்களிலும் உயர்வாக இருப்பது நிதானம்தான். எல்லா தானங்களுமே பிறரை வாழவைக்கும். ஆனால்... நிதானம் மட்டுமே தன்னை வாழவைத்து, பிறரையும் வாழவைக்கும். மனிதனை மனிதனாய் அடையாளம் காட்டும். தன் காலம் வரை பிறரால் உயர்வாய் மதிக்கச் செய்யும். அந்த மகத்தான சக்தியை பொறுமையே தரும்.
குடும்பத்தில் பிரச்சனைகள் இயந்திர உலகில் பெரும்பாலான குடும்பங்களில் பிள்ளைகளினால் தான் ஏற்படுகின்றன
பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி பேசுங்கள். உங்களின் எதிர்காலம் பகிருங்கள். பிள்ளைகளை நினைத்தால் உங்களின் பிரச்சினை சிறிதாகிப் போகும்.
கணவன் மனைவியை இணைக்கும் பாலம் குழந்தைதான் என்பதை உணருங்கள்.
நீதிமன்றங்களில் தான் எத்தனை விவாகரத்து சம்பவங்கள். ரத்தமும் சதையுமாய் இணையப் பெற்ற கணவன் மனைவி விவாகரத்து வரை செல்ல அப்படி என்ன பிணக்கு? அடுப்பில் இருந்து இறக்கி வைத்த கொதிநீர், நாம் குடிக்க பயன்பட சற்று நேரம் தான் ஆகும். அதுபோல், கணவன் மனைவி கருத்து வேறுபாடும்.
சற்று நேரம் ஓய்வெடுங்கள் நல்ல முடிவு வரவேண்டும்.வரும்
பொறுமை என்றும் போற்றுதலுக்கு உரியது. எவ்வளவோ உயர்ந்தவர்கள் எல்லாம் பொறுமையாக இருந்து வழிகாட்டி போயிருக்கின்றனர். பொறுமையாக இருப்போம்; ஒருபோதும் கெட்டுப் போக மாட்டோம்.
பொறுமையாகச் செயல்படும் காலத்தில், திட்டமிட்டு வேலையை அமைத்துக் கொள்கிறீர்கள். நல்ல பொருட்களை உரிய காலத்தில் வாங்கி சேமித்துக் கொள் கிறீர்கள். வேலையைத் தொடங்கும்போது, திறமையைத் தேடிப்பெற்று, நல்ல முறையில் முடித்துகொள்கிறீர்கள். வேலையின்போது ஏதேனும் தவறுகள் ஏற்பட்டா லும், அது சிறிய தவறாகத்தான் இருக்கும். அதன் பாதிப்பும் அதிகம் இருக்காது. தவறைத் திருத்திக்கொள்ளவும் முடியும்.
பொதுவாக ஆண்கள் செய்யும் பல ஆடம்பரச் செலவுகள் மனைவியின் விருப்பத்தை உத்தேசித்தே இருக்கும். மனைவியோ, பக்கத்து வீட்டுக்காரி வாங்கியிருக்கிறாள் என்பதற்காக, தானும் வாங்க வேண்டும் என்று விரும்புவாள். பட்டுப் புடவை, தங்க வளையல், தங்க நெக்லஸ், வைரமூக்குத்தி, பிரிட்ஜ், வாஷிங் மிஷின் போன்றவை மனைவியின் விருப்பத்திற்காக கணவன் வாங்கும் பொருட்களே.
ஒரு மாணவியே மனைவி ஆகிறாள்
ஒரு குடும்பம் சிறக்க அவள் திட்ட மிடல் வேண்டும்
அளவுக்கு மீறி செலவு செய்யக் கூடாது
எந்த ஒரு முதலீட்டின் மூலமும் வருமானம் வரவேண்டும். அதுவே சரியான முதலீடு ஆகும். தங்க நகைகளை வாங்கி, பெட்டிக்குள் வைத்துக்கொள்வதால் அதில் போட்ட முதலீடு, வருமானம் அற்ற முதலீடு. இரண்டாண்டுகளுக்கு முன்பு நான் தங்கம் வாங்கியபோது உள்ள விலையை விட, இப்போது தங்கத்தின் விலை உயர்ந்திருக்கிறதே… இப்போது நான் அந்தத் தங்கத்தை விற்றால் லாபம்தானே?
பணம் தேவை எனில் அடகு வைக்காதீர்கள் .விற்று விடுங்கள்
அடகுக்கு வட்டி கட்டி இருப்பதையும் இழந்து விடாதீர்கள்
பட்டுப்புடவைகளில் போட்ட பணம் இன்னமும் பயனற்ற செலவு. அந்தப் புடவையை நம் மனைவி எங்காவது திருமண நிகழ்ச்சிக்கு கட்டிக்கொண்டு செல்வாள். அது ஆண்டுக்கு ஒருமுறையோ இருமுறையோ பயன்படும்; அவ்வளவு தான். மற்ற நாளெல்லாம் அது பெட்டியினுள் தூங்கும். அதே பணம் வங்கியில் இருந்தால் வளரும்.
பொதுவாக பணக்காரர்கள் காசு விஷயத்தில் சிக்கனமாக இருப்பதைப்போல், நடுத்தர வர்க்கத்தினர் இருப்பதில்லை. அதனால்தான் செல்வந்தர்கள் செல்வந்தர் களாக இருக்கிறார்கள் ; அல்லது மேலும் செல்வந்தர்களாகிறார்கள். ஆனால் நடுத்தர வர்க்கத்தினரோ, சற்று பணம் வந்ததும் தாங்கள் கீழ்நிலை நடுத்தர வர்க்கத்தை விட சற்றே மேலே உயர்ந்து மேல்தட்டு நடுத்தர வர்க்கத்தினர் போல் தங்களைக் காட்டிக்கொள்வார்கள். இது அவர்களின் தாழ்வு மனப்பான்மை யின் வெளிப்பாடு.
குடும்பத்தில் தாழ்வு மனப்பான்மை வேண்டாம் .உங்களுக்காக வாழுங்கள் .மற்றவர்களின் பகட்டுக்காக வாழாதீர்கள்
ஆடம்பரம் எல்லாம் எதற்கு? தங்கள் வீட்டுக்கு வரும் அவர்களைச் சார்ந்த நடுத்தர குடும்பத்தினர் இவர்களை உயர்வாக நினைத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக. ஆனால் ஒரு பணக்காரனுக்கு தாழ்வு மனப்பான்மை இருப்பதில்லை. அவன் ஒவ்வொன்றையும் அவசியத்தின் பேரிலேயே வைத்துக்கொண்டிருக்கிறான். அவசியத்தின் பேரிலேயே அதற்கு செலவு செய்கிறான். அவன் செலவிடுகிற ஒவ்வொரு சதமும் அவனுக்கு வேறொரு சதத்தை சம்பாதித்துத் தருவதாகவே இருக்கும்.
காவடியின் சுமை ,காவடி எடுப்பவனுக்குத்தான் தெரியும் எனவே
கணவனும் மனைவியும் பேசி திட்டமிட்டு நகருங்கள் வரட்டுக் கவுரவம் வேண்டாம்
சந்தோசம் வாழ் வில் நிச்சயம் . நம்புங்கள்


கருத்துகள்
கருத்துரையிடுக