யார் இவர் ? சங்கீதபூஷணம்' எம்.ஏ.குலசீலநாதன்
%%%%%%%%%%%%%%%%%%%%%
குத்து விளக்குப் படத்தில் குலசீள நாதனும் மீனா மகாதேவனும்
பாடிய பாடல் இது
ஈழத் திருநாடே என்னருமைத் தாயகமே
இருகரம் கூப்புகிறோம் வணக்கம் அம்மா
வாழும் இனங்கள் இங்கு பேசும் மொழியிரண்டு
வழங்கிய உனக்கு நாங்கள் பிள்ளைகளம்மா
கங்கை மாவலியும் களனியும் எங்களுக்கு
மங்கை நீ ஊட்டிவரும் அமுதமம்மா
சிங்களமும் செந்தமிழும் செல்வியுன் இருவிழியாம்
சேர்ந்திங்கு வாழ்வது உந்தன் கருணையம்மா
ஈழதது கலைகள் தன்னை உலகுக்கு எடுத்தளித்த
கலாயோகி ஆனந்தகுமாரசாமி தவழ்ந்தது
உன் மடியிலம்மா - யாழுக்கு நூல் வடித்து
பாருக்கு காட்டியது விபுலானந்த அடிகளம்மா
பாட்டிற்கு பொருள் சொன்ன நாவலர் பிறந்தது
யாழ்ப்பாண நாட்டிற்கு புகழல்லவா
உந்தன் வீட்டில் பிறந்தவர்கள் நாட்டுக்காக
வாழ்ந்தவர்கள் வீரர்கள் என்பது பெருமையல்லவா
புத்தமும் சைவமும் புனித இஸ்லாமும்
கிறிஸ்தவமும் இந்நாட்டின் உயிரம்மா
இத்தனையும் என்றென்றும் இங்கிருக்கவேண்டும் என்று
இதயத்தால் வேண்டுகிறேன் உன்னையம்மா
யாழ்ப்பாண மாவட்டம், அராலி நாகலிங்கம் முத்துச்சாமி என்பவருக்கும், சித்தன்கேணியைச் சேர்ந்த அருளம்மா வேதவனம் என்பவருக்கும் மூத்த மகனாக 1940 ஜூலை 2 இல் வட்டுக்கோட்டையில் குலசீலநாதன்' பிறந்தார்.
இவர் வட்டுக்காேட்டையில் பிறந்தாலும் தந்தையாரின் தாெழில் இடமாற்றம் காரணமாக தனது ஆரம்பநிலைக் கல்வியை 1945ல் சென்.ஜேம்ஸ் கல்லுாரியில் ஆரம்பித்தார். குலசீலநாதனின் குடும்பம் கலைக் குடும்பமாகவே இருந்தது. இவரது தாய்வழி மாமன்மார்களில் ஒருவர் புரவியாட்ட வித்தகராகவும், மற்றாெருவர் இசை நாடகக் கலைஞராகவும் சிறந்து விளங்கியவர்கள். தாய்மாமன் நாட்டுக்கூத்து ஆண்ணாவியார் கீசகன் கந்தையாவின் உந்துதலினால் இவர் குலசீலநாதன் தனது ஆறாவது வயதிலேயே இசைத்துறையில் ஈடுபடத் தொடங்கி விட்டார். விடுமுறைக் காலங்களில் வட்டுக்காேட்டையில் கற்பித்து வந்த சங்கீத ஆசிரியர் லட்சுமி நாராயணனிடம் இசை பயின்றார். பின்னர் 1956ம் ஆண்டு இனக்கலவரம் காரணமாக குடும்பத்துடன் ஊர் திரும்பினார். வட்டுக்காேட்டை யாழ்ப்பாணக் கல்லூரியில் கல்வியைத் தாெடர்ந்தார். இவர் தனது பாடசாலைக் காலங்களில் உதைபந்தாட்ட வீரனாகவும் கல்லுாரி விழாக் கலைநிகழ்ச்சிகளிலும் முக்கியமாகப் பங்குபற்றினார்.
இவரது இசை ஞானத்தையும் திறனையும் கண்டு வியந்த ஆசிரியர்கள் மற்றும் அதிபரது ஆலாேசனைக்கு ஏற்ப இசையை முறைப்படி பயில்வதற்காக அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். அங்கு இசையரசு எம். எம். தண்டபாணி தேசிகரிடமும், சிவசுப்பிரமணியம், ரி. கே. ரங்காச்சாரியார், மைலம் வைச்சிரவேலு முதலியார் போன்றோரிடமும் கருநாடக இசையை முறைப்படி பயின்றார். மேலும் இராகஆலாபனை முறைகளையும், தாளபேதங்களையும் ஜனரஞ்சகமாக ரசனையூட்டும் விதத்தில் கச்சேரிகள் பாடுவதற்கு ஏற்றவாறு தான் கற்ற சங்கீதக் கலையை விருத்திப்படுத்திக் கொள்ள பாலமுரளி கிருஷ்ணாவிடமும் விசேடமாக கர்நாடக சங்கீதக் கலையைப் பயின்றுள்ளார். 1964 ஏப்ரல் 29ல் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் முதல்தர சித்தியெய்தி சங்கீத பூசணம் பட்டத்தினைப் பெற்றார்.
இவரின் இசைத்திறனை அறிந்து கொண்ட இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபன அதிகாரிகள் இவரை அங்கு அழைத்து இசைக்கச்சேரிகளுக்கு இடமளித்தார்கள். 1968ல் பகுதி நேர இசைத் தயாரிப்பாளராக பணியாற்றிய இவரை 1970ல் நிரந்தர இசைத் தயாரிப்பாளராக்கி 1971ல் மெல்லிசைத் தயாரிப்பாளராகப் பதவி பெற்று 1981ல் இசைக்கட்டுப்பாட்டாளர் பதவி வரை உயர்ந்தார். 1983-1985 வரை சிங்கப்பூர் ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் 1985 ஜூன் முதல் 1990 வரை றேடியாே ரெலாெ மலேசியா வானாெலியில் இசை ஆலாேசகராகவும் பணியாற்றினார்.
1971-ஆம் ஆண்டு நட்சத்திரம்-வரதலட்சுமியம்மா தம்பதிகளின் மூத்த புதல்வியான சிவநாயகியை தனது வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் காெண்டார். இவர்களுக்கு காேகிலவாணி, செந்தூர்நாதன், கமலாேற்பவநாதன், கணேசநாதன், தனுசிகா ஆகிய ஐந்து பிள்ளைகள் உள்ளனர். 1983 இனக்கலவரத்தின் பின் சிங்கப்பூர், மலேசியா, பாரிஸ் பாேன்ற நாடுகளில் வசித்து வந்தார்.
இசைபிருந்தா என்ற மெல்லிசைப் பிரவாகத்தில் எஸ். கே. பரராஜசிங்கம், வி. முத்தழகு, எஸ். கலாவதி, அருந்ததி சிறீரங்கநாதன், ரா. ஜெயலஷ்மி, சுபத்திரா, சந்திரமோகன், அம்பிகா தாமோதரம், கௌரீஸ்வரி ராஜப்பன் போன்ற பல கலைஞர்களை இவர் ஈடுபடுத்தினார். பேராசிரியர்கள் க. கைலாசபதி, கா. சிவத்தம்பி போனறோருடன் இணைந்து இசைச்சித்திரம் போன்ற நிகழ்ச்சிகளை ஆய்வுக்குரிய வகையில் தயாரித்தார். இவரது இசைக்கச்சேரிகள் இலங்கையின் அனைத்துப் பாகங்களிலும் நடைபெற்றுள்ளன.
இலங்கையில் வெளியான குத்துவிளக்கு திரைப்படத்திற்காக ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே என்ற பாடலையும் பாடியுள்ளார்.
இவர் பாரிசு நகரில் புகலிடவாழ்வில் ...முகத்தார் வீடு, இன்னுமொருபெண் ஆகிய சின்னத்திரைகளிலும் பாடல்களைப் பாடியுள்ளார்.
நினைக்கும் பொழுது இவரது
சந்தன மேடை எம் இதயத்திலே
உன் சதங்கையின் நாதந்தான் கேக்குதடி
மந்திரமில்லாத மயக்கமடி
வண்ண மாமயில் நீயெம் தேவியடி
பாட்டுக்கு ஆடிடும் பாவைதான்
அவள் பாபம் எல்லாம் புதுமை ராகந்தான்
மானுடத்தின் குரல் ஒன்றுதான்
அவள் மனதை மயக்கியது உண்மைதான்
கானத்தில் கனிந்தவள் வந்திடுவாள்
இங்கு கண்டறியா இன்பம் தந்திடுவாள்
வானத்தில் ஒளிரும் நட்சத்திரமாய்
எங்கள் வாழ்வுக்கு வழிகாட்டி நின்றிடுவாள்.
சந்தன மேடை எம் இதயத்திலே
உன் சதங்கையின் நாதந்தான் கேக்குதடி
மந்திரமில்லாத மயக்கமடி
வண்ண மாமயில் நீயெம் தேவியடி
என்ற பாடல் எனது நினைவுக்கு அடிக்கடி வரும்
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வெளியிட்ட 'கங்கை யாழே… .." என்ற இசைத்தட்டில் இவரது பாடல்கள் ஒலித்தன. 'ஜனரஞ்சனி" என்ற நிகழ்ச்சி மூலம் சாதாரண மக்களும் சங்கீதத்தின் தாற்பரியத்தைப் புரிந்துகொள்ளக்கூடிய நிலைமையை ஏற்படுத்தினார். 'இசைக்கோலம், இசைப்பிருந்தா, ஜனரஞ்சனி" போன்ற நிகழ்ச்சிகளின் மூலம் பல்லாயிரம் வானொலி நேயர்களை இசையால் வசப்படு;த்தினார். நாடகங்களுக்கும் இசையமைப்புச் செய்தார். 'விழிப்பு, செவ்வானத்தில்.." என்ற இரு மேடை நாடகங்களும் இவரது இசையமைப்பு இணைப்பை பெற்றன.
கீற்றோலைத் தென்றலிலே கீதமொன்று கேட்குதையா.என்ற பாடலும் சின சின்ன குருவிகள் என்ற மவுன குரூ அவர்களின் பாடலும் இவர் பாடும் அழகு
மனதுக்கு இதமாகத் தான் இருக்கும்
ஞாயிறென வந்தாள் - என் வாழ்வில் ஞாயிறென வந்தாள் திங்கள் வதனச் செவ்வாயள் ..என்றார் பாடல்
இவரின் குரலுக்கு தனித்துவத்தைக் கொடுத்தது
இந்தப் பாடலை நான் கொடுக்கும் சொடுக்கில் சொடுக்கி கேளுங்கள்
கர்நாடக சங்கீதத்தில் முழுமையான தேர்ச்சி பெற்றவர்கள் மெல்லிசையைக்கூட மெருகுபடுத்திப் பாடமுடியும் என்பதற்கு உதாரணபுருசராகத் திகழ்ந்தார். சினிமாவில், அன்றைய பாடகர்களாகவும் இசையமைப்பாளர்களாகவும் திகழ்ந்த கண்டசாலா, ஜி. இராமநாதன் போன்றோரின் இசையை மெச்சுபவர்
இவரல்லவா .இதனால் தானோ எனக்கு கண்டசாலா பாடியது போல இருந்தது .
1990 -ம் ஆண்டளவில் பாரிஸ் மாநகர் வந்த குலசீலநாதன், ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க இசைக்கச்சேரிகள் செய்ததுடன், மெல்லிசைப் பாடல்கள் - ஈழத்துப் பாடல்களையும் மேடைகளில் பாடி இரசிகர்களின் ஏகோபித்த பாராட்டுக்களைப் பெற்றுள்ளார். மேடை நிகழ்ச்சிகளின்போது 'ஈழத்திருநாடே என்னருமைத் தாயகமே..., ஞாயிறென வந்தாள்…" போன்ற பாடல்களை இரசிகர்களின் வேண்டுகோளுக்கிணங்க பாடி மகிழ்விப்பார்
இறுதி காலங்களில்
ஐரோப்பிய நாடுகள் பலவற்றிலும் இசைக்கச்சேரிகள், பரத நாட்டிய அரங்கேற்றங்களுக்கான இசை, நாடகங்களுக்கான இசையமைப்பு மற்றும் இசைப்பயிற்சி வகுப்புகள் என அவரது பணிகள் தொடர்ந்தது. பிரான்சில் பல நகரங்களிலும் சத்தியசாய் பாபா பக்தர்களின் பஜனை மன்ற நிகழ்ச்சிகளிலும் கௌரவப் பாடகராகப் பாடிவந்துள்ளார்.
அண்ணாமலை பல்கலைகழக படிப்பை முடித்து ஊர் திரும்பிய அவர் மயிலப்புலம் கந்தசுவாமி கோவிலில் தனது கன்னிப்பயணத்தை ஆரம்பித்தார் .
(குத்துவிளக்கு படத்துக்கு பாடல் எழுதியவர் கவிஞர் ஈழத்து இரத்தினம். இவர் தமிழ்நாட்டில் வெளிவந்த எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்ற படத்தில் ஒன்றாகவே விழா கொண்டாடுவோம் என்ற பாடலை எழுதிப் புகழ் பெற்றவர்.
குத்து விளக்கு படத்தில் இடம்பெறும் "ஈழத்திரு நாடே" என்ற பாடல் அதில் வரும் ஈழம் என்ற சொல்லுக்காக இலங்கை வானொலியினரால் தடை செய்யப்பட்டது. யாவரும் அறிவீர்கள் _ இருப்பினும் அதை நீங்கள் கேட்கவேண்டும் என்பதற்காக ஒரு சொடுக்கு இணைக்கிறேன் பார்த்து மகிழுங்கள் ஒவ்வொரு தமிழனின் வீட்டிலும் ஒலி க்கவேண்டிய பாடல் இது https://youtu.be/9f1SVB9iah8 )
இன்னும் நிறைய தகவல்கள் உண்டு பலர் எனது பதிவுகள் நீண்டு இருப்பதாக முறையீடு செய்வதனால் பதிவை சுருக்கி விட்டேன் தேவை ஏற்படின் இன்னும் விரிவாகத் தருகிறேன் Manikkavasagar Vaitialingam

கருத்துகள்
கருத்துரையிடுக