கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. அப்படி பட்ட திருமண பந்தத்தில் இருவரை இணைத்து வைப்பதற்கு முன்பு அவர்கள் இவருக்கு பொருத்தம் சரியாக உள்ளதா என்பதை கண்டறிவது மிக மிக முக்கியம். திருமண பேச்சை எடுத்தாலே முதலில் பார்க்கப்படுவது நட்சத்திர பொருத்தம். இருவருக்கு நட்சத்த்திர பொருத்தம் இருந்தால் மட்டுமே அவர்களை திருமண பந்தத்தில் ஜோதிடர்கள் இணைப்பார்கள்.
நட்சத்திர பொருத்தம் என்பது திருமணத்திற்கு மிக மிக அடிப்படையான ஒரு பொருத்தம் ஆகும். நட்சத்த்திர பொருத்தம் இல்லாத இருவர் திருமண பந்தத்தில் இனைந்து வாழ்ந்தாலும் அவர்கள் இருவருக்குள் பல விதமான இன்னல்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. அதனாலேயே நம் முன்னோர்கள் நட்சத்திர பொருத்தத்திற்கு இவளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.
ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி தனி பாதங்கள் உண்டு. திருமண பொருத்தம் பார்க்கையில் நட்சத்த்திர பாதம் மிக முக்கியம். சில நட்சத்திர பாதங்களே சில நட்சத்திரங்களுக்கு பொருந்தும்
திருமணம் என்பது ‘ஆயிரம் காலத்துப் பயிர்’ என்று முன்னோர்கள் கூறியதற்கு உகந்த பொருள் உள்ளது. உதாரணமாக நெல், கம்பு, கரும்பு உள்ளிட்ட பயிர்களை எடுத்துக் கொண்டால் அவை ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்குள் மகசூல் கொடுத்துவிடும்.
ஆனால் திருமணம் என்பது அனைத்துக் காலத்திலும், பிரச்சனைகளை சமாளித்து, மகசூல் கொடுக்கும் பயிர் என்ற அர்த்தத்தில் முன்னோர்கள் கூறினர். பழங்கால மக்கள் எதையும் இயற்கையுடன் ஒப்பிட்டுப் பேசினர். அந்த வகையில் திருமணமும் காலம் காலமாக மகசூல் அளிக்கக் கூடிய ஒன்று.
கணவன்-மனைவி இருவரும் அடுத்தடுத்த ஜென்மங்களிலும் மனம் ஒத்து வாழ வேண்டும் என்ற நோக்கத்துடன் அதனை ஆயிரம் காலத்துப் பயிர் என்று குறிப்பிட்டனர்.
ஆயிரம் காலத்து பயிர் என அழைக்கப்படுவதாலே என்னவோ, கல்யாணம் என்றால் ஆயிரத்தெட்டு கேள்விகள். குடும்பத்துக்கு ஏத்த பொண்ணா? பையன் கவுர்மண்ட் உத்யோகமா? ஏழு தலைமுறைக்கும் சொத்து இருக்கா? எனும் பல கேள்விகள். அதிலும் சரியான வரன் அமைந்து விட்டால், சவுகரியமான கல்யாண மண்டபம் எது? சாப்பாட்டுக்கு யாரை 'புக்' செய்யலாம்? பொண்ணுக்கு அலங்காரத்துக்கு யார் சரி? நல்ல போட்டோகிராபர் யார்? என ஏகப்பட்ட குழப்பங்களுக்கு தீர்வு கண்டு கல்யாணத்தை முடிப்பதற்குள் ஒரு வழி ஆகிவிடும்.
பெண் தனது பெற்றோரை விட்டு வரமுடியாமலும் .,ஆண் தனது தொழிலை விட்டு வரமுடியாமலும் .பல குழப்பங்கள் வரத்தான் செய்யும் .பிள்ளைகள் பெற்றோரின் மேல் அன்புள்ளவர்கள் .
ஆனால் பெற்றோர் தமது பிள்ளைகட்கு விளங்கப் படுத்தி திருமணத்தை நடாத்த வேண்டிய கடமைப்பாடு உள்ளவர்கள்
எந்தக் குடும்பப் பிரச்சனைகட்கும் கணவன் மனைவிக்கு இடையில் பெற்றோர் தலையிடக் கூடாது
இந்த கலியுகத்தில் நாம் கற்காமலேயே நம்மில் தோன்றும் அபூர்வமான ஒரு விஷயம் தான் காதல். அந்த உணர்வுக்கு மயங்காதவர் எவருமிலர். அதனை விரும்பாதவர் யாரும் இல்லை. அன்பு, பாசம் போன்றவைகளுடன் அந்நியப்பட்டு நிற்பதுதான் காதல்.
அந்தக் காலத்து காதல், இந்தக் காலத்துக் காதல் என பிரித்துப் பார்க்க நான் விரும்பவில்லை. எந்தக் காலத்துக் காதலாக இருந்தாலும், காதல் உண்மையானதாக உள்ளதா என்பதே முக்கியம்.
தினம் தினம் நாம் பல பெண்களை நம் வாழ்வில் கடந்து செல்கிறோம். அவர்களில் அழகாக இருப்போர் அனைவரும் நம்மை திரும்பிப் பார்க்க வைப்பார்கள். திரும்பி இரண்டு நொடி பார்ப்பதோடு நமது பணி முடிந்துவிடும். முடிந்து விட வேண்டும். அந்த அழகான பெண்களில் சிலர் மட்டும் அன்றைய சில மணி நேரங்களுக்கு அவர்களைப் பற்றி நம்மை சிந்திக்க வைப்பர். அந்தளவிற்கு நம்மை கவர்ந்திருப்பர்.
இங்கே அழகைப் பற்றி நான் ஏன் பேசுகிறேன் என்றால், பெரும்பாலான இன்றைய காதல் அழகை நோக்கித் தான் செல்கிறது. நான் ஏன் அந்தப் பெண்ணை காதலிக்கிறேன் என விட்டத்தைப் பார்த்து கேள்விக் கேட்டால், ஆண்களின் மனசாட்சி சொல்லும் பதில், ‘அவள் அழகாக இருக்கிறாள்’ என்பதுதான். ஆனால், அதனை ஒப்புக் கொள்பவர்களின் எண்ணிக்கை மிகக் குறைவு. உங்களில் எத்தனை பேர் உங்கள் காதலியின் அழகைப் பார்த்து விரும்பியிருக்கிறீர்கள்? ஒப்புக் கொள்வீர்களா? முடியாது. ஏனெனில், அதை ஒப்புக் கொண்டால், அங்கே காதல் பிரிந்துவிடும்.
அழகு என்பது என்ன? அழகின் எல்லை என்பது என்ன? இப்போ ஒரு பூ அழகாக இருக்கிறது என்று வைத்துக் கொள்வோமே.. சிலர் அந்தப் பூவை பறித்து விடுவார்கள். சிலர் அதனை தொட்டுப்பார்த்து விலகிச் சென்று விடுவார்கள். அந்த ‘தொட்டுப் பார்த்து விலகிச் செல்வது’ தான் இன்றைய நவநாகரீக இளசுகளின் பெரும்பாலான காதலின் நிலைமை. அவர்களுக்கு அழகை அனுபவிக்க வேண்டும். அதனை அனுபவித்துவிட்டால், இயற்கையாகவே அதன் அழகு சலித்துவிடும். இதைத்தான் காதலென்ற பெயரில் பலர் இன்று செய்துக் கொண்டிருக்கிறார்கள்.
இங்கே யாரையும் குறை சொல்ல நான் விரும்பவில்லை. ஏனெனில், நானும் அந்த வயதைக் கடந்து வந்தவனே.
ஒரு சில காலங்களில் நானும் ஒரு மிருக உணர்வுடன் வாழ்ந்திருக்கிறேன் .அப்போதெல்லாம் என்னை
பக்குவப்படுத்தியது .அவர்களின் அவேளிப்படயான அன்பே .எனது தகப்பனார் மிகவும் வெளிப்படையானவர் .
சகல கல்வியும் ஆன்மிகம் முதல் பாலியல் வரை அவரிடமே நான் கற்றுக் கொண்டிருக்கிறேன் .ஆனால் விபரம் தெரிந்து அவர்களுடன் நான் வாழ்ந்தது ஒரு பத்து வருடமே .என் மன ம் இங்கு பாசத்துக்கு ஏங்குவது யாருக்குமே தெரியாது .இரவு படுக்கும் பொழுது நான் ஊரை நினைத்து இன்னும் கலங்கிக் கொண்டு தான் இருக்கிறேன் .உறவுகளைத் தேடிக் கொண்டு துடிக்கிறேன் .
அந்த வேதனைகளுக்கு சமாதானமாக மனைவி பிள்ளைகளை தான் நினைக்கிறேன் .
சிலவேளைகளில் மன ம் விரக்தி நிலைக்குக் கூட சென்று இருக்கிறது .அந்த வேளைகளில் எண்ணைக் காப்பாற்றியது ஆன்மீகமே .
நான் இங்கு சொல்ல விரும்புவது, ‘காதல் என்றால் என்ன?’ என்று என் இளைஞர்களுக்கு புரிய வேண்டும். அவ்வளவுதான்
.
இந்த உலகில் வாழ, மனிதராய் பிறந்த நமக்கு எப்போதும் ஒரு துணை தேவை. நம்மை பெற்று, வளர்த்துவிடும் பெற்றோர்கள் நமது குறிப்பிட்ட வயதுவரை தான் துணை நிற்க முடியும். அதற்குமேல் நமக்கு நம்பகத்தகுந்த, அன்பு, அக்கறை செலுத்தக்கூடிய உயிர் ஒன்று தேவை.
வாழ்வதற்கு என்ன தேவை ?
ஆணுக்கு ஒரு பெண். பெண்ணுக்கு ஒரு ஆண்.
பெற்றோர் எம்மை அடுத்த தலை முறைக்கு கொண்டு செல்பவர்கள் .நல்வழிப்படுத்துபவர்கள் .புதிய சமுதாயம் ஒழுங்காக பண்பாட்டோட்டு வாழ கற்றுக் கொடுப்பவர்கள் .அது தான் பண்பட்ட வாழ்க்கை முறை .
மாறாக இன்று யுத்தத்தால் பல ஒழுங்கற்ற வாழ்க்கை முறைகளினால் பண்பாட்டை இழந்து நிற்கும் தலை முறைகள் நாம் .எமது பிள்ளைகள் பெற்றோருக்கு பணிபவர்களா? என்றால் பெரும்பாலான குடும்பங்களில் பெற்றோர்கள் அஞ்சி ஒடுங்கி வாழுவது கண்கூடு .
ஆக நாம் பண்பாட்டை இழந்து வருகிறோம் .முடிவல்ல இது .ஆனால் காப்பாற்ற பட ல் வேண்டும்.பண்பாடு எதற்கு என்று
தெளிவாக புரிந்து கொள்ள வேண்டும்.
ஒரு உயிர் எந்தவித சுயநலமுமின்றி நம்முடன் பயணிக்க வேண்டுமென்றால், காதல் எனும் ஆயுதம் அதற்கு தேவை. இப்படி கடைசி வரை ஒருவருக்கொருவர் துணையோடு வாழவேண்டுமெனில், அந்தக் காதல் எவ்வளவு ஆழமானதாகவும், உண்மையானதாகவும் இருக்க வேண்டும்?
அழகிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுத்தால் அந்த காதல் நிலைக்குமா? அவர்களி ன் அழகு உங்களுடன் கடைசிவரை கூட வருமா ?
குடும்பம் என்றால் என்ன? அதில் எவ்வளவு சிக்கல்கள் இருக்கிறது? திருமணம் செய்தால் மனைவியின் குடும்பம் மற்றும் தமது பெற்றோரை எப்படி அனுசரித்து செல்வது என்பது போன்ற பல உறவு சிக்கல்கள் குறித்து அந்தஅந்தக் காலக்கட்டத்தில் தான் புரிய வைக்கப்படல் வேண்டும் .
நீங்கள் தேர்ந்தெடுக்கும் ஒரு துணை…அதாவது காதல், நிச்சயம் உங்கள் வாழ்வில் உண்மையாக சங்கமிக்கும். உங்கள் உடலுக்கும், மனதுக்கும் அது மகிழ்ச்சியைத் தரும்.
அவளை துணையாக அவனை துணையாக் கி நேசியுங்கள் .
பார்த்தவுடன் காதல், பழக பழக காதல், நட்புக்கு பிறகு வரும் காதல் இதையெல்லாம் தாண்டி காதல் குறித்த கேள்விகள் பலவும் உண்டு. நீங்கள் காதலிக்கிறீர்கள் என்பதை எப்படி எப்போது உணர்ந்தீர்கள்?
சிலவேளை
பாலியல் உணர்வுகளை தூண்டும் காதல். உங்கள் எதிர்பாலினரின் உடல்வாகில் ஈர்க்கப்பட்டிருக்கிறீர்கள். அவரை பார்க்கும் போதெல்லாம் உங்கள் உணர்வு தூண்டப்படுகிறது. அவருடன் தனிமையில் நேரம் செலவிட காத்திருக்கிறீர்கள்.
காதலியை பின்னால் உட்காரவைத்து துப்பட்டாவை தலையில் சுற்றி மறைத்து அழைத்துச் செல்வது, ஓடாத படத்திற்கு கார்னர் சீட்டில் சென்று காதலியுடன் உட்காருவது, அடிக்கிற வெயிலில் பீச்சில் சென்று மறைந்து கொள்வது போன்றவற்றிற்கு பதில் தைரியமாக விபச்சார விடுதிக்கு சென்றுவிடலாம்.இல்லையா ?
கூடுதலாக கொஞ்சம் இடம் கிடைத்தாலும் கட்டிஅணைத்து முத்தமிடுதலை நீங்கள் விரும்பினால் இது மோக காதல். இது உங்கள் எதிர்கால வாழ்க்கைக்கு நல்லதல்ல. காதலில் மோகம் அதிகமாவது நல்லதல்ல..இது மகிழ்ச்சியை உண்டாக்கும் பாலின கவர்ச்சியாக இருந்தாலும் மிகுந்த துக்கத்தை உண்டாக்கவும் செய்யும்.
சமயங்களில் உங்கள் துணை இந்த அத்துமீறலை விரும்பாத போது காதலில் பிரிவு சாத்தியமாக கூடும். வெகு அரிதாக கவர்ச்சி தீர்ந்த பிறகு உங்களுக்கு ஆழமான அன்பு வந்தாலும் வரலாம். அல்லது வராமலே பிரிந்து போகவும் செய்யலாம்.
ஆனால்
நட்பு கலந்த பாசம். இது மன்மத
காதலை விட சிறந்தது. இந்த காதலில் துணை ஒவ்வொருவருமே மற்றவரை சமமாக நினைப்பார்கள். இது நண்பர்களிடையே கொண்ட பாசத்துக்கு நிகரானது. கடினமான நேரங்களில் ஒருவருக்கொருவர் ஆறுதலாய் இருப்பதற்கு முக்கியத்துவம் கொடுப்பார்கள். மணம் விட்டுப் பேசுவார்கள் .
உடல் ஈர்ப்பை காட்டிலும் மன ஈர்ப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். நட்போடு கூடிய இந்த காதல் மற்ற காதலை காட்டிலும் அதிக சக்தி வாய்ந்தது இதற்கு ஆயுள் அதிகம். இவர்கள் தனிமை விரும்பியாக இருந்தாலும் நிதானம் தவறமாட்டார்கள். துணையின் வருத்தத்தில் வருடி கொடுப்பது மிகப்பெரிய சக்தியை மனதுக்கு கொடுக்கும் என்பதை புரிந்தவர்கள் .
அவர்களிடையே அன்பு பெருக்கெடுக்கும். ஆரோக்கியமான காதல் என்று சொல்லும் இது அவர்கள் வாழ்வு முழுமைக்கும் நேர்மறையான சந்தர்ப்பத்தையே கொடுக்கும். இந்த காதலர்கள் பிறரை நெகிழ செய்யும் வகையில் ஆயுள் வரை பாசமாக இருப்பார்கள்.
ஆரம்ப நாட்களில் வரக்கூடிய மகிழ்ச்சியான மனதை துள்ளவைக்கும் உணர்வு.ஆயுள் வரை வாழ்ந்திருக்கும்
காதலில் ஊடல் என்பது வேறு. சிறு தவறையும் பெரிதாக்கி பூதாகரமாக சண்டை போடும் காதல் ஆரோக்கியமான எதிர்காலத்தை உண்டாக்காது. ஆனால் தவறை உணர்ந்து துணை மன்னிப்பு கேட்கும் போது அதை பெரிதுபடுத்தாமல் மன்னிப்பையும் அன்பையும் திருப்பி செலுத்தும் போது அந்த அன்பு காதல் பல மடங்கு ஆரோக்கியம் பெற்றுவிடுகிறது. இது அவர்களுக்குள் மட்டும் அன்பை வளர்க்காமல் அவர்களை சுற்றீ இருப்பவர்கள் சமூகத்திலும் அன்பை வளர்க்க செய்யும்.இதை பெற்றோர்கள் உறவுகள் அன்று சொல்லிக் கொடுத்தார்கள்
காதலின் ஆரம்பத்தில் ஊடல்கள், கோபம், சிறு சண்டை, சச்சரவு, தாபம் என எல்லாமே கடந்து இருவருக்குள் நல்ல புரிதலை கொண்டிருக்க வேண்டும் இருவருமே எப்போதும் ஒருவரை ஒருவர் மகிழ்ச்சியாக வைத்திருக்கவே விரும்புவார்கள். இவர்கள் திருமணத்துக்கு பிறகு ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ்வார்கள். பக்குவப்பட்ட இந்த காதலை கொண்டவர்கள் அதிர்ஷ்டசாலிகள்.
காதல் என்பது இரண்டு உறவுகளுக்குள் மட்டும் உண்டாகும் ஒரு அன்பு பிணைப்பு அல்ல. காதலுக்கு பிறகு திருமண பந்தத்துக்கு பிறகு குடும்பத்தையும் நேசியுங்கள். காதலியுங்கள். குடும்ப உறுப்பினர் அனைவருமெ ஒருவர் மீது ஒருவர் வைத்திருக்கும் காதல் துணை மீது இருக்கலாம், குழந்தைகளின் மீது இருக்கலாம், உடன் பிறந்தவர்களிடம் இருக்கலாம்.
முயன்று பாருங்கள் ஒரு பண்பட்ட கூட்டு வாழ்க்கையை எம்மால் மீண்டும் கட்டியெழுப்ப முடியும்
வா தோள் கொடு
அன்புடன்
Manikkavasagar Vaitialingam


கருத்துகள்
கருத்துரையிடுக