தோல் விழுந்த சுருக்கமும்
ஒட்டிய வயிறு மே ..நாம் கண்ட சுகமோ ?
யுத்தத்தால் சிதறி ஓடி
தமிழ் சிந்தனையற்ற கூட்டம் ஓன்று ஒரு பக்கம்
பற்றது ஏதுமின்றி பண்பாடு யாதுமின்றி
உற்றவரை மறந்த உணர்வுகள் அற்ற கூட்டமொன்று
இன்னோர் பக்கம்
சாதிகள் பேசுகின்ற கூட்டம் ஓன்று
சாஸ்வதம் பேசுகின்ற கூட்டம் ஓன்று
மொட்டைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போட்டு
குடுமி கட்டி சீண்டி விடும் கூட்டம் ஓன்று
குடும்பத்தைப் பிரிப்பதற்கு கூட்டம் ஓன்று
அரசியலை குழப்பு தற்கும் கூட்டம் ஓன்று
வந்த வழி மறந்த இன்னோர் கூட்டம்
பக்திக்கும் மாரடிக்கும் இன்னோர் கூட்டம்
ஊருக்குள் பிரிவு பட்டு இன்னோர் கூட்டம்
உருப்படியாய் உருக் குலைக்கும் இன்னோர் கூட்டம்
தமிழ் ஓன்று அமிழ்தாக
இனித்தாலும்
தம் பிள்ளை ஆங்கிலத்தில் படிக்கவேண்டி
நாடு விட்டு நாடு தாவும் கூட்டம் ஓன்று
ஊர்க்கதைகள் வம்புகளை பரப்பவென்று
உணர்வில்லா மனிதமற்ற இன்னோர் கூட்டம்
whatsup twitter என்று தடம்புரண்டு
ஆபாசப் படங்கள் முதல் ஆத்மீகம் என
அறிவு கெட்டு தவளுகின்றார்
நாள் முழுதும்
ஊனமுற்ற மனிதர் அல்ல நம் தமிழர்
சமூக உணர்வுடையோம் என்பதனை உரக்கக் கூறி
உருப்படியாய் ஏதும் நாம் செய்யாவிட்டால் ..._?
தின்றதும் மலமாய் கழிப்பதும்
வாழ்க்கை அல்ல .
திறனுடயோம் தீரம் மிக்கோம்
திக்கெட்டும் நாம் ,வாழுகின்ற நிலைமை மாறி
பக்கத்தில் சேர்ந்து வாழும் காலம் எப்போ ?
இருப்பதனைக் கை விட்டு ,தவற விட்டு
பறப்பதற்கு ஆசை கொண்டால் ...?
மடமை அன்றோ !!!!
உணர்ந்து கொள் !!!!!
எழுந்து நில் நீ தமிழனாக .
Manikkavasagar Vaitialingam


கருத்துகள்
கருத்துரையிடுக