சானா சண்முகநாதன் ,இலங்கை வானொலி புகழ் லண்டன் கந்தையா

%%%%%%%%%%%%%%%%%%%
சண்முகநாதன் யாழ்ப்பாணம், தெல்லிப்பளையைப் பிறப்பிடமாகக் கொண்ட செல்லத்துரை, சிவகங்கை ஆகியோரின் புதல்வர். கொழும்பில் சனவரி 11, 1911 இல் பிறந்தவர். தெல்லிப்பளை மகாஜனா கல்லூரி, தெல்லிப்பழை யூனியன் கல்லூரி ஆகியவற்றில் கல்வி பயின்றவர். கொழும்பு தொழில்நுட்பக் கல்லூரியில் உயர் கல்வி பெற்றார்.
சிறுவயதிலேயே கலைகளில் ஆர்வம் ஏற்பட்டது. ஏழு வயதில் நடிக்கத் தொடங்கினார். ஓவியம் பயில்வதற்காக தமிழ்நாடு சென்றார். அங்கே ஆரம்ப காலத் தமிழ்ப்படங்களில் (கண்ணகி, தமிழறியும் பெருமாள், சகுந்தலை) கலை இயக்குனராக பணியாற்றியிருக்கிறார். சில படங்களில் சிறு சிறு பாத்திரங்களில் தோன்றினார். சந்திரலேஹா படத்தில் "சிலோன் சண்முகநாதன்" என்ற பெயரிலேயே நடித்திருந்தார். தேவகி என்ற திரைப்படத்தில் நட்டுவனார் வேடத்தில் நடித்தார்.
மேலும் மத்தாப்பு என்கிற கதம்ப நிகழ்ச்சியை மறந்திருக்க மாட்டீர்கள் அல்லவா ?
இவர் நடித்த புகழ்பெற்ற வானொலி நாடகங்கள்
லண்டன் கந்தையா
கொழும்பிலே கந்தையா
விதானையார் வீட்டில்...ஆகும் சானா
இவர் எழுதிய பரியாரியார் பரமர் எல்லோரும் மறக்க முடியாதவை
மேடை நாடகங்களாக
சாணக்கியன்
பதியூர் ராணி என்பன இவரின் நெறியாளுகைக்கு மகுடம் சூட்டுவன .
முழுதாக மேடை நாடகத்துக்கு பழக்கப்பட்ட தமிழரை வானொலி நாடகத்துக்கு அழைத்துச் சென்ற பெருமை சானா அவர்களையே சாரும் ..இலங்கை வானொலி இந்தியாவில் தன காலை பதித்து தமிழரின் இணைப்புப் பாலமாக தொழில் பட்ட நேரம் .
தமிழோசையில் வளர்ந்த சிவபாதசுந்தரம் ,V N பாலசுப்ரமணியம் .எம் எஸ் ரத்தினம் பரம் தில்லைராஜ ,விவியன் நமசிவாயம் அருள் தியாகராஜா ஆகியோருடன் சானாவின் நாடகதிறமை இணைந்து செயல் பட்டதால் அந்தக் குழுவுக்கு தலைமை தாங்கிய சிவபாத சுந்தரனார் இவரின் நெருங்கிய நண்பரானார் .இவர் .நாடகப் பின் புலன்களை ஆவலின் உந்துதலால் இணைந்து வளர்த்தவர் .கலையரசு சொர்ணலிங்கம் அவர்களின் நாடகங்களில் கூட பங்கு பற்றியிருக்கிறார் .
எத்தனையோ நாடகத்தை எழுதிய பலரின் பிரதிகள் சானாவின் மேசையில் குவிந்த வண்ணம் இருக்கும்.அதற்குள் ஒளிபரப்புக்கு தகுதியானவற்றை தேர்ந்தெடுத்து ,நாடகப் பிரதியாக்கி அதன் அம்சம் மாறாமல் சுருக்கி நெறியாலும் திறமை க்கு நிகர் சானாவே தான் .வானொலி நாடகம் என்னும் பொழுது .குரலினால் தான் பாத்திரத்தின் கன ங்களை மக்கள் முன் கொண்டு வரமுடியும் .அதனை நடிப்பவர்களின் குரல் வளங்களில் மெருகேற்றி பயிற்சி அளிப்பார் .அந்த வகையில் தான் நாடகங்களை நின்ற இடத்தில் மக்கள் நின்று கே ட்டு ரசிப்பார்கள்.
மக்களின் மன ம் என்கிற மேடையில் நாடகத்தின் ஒலி வடிவங்கள் நுழைந்து உணர்ச்சிப் பிரவாகத்தை கொண்டு வந்து சேர்த்தது .
நாடக மேடை என்பது வாசகர்களின் மனம் என்பது வானொலிக் கலைகர்களுக்கு புரிய வைத்தவர் சானா.
மேடையில் ஏறத்தேவை இல்லை என்பதால் வானொலி நாடகங்களில் பெண்கள் தாராளமாக நடித்தார்கள் .
இவரின் லண்டன் அனுபவம், ஓவியக் கலை பயிற்சி, இந்தியத்திருநாட்டின் திரைத்துறையில் ஏற்பட்ட அனுபவம் எல்லாம் ...நடிப்பாற்றல் உள்ளவர்களை இனம் கண்டு கொள்வார் .
அந்தந்தப் பாத்திரத்துக்கு ஏற்ற பாத்திரங்களை தன கூரிய கண்களால் கண்டு பிடித்து விடுவார் .
பொதுவாக யாழ்ப்பாணத்து மொழி ,யின் பேச்சு வன்மை ,
பிற மாநிலங்களில் வாழும் தமிழ் மக்கள் (இந்துக்கள் ,கிறித்தவர் ,இஸ்லாமியர் )மொழி வடிவங்களில் வித்தியாசமானது .
இவற்றைப் பயன் படுத்தி
நாடக நுணுக்கங்களைக் கையாண்ட திறன் இவரையே சேரும் .
இவரிற்கு பின் வந்தோர்கள் இவரின் திறமையில் இருந்து கற்றுக் கொண்டது ஏராளம் .
சானாவுக்கு தன்னை வளர்த்து பெரியாளாகும் தன்மை இருக்கவில்லை அது தான் அவரின் பலவீனம்
.பொதுவாகவே சானாவின் திறமையை காலம் கடந்தே மக்கள் புரிந்து கொண்டனர் .
சானா செய்த வரலாற்றுத் தவறு தனது அனுபவங்களை நூலாக வடிக்காமலேயே1979 இல் மறைந்தது எனலாம் .
அவருக்கு இருந்த பன்னாட்டு தொடர்புகள் அதனை அவர் முழுமையாக பயன் படுத்தாமை வருத்தத்துக்கு உரியதே .
சானாவின் ஆளுமை இன்றும் மறை முகமாக பல கலைகர்களுக்குள் ஒளிந்து மிளிர்வது பெருமைக்குரியதே .
இவரின் வெற்றிக்குப் முக்கிய காரணம் இவரின் இல்லக் கிழத்தி குடும்பப் பொறுப்பை ஏற்று இவரை சுயாதீனமாக இயங்க விட்டமையே .இன்றும் பல மேதாவிகள் குடும்பப் பிரச்சனை காரணமாக் தமது திறமைகளை வெளியில் கொண்டு வரமுடியாமல் இருக்கின்றார்கள் .
மேலும் இன்னும் நிறைய எழுத ஆசை .ஆனால் வாசிப்பவர்களுக்காக இக்கட்டுரையை முடிந்தவரை தொகுத்திருக்கிறேன்
இவரை லண்டன் கந்தையா என்று தான் பலருக்குத் தெரியும் .
இவரின் பிள்ளைகள் உமா சுமதி அமலன் ,ராகுலன்,ஜனகன் இப்பொழுது வாழ்கிறார்கள் .இவரின் மூத்தமகன் அசோகன் ஜேர்மன் நாட்டில் மறைந்து விட்டார் .இன்னொரு மகன் தேவகன் என்பவரும் மறைந்து விட்டார் இன்னும் விசேடமாக சொல்வதானால் .தமிழ் இளைஞர் பேரவை தலைவராக இருந்த ரகுபதி பாலஸ்ரீதரன் இவரின் பாசமிகு மருமகனாக கொழும்பில் வாழுகிறார் .
இன்னும் பல சுவையான சம்பவங்களுடன் உங்களை சந்திக்கிறேன்

Manikkavasagar Vaitialingam

கருத்துகள்