சோமசுந்தரப் புலவர்
%%%%%%%%%%%%%%
யாழ்ப்பாணம் வலிகாமம் மேற்கில் மானிப்பாய்க் கோவிற்பற்றைச் சேர்ந்த நவாலியூர் என்னும் சிற்றூரில் வன்னியசேகர முதலியார் வழித்தோன்றலாய் அருமையினார் கதிர்காமர், இலக்குமிப்பிள்ளை ஆகியோருக்குப் பிறந்தவர் சோமசுந்தரர்; க. வேலுப்பிள்ளை இவருடன் உடன்பிறந்தவர். 28வது வயதில் சங்குவேலியைச் சேர்ந்த புலவரின் தாய்மாமனார் வேலுப்பிள்ளை என்பவரின் புதல்வி சின்னம்மையைத் திருமணம் புரிந்தார். அவர்களுக்கு இளமுருகனார், நடராசன் வேலாயுதபிள்ளை மங்கையற்கரசி, சரசுவதி என ஐந்து பிள்ளைகள்.
பதிகம், ஊஞ்சல் என்றும் இரண்டு பிரபந்தங்களையும் பாடிய சோமசுந்தரப் புலவர் கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா, திருப்பள்ளியெழுச்சி ஆகிய பிரபந்தங்களையும் பாடினார்.
சைவத் தலங்களை மையமாக அட்டகிமுக் கலம்பகம், தில்லை அந்தாதி, கதிரைச் சிலேடை வெண்பா போன்ற பிரபந்தங்களைப் பாடியுள்ளார்.
நானூற்றுக்கும் மேற்பட்ட அடிகளைக் கொண்ட கலிவெண்பாப் பாவகையால் அமைந்த தாலவிலாசம் என்ற இவரது செய்யுள் நூல் பனையின் பெருமைகளைக் கூறுகிறது
நவாலியூர் அருணாசல உபாத்தியாயரிடம் தமிழ், இலக்கண இலக்கியங்களையும் தனது உறவினரான இராமலிங்க உபாத்தியாயரிடம் ஆங்கிலத்தையும் கற்றார். சிறு வயதிலேயே பேச்சாற்றலையும் விவாதத்திறமையும் பெற்றார். தனது இளமைப் பருவத்திலேயே அட்டகிரி முருகன் பதிகம், அட்டகிரி முருகன் திருவூஞ்சல், சாவித்திரி கதை, பசுவின் கதை போன்ற நூல்களை இயற்றினார்.
தங்கத் தாத்தா என அன்பாக அழைக்கப்பட்டவர். ஏறக்குறையப் பதினைந்தாயிரம் செய்யுள்களை இயற்றியுள்ளார். போன்ற பல செய்யுள்களை சுவையான முறையில் எளிய தமிழில் பாடியுள்ளார். பலவகைப் பக்திப் பாடல்களையும் அவர் இயற்றியிருக்கின்றார். பனையின் பெருமைகளைக் கூறும் தாலவிலாசம், கதிர்காமம் முருகக் கடவுளைக் குறித்து பாடிய கதிரைச் சிலேடை வெண்பா புகழ் பெற்றவை
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தம் தோழர்களே!
கூடிப்பனங்கட்டி கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
பாசிப்பயறு வறுத்துக்குத்திச் செந்நெல்
பச்சை அரிசி இடித்துத் தெள்ளி,
வாசப்பருப்பை அவித்துக்கொண்டு நல்ல
மாவைப் பதமாய் வறுத்தெடுத்து,
வேண்டிய தேங்காய் உடைத்துத் துருவியே
வேலூரில் சக்கரையுங்கலந்து,
தோண்டியில் நீர்விட்டு மாவை அதிற்கொட்டி
சுற்றிக் குழைத்துத் திரட்டிக்கொண்டு.
வில்லை வில்லையாக மாவைக் கிள்ளித்தட்டி
வெல்லக் கலவையை உள்ளே இட்டு
பல்லுக் கொழுக்கட்டை அம்மா அவிப்பாளே
பார்க்கப் பார்க்கப் பசி தீர்ந்திடுமே!
பூவைத் துருவிப் பிழிந்து பனங்கட்டி
போட்டு மாவுண்டை பயறுமிட்டு
மாவைக் கரைத்தம்மா வார்த்துத் துழாவுவள்
மணக்க மணக்க வாயூறிடுமே
குங்குமப் பொட்டிட்டு பூமாலை சூடியே
குத்து விளக்குக் கொளுத்தி வைத்து
அங்கிளநீர் பழம் பாக்குடன் வெற்றிலை
ஆடிப் படைப்பும் படைப்போமே
வண்ணப் பலாவிலை ஓடிப்பொறுக்கியே
வந்து மடித்ததைக் கோலிக்கொண்டு
அன்னை அகப்பையால் அள்ளி அள்ளி வார்க்க
ஆடிப் புதுக்கூழ் குடிப்போமே
வாழைப் பழத்தை உரித்துத் தின்போம் நல்ல
மாவின் மாவின் பழத்தை அறுத்துத் தின்போம்
கூழைச் சுடச் சுட ஊதிக்குடித்துக்
கொழுக்கட்டை தன்னைக் கடிப்போமே
ஆடிப்பிறப்புக்கு நாளை விடுதலை
ஆனந்த மானந்தந் தோழர்களே
கூடிப் பனங்கட்டிக் கூழுங் குடிக்கலாம்
கொழுக்கட்டை தின்னலாம் தோழர்களே!
மே 25, 1878பிறந்த இவர் தனது 75 வயதில்யூலை 10, 1953 மறைந்தார்
இவர்
ஆசிரியப் பணியிலும் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். வட்டுக்கோட்டையில் இருந்த சின்னத்தம்பி ஆசிரியருடன் இணைந்து ஆங்கிலப் பாடசாலை தொடங்கினார். அங்கு 40 ஆண்டுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார். தமிழ், ஆங்கிலம், இதிகாசம் கற்பித்தார். ‘சைவ வாலிபர் சங்கம்’ என்ற அமைப்பைத் தொடங்கி, சமயப் பாடங்களைக் விருப்புடயவர்களுக்கு கற்பித்தார்.
ஆயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாகத் திகழ்ந்தார். ஆசிரியர் பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகும்கூட, மாணவர்களுக்கு சைவ சித்தாந்தம் உள்ளிட்ட இலக்கிய வகுப்புகளை நடத்தி தமிழ்த் தொண்டு ஆற்றினார். கலித்தொகை, திருக்குறள், திருக்கோவையார், சிவஞான போதம், கந்தபுராண செய்யுள்களைத் தெளிவாகவும், அழகாகவும், நகைச்சுவையுடனும் நடத்தி மாணவர்களுக்கு விளங்க வைப்பார்.
இவரை ‘வரகவி’ என்று அழைத்தனர். ‘உயிரிளங்குமரன்’ என்ற நாடகமும் எழுதியுள்ளார். இது அட்டகிரி கந்தசுவாமி கோயிலில் அரங்கேற்றப்பட்டது.
‘சைவபாலிய சம்போதினி’ என்ற சைவ சித்தாந்த மாத இதழை 1910-ல் தொடங்கி, 5 ஆண்டுகள் நடத்தினார். 1927-ல் ஈழத்து தென்னிந்தியத் தமிழ் அறிஞர்கள் இவருக்குப் பொற்கிழியும் புலவர் பட்டமும் வழங்கினர்.
ஆங்கில ஆட்சியை எதிர்த்து தேசிய விழிப்புணர்வைத் தூண்டும் பாடல்களை எழுதினார். கந்தவனக் கடவை நான்மணிமாலை, தந்தையார் பதிற்றுப்பத்து, நல்லையந்தாதி, நல்லை முருகன் திருப்புகழ், கதிரைமலை வேலவர் பதிகம் ஆகியவை குறிப்பிடத்தக்க படைப்புகள்.
குழந்தைகளுக்கான ஆடிப்பிறப்பு, கத்தரிவெருளி, புளுக்கொடியல், பவளக்கொடி, இலவுகாத்தகிளி உள்ளிட்ட ஏராளமான பாடல்களை இயற்றி சிறுவர் இலக்கிய முன்னோடி என்ற பெருமை பெற்றார். தாடி அறுந்த வேடன், எலியும் சேவலும் உள்ளிட்ட இவரது கதைப் பாடல்கள் சிறுவர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைப்பவை.
பதிகம், ஊஞ்சல், கலம்பகம், நான்மணி மாலை, அட்டகம், அந்தாதி, சிலேடை வெண்பா என பல வடிவில் பாடல்கள் பாடியுள் ளார். 400-க்கும் மேற்பட்ட அடிகள் கொண்ட கலிவெண்பா பாவகையில் அமைந்த தாலவிலாசம் மிகவும் பிரசித்தம்.ஆக இருந்தது
சிறுவர்களுக்காக இவர் பாடிய பாடல்கள் ‘சிறுவர் செந்தமிழ்’ என்ற பெயரில் 1955-ல் நூலாக வெளிவந்தது. சிலேடை வெண்பா இயற்றுவது இவரது தனிச்சிறப்பு. தமிழுக்காக 60 ஆண்டுகளுக்கு மேலாக தொண்டாற்றிய ‘தங்கத் தாத்தா’ நவாலியூர் சோமசுந்தர புலவர் 75-வது வயதில் (1953) மறைந்தார்.என்பது எல்லோரையும் மனதளவில் பாதித்தது
கத்தரி வெ ருளிப்பாட்டு எனக்கு விருப்பமான பாடல்
கத்தரித் தோட்டத்து மத்தியிலே நின்று
காவல் புரிகின்ற சேவகா! - நின்று
காவல் புரிகின்ற சேவகா!
மெத்தக் கவனமாய்க் கூலியும் வாங்காமல்
வேலை புரிபவன் வேறுயார்! - உன்னைப்போல்
வேலை புரிபவன் வேறுயார்?
கண்ணு மிமையாமல் நித்திரை கொள்ளாமல்
காவல் புரிகின்ற சேவகா! - என்றும்
காவல் புரிகின்ற சேவகா!
எண்ணி உன்னைப்போல் இரவுபகலாக
ஏவல் புரிபவன் வேறுயார்? - என்றும்
ஏவல் புரிபவன் வேறுயார்?
வட்டமான பெரும் பூசினிக்காய் போல
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!- தலையில்
மஞ்சள் நிற உறு மாலைப்பார்!
கட்டியிறுக்கிய சட்டையைப் பாரங்கே
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!-இரு
கைகளில் அம்பொடு வில்லைப்பார்!
தொட்டு முறுக்காத மீசையைப்பார்! கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்! - கறைச்
சோகிபோலே பெரும் பல்லைப்பார்!
கட்டிய கச்சையில் விட்டுச் செருகிய
கட்டை உடைவாளின் தேசுபார்! - ஆகா
கட்டை உடைவாளின் தேசுபார்!
பூட்டிய வில்லுங் குறிவைத்த பாணமும்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ? - உன்றன்
பொல்லாத பார்வையுங் கண்டதோ ?
வாட்ட மில்லாப்பயிர் மேயவந்த பசு
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே - வெடி
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே
கள்ளக் குணமுள்ள காக்கை உன்னைக்கண்டு
கத்திக் கத்திக் கரைந்தோடுமே - கூடிக்
கத்திக் கத்திக் கரைந்தோடுமே
நள்ளிரவில் வருகள்வனுனைக் கண்டு
நடுநடுங்கி மனம் வாடுமே - ஏங்கி
நடுநடுங்கி மனம் வாடுமே
ஏழைக் கமக்காரன் வேளைக் குதவிசெய்
ஏவற்காரன் நீயே யென்னினும் - நல்ல
ஏவற்காரன் நீயே யென்னினும்
ஆளைப்போலப் போலி வேடக்காரன் நீயே
ஆவதறிந்தன னுண்மையே - போலி
ஆவதறிந்தன னுண்மையே
தூரத்திலே யுனைக் கண்டவுட னஞ்சித்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம் - மிகத்
துண்ணென் றிடித்ததென் நெஞ்சகம்
சேரச் சேரப் போலி வேடக்காரனென்று
தெரிய வந்ததுன் வஞ்சகம் - நன்று
தெரிய வந்ததுன் வஞ்சகம்
சிங்கத்தின் தோலினைப் போர்த்த கழுதைபோல்
தேசத்திலே பலர் உண்டுகாண் - இந்தத்
தேசத்திலே பலர் உண்டுகாண்
அங்கவர் தம்மைக்கண் டேமாந்து போகா
அறிவு படைத்தனன் இன்றுநான் - உன்னில்
அறிவு படைத்தனன் இன்றுநான்.
குதிரை தாடியை கவ்விய பொழுது ...
வீமா! வீமா! ஓடி வாவா - அணில்
வேட்டை ஆடிப்பிடித் தூட்டுவேன் வாவா
தேமா மரத்திற் பதுங்கி - மாங்காய்
தின்னும் அணிலைப் பிடிப்போம் ஒதுங்கி
மரத்தில் இருந்து குதித்தே - அடடா
வாலைக் கிளப்பிக்கொண் டோடுதே பார்பார்
துரத்திப் பிடிபிடி வீமா - உச்சு
சூச்சூஅணில் எம்மைத் தப்பியும் போமா?
பொந்துக்குட் புகுந்தது வீமா - உந்தப்
புறத்தில்நில் அந்தப் புறத்தினில் வருவேன்
அந்தோஎன் தாடியை விடுவாய் - அந்த
அணில்தப்பி ஓடிய தையையோ கெடுவாய்.
பவளக்கொடி பாட்டு நான் அப்பொழுது தேடி அலைந்த பொழுது
சரஸ்வதி மாமி (திருமுருகன் அவர்களின் அம்மா )
எனக்கு இந்தப்பாட்டை எழுதிபடிக்க தந்தார்
அந்தப்பாடல் இதோ
பருத்தித்துறை யூராம்
பவளக்கொடி பேராம்
பாவைதனை யொப்பாள்
பாலெடுத்து விற்பாள்
அங்கவட்கோர் நாளில்
அடுத்ததுயர் கேளிர்!
பாற்குடஞ் சுமந்து
பையப்பைய நடந்து
சந்தைக்குப் போம்போது
தான்நினைந்தாள் மாது:
பாலையின்று விற்பேன்
காசைப்பையில் வைப்பேன்”
முருகரப்பா வீட்டில்
முட்டைவிற்பாள் பாட்டி
கோழிமுட்டை வாங்கிக்
குஞ்சுக்குவைப் பேனே
புள்ளிக்கோழிக் குஞ்சு
பொரிக்குமிரண் டைஞ்சு
குஞ்சுகள் வளர்ந்து
கோழியாகும் விரைந்து
விரந்துவளர்ந் திடுமே
வெள்ளைமுட்டை யிடுமே
முட்டைவிற்ற காசை
முழுதுமெடுத் தாசை
வண்ணச்சேலை சட்டை
மாதுளம்பூத் தொப்பி
வாசனை செருப்பு
வாங்குவேன் விருப்பு
வெள்ளைப்பட் டுடுத்து
மினுங்குதொப்பி தொடுத்துக்
கையிரண்டும் வீசிக்
கதைகள்பல பேசிச்
சுந்தரிபோல் நானே
கடைக்குப்போ வேனே
அரியமலர் பார்ப்பாள்
அம்புசமும் பார்ப்பாள்
பூமணியும் பார்ப்பாள்
பொற்கொடியும் பார்ப்பாள்
சரிகைச்சேலை பாரீர்
தாவணியைப் பாரீர்
வண்ணச்சட்டை பாரீர்
வடிவழகு பாரீர்
என்றுயாரும் புகழ்வர்
என்னையாரோ இகழ்வர்?
பாரும்பாரும்‘ என்று
பவளக்கொடி நின்று
சற்றுத்தலை நமிர்ந்தாள்
தையலென்ன செய்வாள்?
பாலுமெல்லாம் போச்சு
பாற்குடமும் போச்சு
மிக்கதுய ரோடு
வீடுசென்றாள் மாது
கைக்குவரு முன்னே
நெய்க்குவிலை பேசேல்.
மேலும்
இணுவில் கந்த சுவாமி கோவில் வாசல் பக்கத்தில் ஒரு ஒழுங்கை போகிறது
அங்கே Accountant இ ராமனாதனின் மனைவி சோமசுந்தரப்புலவரின் பேர்த்தி வசித்து வருகிறார்
இது பலருக்கு தெரியாது .என்னுடைய பால்ய நண்பன் மனோகரனின் தாயார் .அவர் . எனது நண்பன் எங்கே இருக்கிறானோ தெரியவில்லை )
கண்ணன் எங்கள் கண்ணனாம்,
கார்மேக வண்ணனாம்
வெண்ணெய் உண்ட கண்ணனாம்,
மண்ணை உண்ட கண்ணனாம்;
குழலினாலே மாடுகள்,
கூடச் செய்த கண்ணனாம்
கூட்டமாகக் கோபியர்,
கூட ஆடும் கண்ணனாம்
மலைக்கு நல்ல குடையென,
மலையைப் பிடித்த கண்ணனாம்
பூதனையின் பால் உறிந்து,
மோக்ஷம் கொடுத்த கண்ணனாம்
உரலிலே கட்டுப் பெற்று,
தவழ்ந்து வந்த கண்ணனாம்
உறியில் வெண்ணையைக் குறிவைத்துண்ட,
திருட்டு மாயக் கண்ணனாம்
அன்னை யசோதைக்கு வாயைக் காட்டி,
அசர வைத்த கண்ணனாம்
விஸ்வரூபம் கண்ட அன்னையை,
மயக்க வைத்த கண்ணனாம்
கோபஸ்த்ரீயுடன் ராஸலீலை,
ஆடி வந்த கண்ணனாம்
பகளாசுரனின் மூக்கைப் பிளந்து,
சாகடித்த கண்ணனாம்.
இதுவும் அவர் இயற்றிய பாடலே
கருத்துகள்
கருத்துரையிடுக