பிராம்மணன்

யூதனா ?ஆரியனா ? அன்றி தமிழனா ?
அல்லது நமது பண்பாட்டுக் காவலனா ?
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இலங்கையில் பிராமணர் மிகக் குறைந்த எண்ணிக்கையில் வாழ்கிறார்கள். இவர்கள் தமிழுக்கும் சைவசமயத்துக்கும் பெருந்தொண்டாற்றியுள்ளார்கள். இப்போது பெரும்பாலானோர் கோயில்களில் பூசகர்களாக உள்ளனர். சிலர் ஆகம விதிகளையும் வேதங்களையும் நன்கு கற்றறிந்து கோயில் விழாக்கள், சமூகத்தினரின் சமயச் சடங்குகள் என்பவற்றை நடத்தி வைக்கிறார்கள்.
தற்காலத்தில் ஈழத் தமிழ் மக்கள் பல நாடுகளில் குடியேறியுள்ளதால் ஈழப் பிராமணர்களும் அந்தந்த நாடுகளுக்குச் சென்று சமயப் பணி ஆற்றி வருகிறார்கள். ஈழத் தமிழ் மக்கள் மத்தியில் இவர்கள் மதிப்பிற்குரியவர்களாக விளங்குகிறார்கள்.ஆனாலும் வியாபாரமாகி விட்ட கோவில் பூசைகளும் சடங்குகளும்
சமயங்களில் உள்ள நம்பிக்கையை குறைக்க ஆரம்பித்து விட்டது .
இதனால் பலர் அல்லேலூயா மதத்துக்கும் அப்போஸ்தலர் மதத்துக்கும் மாறி வருகிறார்கள் .
பார்ப்பனர்கள் தமிழர்கள் என்பது உண்மையானால், அங்கே பிராமணன் எங்கே இருந்து வந்தான்? சூத்திரன் எங்கிருந்து வந்தான் பிறப்பின் அடிப்படையில்?
இந்தப் பிர்மா பிராமணர்களுக்காகவே இந்த லோகத் தைப் படைத்தான் என்கிற மனுதர்மம் எங்கிருந்து குதித்தது?
அந்தப் பார்ப்பனர்களுக்குத் தாய்மொழி சமஸ்கிருதம் என்பது எப்படி? ஒருவருக்குத் தாய்மொழி ஒன்றாகத் தானே இருக்க முடியும் - ஒரு தகப்பன் இருப்பதுபோல.
நெருக்கடியான கேள்விகளிலிருந்து தப்பித்துக் கொள்ளும் கட்டத்தில் மட்டும் நான் தமிழன் என்று சொன்னால் போதுமா? மற்றபடி மொழியால், மொழி உச்சரிப்பால் பண்பாட்டால், பழக்க வழக்கத்தால், நடைமுறைகளால், உறவு முறைகளால் பார்ப்பனர்கள் தமிழர்களாக வாழ் கிறார்களா?
எந்தப் பார்ப்பான் தமிழில் பெயர் சூட்டுகிறான்? பார்ப்பனர்கள் உண்மையிலேயே தமிழர்கள் என்றால், தமிழ்மொழிதான் அவர்களின் தாய்மொழி என்று ஒப்புக் கொண்டால், கோயில்களில் எங்கள் தாய்மொழியான தமிழ்தான் வழிபாட்டு மொழியாக இருக்க வேண்டும் என்று போராட முன்வராதது ஏன்? போராடா விட்டாலும் பரவாயில்லை, வழிபாட்டில் தமிழ் இருக்க வேண்டும் என்று அரசு ஆணை பிறப்பித்தால் பார்ப்பனர்கள் தமிழர்கள் என்றால் அதனை வரவேற்க வேண்டாமா? மாறாக உச்ச நீதிமன்றம் வரை சென்று தடுக்க முட்டுக்கட்டை போடப் பார்ப்பனர்கள் முயலுவது ஏன்?
பூஜை வேளையில் சங்கராச்சாரியார் தமிழில் பேசாதது ஏன்?
தாழ்த்தப்பட்டவர்களும் தமிழர்கள், நாங்களும் தமிழர்கள்தான் என்று பார்ப்பனர்கள் கருதுவது உண்மை யானால் அந்தத் தாழ்த்தப்பட்ட தமிழர்கள் உரிய பயிற்சி பெற்று கோயில்களில் அர்ச்சகர்களாக நியமிக்கப்படும் பொழுது உச்சநீதிமன்றம் வரை சென்று முடக்குவது ஏன்?
தமிழ்ப் புத்தாண்டு, பொங்கல், ஆயுத பூஜை கொண் டாடுகிறார்களாம் பார்ப்பனர்கள் - அதனால் அவர்களைத் தமிழர்களாக ஒப்புக் கொள்ள வேண்டுமாம்.
தமிழை நீஷப்பாஷை என்று கருதுவது ஏன்?
தமிழ் ஆண்டு என்கிறதே 'விஜயபாரதம்' - அந்த அறுபது ஆண்டுகளில் ஒரே ஒரு ஆண்டுக்காவது தமிழில் பெயரில்லையே ஏன்? இதைப் பற்றி என்றைக்காவது பார்ப்பனர்கள் அக்கறை செலுத்தியதுண்டா?
இந்தியாவில்
திமுக ஆட்சி சென்று, அதிமுக ஆட்சி வந்தவுடன் தங்கள் செல்வாக்கைப் பயன்படுத்தி பார்ப்பனர் மீண்டும் அந்தப் பழைய சமஸ்கிருதப் பெயர்களைக் கொண்ட வரு ஷத்துக்கு சிவப்புக் கம்பள வரவேற்பு கொடுத்தது ஏன்?
பொங்கலை சங்கராந்தி என்று சமஸ்கிருதத்தில் குறிப்பிடுவானேன்? இயற்கையான அந்த அறுவடைத் திருவிழாவிற்குப் புராண முலாம் பூசி பார்ப்பன மயமாக் குவானேன்?
தீபாவளிக்கும், தமிழர்களுக்கும் தான் என்ன சம் பந்தம்? நாயக்கர் மன்னர்களின் ஆட்சிக் காலத்தில் திணிக் கப்பட்டதற்கு யார் காரணம்!
இந்து மதப் புராணங்களில், இதிகாசங்களில் காணப்படும் சுரர்கள் யார்? அசுரர்கள் யார்? சுரர்கள் என்றால் - ராமணர்கள், அசுரர்கள் என்றால் திராவிடர்கள் என்று வரலாற்று ஆசிரியர்கள் (பார்ப்பனர் உட்பட) எழுதிக் குவித்திருக்கிறார்களே, இதற்கு அறிவு நாணயமான பதில் என்ன?
எந்தப் பார்ப்பான் வீட்டில் தமிழின் அடிப்படையில் விழாக்கள், நிகழ்ச்சிகள் நடக்கின்றன? விரலை மடக்குங்கள் பார்க்கலாம்.
முஸ்லிம்கள் மார்க்கத்தால் வேறுபட்டு இருக்கலாம். சென்ற தலைமுறையில் மதம் மாறிய காரணத்தால் அவர்கள் தமிழர்கள் இல்லாமல் போய் விடுவார்களா?
பார்ப்பன இந்து மதத்தில் வருணாசிரம ஜாதி அமைப் பின் காரணமாக, தீண்டாமைக் கொடுமை காரண மாகத்தானே அவர்கள் மதம் மாறினார்கள்? அந்த மதமாற்றத்திற்குப் பார்ப்பனர்களே காரணமாக இருந்து கொண்டு குதிரை கீழே தள்ளியதோடு மட்டுமல்லாமல், குழியும் பறித்த கதையாக அவர்களை எதிரிகளாகப் புனைவது மோசடியல்லவா?
தங்களின் பிறவி ஆதிக்கத்தை எதிர்த்துப் பார்ப்பனர் அல்லாத பெரும்பான்மை மக்கள் கிளம்பி விடுவார்கள் என்பதைத் திசை மாற்றம் செய்யத் தானே இந்த மாய்மாலம்!
ஈழத்துக் கல்விப் பாரம்பரியத்திலும் பண்பாட்டுப் பேணுகையிலும் பிராமண சமூகத்தினரின் பங்களிப்பு மகத்தானது. ஆரியச் சக்கரவர்த்திகள் என அழைக்கப்பட்ட யாழ்ப்பாண மன்னர்களும் பிராமண வமிசத்தைச் சேர்ந்தவர்கள் என்றே ஆய்வாளர்கள் கூறுகின்றனர். ஈழநாட்டிற்கு மேலைப் புலத்தவர்கள் வருவதற்கு முன்னர் கல்வி, புலமை, அரசியலாதிக்கம் முதலானவற்றிலே பிராமண சமூகத்தினரே சிறப்புற்று விளங்கினர் என்பதற்குச் சான்றுகள் உள.
ஆரிய சக்கரவர்த்திகளின் ஆலயம் என்று இணுவில் மக்களால் கூறப்படும் ஒரு ஆலயத்தில் பிராம்மண ஆதிக்கமே காணப்படுகிறது .
இது பற்றி யாரிடம் கேட்டாலும் அய்யா சொன்னால் சரி என்று சொல்லி விடுவார்கள் .
பிராமண சமூகத்தினர் தமிழ், வடமொழி இலக்கிய இலக்கணங்களில் மாத்திரமன்றி வேதாகமங்களிலும் சைவ சித்தாந்தத்திலும் வைத்திய சோதிடக் கலைகளிலும் ஆழமான புலமையுடையவர்களாக விளங்கினர். சரசோதிமாலை எனும் சோதிட நூலை இயற்றிய நான்காம் பராக்கிரமபாகுவின் அவைக்களப் புலவர் போசராச பண்டிதர் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவரே என்பதும் குறிப்பிடத்தக்கது. ஈழத்துப் புலமைப் பாரம்பரியத்திலே நிலைத்து நிற்கும் ஆக்கங்களைத் தந்த வட்டுக்கோட்டை கணபதி ஐயர், கொச்சிக் கணேசையர், சுன்னாகம் வரத பண்டிதர், தும்பளை முத்துக்குமாரசாமிக் குருக்கள், தும்பளை சுப்பிரமணிய சாஸ்திரிகள், வித்துவ சிரோமணி கணேசையர் உள்ளிட்ட பல பேரறிஞர்கள் பிராமண சமூகத்தைச் சேர்ந்தவர்களே என்பதும் ஈண்டு மனங்கொள்ளத்தக்கது. ஈழத்துத் தமிழ், வடமொழிக் கல்வி வளர்ச்சிக்கு அந்தணர்கள் ஆற்றிய பணி தனியே ஆராயப்படவேண்டிய விடயப்பரப்பை உள்ளடக்கியதாகும்.
ஐரோப்பியரின் வருகையும், அவ் வருகையோடு ஓட்டி நிகழ்ந்த கிறீஸ்தவப் பரம்பலும், கிறீஸ்தவச் சூழல் தந்த ஆங்கிலக் கல்வியும் பிராமணச் சமூகத்தினரின் வாழ்வியல் வழிமுறைகளுக்குத் தடைக்கற்களாகவே அமைந்தன.
ஆசார சீலர்களாகவும் செந்தண்மை பூண்டு ஒழுகும் பண்பினைக் கடைப்பிடிப்பவர்களாகவும், சமய அனுட்டானங்களைப் பேணுபவர்களாகவும் பிராமண சமூகத்தினர் விளங்கியமையால் மேலைப்புலத்தவரின் கல்வி, சமய, பண்பாட்டு ஓட்டத்துடன் ஒத்து ஓடமுடியாத சமூகச் சூழ்நிலையிலே தமது பணிகளை மேற்கொண்டனர். மேலைப்புல அலைக்கு எதிராக நீச்சலடிக்கும் பணியைப் பிராமணர்களே செய்து வந்தனர். இச் சமூகத்தினருக்கு இருந்த இந்திய உறவும் தொடர்பும் பண்பாட்டுப் பேணுகைக்கு பக்கபலமாக இருந்தன எனலாம்.
யாழ்ப்பாண அரசின் இராசதானியாக நல்லூர் விளங்கிய காலத்திலேயே கோப்பாய் அதன் பிரதான ஆட்சி மையப் பகுதியாக இருந்தது. சைவமும் தமிழும் வளர்ந்த இக்கிராமத்திலே பல அறிஞர்களும் வித்துவான்களும் தோன்றியுள்ளனர். சைவமும் தமிழும் செழித்து வளர்ந்த கோப்பாய் கிராமத்திலே தான் பிரம்மஸ்ரீ சண்முகநாதக் குருக்கள் பிறந்து வளர்ந்தார்கள்.
தமிழையும் வடமொழியையும் குருகுலக் கல்வி மரபிலே பெற்ற சண்முகநாத குருக்களுக்கு ஆசார அனுட்டானங்கள் குடும்பச் சொத்தாகவே இருந்தன. அரச உத்தியோகம் பெறும் கல்வித் தகைமையைப் பெற்றிருந்தபோதிலும் கோயிற் கடமைகளே மேலானவை என்ற கருத்து நிலை வேரூன்றியிருந்தமையால் கோப்பாய் வீரபத்திர சுவாமியின் பணியே தம் தலையாய பணியென ஏற்றுக்கொண்டார்.
ஈழத்துச் சைவாலயங்களிலே நல்லூர்க் கந்தசுவாமி கோயிலுக்குப் பலவகையான தனித்துவமும் முக்கியத்துவமும் உண்டு. ஈழத்திற்கு, சிறப்பாக யாழ்ப்பாணக் குடாநாட்டிற்கு முன்மாதிரியாகத் திகழும் நல்லூர் கந்தசுவாமி ஆலயத்திலே ஐம்பது ஆண்டுகள் தொடர்ந்து பணியாற்றிய பெருமை இவர் ஒருவரையே சாரும் .
நல்லூரிலே, ஆறுமுகசுவாமி சந்நிதானத்திலே சண்முகநாதக் குருக்களைக் கண்டவர்கள் அவரது பக்தி பூர்வமான அபிஷேக ஆராதனைகளை இலகுவில் மறக்க மாட்டார்கள். தெய்வத்துடன் பேசுவது போல அவர் செய்யும் பூசைகள், தீபாராதனையின் அமைதி தவழும் அழகு என்றும் எம் நெஞ்சை விட்டு நீங்காதவை.
குருக்கள்2௦௦5 இல் மறைந்து விட்டார் .தற்பொழுது ஆலய பரிபாலகரும்2௦21இல் மறைந்து விட்டார் .
நல்லூர் வழிபாட்டிற்கு வந்த பல இலட்சம் அடியார்களின் நெஞ்சிலே முருகனோடு சண்முகநாதக் குருக்களின் முகமும் நினைவிலே நிற்கும்.
இணுவில் இல் என் மன ம் கவர்ந்த அன்றைய பிராம்மண ர்களில் சதாசிவக் குருக்கள் சிவஞானக் குருக்கள் இராமனாதக் குருக்கள் தற்போதுள்ள சோமாஸ்கந்தக் குருக்கள் இறைவனுக்கு பூசை செய்யும் பொழுதோ அன்றி மக்களோடு பேசும் பொழுதோ ஒரு தெய்வீக சக்தி இருப்பதை உணர்ந்து கொண்டிருக்கிறேன் .
பிராமணர்களின் பூர்விகம் ஸ்கேண்டிநேவியா, அதை ஒட்டிய வட துருவ பிரதேசமாகும். ... எனவே வேதத்தின் அடிப்படையிலும், மொழியின் அடிப்படையிலும் பிராமணர்களின் பூர்வீகம் வட ஐரோப்பியா என்று நிரூபிக்கப்பட்டுள்ளது.அவர்களின் நிறமும் உருவ அமைப்பும் ஏற்றுக் கொள்ளக் கூடியவர்களே .
. வட துருவம் மிக கடும் குளிர் பிரதேசம், ஆண்டிற்கு 9 மாதங்கள் பனிப்பொழிவு ஏற்படும் ஆதலால் உணவு பஞ்சம் எப்போதும் இருக்கும். ஆண்டின் 3 மாதத்தில் கிடைக்கும் கோதுமை, பார்லி, ஓட்ஸ் போன்ற தானியங்களையும், பழங்களையும் பதப்படுத்தி வைத்து கொண்டு குளிர்காலத்தில் மாமிசம், மீன் மற்றும் முட்டைகளுடன் சேர்த்து உண்டு வந்த பிராமணர்கள், குளிர் காலங்களில் கடுமையான உணவு பற்றாக்குறை மற்றும் பல வித நோய் தொற்றுக்களால் கொத்து கொத்தாக செத்து மடிந்தனர். எப்டியாவது வாழ்ந்தாக வேண்டுமே. கொஞ்சம் கொஞ்சமாக தெற்கு நோக்கி நகர்ந்து மித வெப்பமான மத்திய ஆசிய பகுதிக்கு வந்தவர்களை அங்கிருந்த பூர்வ குடிகளான ஜிப்ஸிகள் அடித்து விரட்ட தெண் கிழக்கு திசையில் நகர்ந்து கி.மு 1500 வாக்கில் சிந்து சமவெளியை (தற்போதைய பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான்) அடைந்தனர். அங்கு ஏற்கனவே நாகரிகமான மக்கள் இனம் ஆரிய பிராமணர்களை போல் நாடோடியாக இல்லாமல் விவசாயம் செய்து நகரங்களை அமைத்து கல் வீடுகளில் வாழ்ந்து வந்தனர்.
சிந்து சமவெளி நாகரீகம் ஆரியர்களின் வருகைக்கு 1000 ஆண்டுகள் பேசாமையானது. அதாவது இன்றிலிருந்து சுமார் 5000 ஆண்டுகள் பழமைமையானது.(தமிழர் வாழ்ந்த இடம் )
அரிசி பயிரிட்டு வந்த சிந்து சமவெளி மக்களிடம் பிராமணர்கள் முதன்முறையாக கோதுமையை அறிமுகப்படுத்தினார். பாலுக்காகவும், உழவுக்காகவும் மாடுகளை பயன்படுத்தி வந்த திராவிடர்களிடம் வேகமாக ஓடும் ஆனால் பால் தராத, விவசாயப்பணிகளுக்கு பயன்படாத குதிரையை அறிமுகப்படுத்தினர். குதிரை மாடுகளை விட உயர்வானது எனவும் சொல்லினர். இதுவே ஆரியர்கள் தங்களை உயர்வானர்கள் என்று காட்டி கொள்ள எடுத்த முதல் படி.
து ருப்பிடிக்கும் இரும்பை திராவிடர் பயன் படுத்திய செம்பை விட உறுதியான உலோகம் என நம்பவைத்தனர்.
அதுபோலவே சம்ஸ்கிருத மொழியையைம் முன்னிலை படுத்தினர். உண்மையில் சமஸ்கிருதம் (sanskrit) என்பதன் அர்த்தம் "நன்றாக செய்யப்பட்டது" என்றாகும். san என்ற சொல் "நல்ல, புனித" என்ற பொருளிலும் create என்ற சொல் அதே பொருள் மற்றும் எழுத்து வடிவில் இப்போதும் பிரெஞ்சு, ஸ்பேனிஷ் மொழிகளில் வழங்கப்படுகிறது. ஆக இந்த மொழி மக்களால் பேசப்பட்டு தோன்றியதில்லை. மாறாக ஒரு குழுவினரால் கட்டமைக்கப்பட்ட மொழி. வேண்டுமென்றே சாமானியவர்களுக்கு புரியாத, மிகக்கடினமான இலக்கணத்தை இம்மொழிக்கு உருவாக்கினார். மேலும் கடினமான கூட்டெழுத்துக்களை சேர்த்தும், பிரித்து படிக்கும்போது எதிர்மறையான பொருளைத்தரும் விதமான சொற்களை சேர்த்தும் அமைக்கப்பட்ட மொழிதான் சமஸ்கிருதம்.
ஆரியர்கள் சிந்து சமவெளியில் குடியேறியபோது அவர்களுடன் பெண்கள் வரவில்லை. ஆண்கள் மட்டுமே குடியேரினர். அவர்கள் வேண்டுமென்றே பெண்களை விட்டுவிட்டு வந்தார்களா, அல்லது அவர்கள் வரும் வழியில் பெண்கள் நோய் மற்றும் எதிரிகளால் கொல்லப்பட்டனரா என்று தெளிவில்லை. ஆனால் ஆண்கள் மட்டுமே வந்து குடியேறினர் என்ற கருத்தை சங்கராச்சாரியார் குறிப்பிட்டுள்ளார்.
இங்கு குடியேறிய ஆரிய ஆண்கள் இனப்பெருக்கத்துக்காக பூர்வகுடி திராவிட பெண்களையே சார்ந்திருக்க வேண்டி இருந்தது. ஆனால் திராவிட பெண்களுடன் இனவிருத்தி செய்தாலும் அப்பெண்களை தங்கள் இனத்தவராக ஒப்பு கொள்ளவில்லை.
மாறாக அப்பெண்கள் எப்பொழுதும் மீண்டும் திராவிட ஆண்களோடு கலந்து விடுவார்களோ என்ற அச்சம் ஆரிய ஆண்களை சதா குடைந்து கொண்டிருந்தது. அதற்கு காரணம் இல்லாமல் இல்லை. ஆரியர்கள் நாகரீகத்தில் பின் தங்கி இருந்தனர். சிந்து சமவெளியில் ஏற்கனவே ஆண்கள் விவசாயம், நெசவு தொழில், உலோக வார்ப்பு, கட்டிட கலை என பல தொழில்நுட்பங்களை அறிந்திருந்தனர்.
ஆனால் ஆரிய ஆண்கள் நாடோடிகளாகவும், நாகரீகரிகமற்றவர்களாகவும், பல நோய் தொற்று உள்ளவர்களாகவும் இருந்ததால் தங்களை மணந்த பெண்கள் தங்களை விட்டு போய் விடக்கூடம் என்ற சந்தேகத்திலேயே வாழ்ந்தனர்.
இதன் வெளிப்பாடாக தங்களுக்கு பிறந்த ஆண் குழந்தைகள் பெண் யோனியில் ஜனித்த பாவம் தீர வேண்டும் என்று ஆண்களுக்கு பூணூல் அணிவித்தனர்.
பெண்களை சொத்து, சடங்குகளில் பங்கேற்கும் உரிமை என எதுவும் இல்லாமல் அடிமைகளாக நடத்தினர். அந்த நடை முறைகளையே வேதங்களிலும் சொல்லி வைத்தனர். ஆக ஆரிய பிராமணர்கள் ஆண் வழி அதாவது தந்தைவழி சமூகமாக உருவெடுத்தது.
மாறாக இயற்கை வழிவந்ததமிழ் இனம் உயிர் தோன்றலுக்கு காரணமான பெண்ணை தெய்வமாக வழிப்படும் தாய் வழி சமூகமாக இருந்தது.
தமிழன் பெண்ணை தெய்வமாக வளர்த்தான் ,பணிந்தான்
ஆனால் பிரம் மண னோ பெண்ணை அடிமையாக் கிக் கொண்டான் .
தொழில் ஏதும் அறியாத பிராமணர்கள் தங்கள் இருப்பை நிலை நிறுத்தி கொள்ள ஏற்கனவேஅறுபத்து நான்கு கலைகளை இயற்கையாக தொழில் வளர்ச்சி பெற்றிருந்ததமிழ் மக்களை தொழில் ரீதியாக பிரித்தனர். பிறகு அந்த பிரிவினையை சாதி என்றும், தொழில் அடிப்படையில் இல்லாது பிறப்பின் அடிப்படையில் ஆனது என்றும் மேலும் கடுமையாக்கி அதற்கு ஆதரவாக வேதத்தில் ஸ்லோகங்களையும் உருவாக்கினார். ஆனால் நால்வகை சாதியை சொல்லும் ஸ்லோகம் பழைய ரிக் வேதத்தில் இல்லை என்றும், பின்னாளில் இடைச்செருகலாக புகுத்தப்பட்டது என்றும் அந்த சொல்லாடல்களின் தன்மையை ஆராய்ந்த பண்டிதர்கள் சொல்கிறார்கள்.
வேதம் முழுவதும் இந்திரனையே முழுமுதல் கடவுளாகவும் இந்திரனை குஷிப்படுத்த யாக, யக்ஞங்கள் செய்யும் முறைகளுமே விளக்கப்பட்டுள்ளது.
இலக்குமியின் இலங்கு கையாகிய வழங்கிய இலங்கு கை அதாவது இலங்கை குபேர புரியாகவே இருந்தது .இராவணன் ஆண்ட பூமி அது
இந்தியாவில்
சமண சமயமும் மேலோங்கி இருந்தது. கடைசி மற்றும் 24வது தீர்த்தங்கரரான மகாவீரர் கிமு 600 களில் வாழ்ந்தவர். அதற்கு 23 தலைமுறைகள் முன்பு (ஒரு தலைமுறைக்கு 25 வருடங்கள் என கொண்டாலும் சுமார் 600 ஆண்டுகள்) தோன்றிய முதல் தீர்த்தங்கரர் ஆதிநாத் என்று வழங்குப்படுகிறார். இந்த முதல் சமண துறவியை அபகரித்து ஆதி சிவன் என்றாக்கி பிராமணர்கள் தங்கள் தெய்வமாக வரித்து கொண்டனர். தவம் இயற்றுதல், தியானம் செய்தல், தன்னுள் மனதுள் கடந்து மனித இனத்தை உய்விக்கும் தேடல் சமண சமய கோட்ப்பாடுகளின் அடிப்படையாகும். தவம், தியானம் செய்யும் முறைகள் எதுவும் பிராமணர்களின் வேதத்தில் குறிப்பிடவில்லை. அதாவது உள்ளுக்குள் தேடும் உண்மையை அறியும் வித்தைகள் வேதத்தில் இல்லை. மாறாக பொருட்களை தீயிலிட்டு இந்திரனுக்கு படைக்கும் யாக முறைகளே உள்ளது. இப்படி ஆதிநாத்தை ஆதி சிவன் ஆக்கியதை நவீன கால ஆதி யோகி சிலையிலும் பார்க்கலாம்.
தற்போது கிருஷ்ணனை இந்து கடவுளாக ஒப்புக்கொண்டு கொண்டாடும் பிராமணர்கள், ஒரு காலத்தில் அதே கிருஷ்ணனை சூத்திரன், பெண் காமந்தகன், கள்வன் என்று தூற்றினார். காரணம் கிருஷ்ணன் திராவிடன். கரிய நிறமுடைய இடையன். பிராமணர்களின் கடவுளான இந்திரனுக்கு பூசை செய்ய விடாமல் தடுத்து இயற்கை வடிவான கோவர்த்தன மலைக்கு பூசை செய்ய சொன்னதால் ஆரம்பத்தில் கிருஷ்ணனை எதிரியாக பார்த்த பிராமணர்கள் பின்னாளில் அவரது பெருமை வளர்ச்சியை அபகரிக்கும் விதமாக கிருஷ்ணனை இந்து கடவுளாக ஏற்று கொண்டனர்.
இது போல காலத்திற்கேற்ப மக்களின் அறியாமையை முதலீடாக்கி பல வகைகளிலும் தன்னிருப்பை பிராமணர்கள் வரலாற்றின் வழி நெடுகிலும் தக்கவைத்து கொண்டனர்.என்று அறியக் கிடக்கிறது .
சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்னர் வலுபெற்ற பார்ப்பன எதிர்ப்பு மனோபாவம் நம்மிடையே இன்னும் கூட இருக்கிறது. வலுவான ஒரு கும்பல் பிராமண எதிர்ப்பை முன்னெடுத்தபோது பிராமண தரப்பு வாதங்களை யாரும் முன் வைக்காதது துரதிர்ஷடவசமானது. இந்த கண்மூடித்தனமான பிராமண எதிர்ப்பின் விளைவாக கிட்டதட்ட பிராமணன் தமிழகத்தை விட்டு தூக்கி எறியப்பட்டான் என்றே சொல்லலாம். சுமார் 3% இருந்த பிராமணர்களின் எண்ணிக்கை தற்போது 1 1/2% அளவில் தான் இருக்கும் என நம்பப்படுகிறது.
பாம்பையும், பார்பானையும் கண்டா பாம்பை விட்டுடு பார்ப்பனனை அடின்னு கேணத்தனமா சொல்லிகுடுத்த ஈவெரா போன்ற மக்குகள் தமிழகம் எதை இழக்கப் போகிறது என உணர்ந்தவர்களாக அன்று இல்லை
தமிழக பிராமணர்கள் பலர் தமிழகத்தை விட்டு வெளியேறி மும்பை, டெல்லி, பெங்களூர், ஹைதராபாத், அமெரிக்கா என குடியேறினர். இன்றும் மும்பை-டெல்லியின், ஏன் அமெரிக்காவின் வலுவான பதவிகளில் அமர்ந்திருப்பவர்கள் தமிழக பிராமணர்கள்.
தமக்கு போடப்பட்ட தடைகளை, வாய்ப்பு மறுப்புகளை எதிர்த்து அவர்கள் குரல் கொடுக்கவில்லை,தங்கள் உழைப்புக்காக எதையும் செய்யும் பிராம்மணர்கள் இன்று தமிழகத்திலோ இலங்கையிலோ அல்லது மலே சியாவிலேயோ தன இனம் வறுமையில் இருப்பதை அறிவார்கள் .ஆனாலும் பாராமுகமாகவே வாழுகிறார்கள் .உதாரணமாக
சுந்தர் பிச்சை, இந்திரா நூயி, செஸ் விஸ்வநாதன் ஆனந்த்
ஆகியோர்கள் கூட பிராம்மண ர்களே .
ஆனால் (உ,வே சாமி நாத அய்யரை பற்றி எனது முகநூலைப் பார்க்கவும் )உவேசா இல்லை என்றால் தமிழும், தமிழின் பெருமையும் இல்லை. வெயில், மழை, குளிர் என எதையும் பொருட்படுத்தாமல் அவர் சுற்றி, சுற்றி தேடி பெற்றுத்தந்த பொக்கஷங்களை தான் நாமின்று தமிழின் பெருமையாகவும், சிறப்பாகவும் கண்டு வருகிறோம்.
ராமானுஜர் இல்லை என்றால் தமிழகத்தில் ஆன்மீக தேடல் இல்லை. கணிதெமேதை ராமானுஜர் தனியா... சர். சி.வி. ராமன் பெற்ற நோபல் பரிசும், அவர் வழிவந்த சந்திரசேகரும் கூட நமது பெருமைக்ள் தான்.
தேசபக்தியின் பல்வேறு பரிணாமங்களை நமக்கு புகட்டிய எனது ஆசான், ஞானகுரு பாரதி ஒரு பார்ப்பனன். வா.வே.சு ஐயர், வாஞ்சிநாதன், நீலகண்டபிரம்மச்சாரி எனசுதந்திர போராட்டத்தில் பார்ப்பனனின் பங்கு மதிப்பிட முடியாதது.
அவன் திருடன் இல்லை, கொள்ளைக்காரன் இல்லை, கஞ்சா வியாபாரி இல்லை, திருட்டு விசிடி இல்லை, தங்கம்-போதைமருந்து கடத்தல் இல்லை... படிப்பு, உழைப்பு, புத்திசாலித்தனம், நேர்மை இவையே பார்ப்பனர்களின் மூலதனமாக உள்ளவை.
சாஃப்ட்வேர் என்ஜினியர், பெரும் நிறுவனங்களின் தலைமை பதவிகள், வங்கி ஊழியர், அக்கவுண்டட், கிளர்க், கோவில் பூஜாரி, வைதீக காரியங்கள், சமையல்காரன், வெளிநாட்டில் வேலை என positive வான வேலைகளை மட்டுமே செய்யும் சமூகமும் பார்ப்பனன் தான்.
மொத்தத்துல பார்ப்பனன் தர்ம்த்தை தூக்கிப் பிடிக்கறான். அவனால் வாளெடுத்து போரிட முடியாது.
அந்த தர்மத்தை, கலாச்சாரத்தை, பண்பாட்டை காக்கும் பிராமணனை காக்க வேண்டியது ஷத்திரியர்களின் கடமை.
தன்னை ஒரு சமூகம் எவ்ளோ அவமானப்படுத்தினாலும் அதற்கு எதிர்ப்பு தெரிவிக்காம கடவுள் மீது பாரத்தை போட்டுட்டு தங்களோட வேலையை பார்க்கும் ஒரே சமூகம் எனக்குத் தெரிந்து பார்ப்பனன் தான்.
அறவாழி அந்தணன் என்றான் உலக பொதுமறை தந்த
வள்ளுவ பறையன்.
திருக்குறளுக்கு இணையான நீதிநூல், வாழ்க்கை வழிகாட்டி உலகில் இல்லை என தைரியமா சொல்லிடலாம். அதை எழுதிய வள்ளுவன் பறையர் சமூகம்னு சொல்லுறாங்க... பறையர் சமூகத்தில் எவனாவது எங்களின் பெருமை வள்ளுவன்னுபேசுறதை பார்த்து இருக்கீங்களா?! வேதங்களை தொகுத்தளித்த வியாசன் பார்ப்பனன் இல்லை. அவன் ஒரு மீனவ பெண்ணின் மகன்.
கீதையை அருளிய கிருஷ்ண பரமாத்மா ஒரு யாதவன்,
ஈசன் ஒரு வெட்டியான் என்ற எஸ்.சி, ராமன் ஷத்திரியன்
ஆக ஒரு மீனவன் கொடுத்த நூல்களில் உள்ள பெருமைகளை வைத்துக் கொண்டு, யாதவன் கொடுத்த கீதையை ஒரு வாழ்க்கை வழிகாட்டியாக கொண்டு, ஒரு ஷத்திரியன் காட்டிய கற்பு நெறியில் வாழ்க்கையை அமைத்துக் கொண்டு, ஒரு எஸ்.சியை கடவுளாக ஏற்றுக்கொண்ட சமூகம் தான் பிராமணர்க்ள்.
வர்ணபகுப்பில் நாம் கூர்ந்து கவனிக்க வேண்டிய விஷயம் பிராம்ணனும்-ஷத்திர்யனும் சேர்ந்து வேலை செய்வார்கள், வைஷியனும்-சூத்திரனும் சேர்ந்து வேலை செய்வார்கள் என்பதே... சூத்திரன் என்றால் சூத்திரங்களை அறிந்தவன் என்பதற்கு மேல் வேறு பொருள் இல்லை. தமிழ் இல் சொவதானால் தொழில் நுட்ப வினயாளன்
ஏர் தொழிலும் - போர் தொழிலுமாக ஷத்திரியன் விளங்கினான். பிராமணன் வழிகாட்டினான். சூத்திரன் பொருட்களை உற்பத்தி செய்து கொடுத்தான், வைஷியன் அதை விற்பனை செய்யும் தொழிலை பார்த்தான். ஆக வர்ணங்கள் ஒன்றுடன் ஒன்று பின்னிப்பிணைந்து வேலை பார்த்தன.
ஷத்திரியனின் கடைமைகளாக அறியப்பட்டவை நாட்டை காப்பதை தவிர்த்து பார்ப்போமானால் பசு, பிராமணன், குழந்தைகள், பெண்களை காப்பது...
பிராமணன் கல்வி-ஆன்மீக தொண்டிலும், ஆட்சி-நிவாகத்திலும் ஷத்திரியனுடன் இணைந்து செயல்பட்டான். வைசியன் அனைவரின் வயிற்றுத் தேவையை பார்த்துக் கொண்டான். சூத்திரன்பொருட்க்ளை உற்பத்தி செய்யும் உற்பத்தியாளனாக இருந்தான்.
தமிழ் மண்ணில் ஏற்றத்தாழ்வுகள் இருந்ததற்க்கான ஆதாரங்கள் இல்லை.
அதாவது சாதிப்பிரிவினைகள் இல்லை எல்லாம் தோளிலே சுமந்த தோழர்களே தொழில் அடிப்படையில்
%%%%%%%%%%%%
63 நாயன்மார்களிலும், 12 ஆழ்வார்களிலும் அனைத்து ஜாதிகளைசேர்ந்தவர்களும் இருந்தனர். அவர்கள் தான் இன்றும் மயிலை 63வர் விழாவின் நாயகர்கள். அதில் கண்ணப்ப நாயனார் வேடன், பரஞ்ஜோதி உட்பட11 பேர் வன்னிய சமூகம் என்பதை நான் ஏற்கெனவே குறிப்பிட்டு இருந்தேன்(எனது முகநூலி ல் முன்பு பதிவிட்டுள்ளேன் ).
குயவர், செட்டியார், பிராமணர்கள், முதலியார்க்ள் என அனைத்து சமூகங்களில் இருந்தும் நாயன்மார்கள் உள்ளனர். அவர்கள் தமிழக பக்தி இயக்கத்தை வழிநடத்தியவர்கள். பெரிய புராணம் அவர்களின் பெருமையைத்தான் பாடுகிறது. ஆக சில நூற்றாண்டுகளுக்கு முன்னர் வரை இல்லாத ஏற்றத்தாழ்வுக்ள் இங்கே விதைக்கப்பட்டன என்பது தெளிவு.
இந்த மண்ணில் பிராமணன் இருந்தால் தான் கலாச்சாரமும்-பண்பாடும், பக்தியும்-ஆன்மீகமும் காப்பாற்றப்படும். இந்து தர்மத்தின் தனித்துவம் காக்கப்பட வேண்டும் என்றால் பார்ப்பனன் காக்கப்பட வேண்டும். இது தன்னை ஷத்திர்யன் என கூறுக்கொள்ளும் ஒவ்வொருவரின் கடமை என்பது எனது தாழ்மையான கருத்து
சில அடிப்படைகள் இங்கே முக்கியமானவை.
1. பிராமணன் என்ற தன்மை தற்பொழுது உனது பொக்கிஷங்களில் ஒன்று.
2. பிறப்பால் யாரும் பிராமணனாக இருக்க முடியாது
வாழ்வின் நெறி முறைகளால் வாழும் தன்மையினால் அவன் பிராம்மணனாக ஏற்றுக் கொள்ளப் படுகிறான்
உதாரணமாக ஐரோப்பாவின் பெருங்கோவில் பூசகர் சிவஸ்ரீ பாச்கரக் குருக்கள் .அவரின் அற வாழ்வினால் மக்களால் பிராம்மணராக ஏற்றுக் கொள்ள ப்பட்டவர்
3. பாரதியை விட சிறந்த பிராமணனை உனது வாழ்க்கை காலத்தில் படிக்கவில்லையா ?
அவன் மனு தர்மத்துக்காக போராடிய கர்ம வீரன்
சாணக்யன் மாபெரும் மகதப் பேரரசை உருவாக்கியவனாக இருந்தாலும் தனது வாழ்க்கையின் கடைசி நொடி வரை குடிசையில் வாழ்ந்தான்...பிச்சை எடுத்துதான் தின்றான் என்கிறது அவனது வரலாறு... பிராமணன் அறிவின் அடையாளம், வாழ்க்கையின் வழிகாட்டி... உவேசா என்ற பிராமணன் ஊர் ஊராக மாட்டு வண்டியில் சென்று கண்டெடுத்த பொக்கிஷங்கள் தான் இன்று நாம் படிக்கும் சுமார் 60 தமிழ் காப்பியங்கள். தமிழ் தாத்தாவின் அந்த தமிழ்பற்றும், தமிழுக்கு உயிர்கொடுக்க வேண்டும் என்ற தவமும், ஆதங்கமும் தான் பிராமணனின் தன்மை... நல்ல பிராமணனால் தான் தண்டச்சோறுன்னும் பார்ப்புக்கு வேறொரு நீதி என பாட முடியும்(ஏனது? ஆசான் பாரதியை சொல்லுகிறேன்) அவனால் தான் பார்ப்பனனை சாமி என்ற காலமும் போச்சே என திமிர்த்தனமாக எழுத முடியும்... நல்ல பிராமணனால் சமூக ஏற்றத்தாழ்வுகளை ஏற்க முடியாது. அதனால் தான் சமூகசீர்த்திருத்தவாதியான ராமானுஜர் தன் மனைவியையே பிரிந்து வாழ்ந்தார்...
அது குரு பக்தியின் உச்சம்... மீனவப்பெண்ணின் மகனான வியாசனும்,
வழிப்பறி கொள்ளையானான வால்மீகியும்எங்களுக்கு பிராமணர்கள் தான்.
மீனவப்பெண்ணாக வாழ்க்கையை துவங்கினாலும் இன்று உலகம் முழுக்க அம்மா என அனைவராலும் அழைக்கப்படும் மாதா அம்ருதானந்தமயி எங்கள் பார்வையில் பிராமணர்...
ஆக பிராமணன் போற்றப்படுபவன், மதிக்கப்படுபவன்,
பண்பாட்டின், கலாச்சாரத்தின் காவலன்...அவனை போற்றி மதிப்பது தமிழனின் பண்பாடே... அவனை காப்பது என் போன்ற ஷத்திரியர்களின் கடமை...
மாறாக தமிழுக்காகஇந்தியாவில் தன்னை அர்ப்பணம் செய்வதாக, செய்ததாக கூறும் எவனும் இவர்களின் பாணியில் எதுவும் செய்ததாக தெரியவில்லை. பிராமணனை தூவேஷம் செய்து அதில் லாபம் அடைந்தவர்கள் மட்டுமே இன்று அரசியல் தலைவர்களாக உள்ளனர்.
சமுதாயத்தின் அறிவுக்கண்ணை திறப்பவன் அனைவரும் பிராமணனே..
பிராமணன் தமிழகத்தில் ஒரு தீண்டத்தகாதவனாக நடத்தப்பட்டு வருகிறான். அவனுக்கு படிப்பும், வேலை வாய்ப்பும் மறுக்கப்பட்டுதான் வருகிறது. இதை செய்பவர்கள் பெரும்பாலும் பிராமண தூவேஷத்தில் ஆட்சி-அதிகாரத்தை பிடித்தவர்கள். பிராமண எதிர்ப்பால் மட்டுமே தான் பதவியில் இருக்க முடியும் என நம்புகிறான். தமிழகத்தில் பிராமண எதிர்ப்பு ஒரு மனோவியாதியாகவே பரவியுள்ளது.
இந்தியாவை அசைக்க வேண்டுமென்றால் பிராமணன் என்ற ஆணிவேர் பிடுங்கப்பட வேண்டும் என்ற வேகம் எதிரி மதங்களிடம் இருப்பது தெளிவு. இது போன்ற சிந்தனைகளின் வெளிப்பாடுதான்தமிழில் பூசை வைக்கவேண்டும் என்பதும் யாரும் பிராம்மணர் ஆகலாம் என்பதும் ஆகும் .
பிராமணன் ஒரு ஜாதியாக பார்க்கப்பட்டு அவன் அழிக்கப்பட்டால் இந்து சமுதாயத்தை அழித்து விட முடியும் என்ற பத்தாம்பசலி கற்பனை மாற்று மத மங்குனிகளுக்கு இருக்கிறது. உண்மை என்னவென்றால் பிராமணனின் தன்மை கொண்ட ஆயிரம் புதியவர்கள் உருவாகிக் கொண்டு இருக்கிறார்கள் .
தமிழனை அல்லது இந்தியாவை அழிக்க வேண்டுமென்றால் பிராம்மணனை அழிக்கவேண்டும்
இதைத்தான் வெளிநாட்டு சக்திகளும் விரும்புகின்றன..அவைதான் இந்து சமுதாயத்தின் வேற்றுமைகள் நிலைக்க வேண்டும், பிரச்சனைகள் தொடர வேண்டும் என விரும்புகின்றன. பெரும்பாலான கிறிஸ்தவ சர்ச் சார்ந்த அமைப்புகள் இதுபோன்ற சமூகநீதி என்ற பெயரிலான வாதங்களுக்கு தூபம் போட்டு, சாத்தியமான சமூக ஒற்றுமையை குலைக்கின்றன. இவர்கள் அனைவரின் நோக்கமும் ஒன்றே... பிராமணனை இல்லாமல் செய்வதன் மூலம் தமிழனின் பெருமைமிகு கலாச்சாரத்தையும், பண்பாட்டையும் குலைக்க வேண்டும் என்பதே...
பிராம்மணன் எங்கிருந்து வந்தான் என்பது முக்கியமல்ல .அவன் இல்லாவிட்டால் யார் கோவிலுக்கு பூசை வைக்கத் தயாராக இருக்கிறார்கள் ?
சுமார்5௦ லட்சம் பேரை கொண்ட அமெரிக்க இந்தியர்களில் 2 லட்சம் பேர் தமிழக பார்ப்பனர்கள்.அதாவது சுமார் 9%.
அமெரிக்கா,கன டா,ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் நல்ல பெயர், மரியாதை அங்கிகாரத்துடன் இருக்கிறார்கள். இதனால் இவர்களை யூத இனமாகவும் வர்ணிப்பவர்களும் உண்டு
தமிழனுக்கு சேவை செய்யும் அனைவரும் (அணர்கள் என்றால் மனிதர்கள் பிரம்ம படைப்பவன் .பிராம்மணர்களும் பூமியை படைக்கிறான் )படைப்பாளிகளே
எனவே ஜாதி மத பேதம் மற்று ஒரே திசையில் நாம் பயணிக்க வேண்டும்
மேலும் ஈரான் நாட்டில் ஆரியா என்ற இடம் இருக்கிறது அங்கு அப்பாவை பிதா என்பார்கள் .கூடுதலான சொற்கள் சமஸ்கிருதத்துடன் ஒத்துப் போகும்
அப்போ பிராம்மணர்கள் ஈரான் நாட்டவர்களா ?
சவூதிக்கு செல்லுங்கள் மெக்காவில் சிவலிங்கம் இருக்கிறது .அப்படியானால் முஸ்லிம்கள் சிவா பக்தர்களா ?
ஜேர்மன் க்கு செல்லுங்கள் அங்கெ நாபி என்பது தொப்புளைக் குறிக்கும் நாசியை நாச என் பார்கள்
தண்ணீரை வசர் என்பார்கள்.இப்படி பல சொற்கள் சிங்களத்துடன் ஒத்துப் போகும்
அப்போ ஜேர்மன் நாட்டவர்கள் சிங்களவர்களா ?
ஒன்றை மட்டும் விளங்கிக் கொள்ளுங்கள்
ஆரியர்கள் பரம்பல் உலகம் பூராவும் இருக்கிறது இதன் தாக்கம் உலகில் முழுக்க இருக்கிறது .
தமிழனும் உலகம் பூராவும் அப்பொழுதே சென்றிருக்கிறான் .ஆங்காங்கே எச்சங்கள் இருக்கின்றன .
யூத அடிப்படையில் விளங்க வைக்க முடியும் .எழுமினாட்டிகளின் தாக்கங்கள் அவை தான்.
.சுப்ரமணிய சுவாமி யூதப் பாசறையில் வளர்ந்தவர்
எல்லாவற்றையும் விலாவாரியாக எழுதிக் கொண்டு இருக்க இயலாது
திராவிடம் என்ற சொல் தீராத விதமாக விடமாக தமிழருக்குள் புகுத்தி அவனை தெலுங்கனாகவும் மலையாளிகளாகவும் கன்னடனாகவும் பிரித்து விட்டார்கள் .இராமயணத்தில் தமிழர்களைக் குரங்குகளாக காட்டி வருகிறார்கள். இராவணனின் சிவமதம் மட்டுமே தமிழனுக்கு சிவபூமியாக இலங்கையை உலகில் காட்டி நிற்கிறது .நிறைய எழுத ஆசையாக இருந்தாலும்
வெள்ளாடு புல்லுக் கடித்த மாதிரி நுனி க்கடி செய்து விட்டேன் விளங்க்கிக் கொள்பவர்கள் விளங்கிக் கொள்ளுங்கள்

கருத்துகள்