தெரிந்து கொள்ளுங்கள் சார் பொன் இராமநாதன்
குறிஞ்சி ஆண்டவர் கோவில் தமிழ்நாட்டின் கோடைமலையில் உள்ள ஒரு முருகன் கோவில். கொடைக்கானல் சுற்றுலா செல்வோருக்கு இதுவும் ஒரு முக்கிய உலாவிடமாக உள்ளது.
கொடைக்கானல் பேருந்து நிலையத்திலிருந்து 4 கி.மீ (2.5 மை) தொலைவில் இந்தத் திருக்கோயில் அமைந்துள்ளது. 12 ஆண்டுகளுக்கு ஒருமுறையே பூக்கும் குறிஞ்சி மலர்கள் நிறைந்த பகுதியில் அமைந்துள்ளது. இக்கோவில் முருகன் திருவுரு ஸ்ரீகுறிஞ்சி ஈசுவரன் என அழைக்கப்படுகிறது.
1936ஆம் ஆண்டில் லீலாவதி என்ற ஆஸ்திரேலியா அம்மையாரால் கட்டப்பட்டது. இவர் இலங்கையில் இருந்தபோது இந்து சமயத்திற்கு மதம் மாறி பொன்னம்பல இராமநாதன் என்ற தமிழரை மணம் புரிந்தவர். எனவே இவரை லேடி இராமநாதன் என்போரும் உண்டு.
இவரது மகளின் வளர்ப்புப் பெண்ணான பத்மினி என்கிற தேவி பிரசாத் பாஸ்கரனும் அவரது கணவர் பாஸ்கரனும் பின்னர் பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில் நிர்வாகத்திற்கு இந்தக் கோயிலை கொடுத்துள்ளனர்.
இராமநாதன் இந்த பரானந்தா என்கிற பெயரை எங்கிருந்து பெற்றார் என்று ஆராய்கிற போது அவருக்கு ஆன்மீக ஆசானாக இருந்தவர் ஸ்ரீலஸ்ரீ அருள் பரானந்த தேசிகர் (அருள்பரானந்த சுவாமிகள் என்கிற பெயரிலும் இவரை அழைப்பார்கள்) என்பதை அறிய முடிகிறது. இராமநாதன் மட்டுமல்ல அவரின் சகோதரர் அருணாச்சலமும் கூட அருள்பரானந்த தேசிகரிடம் சமயம், தத்துவம், தியானம், யோகாசனம் என்பவற்றைக் கற்று தேர்ந்திருக்கின்றனர். சேர் பொன் இராமநாதனின் மானசீக குருவான அருள்பரானந்த சுவாமிகள் தஞ்சாவூரைச் சேர்ந்த பிராமணர். அருள்பரானந்தரை சந்தித்ததன் பின்னர் தான் இராமநாதன் தனது அரசியல், சமூக போக்கு என்பவற்றிலிருந்து சைவ சித்தாந்தத்திலும், ஆன்மீகக் காரியங்களிலும் ஆழ்ந்த அக்கறை செலுத்தத் தொடங்கினார்
இராமநாதன் சகோதர்கள் இருவருக்குமே பரானந்த தேசிகர் தான் ஆன்மீக குருவாக இருந்தவர்கள்
சேர் பொன் இராமநாதன் தனது இறுதிக் காலத்தில் சைவ சமயப் பணிகளில் தன்னை தீவிரமாக ஈடுபடுத்திக்கொண்டார். தனது பெயரையும் “ஸ்ரீ பரானந்தா” என்று பயன்படுத்தத் தொடங்கினார். தியானம், சமயப் பரப்புரை, சைவக்கோவில்களை அமைத்தல், சீர்திருத்துதல் என்பவற்றை செய்தபோதும் அவரின் ஆய்வுகள், தேடல்கள், எழுத்து என்பவற்றை அவர் நிறுத்தவில்லை. ஸ்ரீ பரமானந்த யோகி என்கிற பெயரில் அவர் யோகாசனம், தியானம் என்பவற்றையெல்லாம் கற்பித்திருக்கிறார். அப்படி அவரிடம் யோகாசனம் கற்ற ஒருவர் தான் அல்லன் பென்னெத் (Allan Bennett).
1898 இல் அவர் “இயேசுவின் நற்செய்தியின் புனித மத்தேயு அதிகாரம் குறித்த ஒரு கிழக்கத்தேய பார்வை” (he Gospel of Jesus according to St. Matthew) என்கிற தலைப்பில் 342 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலையும், 1902இல் “இயேசுவின் நற்செய்தியின் புனித ஜோன் அதிகாரம் குறித்த ஒரு கிழக்கத்தேய பார்வை” (An Eastern Exposition of the Gospel of Jesus According to St. John) என்கிற தலைப்பில் 332 பக்கங்களைக் கொண்ட ஒரு நூலையும் எழுதி வெளியிட்டார். இந்த இரு நூல்களும் பைபிள் பற்றி ஆசிய நாடொன்றில் வெளிவந்த முதலாவது விரிவான விளக்கம் எனலாம்.
கிறிஸ்தவ சமயம் பற்றிய இந்த இரண்டு ஆங்கில நூல்களையும் அவரின் சொந்தப் பெயரில் வெளியிடவில்லை. “ஸ்ரீ பரானந்தா” (Sri Parananda) என்கிற பெயரிலேயே வெளியிட்டார். லண்டனைச் சேர்ந்த KEGAN PAUL, TRENCH, TRUBNER & CO. Ltd. என்கிற பதிப்பகம் தான் வெளியிட்டிருக்கிறது. இந்த நூல் தமிழில் வெளியாகவில்லை. இந்த இரு நூல்களும் எச்.எல்.ஹரிசன் அம்மையாரால் (R. L. Harrison) தொகுக்கப்பட்டுள்ளன
“கடவுள் பற்றிய அனுபவத்தின் வெளிச்சத்திலிருந்து ஸ்ரீ பரானந்தா” என்று மத்தேயு பற்றிய அந்த நூலின் முகப்பில் எழுதப்பட்டிருக்கிறது. பரானந்தா என்கிற பெயரை நூல்களுக்கான புனைபெயராக பாவித்ததோடு நின்றிருக்கிறார். அவரை எவரும் பரானந்த யோகியாக அறிந்திருக்கவில்லை. ஏன்? அதுவும் அவர் கிறிஸ்தவ திறனாய்வுக்கு மட்டும் அப்பெயரை ஏன் பயன்படுத்தினார்? 1914இல் இந்து மதம் சார்ந்த “பகவத் கீதை”யை மொழிபெயர்த்து வெளியிட்ட போது கூட சொந்தப் பெயரை அல்லவா பயன்படுத்தினார்?
அரசியலில் இவை எல்லாம்.....?
இந்த இரு நூல்களின் உள்ளடக்கமும் தமிழில் ஆராய வேண்டிய நூல்கள் ஏனென்றால் அவர் இந்த பெரிய ஆய்வில் வெறும் வேதாமகத்தை மட்டும் ஆய்வு செய்யவில்லை. அவர் தான் கற்ற சைவ சித்தாந்த வழிமுறைகளுக்கு ஊடாகவும் பகுத்தாய்ந்திருப்பதை கவனிக்க முடிகிறது. இராமநாதனின் தமிழ் - சைவ -வேளாளத்தனத்தை ஆராய முற்படுபவர்கள் இந்த நூல்களை தவிர்த்து விட்டு ஆராய்வதில் பலனில்லை என்றே படுகிறது.
கிறிஸ்தவ விடயங்களை அவர் எழுதியதற்கு; அவரை அரசியலுக்குக் கொண்டுவந்த நாவலர் முன்னோடியாக இருந்திருக்கவேண்டும். பைபிளை தமிழுக்கு மொழிபெயர்த்ததில் நாவலரின் வகிபாகம் பற்றி நாமறிந்ததே.
மேற்படி “புனித ஜோன்” பற்றிய நூலில் ஓரிடத்தில் இராமநாதன் 1895இல் எழுதிய “Mystery of Godliness” என்கிற ஒரு வெளியீட்டைப் பற்றியும் குறிப்பிடப்படுகிறது
இந்த நூலின் விற்பனை முகவர்களின் விலாசங்களாக நூலின் இறுதிப் பக்கத்தில் அமெரிக்க, அவுஸ்திரேலியா, இந்தியா, இலங்கை ஆகிய நாட்டு நிறுவனங்களின் முகவரிகளும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் இந்த நூலுக்கான முன்னுரையைக் கூட ஸ்ரீ பரானந்தா என்கிற இராமநாதனால் எழுதப்படவில்லை. மாறாக அதனைத் தொகுத்த அவரின் துணைவி ஹரிசன் அம்மையாரால் தான் எழுதப்பட்டிருக்கிறது. அந்த முன்னுரையின் கீழ் திகதி “பெரிய வெள்ளி – 1902” (Good Friday, 1902) என்று குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த முன்னுரை ஐந்து பக்கங்களில் காணப்படுகிறது. ஆனால் அதற்கு முன்னர் 4 வருடங்களுக்கு முன்னர் வெளியிடப்பட்டுள்ள மேற்சொன்ன புனித மத்தேயு பற்றிய நூலின் முன்னுரையை ஹரிசன் அம்மையார் ஒரே பக்கத்தில் 6 வரிகளைக் கொண்ட பந்தியில் சிறியதாக முடித்திருக்கிறார் என்பதும் கவனிக்கத் தக்கது.
ஏன் ஸ்ரீ பரானந்தா என்கிற இராமநாதனால் இந்த இரு நூல்களுக்கும் முன்னுரை எழுதப்படவில்லை என்பது ஆச்சரியமாகவும் பரகசியமாகவும் உள்ளது. முன் அட்டையைத் தவிர உள்ளே வேறெங்கும் அவரது பெயர் இல்லை.
இராமநாதன் தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு றோயல் கல்லூரியில் டொக்டர் போக்கின் (Dr. Boake) வழிகாட்டலில் கற்றவர். பின்னர் முன்பட்டப்படிப்பை சென்னையில் கலாநிதி தொம்சன் (Dr. Thompson), சீ.வை.தாமோதரம்பிள்ளை ஆகியோரின் நெறிப்படுத்தலில் கற்றவர். சட்டக் கல்வியை சேர் ரிச்சர்ட் மோர்கனின் (Sir Richard Morgan) வழிகாட்டலில் கற்றவர். அரசியல் அரிச்சுவடியை தனது மாமனார் சேர் முத்து குமாரசுவாமியின் மூலம் கற்றார். அதுபோல ஆன்மீக விவகாரங்கள் அனைத்தையும் அருள்பரானந்த சுவாமிகள் மூலம் கற்றுக்கொண்டார்
பகவத் கீதை; சேர் பொன் இராமநாதன் ("பொ.ராமநாத துரை" என்றிருக்கிறது) சமஸ்கிருதத்திலிருந்து மொழிபெயர்த்து 1914இல் யாழ்-நாவலர் அச்சுக் கூடத்தில் வெளியான அரிதான பெரிய நூல். இதற்கு அணிந்துரை எழுதியுள்ள ஸ்ரீமத் மு.ஸர்வேஸ்வர ஸர்மா சமஸ்கிருதத்திலேயே எழுதியிருப்பது வியப்பாக இருக்கிறது. ஒரு புறம் முஸ்லிம்களுடன் அவர் முரண்பட்டிருந்தார். மறுபுறம் சைவப் பணிகளை முன்னெடுத்தார். சைவப் பள்ளிக்கூடங்களையும், கோவில்களையும் கட்டினார். சமஸ்கிருதத்தைப் போற்றினார். சைவ சமய எழுத்துக்களில் ஈடுபட்ட அதே வேளை இப்படி கிறிஸ்தவ ஆய்வுகளிலும் ஈடுபட்டிருக்கிறார்.
யாழ் - சைவ-வேளாள - படித்த – மேல் வர்க்க – ஆணாதிக்க அரசியல் தான் அவரின் இயங்குதளமாக இருந்தவற்றுக்குப் பின்னுள்ள வைதீக பின்புலத்தை அறிந்துகொள்ளவேண்டுமென்றால் நாம் ஸ்ரீ பரானந்த யோகியையும் அறிந்து வைத்திருத்தல் அவசியம்.
இலங்கையின் ஆன்மீகப் புலமைப் பாரம்பரியத்தை உலக அரங்குக்கு இட்டுச் சென்றவர்களுள் சேர்.பொன்.இராமநாதனுக்குத் தனியிடமுண்டு. அத்துடன், இலங்கையில் சைவத் தமிழ்ச் சமூகத்தின் அடையாளம், பண்பாடு, அரசியல், கல்வியியல், காலனித்துவ விடுதலை உள்ளிட்ட பல்வேறு பணிகளை முன்னெடுத்து அருந்தொண்டாற்றியவராகவும் திகழ்ந்தவர் அவர்.
அந்நியராட்சியின் கீழ் இலங்கை அடிமைப்பட்டிருந்த போது சைவமும் தமிழும் அழியாமல் காத்த பெரியார்களில் ஆறுமுகநாவலர் முதன்மையானவர். நாவலர் தனக்குப் பின்னர் சைவத் தமிழ்ச் சமூகத்துக்கு தலைமை தாங்கத் தேர்ந்தெடுத்த பெரியாரே சேர்.பொன்.இராமநாதன்.
பொன்னம்பல முதலியாருக்கும், செல்லாச்சி அம்மைக்கும் இரண்டாவது மகனாக இராமநாதன் பிறந்தார். கொழும்பு றோயல் கல்லூரி, சென்னை பிரெசிடென்சி கல்லூரிகளில் கற்று வழக்கறிஞராகத் திகழ்ந்தவர். காலனித்துவ அரசில் பல்வேறு பதவிகளை வகித்தவர். தமிழ், ஆங்கிலம், சம்ஸ்கிருதம் எனப் பன்மொழிப் புலமையுள்ளவராகவும் இனஐக்கியத்துக்காகப் பாடுபட்டு உழைத்தவராகவும் சேர்.பொன். இராமநாதன் அடையாளப்படுத்தப்படுகிறார். பௌத்த பிரம்மஞான சபையில் பொருளாளராகப் பதவி வகித்ததும் அதையொத்த சைவ வித்தியாவிருத்திச் சங்கத்தின் ஸ்தாபகத் தலைவராகத் திகழ்ந்ததும் இதற்குத் தக்க உதாரணங்களாகும்.
தேசத்தின் விடுதலைக்கு இன ஐக்கியத்தின் அவசியத்தை உணர்ந்து அதற்காகப் பாடுபட்டதோடு, அதற்காகவே வாழவும் விரும்பினார். சிங்களவரும் தமிழரும் இனவேறுபாடு அற்று வாழ வேண்டும் என்று விரும்பியவர் அவர். இரு இனத்தவராலும் தங்கள் தலைவராக ஏற்றுக் கொள்ளப்பட்ட தமிழ்த் தலைமை இவர் என்பது குறிப்பிடத்தக்கதாகும்.
சேர். பொன். இராமநாதன் அவர்களால் உருவாக்கப்பட்ட பரமேஸ்வரா கல்லூரி இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகமாகப் பெருஞ் சிறப்புடன் மிளிர்கின்றது. இந்து நாகரிகம், சைவசித்தாந்தம், சமஸ்கிருதம் ஆகிய கற்கைப் புலங்களை உள்ளடக்கிய இந்துக் கற்கைகள் பீடத்தைக் கொண்ட இலங்கையின் தனித்துவம் மிக்கதொரு பல்கலைக்கழகமாக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் திகழ்கின்றமை சிறப்பானதாகும்.
சேர். பொன். இராமநாதன் அவர்கள் சொல்லுக்கும் செயலுக்கும் இடையில் வேறுபாடற்றவர். செல்வந்தர், கற்றவர், சட்டத்தரணி மற்றும் அரசியல் செல்வாக்கு, பதவி எனப் பல் அடையாளங்களைப் பெற்றிருந்தும் மக்களோடு மக்களாக நின்று எந்த எதிர்பார்ப்பும் இன்றி அவர்களுக்காகப் பெரும் பணியாற்றிய பெருமகன் அவர்.
சேர். பொன். இராமநாதன் ‘ஆணொடு பெண்ணும் சரிநிகர் சமானமாக’ வாழ வழிவகுத்தார். சுதேச சைவ மகளிர் தம் பண்பாட்டுச்சூழலில் கல்வி கற்க ஒரு பாடசாலையை நிறுவ விரும்பினார். அதன் பயனாக 1913ஆம் ஆண்டு ஜனவரி 20 இல் இணுவிலில் மருதனார்மடத்தில் மகளிர் கல்லூரி ஒன்றை நிறுவினார். அதுவே இந்நாளில் இராமநாதன் மகளிர் கல்லூரி எனலாயிற்று. பெண்களின் கல்வியறிவின் அவசியத்தை உணர்ந்து அவர் செயலாற்றினார்.
அன்றைய சூழ்நிலையில் பெண் ஆசிரியர்களைப் பெறுவதிலும் சிரமம் இருந்துள்ளது. இதனால் இராமநாதன் கல்லூரி வளாகத்திலேயே பெண்கள் ஆசிரியை பயிற்சிக் கலாசாலையையும் ஆரம்பித்துத் திறம்பட நடத்தியுள்ளார். இக்கலாசாலையில் இருந்து வந்தவரே சிவத்தமிழ்ச் செல்வி தங்கம்மா அப்பாக்குட்டி ஆவார்.
இன்று உலக அரங்கில் முதன்மையுற்றிருக்கும் யோகக்கலை பற்றிய பிரக்ஞைக்கு அன்றைக்கே முழு ஆதரவு நல்கியவர் சேர். பொன். இராமநாதன். யோகம், தியானம் என்பவற்றில் தலைசிறந்து விளங்கியவர். பாடசாலைக் கலைத்திட்டத்தில் அதனை இணைத்து ஆன்மீகப் பயிற்சியாக வழங்க வழி சமைத்தார்.
சேர். பொன். இராமநாதனின் ஞானக்குருவாக தஞ்சாவூரைச் சேர்ந்த அருட்பரானந்த சுவாமிகள் விளங்கினார். இவரின் அருட்பார்வையினால் இவர் தவயோகியாகவே மாறி விட்டார். பகவத்கீதை கூறும் கருமயோகத்தின் வழித்தடத்தில் இவரின் பிற்கால வாழ்க்கை அமைந்து விட்டது. தியான யோக சாதனைகளில் தமது நேரத்தைக் கழித்தார் இவரின் சீரிய யோக சிந்தனைகளை நினைவுபடுத்துவதற்காகவே இந்துக்கற்கைகள் பீட வரைபில் யோகநெறி ஒரு தனித்துறையாக அமைய சிபார்சு செய்யப்பட்டது.
சேர். பொன். இராமநாதன் சைவசித்தாந்த வித்தகராக விளங்கினார். அவரிடம் காணப்பட்ட சைவசித்தாந்த புலமையின் காரணமாகவே சைவ சித்தாந்த மகா சமாஜத்தின் முதல் மாநாட்டுக்கு (1906) இவர் தலைமை தாங்கிச் சிறப்பித்தார். சுவாமி விவேகானந்தர் வேதாந்த மெய்யியலை அமெரிக்கா, லண்டன் போன்ற நாடுகளில் பரப்புரை செய்தது போன்று சேர். பொன் இராமநாதன் சைவசித்தாந்த மெய்யியலை மேலைத்தேச நாடுகளில் பரப்புரை செய்த பெருமைக்குரியவராக விளங்கினார்.
இலங்கையில் சைவசித்தாந்தம் என்ற பெயரில் ஒருதுறை யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தில் மட்டும் அமைந்திருப்பது யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்திற்கும், சேர். பொன். இராமநாதனுக்கும் பெருமை சேர்ப்பதாக அமைகின்றது.
சேர். பொன். இராமநாதன் பன்மொழிப் பாண்டித்தியம் உடையவராக விளங்கியதை அவரது நூலாக்கப் பணிகள், மொழி பெயர்ப்புப்பணிகள் எடுத்துக்காட்டுகின்றது. குறிப்பாக, தமிழ் இலக்கண வித்தகராகத் திகழ்ந்தமையை அவரின் செந்தமிழ் இலக்கணம் எனும் நூல் புலப்படுத்தி நிற்கின்றது. வடமொழியில் புலமைத்துவமாகத் திகழ்ந்ததை அவரின் பகவத்கீதா தமிழ் மொழிபெயர்ப்பும், விருத்தியுரையும் எனும் நூல் மூலம் அறியலாம்.
இலங்கையில் அமைந்து விளங்கும் திராவிடக் கட்டடக்கலை மரபில் அமைந்துள்ள கோயில்களுக்கு உதாரணமாக கொழும்பு கொச்சிக்கடையில் கட்டப்பட்ட பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில், யாழ்ப்பாணத்து பரமேஸ்வரா கல்லூரியில் காணப்படும் இராமநாதேஸ்வரம் ஆகியவை குறிப்பிடத்தக்கவை.
இலங்கையில் கொழும்பில் முற்றிலும் கருங்கல்லினால் சிற்ப வேலைப்பாடுகளுடன் அமைக்கப்பட்டுள்ள ஒரேயொரு கோயில் பொன்னம்பலவாணேஸ்வரர் கோயில் ஆகும். இக்கோயில் 1856 இல் அருணாசலம் பொன்னம்பலம் முதலியாரால் கட்டப்பட்டது. பின் இவரின் மைந்தன் சேர். பொன். இராமநாதன் அவர்கள் சிறப்புற கட்டிமுடித்தார். இவர் தமிழகத்தில் முருகனுக்கு அமைத்த கோயிலாக கொடைக்கானல் குறிஞ்சியாண்டவர் கோயில் விளங்குகின்றது. இலங்கையில் மட்டுமன்றி தமிழகத்திலும் கோயில் அமைத்த சிறப்புக்குரியவராக சேர். பொன். இராமநாதன் விளங்குகின்றார்.
போற்றுபவர்களும் இருக்கிறார்கள் இவரை தூற்றுபவர்களும் இருக்கிறார்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக