ரமண மகரிஷி ஒரு மிகப்பெரிய குருவாக இருந்தவர்.
இவர் அமைதியானவர்.
எப்பவாவது ஓரிரு வார்த்தைகள் பேசுவதோடு சரி.
ஒவ்வொரு நாள் காலையிலும் ஒரு மணிநேரம் மக்களுக்கு தரிசனம் தருவார்.
மக்கள் அவரைக் காண அமர்ந்திருப்பார்கள்.
ஒரு
பசுவும் அப்போது அவரை காண மக்களோடு வந்துவிடும்.
மற்ற மனிதர்கள் அவரை காண
காலம் தவறினாலும் அந்த பசு மட்டும் நேரம் தவறாமல் ஆஜராகும்.
மழை வெயில் குளிர் என எதுவாக இருந்தாலும்,அதற்கு நோய் தாக்கினாலும் ஆரோக்கியமாக இருந்தாலும் சரியாக வந்துவிடும்.
பசு வாராண்டாவில் இருக்கும் ஜன்னலில் தலையை உள்ளே விட்டு குருவை நோக்கி நின்றிருக்கும்.
சில சமயங்களில் கண்கள் திறந்திருக்கும்.
சில சமயங்களில் கண்கள் மூடியிருக்கும்.
சில நேரங்களில் கண்களில் கண்ணீர வழிந்துகொண்டிருக்கும்.
இது ஒரு அதிசய நிகழ்வாகும்.
ஒரு நாள் பசு மிகவும் நோய்வாய்ப்பட்டு படுத்துவிட்டது .
அதனால் வரமுடியவில்லை.
ரமணர் பசுவைக் காண கிளம்பிவிட்டார்.
மற்ற சீடர்கள் திகைத்தனர்.
ரமணர் அது எப்போதும் சரியாக வந்துவிடும்..
அதன் ஆத்மா தயாராக தான் இருந்திருக்கும்.. உடல் தான் ஒத்துழைத்திருக்காது..
என தன்
முக்கியமான சீடரான பசுவைக் காணக் கிளம்பிவிட்டார்.
ரமணர் அந்த இடத்தை அடைந்தார்.
அந்த பசு ரமணர் அமரும் திசையை நோக்கி ஜன்னலில் பார்ப்பது போலவே
அமர்ந்திருந்தது.
அதனால் எழக்கூட முடியவில்லை.
ரமணரைப் பார்த்ததும் கண்களை மூடிக்கொண்டது.
கண்களில் தாரை தாரையாகக் கண்ணீர் வழிந்தது.
பின்பு இறந்து போனது.
உலக வரலாற்றிலேயே இது தான் ஒரு தன்னையுணர்ந்த மனிதனின் முன்னால் விழிப்புணர்வு அடைந்த பசு
விடைபெற்ற நிகழ்வு நடந்ததாகும்.
ரமணரிடம் கேட்டார்கள் இந்த பசு மனிதனாக பிறக்குமா என்று.
அதற்கு ரமணர் ``அதற்கு மனிதனாக பிறக்க வேண்டிய அவசியமில்லை.
அந்த பசு ஞான மடைந்த பின்பு இறந்ததனால் அதற்கு மறுபிறவி என்பது
கிடையாது`` என்றார்.
ஆம் ஏற்கும் திறனுடையது பசு.
அதனால் பசுக்கள் புனிதமாக வணங்கப்படுகின்றன.
விழிப்புணர்வு அடைந்த ஒரே ஜீவன் பசு மட்டுமே.
அதனால் தான் ஆசிரமங்களிலும்
கோயில்களிலும் பசுக்கள் இடம்பெற்றுள்ளன.
அவைகள் சுத்தமான விழிகளுடன் அப்பாவித்தனமாக வாழ்ந்துக் கொண்டிருக்கும்

கருத்துகள்
கருத்துரையிடுக