ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
இலங்கை வானொலி இரவின் மடியில்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கனகரத்தினம் பிறந்தது இலங்கையில் வடமேல் மாகாணத்தில் சிலாபம் அருகே உள்ள மருதங்குளம் என்ற ஊரில். பெற்றோர் முத்தையா, பொன்னம்மாள் ஆகியோர். குடும்பத்தில் ஏழாவது பிள்ளை கனகரத்தினம். தந்தை முத்தையா தமிழ்நாடு அரசவம்சத்தை சேர்ந்தவர்
கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் இவரது வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது இவர்களின் குடும்பத்தின் பரம்பரை பெயர்.
மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் ஆரம்பக் கல்வியைக் கற்று பின்னர் சென் மேரீஸ் கல்லூரியில் உயர்கல்வியைப் பெற்றார். இவர் திருமணம் ஆகாதவர்.
அக்காலத்தில் இலங்கை வானொலியில் இணைந்திருந்தவர்களில் மிகுந்த இலக்கிய புலமை கொண்டவராகத் திகழ்ந்த ராஜகுரு, இதன் காரணமாக இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலி பரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். பொதிகைத் தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார்.
இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த இளையநிலா என்ற தமிழ்த் திரைப்படத்துக்கான பாடல்கள் அனைத்தையும் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் எழுதியிருந்தார்
மனம் போன போக்கில் (1988)
மன்னருக்குக் கோபம் வந்தால்
என்பன இவரால் எழுதி வெளிவிட்ட நூல்கள் .
இலங்கையில் வடமேல் மாகாணத்தைச் சேர்ந்த முதலாவது தமிழ் வானொலி அறிவிப்பாளர். 1960 முதல் மூன்று தசாப்தங்களாக இலங்கை வானொலி நிலையத்தில் பணியாற்றி வந்தவர். திரையிசைப் பாடல் வரிகளை சங்க காலப் பாடல்வரிகளோடு தொடர்பு படுத்தும் "பொதிகைத் தென்றல்" முதலான இலக்கியச் சுவையுள்ள நிகழ்ச்சிகளை தயாரித்து வழங்கியவர். திரையுலகின் பல கலைஞர்கள், கவிஞர்கள் பற்றிய பல சிறப்பு நிகழ்ச்சிகளை வழங்கியவர்.என்றால் மிகை ஆகாது .
தமிழ் நாட்டில் இருக்கும் அயோத்தியிலிருந்து வந்தவர். கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும்அவர்களின் வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது இவரின் குடும்பத்தின் பரம்பரை பெயர்.
அறிவிப்பாளராக ரேடியோ சிலோனுக்கு பணியாற்ற இவர் வந்தபோது, அங்கே மயில்வாகனம் இருந்தார். அவர் இவரை சிலாபக்காரர், கரையா ர், மீன்பிடிக் கிராமத்தான் என்பதாக மதிப்பிட்டு அப்படியே வெளியே சொல்லியும் வந்தார்.
ரேடியோ சிலோனிலும் அப்படித்தான் ஏனையோரிடத்தில் அறிமுகம் செய்தும் வந்தார்.
இவர் ஒரு கரையா ர் பையன்” என்று சொல்வது இவருக்கு பெருத்த அவமானமாக இருந்தது. உண்மையில் இவர் ஒரு பெரிய குடும்பத்து பையன் என்பது மயில்வாகனத்திற்கு தெரியாது. இவரது வாயை எப்படி மூடுவது என்று யோசித்து ஒரு முடிவுக்கு வந்த கனகரத்தினம் . பிறகு தான் தன பெயருக்கு முன்னால் ‘ராஜகுரு சேனாதிபதி என்பதை சேர்த்துக்கொண்டார்
மருதங்குளம் தமிழ் கலவன் பாடசாலையில் நான்காம் வகுப்பு வரை கல்வி கற்று விட்டு
கு சென் மேரீஸ் கல்லூரியில் சேர்ந்து . அங்கே எஸ். எஸ். சி. வரைப் படித்தார் ,வானொலியில் அறிவிப்பாளனாக வேண்டும் என்கிற வெறி .இவரின் கிரிக்கெட் விளையாடும் ஆசையை மூலையில் தள்ளியது .இதன் பொழுது இவரின் தகப்பனார் வீட்டை விட்டு வெளியில் போ என்று கலைத்து விட்டார்.
கொழும்பு வந்த இவர் சிலரின் உதவியுடன் அறிவிப்பாளர் தேர்வில் வானொலிக் கலைஞர் ஆகினார் .
திருமண பந்தத்தில் இணைவதற்கு விருப்பமில்லாமல் தனது வானொலியை தரமாகக போராடினார் .
இவர் மீது காதல் கொண்ட பெங்களூர் பெண் இவரைக் கணவனாக அடைய பல போராட்டம் நடாத்தியிருக்கிறாள் .தனது கடைசிக் காலத்தில் அவளை எண்ணி உருகியிருகிறார் .காலம் கடந்து வந்த ஞானோதயம் அது ,
1960 ஆம் ஆண்டு தொடக்கம் 1990 ஆம் ஆண்டுவரை சுமார் முப்பது ஆண்டுகள் பிரபல அறிவிப்பாளராகப் பவனி வந்தார். இலங்கை வானொலியின் புகழ் பூத்த அறிவிப்பாளர்களாகிய கே.எஸ்.ராஜா, பி.எச். அப்துல் ஹமீத், மயில்வாகனம் சர்வானந்தா, வி.என்.மதியழகன், ஜோக்கிம் பெர்னாண்டோ, நடராஜா சிவம், ஜெயகிருஷ்ணா, ஜி.போல் ஆன்டனி, ராஜேஸ்வரி சண்முகம், சற்சொரூபவதி ஆகிய அத்தனை அறிவிப்பாளர்களுடனும் பணி புரிந்தவர் என்ற பெருமை மட்டுமல்லாது, இவர்கள் அத்தனை பேருக்கும் முன்னோடியும் ஆவார்.
இலக்கிய கண்ணோட்டத்துடன் பாடல்களை ஒலி பரப்பியதோடு, இலக்கியத் தரம் கொண்ட நிகழ்ச்சிகளையும் அறிமுகம் செய்தார். 'பொதிகைத் தென்றல்', 'காலைக்கதிர்', 'பாட்டொன்று கேட்போம்', இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளை இவர் நடத்தினார்.இலங்கையில் கலவரம் ஓன்று இல்லாது இருந்தால் இலங்கை வானொலியின் தரம் எங்கேயோ போயிருக்கும் .
எனக்கு திருமலை மேலோருநாள் என்ற பாடலை கே ட்ட நாள் முதல் இவரின் மேல் இனம் தெரியாத பற்று உண்டானது .உங்களுக்காக இப்பாடலை உங்களுக்கு இணைக்கிறேன்
மேலும்
ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் சிறந்த ஓர் கவிஞர் என்பதை அடையாளப்படுத்த இலங்கையில் வெளிவந்த திரைப்படமான "இளைய நிலா" திரைப்படத்ததுக்கு இவர் எழுதிய பாடல்களே சான்று.
"எண்தமிழ், 'கம்பனும் கவிஞரும், "மனம் போன போக்கில், 'மனினருக்கு கோபம் வந்தால் போன்ற நூல்களை படைத்து வெளியிட்டுள்ளார். கவிஞர் கண்ணதாசனுடன் மிக நெருங்கிய உறவுடன் பழகியதுடன் கவிஞரின் குடும்ப நண்பராகவும் காணப் பட்டார்.
ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் ஆற்றல் நிறைந்த, ஆளுமை நேயம் கொண்ட பல்துறை கலைஞராவார்.
விமல் சொக்கநாதனுக்கும் இவருக்கும் சிறு பிரச்சனைகள் இருந்ததை அறிய முடிந்தது .தேவை கருதி அதை தவிர்த்து இருக்கிறேன் ஒரு கட்டுரை எழுதுவது என்பது வெறும் புகழ் பாடுவது அல்ல .எல்லாவற்றையும் சொல்லல் வேண்டும் என்பதுமல்ல .இவரின் தங்கை மேல் பாசம் கொண்டவர் .வீட்டில் குழப்படிக்கு பேர் போனவர் .தகப்பனிடம் அடி வாங்காத நாளேயில்லை .தங்கை இறந்தபின்பு தன பாசத்தை வெளிக்காட்டி அலுத்து தொலைத்தவர் . தொழில் தான் முக்கியம் என்று வானொலிக்கு இரவும் பகலும் உழைத்தவர் .
இறுதிக் காலத்தில் தனிமையின் கொடுமையை அனுபவித்தவர் .மன ம் பக்குவப்பட்ட பக்தி மான் .
மற்றக் கலைஞர்கள் பற்றி எழுதும் பொழுது மேலும் விபரமான தகவல்குடன் தொடர்கின்றேன்
எனது பதிவுகள் நீளமாக இருப்பதாக பலரின் குறை கூறல் கேட்கமுடியாமல் சுருக்கி எழுதி இருக்கிறேன்
Manikkavasagar Vaitialingam




கருத்துகள்
கருத்துரையிடுக