**மனிதர்களைப் பொறுத்தவரை தருமம் என்றால்**

சரியான செயல்களைச் செய்வது, சரியான பாதையில் நடப்பது ஆகும். உலகத்திலுள்ள மனிதர்கள் இவ்வாறு நீதி நெறியில் வாழ்வது மட்டுமல்லாமல், வான் வெளியில் உலகம் உழல்வதும், அண்ட சராசரங்கள் ஒரு ஒழுங்கில் இயங்குவதும் தருமம் எனப்படும் இறைவனின் விதிகளில்தான் என்கிறது இந்து சமயம்.
வேதாந்த சாத்திரங்களின்படி ”எது தாங்குகின்றதோ அதுவே தர்மம்” என்று வரையறுத்துக் கூறுகிறது. அவைகள் தனி மனித தருமம், சமூக தருமம், இராஷ்டிர தருமம் அல்லது தேசிய தருமம் மற்றும் மனித சமூகத்திற்கான தருமம் என்று ஐந்தாக தருமங்கள் உள்ளது.
என்பது ஒரு தனி மனிதன் அன்றாடம் கடைப்பிடிக்க வேண்டிய தருமமாகும். வேதாந்த சாத்திரங்கள் கூறும் இல்லற தருமம், சமூக தருமம், இராஷ்டிர தருமம், மானவ தருமம் ஆகிய தருமங்களில் தனி மனிதன் கடைபிடிக்க வேண்டிய வியக்தி தருமங்கள் பின்வருமாறு:
தம: புற உறுப்புகளை அடக்கி ஆள்வது
சம: அக உறுப்புகளை அடக்கி ஆள்வது
அகிம்சை: எவ்வுயிருக்கும் தீங்கு இழைக்காமல் இருத்தல்
வாய்மை அல்லது சத்தியம்: மனதாலும் செயலாலும் வாய்மையைக் கடைப்பிடித்தல்
பிரம்மச்சரியம் : உடல் தொடர்பான ஆசைகளையும் உணர்ச்சிகளையும் அடக்குதல்.
அக்ரோதா: கோபப்படாதிருத்தல்.
மகிழ்ச்சி: மனநிறைவு, மனத்திருப்தி
தியாகம்: தன்னலத்தைத் துறத்தல்.
அபைஷுண: புறங்கூறாமை, இழித்துப் பேசாது இருத்தல்
அலோலுப்த்வ: பேராசைப்படாதிருத்தல்.
அபரிக்கிரகம்: பிறரிடமிருந்து தேவையற்ற வெகுமதிகளைப் பெறாதிருத்தல்.
ஹ்ரீ; அடக்கத்துடன் இருத்தல்.
மார்தவ: மென்மையுடன் இருத்தல்.
தயா: கருணையுடன் இரக்கத்துடனும் இருத்தல்.
சாந்தி: மனதை அடக்கி அதனால் உண்டாகும் மன அமைதி.
க்ஷமா: மன்னிக்கும் தன்மை
சௌசம்: உடல் மற்றும் மனதை தூய்மையாக வைத்திருத்தல்.
அத்ரோஹ: தீங்கு செய்யும் எண்ணம் இல்லாதிருத்தல்
தனி மனித தருமங்களை கடைப்பிடிக்கவர்கள் இணைந்தவர்களின் கூட்டமே சமூகம் ஆகும். இத்தகைய சமூகம் சீரிய முறையில் செயல்படும். அதுவே சமூக தர்மம் எனப்படும் சமாஜ தருமம் ஆகும். ஒரு சமூகம் பல்வேறு வகைப்பட்ட தியாகங்களைச் செய்வது என்பது மனித சமுதாய தர்மத்தின் அடிக்கல்லாக அமைகிறது. ஒரு சமூகம் கடைப்பிடிக்க வேண்டிய தருமங்கள்;
அனைவரிடமும் அன்புகாட்டுதல்
ஈகையை கடைப்பிடித்தல்.
வாய்மையை கடைப்பிடித்தல்.
விருந்தோம்பல்
கீழ்த்தரமான உணர்வுகளை அடக்குதல்.
பிறர்க்குத் துன்பத்தை தரவல்ல உண்மையத் தவிர்த்தல்.
நாட்டுக்காக தனி நபர்கள் மற்றும் சமூகம், தியாகங்கள் மேற்கொள்ள வேண்டும். அதுவே இராஷ்ட்டிர தருமம் அல்லது தேசிய தருமம் ஆகும்.
தானம் என்பது பிறருக்குத் தேவையானவற்றை அவர் கேட்டோ, அடுத்தவர் அவர் நிலை கூறி அறிந்தபின்னோ தருவது. இதுதான் தானம். புண்ணியக் கணக்கில் சேராது. ஏனெனில், இல்லாதவர் மற்றும் இயலாதவர் கேட்டபின் கொடையளிப்பது ஒரு மன்னனின் கடமை. ஒவ்வொரு மனிதனின் கடமையும் கூட.
ஆனால், தர்மம் என்பது எவரும் கேட்காமல் அவரே அறியாமல் அவர் நிலை அறிந்து கொடுப்பது. இதுதான் புண்ணியம் தரும். பசித்திருக்கும் ஒருவர் கேட்டபின் ஏதாவது தருவது தானம். அவர் கேட்காமலேயே அவர் பசியாற்றுவது தர்மம்.
கர்ணன் தர்மங்கள் செய்து புண்ணியங்களை ஈட்டியவன்தான். ஆனால், மொத்த புண்ணியத்தையும் கிருஷ்ணர் தானமாகக் கேட்டுத்தான் வாங்கினாரே தவிர தர்மமாகப் பெறவில்லை. எல்லா புண்ணியங்களையும் தானமாகத் தாரை வார்த்து தந்த பிறகு கர்ணனும் ஒரு சாதாரண மனிதனானான். அதனாலேயே மரணம் அவனை எளிதாய் நெருங்கியது. புரிந்ததா ?
புண்ணியம் என்பது எது என்று .

கருத்துகள்