சாக்தனா ? அல்லது சாத்தானா ?
உங்களின் மாயை இருள் அகற்ற
பாகம் எட்டு
%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சாக்தம் சக்தியை வழிபடு கடவுளாகக் கொள்ளும் சமயம் ஆகும். சக்தியே தெய்வம், அவரைத் தாயாக வழிபட வேண்டும் என்ற கோட்பாட்டை உடையது. இச்சமயத்தினர் தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்வர். செவ்வாடை,குங்குமமும் அணியும் வழக்கம் இவர்களிடம் உண்டு.
சக்தியே முழு முதற் கடவுள் என்றும் அனைத்திலும் உள்ளும் புறமும் கலந்து இருக்கும் சக்திதனக்குள் இருந்து தன்னை இயக்குவதை உணர்ந்து வழிபடுகின்றார்கள் .
இலங்கையில் இருந்த இருக்கின்ற வழிபாடு இயக்கர்களின் பாரம் ப ரியமானது .சாக்தர்களில் இரண்டு வகையான பிரிவுகள் உள்ளன.
வாமாசாரர்கள்,
தட்சிணசாரர்கள்என இருவகை
சக்தி வழிபாட்டை முதன்மையாகக் கொண்ட சமயம். சக்தி மட்டுமே தெய்வம் என்பதிலும் தீவிரமான கருத்து கொண்டது சாக்தம். இச்சமயத்தை சார்ந்தவர்கள் சக்தியை தாயாக வழிபடுவதோடு, தங்களை சக்தி தாசர்கள் என்றும் அழைத்துக் கொள்கின்றனர். சிகப்பு நிற ஆடைதரித்து, பெரிய அளவில் குங்குமம் அணிந்த தோற்றத்தில் அம்மனை வழிபடுகின்றனர். அனைத்து உலகத்தையும் படைத்து, காத்து, தன்னுள் ஒடுக்குபவள் சக்தியே என்பது இவர்கள் அடிப்படை நம்பிக்கை. தாய் வணக்கம், தாய்த் தெய்வ வழிபாட்டின் நீட்சியே சாக்தம் என்பர்.
உலக மக்களின் முற்பருவத்தில் தாயே அதிகாரமுடையவளாயிருந்தாள். ஆட்சி அவள் கையில் இருந்தது. தந்தைக்கு பிள்ளைகளிடத்தில் உரிமை உண்டாகவில்லை. சொத்து பெண்களுக்கே உடையதாயிருந்தது. அக்காலத்தில் மக்கள் தாயைக் கடவுளாக வழிபட்டனர். உலகில் முதல் தோன்றி நடைபெற்றது.
முன்னோர்களின் காலத்தில் இடம்பெற்றுள்ள காடுகிழாள், கொற்றவை ஆகியோர் தாய்வழிச் சமூகப் பெண்தெய்வங்களே. இந்திய மக்கள் தாய்க்கடவுளைச் சிங்கவாகன முடையவளாகவும், ஒரு கையில் தண்டையும் இன்னொரு கையில் கேடகத்தையும் வைத்திருப்பவளாகவும் கொண்டு வழிபடுகின்றனர். எகிப்திய மக்கள் வழிபட்ட தாய்க் கடவுள் சிங்க ஊர்தியின் மேல் நிற்பதாகும். இதனை ஒத்தனவே சின்ன ஆசியா, சிரிய முதலிய நாடுகளில் வழிபடப்பட்ட தாய்க் கடவுளரின் வடிவங்களுமாகும். சின்ன ஆசியாவிலே கிதைதி என்னும் இடத்திலே கிடைத்த பழைய நாணயம் ஒன்றில், ஒரு பக்கத்தே இரு இடபங்கள் தாங்கும் கட்டிலின் மீது தந்தைக் கடவுளும், இரு சிங்கங்கள் தாங்கும் கட்டிலின்மீது தாய்க்கடவுள் வழிபாட்டுக்குரிய இவ்வடிவம். இந்திய நாட்டினின்றே சென்றிருத்தல் வேண்டுமெனக் கருதப்படுகின்றது. இவ்வுலக நாகரிகம் இந்திய நாட்டினின்றே மற்றத் திசைகளுக்குப் பரந்திருத்தல் வேண்டுமென ஜி.ஆர். ஹன்டர் (G.R.Hunter) ஹெரஸ் பாதிரியர், ரைஸ் டேவிட்ஸ் சில்டி முதலிய பல மேல்நாட்டு ஆராய்ச்சியாளர்கள் கருதினார்கள். இந்த மரபிலேயே பராசக்தியும் வழிபாட்டுக்குரியவளாகிறாள். மகாலட்சுமி, மாகாளி, மகாசரஸ்வதி ஆகிய மூவரும் பராசக்தியின் மூன்று உருவங்களாகக் கொள்ளப்படுகின்றனர்.
சிந்து சமவெளி நாகரீக காலம் தொட்டே பெண் தெய்வ வழிபாடு தமிழர்களின் வாழ்க்கையோடு இணைந்த ஒன்றாகும். தொல்காப்பியம் மற்றும் பல சங்க இலக்கியங்களில் சக்தி வழிபாடு மிக சிறப்பாக சுட்டிக் காட்டப்படுகிறது. இந்த சக்தி வழிபாட்டோடு தாந்த்ரீகம் என்பது சிலப்பதிகாரம் மணிமேகலை போன்ற காப்பியங்கள் உருவான காலத்தில் இணைந்து கொண்டன .
திருமூலர் எழுதிய திருமந்திரத்தில், சைவ நெறியே பெருவாரியாக பேசப்பட்டாலும் திருமந்திரம் நான்காம் தந்திரத்தில் தாந்த்ரீக நெறி மிக விரிவாக அலசி ஆராயப்பட்டு எளிய மக்களும் புரிந்து கொள்ளுகிற வகையில் கூறப்படுகிறது. பரம்பொருளாகிய அம்மை அப்பனும் ஒருவரை விட்டு இன்னொருவர் அகலாது இருப்பதை சுட்டிக்காட்டி சிவம் என்பது படைப்பு காப்பு மறைப்பு அழிப்பு அருளல் என்ற ஐந்தொழிலை செய்வதாகவும் சக்தி என்பது இந்த ஐந்தொழில் செய்ய சிவனுக்கு சக்தியைக் கொடுப்பதாகவும் இருக்கிறது என்று காட்டப்படுகிறது. அதாவது, இயங்காமல் இருந்தால் அதன் பெயர் சிவம். இயக்கத்திற்கு வந்தால் அது தான் சக்தி என்பது திருமந்திர தத்துவமாகும்.
நீங்கள் கணணி அறிவீர்கள் அந்தக் கணனியின் சகல தொழிற்பாடும்positive negative அதாவது + உம் -உம் சேர்ந்து இயங்குகிறது
விளங்கிடு மேல்வரு மெய்ப்பொருள் சொல்லின்
விளங்கிடு மெல்லிய லானது வாகும்.
விளங்கிடு மெய்ந்நின்ற ஞானப் பொருளை
விளங்கிடு வார்கள் விளங்கினர் தானே
என்று திருமூலர் திருமந்திரத்தில் ஆயிரத்து முன்னூற்று அறுபதாவது பாடலில் கூறுகிறார். அதாவது, சக்தி என்ற அம்மையை உயர்ந்த மெய்ப்பொருள் என்பது இதன் மையப் பொருளாகும். ஒளிமயமாக விளங்குகின்ற மெல்லிய இயல்புள்ள சக்தியே பரமசக்தியாக ஞானப் பொருளாக திகழ்கிறார் என்று அழகான கவிதையில் திருமூலர் பாடுகிஇருக்கிறார் .
தானே வெளியென எங்கும் நிறைந்தவள்
தானே பரம வெளியது வானவள்
தானே சகலமும் ஆக்கி அழித்தவள்
தானே அனைத்துள அண்ட சகலமே
என்கிறார். பொதுவாக சிவனையோ திருமாலையோ குறிப்பிடும் போதுதான் நோக்கும் இடமெல்லாம் நிறைந்த நிர்மலப் பொருள் என்று ஞானிகள் கூறுவார்கள். அத்தகைய பரப்பிரம்ம நிர்மலப் பொருளே, தானே எங்கும் நிறைந்து தானே சகலத்தையும் படைத்து தானே சகலத்துக்கும் கொடுத்து தானே சகலத்தையும் சம்ஹாரம் செய்வதாகக் கூறுவார்கள். இங்கே திருமூலர் ஆக்கல், அழித்தல், காத்தல் என்ற முத்தொழிலையும், அதாவது பிரம்மனாகவும் சிவனாகவும் விஷ்ணுவாகவும் இருப்பவள் அன்னை ஆதிபராசக்தியே என்ற புதிய கருத்தை முன்வைக்கிறார். அது மட்டுமல்ல அன்னை பராசக்தி, தானே முளைத்த சுயம்பு என்று கூறி அவளே உலகத்தின் மூல காரணம் என்கிறாள்.
தனக்கு மேலே தன்னை படைத்ததாக தன்னை ஆட்சி செய்வதாக யாரும் இல்லாதவள் ஆதி பராசக்தி. அதனால் அவள் தத்துவ நாயகி என்றும் அறியப்படுகிறாள். தேவருக்கும் மூவருக்கும் யாவருக்கும் எங்கும் என்றும் தலைவியாகத் திகழ்பவள் அன்னை. அத்தகைய அன்னைக்கு தற்பரை என்ற சிறப்புப் பெயர் சூட்டி அவளை அனாதியானவள் என்று நமக்கு திருமூலர் அறிமுகமாக்குகிறார்
மனதுக்குள்ளும் மனத்தைக் கடந்து வியாபித்தும் இருக்கிறாள் சக்தி.வார்த்தைகளால் வர்ணிக்க முடியாது அப்பால் பட்டு நிற்கிறாள் இதனால் இவளை மனோன்மணி என்றும் அழைப்பர் .
சக்தி ஸ்தூல வடிவமாக எந்திரத்தில் குடிகொண்டு இருக்கிறாள்
சாக்த மதத்திலும் இருபிரிவு உண்டு. ஒன்று வாமாசாரார்கள், மற்றொன்று தட்சிணசாரர்கள். சைவ தந்திரம் (தட்சணாசார தந்திரம்), அசைவ தந்திரம் (வாமாசார தந்திரம்) என்று இரண்டு பிரிவுகள் இருந்தன. இன்றைக்கும் இருக்கின்றன. உயிர் பலி கொடுத்து காளிபோன்ற தெய்வங்களுக்கு படையல் போட்டு காரியத்தை வாமாசாரர்கள் (அசைவ வழி) சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். அதைபோல் எலுமிச்சை கனியை பலி கொடுத்து அதே காளிக்கு படையல் கொடுத்து காரியத்தை சாதித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். ஆக இரண்டு விதத்திலும் பலன் கிடைத்திருக்கிறது.ஆனால்
வாமாசாரர்கள் கௌலிகள் என்று அழைக்கப்படுகின்றனர். வேதங்களை இவர்கள் ஏற்றுக் கொள்வதில்லை. தங்கள் வாழ்க்கை முறைக்கேற்ப விதிகளை உருவாக்கிக் கொண்டு செயல்படுகிறார்கள். தட்சிணாசாரர்களை ஸ்ரீ வித்யோபாசகர்கள் என்றும் வைதிகர்கள் என்றும் அழைக்கின்றனர். இவர்கள் வேதத்தை முழுமையாக பின்பற்றுகிறார்கள் சந்தியாவந்தனம், மூதாதையர்களுக்கு கிரியை செலுத்துதல் வேள்விகள் போன்றவற்றைப் பின்பற்றுகிறார்கள்.
காளி வழிபாடு என்பது வெகுகாலமாகவே உள்ளது. பழங்காலத்தில் மிருகபலி மட்டுமல்லாமல் நரபலியும் அம்மன் வழிபாட்டில் இருந்து வந்தது. ஆனால் ஆதிசங்கரர் காலத்திற்கு பின்னர் பலியிடுதல் என்பது மறைந்து போனது. தேவியை அன்புள்ளம் கொண்டவளாக விளக்கி ஸ்ரீ சக்கரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபடும் முறையை இவர் வகுத்துக் கொடுத்தார். இப்போது இதுவே பெரும்பாலும் நடைமுறையில் இருந்து வருகிறது. தேவிதான் முழுமையான பராசக்தி என்றும், இவரே பிரம்மா, விஷ்ணு, சிவன், ஆகிய மூவரையும் படைத்தார் என்று சொல்கிறது தேவி பாகவதம். மட்டுமல்லாமல் தன்னுடைய ஸத்வ, ரஜஸ், தமஸ் அம்சங்களை பிரதிபலிக்கும் வகையில் சரஸ்வதி, லட்சுமி, பார்வதி ஆகிய மூவரையும் படைத்தார் என்றும் கூறுகிறது. தேவி பாகவதம் என்னும் நூலை வாங்கிப் படித்துக் கொள்ளுங்கள்
சக்தியை வழிபடுவதுதான் சாக்தம் என்பதற்கும், சாக்தம் என்பதன் கீழ் கொண்டுவரப் பட்டிருக்கும் பெண்ணின் அகப்புற உலகின் தெய்விக ஆக்கத்திற்கும் நெடும் வித்யாசம் இருக்கிறது. சக்தி, சிவனின் மனைவி. சக்தி வழிபாடு ஒரு விதத்தில் சைவத்தினுள் அடக்கம் என்பது போன்ற புரிந்துகொள்ளல்கள் வார்த்தைகளையும் வாக்கியங்களையும் வைத்து நோக்கும் பொழுது சரியெனத் தோன்றலாம். ஆனால் சாக்தத்தின் பல புரிகளை ஒப்பிட்டு நோக்கும் போது பெண் என்ற மெய்மையின் வழி பரம்பொருளைப் பற்றிய தரிசனம் சக்தி, சிவன், விஷ்ணுவின் யோக மாயா, சாமுண்டீ, பவானி என்று பல விதங்களில் தன்னை உரைபொருளாய் ஆக்கிக்கொள்கிறது என்பதுதான் நமக்குப் புரிய வருவது. இத்தகைய ஒரு யதார்த்தமான பார்வை இவ்வளவு அழுத்தமாக, படிப்புக்கு இலக்காகி இருப்பதும் வழிபாட்டின் உணர்ச்சிகளுக்கு வடிவமாகியிருப்பதும் பெரும் ஆச்சரியமே .
இந்தியாவில் .
கா ஷ்மீரத்தில் சஷிரா பவானியும், மகாராட்டிரத்தில் துளஜா பவானியும், குஜராத்தில் அம்பாஜியும் உத்திரப்பிரதேசத்தில் விந்தியாவாசினியும், வங்களாத்தில் காளியும், அசாமில் காமரூபியும், மைசூரில் சாமுண்டீஸ்வரியும், கேரளத்தில் பகவதியும், காஞ்சியில் காமாட்சியும், மதுரையில் மீனாட்சியும், தில்லையில் சிவகாமியும், திருவாரூரில் கமலாம்பிகையும், திருவானைக்காவில் அகிலாண்டேசுவரியும், திவண்ணாமலையில் உண்ணாமுலையம்மையும், திருக்கடவூரில் அபிராமியும் பெருஞ் சிறப்புடன் வழிப்படுகின்றனர். காசி விசாலாட்சியும் தென் கோடியில் கன்னியாகுமரியம்மனும் அம்பிகை வழிபாட்டிலே ஒருமைப்பாட்டின் நிலைக்களங்களாக இருக்கின்றன .
இலங்கையில் துர்க்கை அம்மன் கோவில் கண்ணகி அம்மன் கோவில் ,நாக பூசணி அம்மன் கோவில் ,சிவகாமி அம்மன் கோவில் என்று சக்தி வழிபாடுகள் இருக்கின்றன .ஒவ்வொரு கோவிலுக்கும் தலச் சிறப்புக்கள் உண்டு .எங்கும் சக்தியை மிகுந்த கொண்டாட்டத்துடன் வணங்கி வருகிறார்களாயினும், தனியாகச் சாக்தம் என்ற கொள்கை இல்லை
வங்காள தேசத்தில் இன்றும் சாக்த சமயம் சிறப்பாகத் தான் இருக்கிறது .
விக்கிரமாதித்ய ராஜா மஹாகாளியை உபாஸனை செய்தவன். "அவன் காலத்தில் தோன்றி, பாரத தேசத்திற்கும், பூமண்டலத்திற்கும் தலைமைக் கவியாக விளங்கும் காளிதாஸன்சக்தி ஆராதனத்தை மேற்கொண்டவன். சிவாஜி மஹாராஜாவுக்குப் பவானியே தெய்வம்.
மேலும்
சிலர் சக்தியுபாஸனை என்று தனிமையாகச் செய்து வருகிறார்கள். இவர்கள் புராதன க்ஷத்திரிய வழக்கத்திலிருந்த மது மாமிசங்களை அந்தத் தெய்வத்துக்கு அவசியமான நைவேத்தியம் என்ற தப்பெண்ணத்தால் தாமும் வழக்கப்படுத்திக் கொண்டு,இருக்கிறார்கள்
ரஹஸ்யமாகப் பூஜை செய்து வருகிறார்கள்.பூசையின் பொழுது மது மாமிசம் தாராளமாக் கையாளுகிறார்கள் இதனால் இவர்களை
சில இடங்களில்,"சாக்தன்" என்றால் "ரஹஸ்யமாகக் குடிப்பவன்" என்ற அர்த்தம் உண்டாய்விட்டது.
"சாக்தன்" என்பது பலரின் வாய்களில் நுழைந்து சாத்தான் என்றாகி விட்டது
சாக்த வழிபாட்டில் மிகவும் அதிர்வு மிக்க மந்திரங்கள் உள்ளன. வெகு நிச்சயம் இந்த மந்திரங்கள் சொல்லச் சொல்ல மிக உயர்ந்த நிலையை அடையமுடியும். நல்லவைகள் பலவும் கண்டிப்பாக நடக்கும். சாக்தம் கடுமையான வழி. இது கத்திமேல் நடப்பதைப்போன்றது.மிகச் சத்தியமான வழி. நெல்முனையளவும் சத்தியம் பிறழாமல் நடப்பவரால், அளவு கடந்த பொறுமையும், நம்பிக்கையும் உடையவர்களால் தான் இந்த வழியை பின்பற்ற முடியும். நாம் ஜெயிக்க முடியும். மந்திர ஜபம் நமக்கு ஜெயத்தைக் கொடுக்கும் என்று முழு மனதாய் அதனிடம் சரணடைந்தவர்களால் மட்டுமே அதனைப் பின்பற்றமுடியும்.
சிலமந்திரன்களை தர முடியும்
அவற்றை நீங்கள் தீமைக்குப் பயன் படுத்தி விட்டால் ? அதனால் தவிர்த்துக் கொள்கின்றேன் .
இன்று சக்தி வழிபாடானது சிவ வழிபாட்டோடு கலந்து விட்டதனால் தந்திர ஆகமங்களுக்கும், சைவ ஆகமங்களுக்கும் தனித்தனியான வேற்றுமைகளை யாரும் கூறுவதில்லை.அதானால் நானும் தவிர்த்த்குக் கொண்டேன் .
சக்தி என்பது பிரபஞ்சமே ஆகும் - சக்தி மற்றும் இயக்கத்தின் உருவகம், இந்த பொருள் உலகத்தின் இருப்புக்கும் இயக்கத்திற்கும் உந்துதல் சக்தியாகுமு;. சிவன் என்பது இதனின் தன்மறாற் ஆண்தன்மை, எல்லா உயிர்களுக்கும் தெய்வீக இடம். 'சக்தியின்றி சிவன் இல்லை, அல்லது சிவனின்றி சக்தியில்லை' இரண்டுமே ஒன்றுதான்.
சாக்த மதம் இந்து மதத்தின் இயக்கம். சாக்த மதத்தின் சிறப்பு சக்தியே அறிவு, சக்தி சிவனனின் அடையாளமுமாகும். சுருங்கக்கூறின் நிலையான சக்தி பிரம்மன். சக்தி பிரம்மனின் இயக்கம். மதக்கலைககளில், இந்த பிரபஞ்ச இயக்கச் சக்தி பாதி சக்தி பாதி சிவ தெய்வம் என்றும் அர்த்தநாரி என் கூறப்படுகிறது. சாக்த மதம் தேவிதான் ஆதாரம், சாரம் எல்லாப்படைப்புகளுக்கும் பொருள், பார்க்க, பார்க்க இயலாத சிவனோடு இணைந்த ஒன்று என்கிறது.
செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அம்பிகையை பூஜிக்க மிகவும் ஏற்ற தினங்களாகும். அதிலும் முறைப்படி, பயபக்தியுடன் அன்னையை வழிபட்டால் நிறைய பலன்களைப் பெறலாம். வேதங்கள் வகுத்தபடி பராசக்தியை வழிபடுபவர்களுக்கு இந்திர பதவியை தருவாள் என்கிறார் அபிராமி பட்டார்.
சக்தி வழிபாடு என்பது மிக தொன்மையானது. ஆதி காலத்தில் இந்த வழிபாட்டை ‘தாய்மை வழிபாடு” என்றே கூறினார்கள். உலகின் முதல் வழிபாடாக சக்தி வழிபாடு கருதப்படுகிறது. சதாசிவன், மகேஸ்வரன், ருத்ரன், விஷ்ணு, பிரம்மா ஆகிய 5 பேரை தனது அம்சமாக உருவாக்கிய அன்னை, பிறகு “ஹ்ரீம்” எனும் பீஜத்தில் எழுந்தருளியதாக திருமூலர் கூறியுள்ளார்.
லோக மாதாவான பராசக்திக்கு நாம் எல்லாருமே பிள்ளைகள் தான். நம் மீது கருணை, அன்பு காட்டி, நம்மையெல்லாம் பக்குவப்படுத்தி அவள் வளர்த்துள்ளாள். அன்னையை வணங்கி நாம் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றியே பெறும். அவள் அருளைப் பெற்றவர்களுக்கு எந்த செயலிலும் எந்தவித இடர்பாடும், இடையூறும் வராது.
சிவன் பார்வதியுடன் சேர்ந்து இல்லை எனில் தன்னுடைய தொழிலை சரிவர செய்யமுடியாது என்றும் அவள் இல்லையெனில் சவத்தினை ஒத்தவர் எனவும் சௌந்தர்ய லஹரி கூறுகிறது. சக்தி மூன்று கடவுளர்கட்கும். தேவையானது இது அவர்கள் மூவருக்கும் பொருந்தும். இது எல்லா உயிரினங்களுக்கும் பொருந்தும். ஒரு மனிதனின் வெற்றிக்குப் பின்னால் ஒரு பெண் இருக்கிறார் என நாம் சொல்லவில்லையா?
தேவிக்கு என எல்லாகோயில்களிலும் தனி சன்னதி உள்ளது. ஒவ்வொரு சிவன் கோயிலிலும் சக்தியினை அவரின் பலவித புகழ் வடிவிலே ஏதாவது ஒரு வடிவில் காண்கிறோம்.
தற்காலத்தில் தாயின் வழிபாட்டிற்கு சிறந்த முக்கியத்துவம் இருக்கிறது. இன்றைய உலக கஷ்டமான நிலையில் தேவியின் வழிபாடுதான் சுகத்தையும் அமைதியையும் கொடுக்க வல்லது.
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்
கருத்துரையிடுக