தற்கொலைக்கான காரணங்களை கண்டுபிடிக்க எத்தனை ஆய்வுகள் நடத்தினாலும் தற்கொலைகள் குறைந்தபாடில்லை. தீர்வு ஆய்வுகளில் இல்லை, வாழ்க்கை முறையில் தான் என்பதை நாம் உணரும் வரை தற்கொலை சம்பவங்கள் நிகழ்ந்துகொண்டே தான் இருக்கும்.
புரிதல் என்ற ஒரு முக்கிய உணர்வை இன்றைய குடும்பங்கள் இழந்துள்ளன. பெற்றோர்கள் பிள்ளைகளைப் புரிந்துகொள்ளவதில்லை, பிள்ளைகள் பெற்றோர்களைப் புரிந்துகொள்வதில்லை, மிக முக்கியமாக பெற்றோர்களுக்கிடையே புரிதல் இல்லை.
புரிதல், பிரச்சினை உருவாவதைத் தடுக்காது, ஆனால் பிரச்சினையை எதிர்கொள்ளும் திறனை அளிக்கும்.
பிறப்பும் இறப்பும் இயற்கை என்ற விதியை மீறி, பிறப்பு என்பது மருத்துவர்கள் நிர்ணயிப்பதும், இறப்பு என்பது நமக்கு நாமே நிர்ணயிப்பதும் என்று ஆகிவிட்டது.
தற்கொலை (Suicide) என்பது விருப்பத்துடன் ஒருவர் தன்னைத்தானே கொலை செய்து கொள்ளும் செயலாகும். மன அழுத்தம், மனப்பித்து இருமுனையப் பிறழ்வு, ஆளுமைச் சிதைவு, குடிப்பழக்கம் குற்றவுணர்வு, இயலாமை, வெட்கம், கடுமையான உடல்வலி, பென்சோடையசிபைன்கள் பயன்பாடு போன்ற பல காரணங்களில் ஒன்றோ அல்லது பல காரணங்களோ ஒருவரைத் தற்கொலைக்குத் தூண்டலாம்.
பொருளாதாரச் சிக்கல்கள், அடாவடியாக கொடுமைக்கு ஆளாதல், உறவுகளின் பிரச்சினைகள் போன்ற மன அழுத்தக் காரணங்களும் ஒருவரை தற்கொலைக்குத் துண்டலாம் தற்கொலை முயற்சியில் ஒருமுறை ஈடுபட்ட ஒருவர் எதிர்காலத்தில் மீண்டும் தற்கொலைக்கு முயற்சி நேற்கோள்ளூம் சாத்தியக்கூறுகள் அதிகமாக உள்ளன.
துப்பாக்கி வகைகள், மருந்துகள் மற்றும் நஞ்சுப் பொருட்கள் முதலானவற்றை எளிதில் கிடைக்கச் செய்யாமல் தடுப்பதும் தற்கொலையை தடுக்கும் ஒரு முறையாகும். மனநல கோளாறுகளுக்கு சிகிச்சையளித்தல் பொருகளை தவறாகப் பயன்படுத்துதலை தவிர்த்தல் முறையான செய்தி ஊடக அறிக்கையால் விழிப்புணர்வூட்டுதல் மற்றும் பொருளாதார நிலைமைகளை மேம்படுத்துதல் போன்றவையும் தற்கொலைகளை குறைக்கும் வழிமுறைகளாகும்.
நெருக்கடியான சூழல்கள் தற்கொலைக்குப் பொதுவானவை என்றாலும், அவற்றின் செயல்திறன் குறைவாகவே உள்ளது.
தற்கொலைக்கு மிகவும் பொதுவாக பயன்படுத்தப்படும் முறைகள் நாடுகளுக்கு இடையே வேறுபடுகின்றன, மேலும் இம்முறைகள் அந்த நேரத்தில் கிடைக்கக்கூடிய வழிமுறைகளைச் சார்ந்துள்ளன.
தூக்கில் தொங்குதல், பூச்சிக்கொல்லி நஞ்சு அருந்துதல் மற்றும் துப்பாக்கியால் சுட்டுக் கொள்ளுதல் போன்றவை பொதுவான சில தற்கொலை முறைகளாகும்
15-29 வயதுக்கிடைப்பட்டோரில், தற்கொலையே இறப்பிற்கு இரண்டாவது பெரிய காரணமாக அமைவதாகவும், 78% மான தற்கொலைகள் குறைந்த அல்லது நடுத்தர வருமானம் கொண்ட நாடுகளிலேயே நடப்பதாகவும் குறிப்பிடுகிறது.
தற்கொலை செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கையைக் காட்டிலும் ஆண்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. வளர்ந்து வரும் நாடுகளில் இச்சதவீதம் 1.5 மடங்கு அதிகமாகவும் வளர்ந்த நாடுகளில் இச்சதவீதம் உலகில் 3.5 மடங்காகக் காணப்படுகிறது
மதம், கௌரவம் மற்றும் வாழ்க்கை அர்த்தம் போன்ற பரந்த இருத்தலியல் கருத்துக்கள் தற்கொலை பற்றிய பார்வைகளில் ஆதிக்கம் செலுத்துகின்றன
வாழ்க்கையின் புனிதத்தன்மை பற்றிய நம்பிக்கையின் காரணமாக தற்கொலை செய்துகொள்வது என்பது கடவுளுக்கு எதிரான பாவம் அல்லது குற்றம் என்று ஆபிரகாமிய மதங்கள் பாரம்பரியமாக கருதிவருகின்றன.இந்து சமயம் தற்கொலை செய்பவர்கள் ஆவியாக அழிவார்கள் என்று பயமுறுத்துகிறது .
கணவனை இழந்த மனைவி தன் கணவனின் உடல் தீயில் எரியும்போது தானாகவோ அல்லது பிறரின் கட்டாயத்தாலோ அந்தத் தீயில் விழுந்து தன்னையும் மாய்த்துக் கொள்ளும் வழக்கம் இந்து சமயத்தின் சடங்காக பின்பற்றப்பட்டு வந்தது.
. தற்கொலை மற்றும் தற்கொலை முயற்சிகள் முன்னர் சட்டவிரோதமானதாக இருந்த போதிலும், பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் இப்போது மன அழுத்தத்தால்தற்கொலைகள் அதிகமாக தமிழர்களிடம் அதிகரித்து வருகிறது .அனேகமாக சிறுவர்கள் அரவணைக்க ஆட்கள் இன்றி ஏக்கத்தில் தவிக்கிறார்கள் .
நாடுகள் தற்கொலையை கடுமையான குற்றச்செயலாகக் கருதுகின்றன.
தற்கொலை தொடர்பான பண்பாட்டுப் பார்வைகள் பலவாறாக உள்ளன. ஆபிரகாமிய மதங்கள் தற்கொலையை மரியாதையற்றதாகக் கருதுகின்றன. தற்கொலை கடவுளுக்கு எதிரான செயலாகவும் கருதப்படுகிறது.
யப்பானிய சாமுராய் மரபில் ஒருவர் தோற்பதனை விடத் தற்கொலை செய்வது ஏற்றுக் கொள்ளப்படுகிறது. இந்தியாவின் உடன்கட்டை ஏறும் பழக்கத்தில் கணவனை இழந்த பெண்கள் கணவனது சிதையில் தற்கொலை செய்து கொள்ளும் வழக்கம்அன்று இருந்தது. ஐரோப்பாவில் எந்த நாடும் தற்கொலை அல்லது தற்கொலை முயற்சியை ஒரு குற்றமாக கருதவில்லை. இங்கிலாந்து மற்றும் வேல்ஸ் ஆகியவை தற்கொலைச் சட்டம் 1961 மற்றும் 1993 இன் படி தற்கொலையை குற்றம் என்று கருதுவதிலிருந்து நீக்கியது.நாட்டுக்கு இவர்கள் பிரயோசனமற்றவர்கள் என்று தீர்மானித்திருக்கலாம் .
சுவிஸ் நாட்டில் உடல்வேதனை, காயங்கள் - விபத்துக் காரணமாக உடலைப் பயன்படுத்த முடியாத நிலை போன்ற நிலைமைகளில் மருத்துவ உதவியுடன் தற்கொலை செய்யும் வழக்கமும் உள்ளது. மருத்துவ உதவியுடனான தற்கொலை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள் நிலவுகின்றன.
உறங்கு வதுபோலுஞ் சாக்காடு உறங்கி
விழிப்பது போலும் பிறப்பு.
தூங்கிவிடுவதுப் போன்றது மரணம் தூங்கிப் பின்பு விழிப்பதுப் போன்றது பிறப்பு.
கடந்த சில நாட்களாக பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள் தற்கொலை செய்துகொள்வதும் தற்கொலைக்கு முயற்சிப்பதும் அதிகரித்திருக்கிறது.
இளம்பருவத்தினர் தற்கொலை செய்துகொள்ள எத்தனை காரணங்கள் இருந்தாலும், எல்லோரும் முன்வைக்கும் முதல் காரணம், பெற்றோரின் வளர்ப்பு. பெற்றோர்கள் இங்கே கோபப்படக்கூடும்,
ஒரு கரு உருவாகும்போதே, ஒரு குழந்தை பிறக்கிறது. ஆனால், நம்மில் எத்தனை பேர் அக்குழந்தைக்கு ஓர் அழகான, தன்னம்பிக்கை உள்ள பத்து மாதங்களை உருவாக்கிக்கொடுக்கிறோம்? சூழ்நிலையை நீங்கள் காரணம் சொல்லலாம், ஆனால் அச்சூழ்நிலையை உருவாக்குவது உங்கள் கையில்தான் இருக்கிறது.
குழந்தைகளிடம் பெற்றோர் செலவழிக்கும் நேரம் என்றும் வீண்போவதில்லை. குழந்தைகளுக்கு அந்நேரங்களே அவர்கள் வாழ்க்கையை மெரூகேற்றுகிற நேரம்.
பாசத்திற்கும் அதீத அன்பிற்கும் உள்ள வித்தியாசத்தை பெற்றோர்கள் உணர வேண்டும். பாசமுள்ள தாய் தந்தையினர் குழந்தைகளின் தேவைகளைப் புரிந்து செயல்பட வேண்டும் .அப்படி அரவணைத்த பெற்றோரின் பிள்ளைகளே வெற்றி பெறுகின்றார்கள் .
அதீத அன்புள்ள பெற்றோர், குழந்தைகளின் வேண்டுதலுக்கு ஏற்ப செயல்படுவர். அதனால், எதை வேண்டுமானாலும் பெற்றுவிடலாம் என்ற எண்ணம் சிறு வயது முதலே குழந்தைகளிடம் தோன்றுகிறது.சிறு ஏமாற்றம் கூட தற்கொலைக்கு வழி வகுத்து விடும் .
சில பெற்றோர் தங்கள் குழந்தைகளின் தேவைகளை உணர்வதில்லை. அக்குழந்தைகள் சிறு வயது முதலே ஏமாற்றப் பாதையில், தாழ்வு மனப்பான்மையில் வளர்கின்றனர். ஏமாற்றங்களை ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு நிலையில், அத்தகையோரும் தற்கொலைக்கு தள்ளப்படுகின்றனர்.பெற்றோர்கள் பணம் பணம் என்று ஓடுவதில் எந்தப் பிரயோசனமுமில்லை .கஞ்சியோ கூழோ சேர்ந்து அன்போடு நுகர்ந்து வாழும் வாழ்க்கை எங்கே இருக்கிறது ?ஆடம்பரத்துக்கும் நகைகளை வாங்கிக் குவிப்பதுவும் ஒரு முறை கட்டிய சாரியை மறுமுறை கட்டுவது கௌரவ இழப்பு என்று கருதும் பெண்களும் ,கணவன் மனைவி சதா சண்டை பிடிப்பதும் பிள்ளைகளை பாதிக்கின்றன .எத்தனயோ நம் இளையோர்கள் திருமண வாழ்க்கைக்கு அஞ்சுகிறார்கள் தெரியுமா ?
இதெல்லாம் விரக்தி தான் .காற்றுள்ள பொழுதே தூற்றிக் கொள்ளவேண்டும் .
அவர்களின் உணர்வுகளுக்கு வடிகால் அமைக்க ஆற்றுப்படுத்த பெற்றோர்கள் தவறுகிறார்கள் .இப்பொழுதும் வரட்டுக் கௌரவங்கள் சாதிகள் ,பணம் பணம் ??????
கண்டது ஒன்றுமேயில்லை .
பெற்றோர் ஒரு குழந்தைக்கு அத்தியாவசியமாக தர வேண்டியது தன்னம்பிக்கை, பாசம், சுதந்திரம், பிரச்சினையை எதிர்கொள்ளும் தைரியம், இருப்பதை வைத்து மகிழ்ச்சியாக வாழ கற்றுக்கொடுத்தல், நன்நடத்தை மற்றும் சமூக அக்கறைபற்றிப் புரிய வைக்கவேண்டும்
சீரியலோ அல்லது whatsup viber போன்றவை
வற்றை கூடியவரை தவிர்த்து பிள்ளைகளைக் கன ம் பண்ணுங்கள் .அவர்களை நட்பு ரீதியாக அணுகுங்கள் .
குழந்தைகளின்மனோ தேவையை உணர்ந்து செயல்பட்டால், குழந்தைகள் யாரிடமும் எந்த ஒரு விஷயத்தையும் மறைக்கமாட்டார்கள்.
சிறுவர்களே !!!!!!!!!!
பெற்றோர், ஆசிரியர், உறவினர் என்று நாம் பேசினாலும், தன் வாழ்க்கையை நன்றாக அமைத்துக்கொள்ள வேண்டியது அவரவர் கடமை. நம் செயல் மூலம் வாழ்க்கை சொல்லித்தரும் பாடத்தைவிட, வேறு யாராலும் நன்றாக கற்றுத் தர முடியாது. ஆனால், வாழ்க்கை பாடங்கள் மூலம் நாம் கற்றுக்கொண்டு சாதிக்கிறோமா இல்லை அதை சகித்துக்கொள்ள முடியாமல், தவறான செயலில் இறங்குகிறோமா என்பதை நாம்தான் முடிவு செய்ய வேண்டும்.
துயரமான நேரங்களில் வாழ்க்கையை நோக்கி சவால் விடுங்கள், வென்றால் ஒரு முடிவு, தோற்றால் ஒரு வாய்ப்பு. மாற்றம் ஒன்றே மாறாதது என்பார்கள், நடக்கவில்லை என்றால் மாறும்வரை போராடு. போராட்ட குணம் மட்டுமே நாம் அனைவருக்கும் நம் முன்னோர் விட்டுச்சென்ற ஒரே சொத்து.
பெற்றோர்களே ஏணிப்படிகளாக இருங்கள் .உலக நாடகத்திற்கு நீங்களும் பகட்டுக்கு அடிமையாகாதீர்கள் .
மனம்போல வாழ்வு’ என்பது நமது முன்னோர் கண்ட பொன்மொழி. மனம் நல்லதை நினைத்தால் நல்லது நடக்கும், தீயது நினைத்தால் தீயது நடக்கும். நினைத்தல் என்பது சூழலின் தூண்டல்களால் அமைகின்றன. தூண்டல்கள் அகத்தூண்டல், புறத்தூண்டல் என இரண்டு வகைப்படும்.
“பொறிபுலன்களால் தூண்டப்பட்டு நாடிநரம்புகளின்வழி மூளைக்குச்செய்திகள் அனுப்பப்படுகின்றன. அதன்பின் மூளையோடு தொடர்புடைய மனதில் எண்ணங்கள் தோன்றுகின்றன. எண்ணங்கள் வலுப்பெறும் நிலையில் செயல்களாக வடிவெடுக்கின்றன. எண்ணங்களின் கூட்டுத்தொகுப்பு ஆசையாகவும், உழைப்பாகவும் மாறி மேதை – தலைவன் என்று ஒளிருவதை உலகில் காண்கிறோம், அத்தகையோரால் உலக சரித்திரமே எழுதப்படுகிறது.
ஆம்! எண்ணங்கள் உலகை ஆள்கின்றன”
மனிதன், மாற்றம் என்றபெயரில் ஐம்பூதங்களையும் ஆட்டிப்படைக்க ஆசைப்படுகிறான். முடிந்தவரை வெற்றியும் அடைந்துள்ளான். ஆனால் அவனது ஆன்மாவிற்குள் ஒன்றி அவனை ஆட்டிப்படைக்கும் மனத்தைமட்டும் அவனால் கண்டறிந்து அடக்கியாள முடியவில்லை. தவிக்கிறான், துடிக்கிறான், அலைகிறான், முடிவில் நோய்வாய்ப்பட்டுச் செத்துமடிகிறான். எந்தவொரு உயிருக்கும் கிடைக்காத இந்த அற்புதமான மனத்தோடுகூடிய உடலை வீணே பாழ்படுத்துகிறான்.அல்லது தற்கொலைக்கு ஆளாகிறான் .
பெற்றோர்களே !!!!
உடலில் தோன்றும் நோய்களைவிட மனதில் தோன்றும் நோய்களே மிகவும் ஆபத்தானவை. காரணம், உடலின் ஓர் உறுப்பில் நோய்வந்தால் அந்த உறுப்புமட்டும் பாதிப்படையும். உதாரணத்திற்கு, கண்ணில் ஏதேனும் குறையேற்பட்டால் கண்ணில் மட்டுமே வலிவரும். ஆனால் மனதில் ஏதேனும் குறையேற்பட்டால் அது உடலின் பலபகுதிகளிலும் பாதிப்பை ஏற்படுத்தும். எனவே, மனதில் ஏற்படும் குறைகள் உடனடியாகக் கவனிக்கப்படவேண்டிய ஒன்று என்பதை உணரவேண்டும்.
தனிமையில் தானாகப்பேசிக்கொள்வது, சிலநேரங்களில் காரணம் தெரியாமல் வருத்தப்படுவது, எதற்கெடுத்தாலும் கோபப்படுவது, மற்றவர்களை அடிமைப்படுத்தி ஆள நினைப்பது, பிறரைத்துன்புறுத்தித் தான் இன்புறுவது, அடிக்கடி அதீதக்கற்பனை செய்து தன்னையும் தன்னைச்சார்ந்தவர்களையும் வருத்திக்கொள்வது, சமூகவிரோதச் செயல்களில் ஈடுபடுவது, தாழ்வுமனப்பான்மை கொள்வது என்பனபோன்ற நடத்தைகளே மனநோயின் அறிகுறிகளாகும்.
மனம் எப்போதும் பள்ளத்தை நோக்கிப்பாய்ந்தோடும் நீரைப்போல கீழானவற்றை நோக்கியே செல்லும் தன்மை உடையது. அதற்குக்காரணம் உணர்ச்சியின் துணையோடு செல்லவிரும்புவதே. அப்படிப்பட்ட மனத்தை அறிவின்வழி செலுத்த வேண்டும். நம் மனதில் அறிவிற்கும் உணர்ச்சிக்கும் இடையே பெரும்போராட்டம் நடந்துகொண்டுதான் இருக்கிறது. இவற்றையே சூழ்நிலை என்கிறோம். மனம் அறிவின் துணைகொண்டு துலங்கலை ஏற்படுத்தும்போது நன்மையும், உணர்ச்சியின் துணைகொண்டு துலங்களை ஏற்படுத்தும்போது தீமையும் ஏற்படுகின்றன.
சூழ்நிலையின் அடிப்படையில் ஏற்படும் தாக்கங்களே வலிமை படைத்தனவாக அமைகின்றன.
மனித வாழ்க்கையில் எந்தவொரு நாகரிகம் பண்பாடானாலும் ஏதாவதொரு பயன் கருதித்தான் தோன்றியிருக்க முடியும். நட்பும் அப்படித்தான். உதாரணத்திற்கு ஒருவர் தான்சந்திக்கும் மற்றொருவரோடு எதனால் நட்புகொள்கிறார்? ஏதோ ஒருவிதத்திலாவது தனது கருத்தோடு மற்றவருடைய கருத்து ஒன்றி இருப்பதால்தானே? முற்றிலும் வேறுபட்ட கருத்துடையவரோடு எவராலும் நட்புகொள்ளமுடியுமா? எனவே நட்புகொள்வதற்கும் காரணங்கள் உண்டு. அவை பயன்கருதியதாக மட்டுமே அமைந்துவிடக்கூடாது; அதையும் கடந்து அன்பின்வழிப்படவேண்டும் .கூடா நட்பை தவிர்க்க கற்றுகொடுக்க வேண்டும் .
உண்டோம் படுத்தோம் என்பது வாழ்க்கை யல்ல .
ஒருவன் சிறுவயதில் தீய எண்ணங்கொண்டவனோடு நட்புகொண்டுவிட்டு, காலம், இடம் போன்ற சூழல்களால் பிரிந்துவிட்டான் என்று வைத்துக்கொள்வோம். பல ஆண்டுகள் கழித்து அவனைச் சந்திக்க வாய்ப்புகிடைத்தாலோ அல்லது முன்பு பழகியவன் கைபேசியின் தொடர்பெண் கிடைத்தாலோ தீயவன் தனது கீழ்த்தரமான சிந்தனையினால் அவனிடமிருந்து ஏதேனும் நன்மைபெறத்தீமை செய்வான். அச்செயல் மீண்டும் மீண்டும் நிகழும்போது பழகியவன் மனதளவில் பாதிப்படைவான். அதனால் நோய்கள் உருவாக, வேறுவழியின்றித் தனது வாழ்கையை முடித்துக்கொள்ளும் நிலைக்குக்கூடப் போய்விடுவான். இவுண்மையை, இன்றைய நாளில் வெளியாகும் ஊடகச்செய்திகள்பல உறுதிப்படுத்துகின்றன.
விருந்துகளில் நண்பர்களோடு மகிழ்ச்சியை அனுபவிப்பதற்காக மற்றும் திரைப்படங்களில் தனக்குப்பிடித்த நடிகர்கள் செய்வதுபோல் தானும் செய்யவேண்டும் என்பதற்காக அழிந்து கொண்டு இருக்கும் சிறார்களின் மனதை பண்படுத்த ஆசிரியர்கள் பெற்றோர்கள் தவறி விடுகிறார்கள் .காமம் கொண்ட பெற்றோர்கள் ஆசிரியர்களே ஆதிக் கமாக இருக்கிறார்கள்
‘இல்லறம்’ மனிதன் பக்குவம் அடைவதற்கான மிகச்சிறந்த பல்கலைக்கழகம். திருமணம், இரண்டு ஆன்மாக்களின் வாழ்க்கை ஒப்பந்தம். இதில் இணையும் இருவரும் ஒருவருக்கொருவர் சமமானவர்கள். இருவருக்குமிடையே எந்தவொரு ஒளிவுமறைவும் இருத்தல்கூடாது. இதனைக் கருத்திற்கொண்டுதான்
அம்மாவும் அப்பாவும் வாழப் பழகிக் கொள்ளவேண்டும் .
வாழ்ந்து கொண்டிருக்கிறோம்...
தற்கொலை பேஷன் ஆகிவிட்ட காலத்தில்..."கடன் தாங்கவில்லை", என விவசாயி மாண்டான்...
மார்க் இல்ல", என மாணவன் மாண்டான்...
"வேல இல்ல", என பட்டதாரி மாண்டான் ...
"விளையாட்டு சொன்னது", என்னை விடலை
என்று பை யன் மாண்டான்...
காலக்கொடுமை...
செய்வன தெரியவில்லை ...
யோசித்துப் பார் மானிடா...
இறந்த ஒவ்வொரு உயிரிலும் ,
உந்தன் சமுதாய அலட்சியம் இருக்கும் ...
அதிகார வர்க்க அராஜகம் இருக்கும்...
பண முதலைகளின் தீராப்பசி இருக்கும்...
பெற்றோர்களின் கண்மூடித்தனம் கூட இருக்கும்
ஆறுதலுக்காக வாவது பிள்ளைகள மீது அன்பை காட்டத் தவறாதீர்கள் .
சிறுவர்களே வாழ்க்கை வாழ்வதற்கு மட்டுமல்ல
நீங்கள் சாதிக்கப் பிறந்தவர்கள் .
உங்களுக்காக
மாமா
கருத்துகள்
கருத்துரையிடுக