சாம்பிராணி
இது ஒரு வகைப் பிசின்
^^^^^^^^^^^^^^^^^^^
அகில் நறுமணப் பொருள்களின் தயாரிப்புக்காகப் பெறப்படும் அகிற்கட்டைகளின் (Agarwood) முதன்மையான வளப்பொருள் ஆகும்
இதன் தண்டுப் பகுதியின் சுரப்பான அகிற் பிசின் நறுமணமானது ஆகும்
உண்மையில் அகிற் பிசின் சுரக்கப்படுவது கரிய பூஞ்சண வகையொன்று இம்மரங்களைத் தொற்றுகையில் அதனை எதிர்ப்பதற்கான விளை பொருளாகவேயாகும்.
எனவே சாம்பிராணிப் புகை ஒரு வைரஸ் கொல்லி
இதற்காகவே மாலை வேளைகளில் என் அன்பின் அப்பா வைத்தியலிங்க உபாத்தியாயர் சாம்பிராணிப் புகை போடுவார்
இப் புகையை நாம் சுவாசிக்கும் பொழுது வைரஸ் நோய்கள் அணுகாது
பொதுவாகவே பெண்கள் குளித்தவுடன் பீனிச நோய் ,அல்லது நீ ர் கோர்வையில் இருந்து பாது காக்க தலையில் உள்ள சிகைக்கு இந்தப் புகையை போடுவார்கள்
காழ்வை என்னும் சொல் அகில்-கட்டையைக் குறிக்கும்
அகில் என்பது சாம்பிராணி மரம் ஆகும்
அகில் என்பது சந்தனக் கட்டைக்கு அடுத்து மருத்துவ உலகிலும், மக்கள் மத்தியிலும் செல்வாக்குப் பெற்ற ஒன்றாகும். பலவித நோய்களைக் குணப்படுத்தும் இயல்பு கொண்ட இது மிகவும் மலிவாகப் பெறக்கூடிய ஒன்றாகும்
ஒற்றைத் தலைவலி, மண்டையிடி, சில வகைக் காய்ச்சல், பொதுவான வாத நோய்கள், படை மற்றும் சரும நோய்கள், வாந்தி, அருசி ஆகிய குறைபாடுகளை அகற்றும் ஆற்றல் பெற்றதாகத் திகழ்கிறது அகில். சரியானபடி மருத்துவப் பக்குவம் செய்து சாப்பிட்டால் நரை, திரை போன்ற முதுமைக் கால சருமக் குறைபாடுகளையும் அகற்றி சருமத்தை மிருதுவாகவும், பளபளப்பாகவும் வைத்திருக்க உதவும். உடல் அயர்வினை உடனே போக்கும் இயல்பும் இதற்கு உண்டு.
அகில் கட்டையை சிறு சிறு துண்டுகளாக நறுக்கி 300 கிராம் அளவுக்கு மண் சட்டியில் போட்டு 30 மில்லி தண்ணீர் விட்டு நன்கு கொதிக்க வைக்க வேண்டும். நீர் பாதியாகச் சுண்டக் காய்ந்ததும் வடிகட்டி ஆற வைத்து பத்திரப்படுத்தி வைத்துக் கொள்ள வேண்டும். வேளைக்கு ஒரு அவுண்ஸ் வீதம் காலை மாலை குடித்துவர உஷ்ணம் தொடர்பான வியாதிகளும், பித்தம் தொடர்பான பிணிகளும் விலகி நல்ல குணம் தெரியும். குறிப்பாக பித்தம் தொடர்பாக ஏற்படும் காய்ச்சலுக்கு இது நல்ல மருந்தாகப் பயன்படுகிறது.
அகில் கட்டையை நன்றாகக் கொளுத்தி விட வேண்டும். சிறிது எரிந்த பின்னர் நெருப்பை ஊதி அணைத்துவிட்டு அதிலிருந்து வரும் புகையை மட்டும் மூக்கு, வாய் வழியாக உள்ளுக்கு இழுத்தால் கல்லீரல் தொடர்பான வியாதிகள் குணமாகிவிடும். வாந்தி ஏற்படும் பொழுது இவ்வாறு புகை பிடித்தால் வாந்தி நின்றுவிடும். சுவாசகோசத்தில் ஏற்படக் கூடிய அழற்சியும் சமன்படும். உடலில் ரணங்கள் ஏற்பட்டிருந்தால் அதன்மீது அகில் புகைபடுமாறு செய்தால் ரணம் வெகு விரைவில் குணமாகிவிடும்.
தொடர் இருமலால் வரும் புண்ணை சுகப்படுத்த தினமும் இப்புகயை சுவாசிக்கவும்
இதனால் தான் கோவிலுக்குப் போக சொல்வார்கள் .
அகில் கட்டியை பசுவின் பால்விட்டு நன்றாக அரைக்க வேண்டும். சந்தனம் அரைப்பது போல அரைக்க வேண்டும். அரைத்த விழுதை உடல் சருமத்தில் தொடர்ந்து பூசி வந்தால் சருமத்தின் சுருக்கம் அகன்றுவிடும். ஊளைச்சதை எனப்படும், அதிக சதை போட்ட உடலைப் பெற்றவர்கள் இந்த அகில் கட்டை விழுதை தொடர்ந்து உடலில் பூசி வந்தால் சதை குறைந்து இறுகி உடல் நல்ல கட்டமைப்பாகக் காட்சியளிக்கும்.
சில பிராமணர்கள் கோவில் தொண்டு செய்பவர்களின் உடல் ஆரோக்கியமாகக் காணப்படுவது
இதனாலே தான்
அகில் கட்டியைக் கொண்டு ஒரு தைலம் தயாரிக்கலாம். இந்தத் தைலம் மூக்கு, தொண்டை, காது போன்ற உறுப்புக்களில் உட்புறத்தில் ஏற்படக் கூடிய பல பிணிகளை அகற்றும். தலைவலியையும் குணமாக்கும்.
முன்பு ஒரு நாள் என்பு உடைந்து போன என் மைத்துனிக்கு வைத்தியர்கள் நடப்பது சிலவேளை கஷ்டம் என்று கூறி விட்டார்கள் .எனது ஊரில் கை மருந்துக்கள் அத்துப்படியாக இருக்கும் இதனால் .மனத் தைரியத்துடன் நோவுக்கு காச்சும் எண்ணெயுடன் அகில் எண் எண்ணெய்யையும் காச்சி கலந்து கொடுத்தேன் .
இப்பொழுது கம்பு மாதிரி திரிகிறார் சந்தோசமான விடயம்
அகில் தைலம் எப்படித் தயாரிப்பது என்று கேட்பீர்கள்
அகில் கட்டையைச் சிறி சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ள வேண்டும். இவ்வாறு நறுக்கப் பட்ட துண்டுகளை 300 கிராம் அளவு சேகரித்து 2 லிட்டர் தண்ணீரில் போட்டுக் காய்ச்ச வேண்டும். தண்ணீர் ஒரு லிட்டராக சுண்டக் காய்ந்த பின்பு இறக்கி வடிகட்டி ஆற வைத்துக் கொள்ள வேண்டும். அந்த நீருடன் ஒரு லிட்டர் பசும்பால், ஒரு லிட்டர் நல்லெண்ணெய் கூட்டி அடுப்பிலேற்றிக் காய்ச்ச வேண்டும். அடுப்பிலிருக்கும் சாறு சுண்டும் நேரம் அதிமதுரம் 30 கிராம், தான்றிக்காய் 30 கிராம் தூள் போட்டுப் பதமாகக் காய்ச்சி வடிகட்டி வைத்துக் கொள்ள வேண்டும். இந்த தைலத்தை பாதிக்கப்பட்ட உறுக்குகளின் உள்ளே விட்டு வரவேண்டும். மேற்பூச்சாகவும் தடவலாம். எண்ணெய்க் குளியல் போலவும் செய்து வரலாம்.
அகில் க் கட்டையினால் மூக்கடைப்பு, தலைகுத்து, வாதம், நமைப்புடைகள், சிற்சில சுரம், வாந்தி, அருசி, அயர்வு, ஆகிய இவைகள் நீங்கும்
இந்த தைலத்தை தலைக்கு தேய்த்து வந்தால் உடல் சூடு தணியும். மூக்கடைப்பு, தலையில் நீரேற்றம், ஒற்றைத் தலைவலி போன்றவை நீங்கும்.
· அடிக்கடி சளி பிடிப்பதைத் தடுக்கும்.
· தலைமுடி நன்கு வளரும். பொடுகு, முடி உதிர்தல், புழுவெட்டு நீங்கும்.
· அகில் எண்ணெயை சருமம் முழுவதும் பூசிக் கொண்டால் சரும நோய்கள் உண்டாகாது.
· அடிபட்ட வீக்கம், இரத்தக்கட்டு போன்றவற்றிற்கு அகில் எண்ணெயை பூசினால் வீக்கம் குறையும். வலி நீங்கும்.
· சரும எரிச்சல், புண், அரிப்பு, சொறி, சிரங்கு போன்றவைற்றைப் போக்கும்.
· இதன் நறுமணத்தை நுகர்ந்தால் வாந்தி, மயக்கம் நீங்கும்.
· கை, கால் மூட்டுகளில் வலி, இடுப்பு வலி, கழுத்து வலி போன்றவற்றிற்கு சிறந்த நிவாரணம் அளிக்கும்.
· அகில் கட்டையை நீர்விட்டு மை போல் நன்கு அரைத்து உடல் எங்கும் பூசி வந்தால் தளர்ந்த தசைகள் இறுகி வலுப்பெறும். உடல் பொலிவுபெறும்.
· அகில் கட்டையை நெருப்பில் காட்டி வரும் புகையை நுகர்ந்தால் சுரக்காய்ச்சல் நீங்கும். வாந்தி சுவையின்மையைப் போக்கும்.
· இதன் நறுமணம் மனதிற்கு நல்ல அமைதியையும் சாந்தத்தையும் கொடுக்கும்.



கருத்துகள்
கருத்துரையிடுக