வைரத்தின் ஆங்கிலப் பெயர் Admas என்பதாகும். இந்த வார்த்தை மருவி, Diamond என்று வழக்கத்தில் ஆகிவிட்டது.
பூமிக்கு அடியில் புதைந்துள்ள இறுகிப்போன நிலக்கரியில் இருந்துதான் இந்த அரிய வகை வைரம் நமக்கு கிடைக்கிறது.
ஆனால் இது எந்த ஆழத்திலிருந்து கிடைக்கிறது என்பது எத்தனை பேருக்கு தெரியும். அனைவரும் இது பூமிக்கு அடியில் கிடைக்கும் என்று கருதியிருப்பார்கள்.
ஆனால் பூமிக்கு அடியில் 90 மைல் தொலைவில்தான் இந்த வைரம் இருக்கும். 2 மைல் தொலைவில் வெறும் நிலக்கரி மட்டும்தான் கிடைக்கும்.
வைரம் (Diamond) என்பது படிக நிலையில் உள்ள ஒரு கரிமம் ஆகும். பட்டைத் தீட்டிய வைரம் ஒளியை அழகோங்கச் சிதறச் செய்வதால் நகையணிகள், ஆபரணங்களில் பயன்படுத்தப்படுகின்றது.
வைரம் நவரத்தினங்களுள் ஒன்றாகும். இயற்கையில் காணப்படும் யாவற்றினும் மிகவயிரம் (வயிரம்=உறுதி) நிறைந்த பொருள் இதுவாகும். ஒரு பொருளின் உறுதி அல்லது திண்மையை அளக்கும் அளவீட்டு முறையாகிய மோசின் திண்மை அளவுகோல் என்ற முறையின்படி வயிரத்தின் திண்மை எண் 10 ஆகும்.
இவ்வுறுதியின் அடிப்படையிலேயே வைரத்திற்குத் தமிழ்ப் பெயரும் அமைந்துள்ளது. வயிரம் என்பதில் இருந்து வைரம் என்னும் சொல் உண்டானது. இதன் மிகுகடினத்தன்மை காரணமாகத் தொழிலகங்களில் அறுத்தல் போன்ற பணிகளுக்குப் பயன்படுத்தப்படுகின்றது. கண்ணாடி போன்ற பொருள்களை வேண்டிய அளவு வெட்ட வைரம் பதித்த கீறும் கருவி பரவலாகப் பயன்படுகின்றது.
இவைகள்தாம் பெரும்பாலும் தொழிலகக் கருவிகளில் பயன்படுகின்றன. ஆபிரிக்கக் கண்டத்தின் மத்திய மற்றும் தெற்குப் பகுதிகளிலேயே வைரம் பெருமளவிற் காணப்படுகிறது. கனடா, இந்தியா, பிரேசில், ரஷ்யா, ஆஸ்திரேலியா போன்ற நாடுகளிலும் வைரம் கிடைக்கிறது. ஆண்டுதோறும்உலகில் ஏறத்தாழ 130 மில்லியன் காரட் (26,000 கிலோ கிராம்) வைரம் அகழ்ந்தெடுக்கப்படுகிறது.
பழங்காலத்தில் வைரம் இந்தியாவிலிருந்துதான் கிடைத்ததாகவும். தற்போது உலகில் 96% வைரம், தென்னாப்பிரிக்காவிலிருந்து கிடைக்கிறது. இப்போது இந்தியாவில், கோதாவரிக்கருகிலுள்ள சம்பல்பூரிலும், நிஜாமிலும், பல்லாரியிலும் வைரங்கள் கிடைக்கின்றன. இவை சுரங்கங்களிலல்லாமல் ஆற்றோரங்களிலும் ஆற்று மணலிலும் கிடைக்கின்றன. ஆற்று வைரங்களே சிறந்தவை ஆகும். சுரங்கங்களில் ஒருவகை நீலநிற மண்ணில் வைரம் காணப்படுகிறது. இந்த மண் மேலே கொண்டுவரப் பட்டுக் காற்றிலும் வெயிலிலும் உலர்ந்து தூளாகிறது.கரியும் மணலும் சேர்ந்து சிலிக்கன் கார்பைடைகளில் வைரம் காணப்படுகிறது. வைரங்கள் வெண்மையாக நிறமற்றுத்தான் உள்ளன. வைரங்களின் மூலம் எக்ஸ்-கதிர் ஒளி செல்வதில்லை.
வைரங்கள் முதலில் இந்தியாவில் கண்டறிந்து தோண்டி எடுக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது. வைரக்கல்லின் வண்டல் படிவு பென்னாறு, கிருஷ்ணா மற்றும் கோதாவரி ஆற்றுப் படுகைகளில் பல நூற்றாண்டுகளுக்கு முன்பு (குறைந்தது 3,000 ஆண்டுகள்) இருந்ததாக அறியப்படுகிறது
பூமியின் மேற்பரப்பில் இருந்து 150-200 கிலோ மீட்டர் ஆழத்தில் 1200 முதல் 1800 டிகிரி சென்டி கிரேடு வெப்பம் தொடர்ச்சியாக இருந்து கொண்டிருக்கும் போது சுத்தமான கார்பன் மூலக்கூறுகளால் வைரம் உருவாகிறது.
நாம் உபயோகிக்கும் வைரங்களில் மிகவும் வயது குறைந்த வைரம் 30 மில்லியன் ஆண்டுகளுக்கு முன்பு உருவானதாக 1977-ல் மேற்கொண்ட ஒரு ஆராய்ச்சி கூறுகிறது
இந்தியாவிற்குப் பிறகு, 1870 லிருந்து தென் ஆப்பிரிக்காவில் வைரங்கள் கண்டெடுக்கப்ப டுகிறது. இங்கு, எடை அளவுகள் நிர்ணயிக்கப் படாத காலகட்டத்தில் காரப் விதை (Carob Seeds) என்ற ஒருவித விதைகளையே எடையாக பயன்படுத்தினர். ஏனென்றால் இந்த விதைகள் அனைத்தும் அநேகமாக ஒரே அளவு எடை உடையவை.இந்த காரப் என்ற பெயர் மருவி, காலப்போக்கில் காரட் என்றாகி விட்டது.
ஒவ்வொரு காரப் விதையும் 200 மில்லி கிராம் எடை கொண்டது. ஆகவே, ஒரு காரட் வைரத்தின் எடை 200 மில்லி கிராம். அதாவது 5 காரட் 1 கிராம் எடை. ஆகும்
ஒரு காரட் என்பது 100 பாகங்களாக பிரிக்கப்பட்டு, ஒவ்வொரு பாகமும் 1 சென்ட் எனப்படும். ஒரு காரட் வைரம் 100 சென்ட்டுகள்.
உம் : 10 சென்ட் கற்கள் 10 எண்ணிக்கை 1 காரட்.
தென் ஆப்பிரிக்காவில் ஜாகர் பவுண்டன் (Jagers Fontein) என்ற இடத்தில் ஒரு வைரச்சுரங்கம் இருந்தது. அங்கிருந்து எடுக்கப்பட்ட வைரங்கள் வெண்மையோடு சேர்ந்த ஒரு நீலநிற ஒளியைக் கொடுக்கும். அதனால் தான் அந்த வைரங்களுக்கு Blue Jager என்று பெயர். ஆனால் இப்பொழுது இந்த சுரங்கம் உபயோகத்தில் இல்லை.
இந்த இடத்தில் ஒன்றைக் குறிப்பிடுகிறேன் .வெள்ளைக் காரன் சுரண்டும் மட்டும் சுரண்டி விட்டு விட்டு
பணக்காரன் ஆகி விடுவான்
பாவம் வறிய நாடுகள்
ஒரு காரட் வைரம் தோண்டி எடுக்க வேண்டும் என்றால் குறைந்த பட்சம் 350 டன் (35/40 லாரி லோடு) பூமியை தோண்டி எடுக்க வேண்டும். அதிலும் நிச்சயமாய் கிடைக்கும் என்று சொல்ல முடியாது. இதற்காகும் செலவு, பட்டை தீட்டும் போது ஏற்படும் சேதம், சந்தைப்படுத்துதல் (மார்க்கெட்டிங்), இதில் செய்யும் முதலீடு, தரம் பிரித்தல் மற்றும் பிற செலவுகள் சேரும் போது விலை கூடுகிறது.
இந்தியாவில் மத்தியபிரதேசத்தில் பன்னா (Panna) என்னும் இடத்தில் உள்ள வைர சுரங்கத்திலிருந்து தினமும் வைரம் தோண்டி எடுக்கிறார்கள். இங்கிருந்து இன்றும் நல்ல தரமான வைரங்கள் கிடைக்கிறது. ஆனால் ஆப்பிரிக்காவை ஒப்பிட்டால், மிகவும் குறைந்த அளவே இங்கு கிடைக்கிறது.
அடிப்படையில் வைரம், நன்றாக ஒருங்கிணைந்த கார்பன் மூலக்கூறுகளால் ஆனது. ஒரு வைரம் உருவாகும் போது, சில சமயம் இயற்கையில் முழுமையான கட்டமைப்பு இல்லாத கார்பன் மூலக்கூறுகளின் அணுக்கள் வைரத்தின் உள்புகுந்து இணைந்து அதனோடு வளர்ந்து விடும். இவை கறுப்பு நிறம் கொண்டவை. இதற்கு மற்றொரு வேதியியல் பெயர் கிராபைட்.
வைரம் பட்டை தீட்டியதும் இது உள்ளே தனியாக கறுப்பாக காணப்படும். இதற்கு ஆங்கிலத்தில் Black Pique / Black Spot என்பார்கள். நம் நாட்டில் இதற்கு தோஷம் என்று பெயர் வைத்துவிட்டார்கள்.
வெள்ளை (நிறமற்றது), மஞ்சள், பிரவுன், கிரே பச்சை, ஆரஞ்சு, பிங்க், நீலம், வெளிர்பச்சை, வயலட் கலர்களில் கிடைக்கிறது. முழுக்கறுப்பிலும் காணப்படுகிறது.
கோல்கொண்டாவில் கிடைத்த கோகினூர் வைரம் தான் மிகப் பெரியது. இதன் எடை 105.80 காரட்கள். இன்று இங்கிலாந்தில் Tower of London என்னும் இடத்தில் அரச பரம்பரை நகைகள் ஒரு மகுடத்தில் சூட்டப்பட்டு காட்சியளிக்கிறது
வைரங்கள் பண்டைய இந்தியாவில் மதச் சின்னமாகப் பயன்படுத்தியதை அடுத்து ராசிக்கல்லாகக் கருதப்படுகிறது. 1772 ஆம் ஆண்டில், அந்தோனி லெவாய்சர் ஆக்சிஜன் உள்ள சூழலில் உள்ள ஒரு வைரக் கல்லின் மீது சூரியக் கதிர்களை ஒரு லென்ஸ் பயன்படுத்தி விழச் செய்து, கார்பன் டை ஆக்சைடு மட்டுமே உருவாவதைக் காட்டி வைரமும் ஒரு வகை கார்பன் தான் என்று நிரூபித்தார். பின்னர் 1797 இல், ஸ்மித்ஸன் டெனன்ட் மீண்டும் அந்த சோதனையை விரிவுபடுத்தினார். வைரம் மற்றும் கிராஃபைட்டை எரியும் போது அவை ஒரே அளவு வாயு வெளியிடும் என்றதை விளக்கி இந்தப் பொருட்களின் இரசாயன தன்மையை விளக்கினார்
வைரங்களின் மிகப் பிரபலமான பயன்பாடு அலங்காரம். பழங்காலத்தில் இருந்தே இவ்வாறு பயன்படுத்தப்பட்டு வருகிறது. வெள்ளை ஒளியைச் சிதறல் அடைய செய்து நிறமாலை வண்ணங்களை வெளிப்படுத்துவது வைரத்தின் முதன்மைப் பண்பாகும்.
முதன் முதலில் இந்தியாவில் தான் வைரங்கள் கண்டெடுக்கப்பட்டன. ஆந்திராவில் உள்ள கோல்கொண்டா என்னுமிடத்திற்கு அருகில் உள்ள வஜ்ரகரூர் என்னும் இடத்தில் தான் வைரங்கள் கிடைத்தது. இங்கிருந்து தான் வைரம், அந்தக் காலத்தில் கி.மு.எட்டாம் நூற்றாண்டில் அதாவது 2800 ஆண்டுகளுக்கு முன்பே இந்தியாவிலிருந்து கலிங்க நாடு (இன்றைய ஒரிஸ்ஸா) வழியாக பாரசீக வளைகுடா, அலெக்சாண்டிரியா, ரோம், அரேபிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது.
வைரங்களை பட்டை தீட்டும் முறையையும் இந்தியர்கள் தான் முதன் முதலில் கண்டுபிடித்தனர். இந்தியாவிலிருந்து தான் "வைரத்தை வைரத்தால் தான் அறுக்க முடியும்'' என்ற பழமொழியும் வந்தது.
வைரம் என்பது கரிதான் என்றால் சிலர் நம்பமாட்டார்கள். ஆனால் அது கரியேதான். உறுதியான, சுத்தமான, ஒளி ஊடுருவக்கூடிய கார்பன்தான் வைரம் எனப்படும். ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக பூமிக்கடியில் அமுங்கி பல்வேறு உயிரியல், ரசாயன மாற்றங்களால் கெட்டியாகிய கரி என்ற கார்பன் தான் வைரம் ஆகிறது.
வைரத்தின் ஆங்கிலப் பதமான ‘டைமண்ட்’ கிரேக்க வார்த்தையான ‘அடாமஸ்’ என்ற சொல்லிலிருந்து தோன்றியது. இதன் பொருள் ‘வெல்ல முடியாதது’.
சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்பே மனிதர்கள் வைரத்தின் மதிப்பை அறிந்திருந்ததால் கிரேக்கர், ரோமானியர், இந்தியர் இதனை வெகுவாக மதித்தனர்.
வைரம் என்பது அன்பு, அழகு, காதல், தெய்வீகம் இவற்றின் குறியீடாக இருந்தது. அதிலும் அரசர்களே இதை உரிமையாக வைத்திருத்தல் என்ற முறை இருந்தது.
1868-ல் தென்ஆப்பிரிக்காவிலுள்ள ஆரஞ்சு நதிக்கரையில் ஒரு ஆடு மேய்க்கும் சிறுவன் வைரம் ஒன்றை கண்டெடுத்தான். அந்த இடம்தான் இன்று புகழ்பெற்ற ‘கிம்பர்லி’ சுரங்கமாக விளங்குகிறது. ‘கிம்பர்லி’ என்ற ஆங்கிலேயரின் பெயராலேயே இப்பெயர் பெற்றது.
வைரம் ‘காரட்’ என்ற அலகில் அளவிடப்படுகிறது. ஒரு காரட் என்பது 200 மி.லி. கிராம்.
இன்றைக்கு வைர மார்க்கெட்டில் முதலிடம் வகிப்பது ‘தென் ஆப்பிரிக்கா’.
ஒரு காரட் வைரத்தை பூமியிலிருந்து எடுக்க 250 டன் நிலத்தை நாம் தோண்ட வேண்டும்.
முதல் தரமான வைரம் நிறமற்றதாக இருக்கும். என்றாலும் ஒவ்வொரு இடத்தில் கிடைக்கும் வைரங்களும் நிறங்களில் சற்று மாறுபாடாக இருக்கும்.
வைரத்தில் ஒளி ஊடுருவும் தன்மை தெளிவாக இருந்து, ஒளி பிரதிபலிப்பும் சரியாக இருந்தால் மதிப்பு கூடும்.
பட்டை தீட்டப்படுவதை பொறுத்தே வைரம் மதிப்பு பெறுகிறது. 54 பட்டைகளை சரியான கோணத்தில் தீட்டப்பட்ட வைரமே அதிக மதிப்பு வாய்ந்தது.
வைரம் எந்த அளவிற்கு நிறமற்று உள்ளதோ அந்த அளவிற்கு தரம் உயர்ந்ததாக கருதப்படுகிறது.
வைரம் பல்வேறு வடிவங்களில் பட்டை தீட்டப்படுகிறது. பட்டை தீட்டினால் தான் அது வைரக்கல்.
பிரபலமான வடிவம் வட்டம். மேலும் ஓவல் வடிவம், இருபுறமும் கூர்மையாக காணப்படும் மார்க்யூஸ் வடிவம், இதய வடிவம், செவ்வக வடிவம், பியர் வடிவம், சதுர வடிவம் என பல்வேறு வடிவங்களில் பட்டை தீட்டப்படுகிறது.
பட்டை தீட்டும் விதங்கள் - பாயின்ட் கட், டேபிள் கட், தின் கட், மஜரின் கட் என பல்வேறு விதங்களில் உள்ளன.
வெறும் வைரத்தை எளிதாக எடை போடலாம். ஆனால் நகைகளாக மாறிய பின்பு எடையிட தனிப்பட்ட எடைக் கருவியும், விதிமுறைகளும் உண்டு.
வைரத்தில் வேறு எந்த உலோகமும் சிராய்ப்பு ஏற்படுத்த முடியாது. வைரத்தை வைரம் மட்டுமே அறுக்கும்.
வைரங்களில் மஞ்சள், நீலம், பிரவுன் போன்ற கற்களும் கிடைக்கும்.
நிறம் மங்கிய கற்களை வாங்கக்கூடாது.
வைரங்கள் பல்வேறு நிறங்களில் பளிச்சிட அவற்றில் அடங்கி உள்ள ரசாயனப் பொருட்களே காரணமாக அமைகின்றன.
நைட்ரஜன் அதிகமாக இருந்தால் வைரம் மஞ்சள் நிறத்திலும், போரான் அதிகமாக இருந்தால் நீல நிறத்திலும் ஜொலிக்கும்.
வைரம் மின்னணு சாதன தயாரிப்புத் துறையிலும் பயன்படுத்தப்படுகிறது.
வைரத்தின் பொடி உயிரை மாய்த்து விடும் தன்மை கொண்டது..
வைரங்களின் மதிப்பையும், விலையையும் நிர்ணயிக்கும் மைய விற்பனைக் கழகம் லண்டனில் உள்ளது.
இந்த மைய விற்பனைக் கழகம் சி.எஸ்.ஓ (சென்ட்ரல் செல்லிங் ஆர்கனைசேஷன்) பெயர் மாற்றப்பட்டு டைமண்ட் ட்ரேடிங் கோ (டிடிசி) என்று அழைக்கப்படுகிறது. தோண்டி எடுக்கப்படும் வைரங்களை அதன் தன்மை, தூய்மை, நிறம், எடைக்கேற்ப பிரித்து இக்கழகம் வாங்கிக் கொள்கிறது. 1930ல் இக்கழகம் உருவாக்கப்பட்டது.
உலக வைர உற்பத்தியில் மூன்றிலொரு பங்கு ஆஸ்திரேலியாவிலுள்ள ‘அர்ஜைல்’ சுரங்கத்திலிருந்து கிடைக்கிறது.
ஆண்டுதோறும் உலகில் சுமார் 20 டன் வைரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
மிக உயர்ரக வைரக்கற்கள் போட்ஸ்வானா நாட்டிலிருந்து கிடைக்கின்றன.
வைரங்களை பாலிஷ் செய்வதில் இந்தியா முன்னணியாக விளங்குகிறது.
இந்தியாவில் எடுக்கப்பட்ட 186 காரட் ‘கோகினூர்’ வைரம் உலகப் பிரசித்திப் பெற்றது. கோகினூர் என்றால் ‘பிரகாசிக்கும் மலை’ என்று பொருள்.
வைரம் மட்டுமே தன்னுள் பாய்கின்ற வெளிச்சத்தில் 85 சதவீதம் ஒளியை பல கோணங்களில் பிரதிபலித்துத் திருப்பி வெளியிலேயே அனுப்பி விடும். வேறு எந்த ரத்தினத்துக்கும் இந்த தன்மை கிடையாது. இதனை ஆங்கிலத்தில் Internal Reflection (TIR) முழுமையான உள்பிரதிபலிப்பு என்பர். அதனால் தான் இதனை அடம் பிடிக்கும் ஜொலிப்பு (Adamantine Luster) என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.
முதல் முதலில் இந்திய வல்லுநர்கள் பட்டை தீட்டியதை இன்னும் மேம்படுத்தி, பெல்ஜியம் நாட்டை சேர்ந்த லோடெவிஜ்க் வேன் பெர்க்காம் என்ற வல்லுநர் 58 பட்டைகளோடு மிகவும் நன்றாக ஜொலிக்கும் முறையில் வைரத்தை பட்டை தீட்டினார். இதற்கு (Round Brilliant cut) என்று பெயர். இது தான் பெல்ஜியம் கட்டிங்.
வைரத்தை வெட்டவோ, பட்டை தீட்டவோ செய்வதற்கு வைரத்தால் மட்டுமே செய்ய முடியும். ஆனால் வைரத்தை வைத்து மற்ற எல்லா ரத்தினக் கற்களையும் பட்டை தீட்டலாம். ஆனால் வைரத்தை பட்டை தீட்ட, வைரத்தால் மட்டுமே முடியும்.
பட்டை தீட்டிய வைரக்கல்லில் உலகில் உள்ள எந்தப் பொருளை வைத்து உரசினாலும் அதில் கீறல் விழாது. இதைத்தான் வைரத்தின் கடினத்தன்மை Hardness என்கிறோம்.
தென் ஆப்பிரிக்காவில் கண்டெடுக்கப்பட்ட Golden Jubilee தான் மிகப்பெரியது இதன் எடை : 545.67 காரட்டுகள், தாய்லாந்து அரசரிடம் இது உள்ளது
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்
கருத்துரையிடுக