நந்தியால் கவுரவம் பெற்ற இணுவில் என்று எழுதுவதா ?அல்லது இணுவிலா ல் கௌரவம் பெற்ற நந்தியா ?
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பேராசிரியர் சிவஞானசுந்தரம் கொழும்பு பல்கலைக்கழகத்தில் 1955 ஆம் ஆண்டு பட்டப்படிப்பை முடித்து 1967 ஆம் ஆண்டு இங்கிலாந்தில் நோய்த்தடுப்பு மருத்துவருக்கான பட்டப்படிப்பையும் பின்பு 1971 இல் கலாநிதிக்கான (இந்தியத் தமிழ்: முனைவர்) பட்டப்படிப்பையும் முடித்தார். 1995 ஆம் ஆண்டு யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் இவருக்கு கெளரவ விஞ்ஞானக் கலாநிதி பட்டத்தை அளித்துக் கௌரவித்தது.
அரசாங்கத்திற்குரிய சுகாதார சேவையின் பல்வேறு பிரிவுகளில் பல்வேறுமட்டங்களில் 1966 ஆம் ஆண்டுவரை கடமையாற்றினார். 1967 ஆம் ஆண்டு ஆவணி மாதம் பேராதனை பல்கலைக்கழகத்தின் சமூகநல மருத்துவ பிரிவில் இணைந்து துணைப் பேராசிரியராக உயர்ந்தார். அத்துடன் மருத்துவ விஞ்ஞானப்பிரிவின் தலைமை நிர்வாகஸ்தராகவும் மேற்படிப்பிற்கான சமூகநல மருத்துவப் பீடத்தின் தலைமை அதிகாரியாகவும் விளங்கினார்.
1978 ஆம் ஆண்டு யாழ் மருத்துவப் பீடம் ஆரம்பிக்கப்பட்ட பொழுது சமுகநல மருத்துவப் பீடத்தின் முதல் பேராசிரியராக பதவியேற்றது முதல் தனது கடைசி மூச்சுவரை அப்பதவியிலேயே கடமையாற்றினார்.
1984 ஆம் ஆண்டிலிருந்து 1988 ஆம் ஆண்டு வரை மருத்துவப் பீடத்தின் தலைவராக திகழ்ந்ததுடன் யாழ்ப் பல்கலைக்கழகத்தின் ஆலோசனை சபையின் அங்கத்தினராகவும் 1979 ஆம் ஆண்டிலிருந்து 1993 ஆம் ஆண்டு வரை கடமையாற்றினார்.
1981 ஆம் ஆண்டு ஜோர்டான் மாநகரத்தின் சுகாதார மந்திரி சபையில் மருத்துவ உதவியாளர்களுக்கு அறிவுரையாளராக பணிபுரிந்தார். அத்துடன் மருத்துவ உதவியாளர்களுக்கான வழிகாட்டிப் புத்தகமொன்றையும் தயார் செய்து அராபிய மொழியில் மொழிபெயர்த்தார்.
உலக சுகாதார நிறுவனத்திற்காக 1985 ஆம் ஆண்டிலிருந்து 1999 ஆம் ஆண்டுவரை மலேசியா, பங்களாதேஷ், மொங்கோலியா, இந்தியா, மியன்மார், சிம்பாப்வே, வட கொரியா ஆகிய நாடுகளில் சுகாதார ஆராய்ச்சிக்கூடங்களில் சர்வதேச அறிவுரையாளராக பணிபுரிந்தார். இவர் ஆற்றிய சேவை அளப்பரியது. அத்துடன் பல ஆராய்ச்சிகளுக்கு முன்னோடியாக இருந்து பலவற்றை தலைமைதாங்கியும் நடாத்தினார்.
கொஞ்சம் விரிவாக்கப் பார்ப்போமானால் ..
இவர் 30,03,1928 ஆம் ஆண்டு (பிரபவ வருடம் பங்குனி மாதம் தமிழிற்கு பதினெட்டாம் திகதி பூச நட்சத்திரத்தில் )
இணுவில் மக்கள் செய்த புண்ணிய பலனாக அவதரித்தார் .
மேலும்
நந்தி என்றொரு மானிடன் வாழ்ந்ததும்
நாம் அவருடன்கூடி மகிழ்ந்ததும்
சிந்தனைத் தெளிவோடு சிறுகதை
சிறந்த நாவல் எனப்பல செய்ததும்
முந்தி வந்தவர் போற்றிப் புகழவும்
பிந்தி வந்தவர் வாழ்த்தி வணங்கவும்
எந்தநாளுமே புன்னைகையோடு அவர்
இன்முகத்துடன் வாழ்ந்து மறைந்ததும்
%%%%%%
கலாநிதி எஸ். சிவலிங்கராஜா (பேராசிரியர் நந்தி 2005 யூன் மறைந்தபோது எழுதியது)
இவர் பெற்றோர்கள் விநாசித்தம்பி செல்ல த்துரைக்கும் தாயார் செல்லம்மாவுக்கும் மகனாக பிறந்தார்
இவரின் சகோதரர்களான திருமதி சிவஞனமணி நித்தனாயகம் ,
மற்றும் நாடக நடிகரும் எழுத்தாற்றல் கொண்டவரும்
மாந்திரீகம் அறிந்தவருமான ஸ்ரீமான் திருநாவுக்கரசு ,ஆகியோரும் இங்கு நினைவில் கொள்ளப்படவேண்டியவர்களே .
ஆரம்பக் கல்வியை பளை தமிழ்க்கலவன் பாடசாலையில் 1933ஆம் ஆண்டிலும், .காங்கேசன்துறை ரோமன் கத்தோலிக்க பாடசாலையிலும்1934இல்
1935ஆம் ஆண்டு இடைக்காட்டு தமிழ் மகா வித்தியாலயத்திலும்
1936 -1941இல் st ஜோன்ஸ் கல்லூரியிலும்
1939-1945 இல் கொழும்பு சென்ட் ஜோசெப் கல்லூரியிலும்
அதன் பின்னர் றோயல் கல்லூரியிலும் கற்று 1950களி ல் இலங்கைப் பல்கலைக் கழகத்தினுள் உட்புகுந்து
1955 இல் பட்டதாரியாக வெளியேறினார் அதன் பின்னர்
லண்டன் சென்று
1971 இல் PhD ஆகினார் .
இவரின் சிறிய தந்தையார் செல்வனாயகத்திடமும் ,அ.மரியதாசன்
S A சார்ல்ஸ் ,லக்குமண ஐயரிடமும் ,தமிழ் கற்றுத் தேர்ந்தார் .
தங்கச்சியம்மா(1937) என்று அழைக்கப்பட்ட சாந்தியை 22.05.1966
இல் திருமணம் செய்து வள்ளி(1967) ,
தெய்வி (1971),
ஜனனி(1973), லட்சுமி (1976) என்னும் நான்கு பிள்ளைகளை பெற்றுக் கொண்டார்
மருத்துவத்துறையில் பெயர் பெற்று விளங்கிய பேராசிரியர் நந்தி என்னும்
செல்லத்துரை சிவஞானசுந்தரம் யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் வாழ்நாள் பேராசிரியராக விளங்கியவர்
நல்லூரை வாழ்விடமாகவும் கொண்டவர்.
வி. செல்வநாயகம், அ.மரியதாசன், எஸ்.எ. சாள்ஸ், கே. இலக்குமஐயர் ஆகியோரிடம் தமிழ் மொழியை கற்றறிந்த இவர் இலங்கைப் பல்கலைக்கழகம், கொழும்பு வைத்தியக் கல்லூரி, லண்டன் பல்கலைக்கழகம் ஆகியவற்றில் மருத்துவக் கல்வி கற்றுத் கொண்டவர்
வி.செ.சி, பென்சிலின், மகன், ஜெய்ஹிந்தசாஸ்திரி, நந்தி ஆகிய பெயர்களில் இலக்கிய உலகிற்கு அறிமுகமானவர். மருத்துவத் துறையில் இருந்தவாறே இலக்கியத்துறையை நேசித்த இப்பெருமகன் இலங்கை இலக்கிய வரலாற்றில் பெரும் சாதனை படைத்த ஒருவர் .
இவருக்கு நந்தி என்னும் பட்டப்பெயரை இந்திய அரசியல் வாதியும், எழுத்தாளருமான இராஜாஜி வழங்கியிருந்தார்
நாடகங்கள் எழுதும் வல்லமை ,காட்சிகள் இவருக்கு அத்துப் படியானவை
இவர் ஈழத்தின் முதுபெரும் நாடகக் கலைஞர்களான நவாலியூர் செல்லத்துரை, ஏ. பவளத்துரை ஆகியோருடன் மேடையில் நடித்திருக்கிறார் .
(Manikkavasagar Vaitialingam)
80 மேடை நாடகங்களிலும் கூடுதலாக நடித்தார். 1952 ஆம் 1953 ஆம் ஆண்டுகளில் 25 தமிழ் வானொலி நாடகங்களில் நடித்துள்ளார்.
தர்மசேன பதிராஜாவால் இயக்கப்பட்ட பொன்மணி என்ற ஆரம்ப காலத்து தமிழ் சினிமாவில் முக்கிய கதாபாத்திரமாக நடித்தார்.
இவர் மலையக மக்களின் வாழ்க்கை அவலங்களை மையமாகக் கொண்டு எழுதிய ”மலைக்கொழுந்து” (1965ஆம் ஆண்டு )என்னும் நாவல் இலங்கை சாகித்திய மண்டலப் பரிசு பெற்றது.
தனது 13 வயதிலே தொடங்கி தமிழிலும் ஆங்கிலத்திலும் மிக ஆர்வமுள்ள எழுத்தாளராக விளங்கினார். அவர் தனது 19 ஆவது வயதில் வீரகேசரி பத்திரிகையில் “சஞ்சலம் சந்தோசம்” என்ற முதல் குறுங்கதையை எழுதினார்.
1979 இல் தினகரனில் தொடராக வெளிவந்த இவரது நம்பிக்கைகள் என்ற புதினம் 1989 இல் நூலாக வெளிவந்தது. இவர் எழுதிய மூன்று கதைகளுக்கு இலங்கையின் சாகித்திய சபை விருதும் இன்னொரு கதைக்கு இராஜ விருதும் கிடைத்தது. 1998 ஆம் ஆண்டிலிருந்து சாய் மார்க்கத்தின் பதிப்பாசிரியராக இருந்தார்.
இவர் ஆங்கிலத்தில் எழுதிய கூடுதலான புத்தகங்கள் மருத்துவத்துடன் தொடர்புடையவை. இவர் எழுதிய “ஆராய்ச்சிகள்” என்ற நூல் இரு பதிவுகளைக் கொண்டது. இந்நூல் இலங்கையின் எல்லா மருத்துவ கல்லூரிகளிலும் உபயோகிக்கப்படுவதுடன், ஆராய்ச்சிக்கல்வி பயிலும் மாணவர்களாலும் பாவிக்கப்படுகின்றது. இத்துடன் மட்டுமல்லாது மருத்துவம் சம்பந்தமாகவும் மக்களின் உடல்நலம் சம்பந்தமாகவும் 50 இற்கும் மேற்பட்ட நூல்களை தேச, சர்வதேசரீதியில் வெளியிட்டுள்ளார். 16 நூல்களை தமிழிலும், 4 நூல்களை பாமர மக்களிற்கான மருத்துவ நூல்களாகவும், 2 புத்தகங்களை சிறுவர்களுக்காகவும், மேலும் 2 புத்தகங்களை ஆன்மீகத்திற்குரிய நூல்களாகவும், 1 புத்தகத்தை ஆசிரியர்களுக்காக மனிதனின் உயர்வு என்ற சத்திய சாயி கல்வி நூலையும் வெளியிட்டார்.
வெளிநாடுகளில் மருத்துவப் பயிற்சிக் கருத்தரங்குகளில் கலந்து கொண்ட நந்தி அவர்கள் நோய்கள் பற்றிய ஆய்வுகள் பலவற்றை மேற்கொண்டார்.
.
கிரிபிட்டியா என்ற இடத்தில் வேலை செய்த போது அங்கிருந்த மருத்துவச்சியை கதாபாத்திரமாக வைத்து “சிங்களத்து மருத்துவச்சி” என்ற நூலை எழுதினார்.
அத்துடன் கொலரா நோயை கட்டுப்படுத்திய அனுபவத்தை வைத்து “தங்கச்சியம்மா” என்ற நாவலை எழுதினார்.
அவரின் மனைவி சாந்திக்கு, தங்கச்சியம்மா என்கிற பெயர் இருந்ததை இங்கு நான் குறிப்பிட்டாக வேண்டும்
நாவலப்பிட்டியில் வேலை செய்த போது அங்குள்ள தோட்டங்களில் வேலைபார்க்கும் தொழிலாளர்களை வைத்து “மலைக்கொழுந்து” என்ற நாவலை எழுதினார்.
தலைசிறந்த கல்விமான் என்பதுடன் திறமைமிக்க சிருஸ்டிகர்த்தா என்றும் கூறக்கூடியதாக விளங்கினார். பல வருடங்களாக இலங்கை வானொலியில் வானொலி வைத்தியராக சேவையாற்றினார்.
எளியமுறையில் மருத்துவத் தகவல்களை மக்களிடம் கொண்டு சேர்த்த பெருமை பேராசிரியர் நந்தியைச் சாரும். இவரது மருத்துவத் இலக்கியமான அருமைத் தங்கைக்கு, அன்புள்ள நந்தினி போன்றன மருத்துவ அறிவுரை நூல்கள் எளிமையான இலகுதமிழில் மருத்துவ அறிவை பாமரருக்கு கொண்டு சேர்த்தவர்.
‘இதயநோயும் தடுப்பு முறைகளும்’ என்ற மருத்துவ நூலும் இதற்கு சிறந்த உதாரணமாகும்.
இவரின் நாவல்கள், சிறுகதைகள், அதிகமாக
சமூக மருத்துவர்களின் வாழ்வியல் ஆகியவற்றை உள்வாங்கி எழுதப்பட்டவை ஆகும்.
இவர் எழுதியுள்ள நூல்களில்
”அருமைத்தங்கைக்கு” (மருத்துவ அறிவுரை),
”ஊர் நம்புமா” (சிறுகதைத் தொகுப்பு),1966
”அன்புள்ள நந்தினி” (மருத்துவ அறிவுரை),
”உங்களைப் பற்றி” (சிறுவர் அறிவுரை),
”குரங்குகள்” (நாடகம்),
”தங்கச்சியம்மா” (நாவல்),
”கண்களுக்கு அப்பால்” (சிறுகதைத் தொகுப்பு),
”நம்பிக்கைகள்” 1992 இல் சாகித்திய மண்டல விருது பெற்றவை
நந்தியின் கதைகள் - 1994
போன்றன குறிப்பிடக் கூடியவை
அன்னாரின் இழப்பு ஈழ வரலாற்றில் இழப்பாக இருந்தாலும் ,இவரின்கதைதன்னைப் படிப்போர் இவர் போல பல மருத்துவர்கள் ஆக வேண்டும் என்பதே என் அவா .

கருத்துகள்