உதயணன் என்று அழைக்கப்படும் ஆர் சிவலிங்கம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இலங்கையின் யாழ்ப்பாணத்தில் இணுவில் என்னும் ஊரில் (காலத்துக்கு காலம் இடங்கள் தொகுதி வாரியாகப் பிரிக்கப் படுவதால் தற்பொழுது உடுவில் ) 1935 ஆணி 25 இல் பிறந்தார். இவரது தந்தையார் இராமலிங்கம் இலங்கை புகையிரதத் திணைக்களத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர் பிறந்த சில தினங்களிலேயே தாயை இழந்தார். சிவலிங்கம் காங்கேசன்துறை உறோமன் கத்தோலிக்கப் பாடசாலை, அமெரிக்கன் மிசன் ஆங்கிலப் பாடசாலை, மற்றும் அனுராதபுரம் சென் யோசப் கல்லூரி, யாழ்ப்பாணம் பரமேஸ்வரா கல்லூரி ஆகியவற்றில் கல்வி கற்றார்.
1955 - 1957 வரை நாவலப்பிட்டி கதிரேசன் தமிழ்ப் பாடசாலையிலும், கதிரேசன் கல்லூரியிலும் ஆங்கில உதவி ஆசிரியராகப் பணியாற்றிய பின்னர், 1957இல் அரச எழுதுவினைஞர் சேவைக்குத் தெரிவாகி கொழும்பு சமூக சேவைத் திணைக்களம், புத்தளம் கச்சேரி, யாழ்ப்பாணம் மாநிலக் கல்வி அலுவலகம், மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்றம் ஆகியவற்றில் பணியாற்று 1979இல் ஓய்வு பெற்றார். அதன்மேல் ஈராக்கில் கெர்க்கூக் என்னும் நகரில் ஓர் அரேபியக் கம்பனியில் களஞ்சியப் பொறுப்பாளராக மூன்று ஆண்டுகள் பணியாற்றிய பின்னர், ஈரான் - ஈராக் போரை அடுத்து 1982 டிசம்பரில் இலங்கை திரும்பினார்.
1983 இனக்கலவரத்தை அடுத்து அவ்வாண்டு அக்டோபரில் பின்லாந்துக்குக் குடிபெயர்ந்தார். பின்லாந்தின் தேசிய மொழியான பின்னிய மொழியை இவரும் இவரது மனைவி மக்களும் நன்கு கற்றனர்.
இவரது முதலாவது கவிதை 1955ஆம் ஆண்டு வீரகேசரி பத்திரிகையில் வெளிவந்தது. தொடர்ந்து உள்ளூர் பத்திரிகைகளிலும் இதழ்களிலும் தனது ஆக்கங்களை எழுதி வந்தார். 1961ஆம் ஆண்டில் கல்கி இதழ் நடத்திய சிறுகதைப் போட்டியில் இவரது தேடி வந்த கண்கள் சிறுகதை பரிசு பெற்றது. இவரது சிறுகதைகள் சுதந்திரன், வீரகேசரி, கல்கி, தினகரன், தமிழ்ன்பம், கலைச்செல்வி, அல்லி, தம்ழோசை, குமுதம் போன்ற பல இதழ்களில் வெளிவந்தன. இவருடைய இரண்டு புதினங்கள் பொன்னான மலரல்லவோ, அந்தரங்க கீதம் ஆகியவை 'வீரகேசரிப் பிரசுரங்கள்' வரிசையில் வெளியிடப்பட்டுள்ளன.
பின்லாந்தின் தேசியக் காவியமான கலேவலா என்ற பாடல் தொகுப்பு இவரால் 1994இல் மொழிபெயர்க்கப்பட்டது. உதயணன் பல ஆண்டுகாலமாக பின்லாந்து நாட்டில் வாழ்ந்து வந்தவர். அப்போது அவர் பின்லாந்து மொழியுடனும் அந்நாட்டுக் கலாசாரத்துடனும் நன்கு பழக்கப்பட்டுவிட்டதால், கலேவலாவின் பின்லாந்து-கரேலிய மூலப் பிரதியிலிருந்து நேரடியாகத் தமிழில் மொழிபெயர்க்க முடிந்தது. இம்மொழிபெயர்ப்பை அடுத்து இவர் அந்நாட்டு மக்களின் நன்மதிப்பைப் பெற்றார். கால்நூற்றாண்டு காலம் இவர் பின்லாந்தில் வாழ்ந்திருக்கிறார். பின்னர் புலம் பெயர்ந்து கனடா சென்றார்
பொன்னான மலரல்லவோ (நாவல், வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு, 1975)
அந்தரங்க கீதம் (நாவல், வீரகேசரிப் பிரசுரம், கொழும்பு, 1976)
கலேவலா, பின்லாந்தின் தேசிய காவியம் - கவிதை நடைத் தமிழ் மொழிபெயர்ப்பு – வெளியீடு: ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், அச்சுப் பதிவு: The Alternative Press, Hong Kong 1994
உரைநடையில் கலேவலா - பின்லாந்தின் தேசிய காவியம் - உரைநடைத் தமிழாக்கம் - வெளியீடு: ஹெல்சிங்கி பல்கலைக்கழகம், பின்லாந்து, அச்சுப்பதிவு: சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம், சென்னை, தமிழ்நாடு.
உங்கள் தீர்ப்பு என்ன? (சிறுகதைத் தொகுதி, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2010)
பிரிந்தவர் பேசினால் (சிறுகதைத் தொகுதி, மணிமேகலைப் பிரசுரம், சென்னை, 2010)
பின்லாந்தின் பசுமை நினைவுகள் ENDLESS MEMORIES OF FINLAND. – 2015 வெளியீடு: தாய்வீடு பதிப்பகம், கனடா.
என்பவை இவரால்வெளியானவை
கலே வலா என்றால் என்ன ?
உதயணன் மிகத் தெளிவாக இயற்றியுள்ளார் .
உலக இலக்கியத்தின் மாபெரும் காவியப் பாடல்களில் ஒன்றாகும். இது பின்லாந்தின் தேசீய காவியம். இக்காவியம் 1849 ஆம் ஆண்டிலேயே ஒழுங்கான வடிவத்தைப் பெற்றது. எனினும், இவற்றுக்கு நேரடியான அடிப்படைகளாக அமைந்த வாய்மொழிப் பாடல்கள் கிபி 1ம் நூற்றாண்டு காலப் பகுதியிலேயே உருவாகிவிட்டன.
சிறந்த மொழிநூல் வல்லுநரான எலியாஸ் லொண்ரொத் (1802-1884) என்பாரே இக் காவியத்தைத் தொகுத்தவராவார். இவராலும் மற்றும் பின்லாந்தின் நாட்டார் இலக்கியத்தின் முன்னோடிகளாலும் பின்லாந்தின் கரேலியாவின் நாட்டுப் புறங்களிலிருந்து சேகரிக்கப்பட்ட, சிறந்த தொன்மையான நாட்டுப் பாடல்களே இத் தொகுப்பின் மூலங்களாகும்.
கரேலியா என்னும் பிரதேசத்தின் பெரும் பகுதி பின்லாந்தின் கிழக்கு எல்லைக்கு அப்பால் ரஷ்யாவில் இருக்கிறது. கரேலியா என்னும் இப்பகுதி பின்னிஷ் - கரேலியா கலாச்சாரம் என்றொரு எல்லைக் கோட்டை அமைத்துக் கொண்டு தூரதேச நாகரீக மையங்களிலிருந்தும் அரிதாய்க் குடியேறப்பட்ட காட்டுப் பிரதேசங்களிலிருந்தும் துண்டிக்கப்பட்டிருந்தது.
இதனால் இந்த நாட்டுப் பாடல்கள் 19 ஆம் நூற்றாண்டு வரை, பரம்பரை பரம்பரையாக வாய்மொழி மரபில் பாதுகாக்கப்பட்டு வந்துள்ளன.
புரட்டஸ்தாந்தம், லூத்தரன் கிறித்தவ இயக்கம் ஆகியன ஏற்படும் வரையில், ரஷ்யாவில் மேலோங்கியிருந்த பழமைவாதக் கிறித்தவம் பின்லாந்தின் ஏனைய பகுதிகளில் இருந்த ரோமன் கத்தோலிக்க இயக்கத்திலும் பார்க்க மிகவும் பொறுதியுடன் இருந்ததே இதற்குக் காரணமாகும்.
கலேவலா மொத்தத்தில் பின்னிஷ் மொழி பேசும் மக்களின் கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்து மதத்தையும் வீரப்பண்புகளுடைய புனை கதைகளையும் பிரதிபலித்தது, எனினும் இந்நாட்டை வெற்றிக்கொண்ட சுவீடிஷ்க்காரர் கி.பி. 1155 இல் பலவந்தமாகக் கொண்டுவந்த கிறித்துவத்தின் வெற்றியே கடைசிப் பாடலின் கருவாயிற்று.
கலேவலா என்னும் பெயர் பின்னிஷ் மொழியில் 'இடம்' என்பதைக் குறிப்பிடும் -லா என்னும் பெயர் விகுதியில் முடிவடைகிறது. 'கலேவா' என்னும் முதல் அடி பின்லாந்தியரின் சந்ததியின் ஆதிமுதல்வரின் பெயராகக் கருதப்படுகிறது. இவருக்கு பன்னிரண்டு ஆண் மக்கள் இருந்தனர். கலேவலாவின் நாயகர்களான வைனாமொயினனும் இல்மரினனும் இவர்களில் அடங்குவர். பின்னிஷ் மொழியில் 'கலேவா' என்பது விண்மீன்களின் பல பெயர்களாக வருகிறது.
கலேவலா பாடல்கள் தமிழ் ளில் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. தமிழில் 1994இல் ஆர். சிவலிங்கம் (உதயணன்) அவர்களால் மொழிபெயர்க்கப்பட்டு நூலாக வெளியிடப்பட்டுள்ளது. சுமார் மூன்று ஆண்டு கால ஆய்வுக்குப் பின் தமிழில் 480 பக்கங்களில் இந்நூல் வெளிவந்திருக்கிறது. ஐம்பது பாடல்களில் 22,795 அடிகளைக் கொண்டுள்ளது
இப்படியாக ஒரு அறிஞன் இணுவிலில் பிறந்தது இணுவிலுக்கும் பெருமையே .ஆனாலும் அது தற்போதைய உடுவிலுக்கே பெருமை சேர்க்கிறது
Manikkavasagar Vaitialingam





கருத்துகள்
கருத்துரையிடுக