பித்துக்குளி முருகதாஸ்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பாலசுப்பிரமணியம் என்ற இயற்பெயரைக் கொண்ட முருகதாஸ் 1920 ஆம் ஆண்டு சனவரி 25 ஆம் நாள் (சித்தார்த்தி வருடம், தைப்பூச திருநாளில்) கோவையில் சுந்தரம் ஐயர், அலமேலு ஆகியோருக்கு மகனாகப் பிறந்தார்.
தாத்தா அரியூர் கோபாலகிருஷ்ண பாகவதர் (உஞ்சவிருத்தி பஜனை வித்வான்), பாட்டி ருக்மணியம்மாள். முருகதாசுக்கு பாட்டி ருக்மணியம்மாள் பக்திப் பாடல்களை சொல்லிக் கொடுத்தார். சகோதரி செல்லம்மாள், சகோதரர் கோபாலகிருஷ்ணன்.
எட்டாம் வகுப்பு மட்டுமே கற்ற இவரை இந்தப் பாடலை இறைவன் பாட வைத்தானோ என்னவோ ?
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...
நிலைபெயராது சிலைபோலவே நின்று...
நிலைபெயராது சிலைபோலவே நின்று,
நேரமாவதறியாமலே மிக விநோதமாக முரளீதரா என் மனம்
அலைபாயுதே... கண்ணா
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
தெளிந்த நிலவு பட்டப்பகல் போல் எரியுதே...
திக்கை நோக்கி என் புருவம் நெரியுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கனிந்த உன் வேணுகானம் காற்றில் வருகுதே
கண்கள் சொருகி ஒரு விதமாய் வருகுதே
கனித்த/ (கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
கனித்த/(கதித்த) மனத்தில் உருத்தி பதத்தை எனக்கு அளித்து மகிழ்த்தவா
ஒரு தனித்த வனத்தில் அணைத்து எனக்கு உணர்ச்சி கொடுத்து மகிழ்த்தவா
கலை கடல் அலையினில் கதிரவன் ஒளியென இணையிரு கழலென களித்தவா
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
கதறி மனமுருக நான் அழைக்கவோ இதர மாதருடன் நீ களிக்கவோ
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?
இது தகுமோ, இது முறையோ, இது தர்மம் தானோ?!
குழலூதிடும் பொழுது ஆடிடும் குழைகள் போலவே மனது வேதனை மிகவொடு
அலைபாயுதே... கண்ணா, என் மனம் அலைபாயுதே
உன் ஆனந்த மோகன வேணுகானம் அதில்
அலைபாயுதே... கண்ணா...!
அமெரிக்கா, தென்னாப்ரிக்கா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா, ஆஸ்திரேலியா உள்ளிட்ட பல்வேறு நாடுகளுக்கு சென்று பக்தி இசைக் கச்சேரிகளையும் முருகதாஸ் நடத்தி உள்ளார்.
தமிழ்க் கடவுளான முருகன் குறித்து பல பாடல்கள் பாடியுள்ள முருகதாஸ், திரைப்படங்களிலும் சில பக்தி பாடல்கள் பாடியுள்ளார்.
தியாகராஜர் விருது, சங்கீத சாம்ராட் உள்பட பல இசை விருதுகளை பெற்றுள்ள பித்துக்குளி முருகதாஸுக்கு 1984-ம் ஆண்டு கலைமாமணி விருதை வழங்கி தமிழக அரசு கவுரவித்துள்ளது.
கண்ணன் மீதான பாடல்களையும் இயற்றி இசையமைத்துள்ளார். அவர் பாடிய அலைபாயுதே கண்ணா பாடல் மிகப் பிரபலமானது. திருப்புகழ் பாராயணத்தில் பெயர் பெற்றவர் பித்துக்குளி முருகதாஸ்.
பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி இவருக்கு பித்துக்குளி என்ற பெயர் சூட்டினார். பின்னாளில், கேரள மாநிலத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தின் ஆன்மீக குரு சுவாமி ராமதாஸ் முருகதாஸ் என்ற பெயரை பித்துக்குளி என்ற நாமத்துடன் இணைத்தார். அன்று முதல் பித்துக்குளி முருகதாஸ் என்றே அழைக்கப்படுகிறார்.
1936-ம் ஆண்டு சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றபோது போலீஸார் கடுமையாக தாக்கப்பட்டார். இதில் அவரது இடது கண் பார்வை பறிபோனது.
1947-ல் தனது இசைப் பயணத்தை தொடங்கிய பித்துக்குளி முருகதாஸ், 1000-க்கும் மேற்பட்ட பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்து பாடியிருக்கிறார்.
சென்னையில் ஜோதிர் மாயா தேவி என்ற பெயரில் தொண்டு நிறுவன அமைப்பை தொடங்கி நடத்தி வந்துள்ள முருகதாஸ் தனது இசை நிகழ்ச்சிகளுக்கான அமைப்பாளர்களிடம் தனக்கு கட்டணம் வழங்குவதற்கு பதிலாக அதனை ஏழைகளுக்கு உணவாக அளித்திடுங்கள் என்று கூறும் வழக்கத்தை கொண்டவர்.
தன்னுடன் கச்சேரிகளில் பக்திப்பாடல்களை பாடிய தேவி சரோஜா என்பவரை 1978ல் தனது அறுபதாவது வயதில் மணந்து கொண்டார். இந்த தம்பதியர் ராதா கல்யாணம் பாடல்களை எல்லாம் பாடிப் பிரபலம் ஆக்கினர்! .
அவரது மனைவி தேவி சரோஜா, 2011ல் காலமானார். இவர்களுக்கு வாரிசு இல்லை. ‘அலைபாயுதே கண்ணா’, ‘ஆடாது அசங்காது வா கண்ணா’ போன்ற பாடல்கள்,
எனக்குப் பிடித்த அவரது தனி முத்திரைப் பாடல்களாகும்.
தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற ‘நாடறியும் நூறு மலை நானறிவேன் சுவாமி மலை’ என்ற பாடலைப் பாடி, அதில் சில காட்சிகளில் நடித்தவர் பித்துக்குளி முருகதாஸ். சென்னை மயிலாப்பூர் வி.எம். தெருவில் உள்ள வீட்டில் வசித்து வந்த அவர்,உடல்நிலை பாதிப்பு காரணமாக சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், அதிகாலை மாரடைப்பு ஏற்பட்டு தூக்கத்திலேயே அவரது 95 வயதில்17-11-2015 செவ்வாய்கிழமை அன்று காலமானார் உயிர் பிரிந்த. அன்று மாலை, கிருஷ்ணாம்பேட்டை மின்மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இன்றைய நாட்களில் அமைதியாக தொண்டாற்றி வரும் பெரியவர்களைப் பற்றிய விவரங்கள் ஊடகங்களில் வருவதில்லை. உதாரணத்திற்கு இவரையே எடுத்துக் கொண்டால், இவர் ஒரு ஆன்மீகவாதி, சுதந்திர போராட்ட வீரர், உப்புசத்தியாகிரகத்தில் பங்கு கொண்டவர், சிறைக்குச் சென்றவர் என்பதெல்லாம் நிறைய பேருக்குத் தெரியாது. எம்.பில், பி.எச்டி ஆய்வுக்கு கண்டவர்களைப் பற்றியல்லாம் ஆராய்ச்சி செய்பவர்கள், இவர் போன்றவர்களைப் பற்றி ஆராய மாட்டார்கள். இந்திய விடுதலை போர் பற்றி ஏகப்பட்ட கருத்தரங்கங்கள், கூட்டங்கள் நடந்தாலும், அங்கெல்லாம் கூட இவரைப் பற்றி மூச்சுக் கூட விடமாட்டார்கள்.
பாலசுப்ரமணியம் என்ற இயற்பெயருடன் பிறந்த பித்துக்குளி முருகதாஸ், தமிழ்க் கடவுளான முருகன் மீது நெஞ்சை உருக்கும் ஆயிரக்கணக்கான பக்திப் பாடல்களை இயற்றி, இசையமைத்துப் பாடியுள்ளார். இவரது கணீர் என்ற குரல், ஹார்மோனியத்துடன் இணையும் போது, இரண்டிற்கும் வித்தியாசமே தெரியாத அளவிற்கு இருக்கும். அருணகிரிநாதர் திருப்புகழ், கந்தர் அலங்காரம், கந்தர் அனுபூதி, வேல் வகுப்பு, தேவேந்திர சங்க வகுப்பு போன்ற பாடல்களைப் பாடி பிரபலப்படுத்தினார்
தலையில் காவித்தலைப்பாகை உடுத்தி, முகத்தில் கூலிங்கிளாஸ் கண்ணாடி அணிந்து சற்றே வித்தியாசமான முருக பக்தராக காட்சியளித்த பித்துக்குளி முருகதாஸ், கந்தர் அனுபூதி உள்பட முருகன் மீது பல பக்திப்பாடல்களை இயற்றியுள்ளார்
அக்காலகட்டத்தில், சுதந்திர போராட்டம் நாடு முழுவதும் பரவியிருந்ததால், சிறுவர் முதல், முதியோர் வரை அதில் கலந்து கொண்டனர். அவ்வாறே பாலசுப்ரமணியும் 1931ல் தனது பதினொன்றாம் வயதில் உப்பு சத்தியாகிரகத்தில் பங்குக் கொண்டு சில நாட்கள் சிறையிலும் இருந்தார்
இந்தியாவில் வெள்ளையருக்கு எதிரான போராட்டத்தில் பங்கேற்ற இவர்மீது 1936-ம் ஆண்டு போலீசார் நடத்திய முரட்டுத்தனமான தாக்குதலில் பித்துக்குளி முருகதாசின் இடதுகண் பார்வை பறிபோனது. அப்பொழுதும் ஆறு மாதம் சிறைவாசம் இடைத்தது. அதிலிருந்து இவர் கருப்பு கண்ணாடி அணியத் தொடங்கினார். பிறகு, மைசூர் மஹாராஜா ஜெயசாமராஜேந்திர உடையார் திருமணத்தின் போது, கைதிகள் விடுவிக்கப்பட்டபோது, இவரும் விடுதலை ஆனார். இன்றைக்கு எதற்கோ சிறை சென்றவர்கள் எல்லாம், ஏதோ பெரிய போராளிகள் போல சித்தரிக்கப் படுகிறார்கள். ஆனால், உண்மையான போராளிகள் மறைக்கப்படுகிறார்கள்; மறக்கப்படுகிறார்கள்; இதனால், இக்காலத்தவர், குறிப்பாக இளைஞர்கள் உண்மை அறியாமலேயே, தங்களது ஞானத்தை வளர்த்து-வைத்துக் கொள்கிறார்கள்.பிரபலமானவர்கள் மழுங்கடிக்கப் படுகிறார்கள்
சிறுவயதில், தனது ஊரின் தெருவில் விளையாடும் போது, வழியே சென்ற ஒருவர் மீது இவர் வீசிய கல் பட்டு காயமடைந்த பெருமாள் பக்தரும், மகா ஞானியுமான பிரம்மானந்த பரதேசியார், தனது நெற்றியில் இருந்து இரத்தம் வடிய… ‘அடேய்…நீ என்ன பித்துக்குளியா? (பைத்தியமா)? ஒருநாள் இல்லை ஒருநாள், என்னைப் போலவே நீயும் ஆகப் போகிறாய்’ என்று வேடிக்கையாக கூறவே, அதுவே பித்துக்குளி முருகதாஸ் ஆக நிலைத்துவிட்டது
முருகனுக்கு தாசனாய், முருகன் மீது பைத்தியமாய் இருப்பதால் தனது பெயருக்கு முன்னால் ‘பித்துக்குளி’யை இவர் சேர்த்துக்கொண்டார். 1935ல் சிறு வயதிலேயே வீட்டை விட்டு ஓடித் துறவறத்தில் மூழ்கினார். பிரம்மானந்த பரதேசியார் என்ற துறவி இவருக்கு பித்துக்குளி என்ற பெயர் சூட்டினார். 1939ல் பின்னாளில், கேரள மாநிலத்தில் உள்ள ஆனந்த ஆசிரமத்தின் ஆன்மீக குரு சுவாமி ராமதாஸ் முருகதாஸ் என்ற பெயரை பித்துக்குளி என்ற நாமத்துடன் இணைத்தார். அன்று முதல் பித்துக்குளி முருகதாஸ் என்றே அழைக்கப்படுகிறார்
1940ல் சேந்தமங்கலத்தில் இருந்த சுவாமி ஸ்வயம் பிரகாஷ் என்ற அவதூதரிடம் இருந்தார். பிறகு கால்நடையாகவே தீர்த்தயாத்திரையாக பல இடங்களுக்குச் சென்று வந்தார். சுதந்திர போராட்ட எண்ணங்களினாலும், தான் சிறு வயதில் பட்ட கஷ்டங்களினாலும் குழந்தைகள், சிறுவர்கள் பாதிக்கப்படக்கூடாது என்ற எண்ணத்தில் அனாதை குழந்தைகளை காக்க வேண்டும் என்று தீர்மானித்தார். 1947ல் வாலாஜாபேட்டையில் உள்ள தீனபந்து ஆஸ்ரமத்தின் அனாதை இல்லத்தின் பாதுகாவலர்களுள் ஒருவரானார்
தனது பக்தி பாடல் கச்சேரிகளின் மூலம் கிடைக்கும் தொகையை வைத்து பல ஏழை, எளிய மக்களின் பசிப்பிணியைப் போக்கும் மிக உயரிய சமூகத்தொண்டாற்றி வந்தார். வெகுநாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த தீவிர முருகபக்தரான பித்துக்குளி முருகதாஸ், சூரசம்ஹார தினமான 17-11-2015
அ ன்று சென்னையில் உள்ள தனது இல்லத்தில் அதிகாலை மரணமடைந்தார் என்பதை ஊடகங்கள் அடக்கியே வாசித்தனர்
இதே நேரம் ஒரு நடிக ரோ அல்லது நடிகையோ மரணித்திருந்தால் நிலைமை வேறாக இருந்திருக்கும்
இன்று எமது கலாசாரப் பின்னடைவுகளுக்கு முக்கிய காரணம் ஊடகங்கள் தான் என்பது பலருக்கு இன்னமும் புரிவதில்லை
ஒருமுறை பித்துக்குளி அவர்கள்
தேவாரப் பதிகங்களால் மேலும் சிறப்புற்று விளங் கும் திருத்தலங்களான திருக்கோணேஸ்வரத்திற்கும் திருக் கேதீஸ்வரத்திற்கும் சென்று சுவாமி தரிசனம் செய்தார். திருக்கேதீஸ்வரத்தில் நடந்து வருகின்ற கட்டட சிற்பத் திறன்கள் அவர் மனதைப் பெரிதும் கவர்ந்தன. அத்தகு வேலைப்பாடுகள் அதி சிறப்பாக இடம்பெறுவதற்குத் தாம் மறுதடவை இலங்கை வரும்போது நிதி வசூலுக்கான இன் னிசை நிகழ்த்த இறையருள் பாலிக்க வேண்டுமென விண் ணப்பித்துக் கொண்டார். திருக்கோணேஸ்வரத்திலே எம் பெருமான வீதி வலம் வந்து வணங்குகையில் ஆங்கு திருக் கோணேசர் பாடல்கள் சுற்றவர மையினால் எழுதப்பட்டி ருப்பதைக் கண்ணுற்றார். அவை எல்லாம் கருங்கற்களில் பொறிக்கப்படவேண்டும்; அப்போதுதான் அது வெகு நன்றாக இருக்கும் என்றா ர், இலங்கையில் யாராவது அப்பணியைத் தொடங்கிச் செய்யும் பட்சத்தில் இந்தியாவிலேயுள்ள ஆதீனமொன்றிலிருந்து கணிசமான அளவு பண உதவி கிடைக்கச் செய்யத் தாம் ஆவன செய்வாரென்று கோவில் அர்ச்சகரிடம் பித்துக்குளி பூரீ முருகதாஸ் சுவாமிகள் வாக்களித்தார்.
இது பற்றி இங்கே நான் சொல்ல வேண்டிய கடற்பாடு உள்ளது
பித்துக்குளி கூடவே வந்து அவருக்குப் பக்கவாத் தியகாரர்களாக ஒத்துழைத்தவர்களைப் பற்றி இங்கு குறிப் பிடுதல் பொருத்தமானதாகும். ரீ. எஸ். முத்துநடேசை யர், சிக்கல் ஆர். வடிவேல், திரு. எஸ். வாசுதேவராவ் மூவருமே அவர்கள்
எண்ணற்ற இசைக்கருவிகளை இசைத்து பலர் பாடினாலும் இவருக்கு வெறும் ஆர்மோனியம் மட்டுமே பிரதானமாக இருந்தது.
மிகப்பெரும் முருக பக்தரான சாண்டோ சின்னப்பா தேவர் தான் தயாரித்த தெய்வம் படத்தில் எல்லா முருகன் கோவில்களை மையமாக வைத்து ஒரு உண்மை கதையும் அந்த கதையின் முடிவில் அப்போதைய பிரபல பாடகர்கள் யாராவது அந்த கதை சம்பந்தப்பட்ட தலத்தில் இசைக்கச்சேரி செய்வது போல காட்சியமைக்கப்பட்டிருந்தது.
அதில் சுவாமி மலை சம்பந்தப்பட்ட காட்சியில் பாடகர் பித்துக்குளி முருகதாஸ் பாடுவது போல் காட்சியமைத்திருந்தார்கள்.
நாடறியும் நூறு மலை என ஆரம்பிக்கும் அந்த பாடல் கடைசி வரை வித்தியாசமாக ஹார்மோனியம் மட்டுமே பயன்படுத்தி இசைக்கப்பட்டிருந்தது. அதிலும் பித்துக்குளி முருகதாஸ் தான் பாடிய வரிகளையே திரும்ப திரும்ப வித்தியாசமாக பாடுவார். இறை பக்தியாளர்களை இவரது மெய் சிலிர்க்க வைக்கும்.
பாடலைக் கேளுங்கள் https://youtu.be/SGahrUi3sKU
முருகா...முருகா...முருகா...
நாடறியும் நூறு மலை (x2)
நான் அறிவேன் சுவாமிமலை
கந்தன் ஒரு மந்திரத்தை (x3)
தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன மலை
சுவாமிமலை ... சுவாமிமலை
ஓம்...
ஓம் ஓம் என வருவோர்க்கு
நாம் என துணை ஆவான்
ஓம் என வருவோர்க்கு
நாம் என துணை ஆவான்
ஆவான்
வா என அழைக்காமல்
வா வா என அழைக்காமல்
வா என அழைக்காமல்
வருகின்ற மகனாவான் (x2)
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை (x2)
சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை (x2)
சொன்னது தமிழ் வேதம்
தொட்டிலிலே வளர்ந்த பிள்ளை (x2)
சொன்னது தமிழ் வேதம்
சொன்னதை அறிந்தவர்க்கு
சுவாமிநாதன் சொன்னதை அறிந்தவர்க்கு
முருகப்பன் சொன்னதை அறிந்தவர்க்கு
நன்மைகள் உருவாகும்
நாடறியும் நூறு மலை
நான் அறிவேன் சுவாமிமலை
நாடறியும் நூறு மலை
நான் அறிவேன் சுவாமிமலை (x2)
கந்தன் ஒரு மந்திரத்தை (x3)
தந்தையிடம் சொன்ன மலை
கந்தன் ஒரு மந்திரத்தை
தந்தையிடம் சொன்ன மலை
சுவாமிமலை ... சுவாமிமலை
ஆத்மஜோதி முத்தையா அவர்களின் சேவையில் 1967 ஆம் ஆண்டு இவரின் பக்திப்பாடல்கள் பதிப்பிடப் பெற்றது .ஆன்றோர்கள் அதை மீளப் பதிவிட்டால் நன்மைகள் உண்டாகும்
இன்னமும் அவரைப்பற்றி நிறைய எழுதலாம் .பலரும் முகநூலில் சுருக்கமாகவே படிக்க நினைப்பதால் நானும் அவர் கதையை சுருக்கித் தந்திருக்கிறேன் .படித்து இன்புறுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக