இணுவையூர் இரத்தினம்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1916 ஆவணி 17 இல் யாழ்ப்பாணம், இணுவிலில் இளையதம்பி, இராசம்மா ஆகியோருக்குப் பிறந்தார். யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியில் கல்வி கற்றார். படிக்கும் போதே பொது வாசிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்டிருந்தார். மெட்ரிகுலேசன் படிப்பு முடிந்த பின்னர்பல்கலைக் கலக்கம் செல்வதற்கு பணம் இன்மையால் இணுவில் சைவப்பிரகாச வித்தியாசாலையில் சிறிதுகாலம் ஆசிரியராகப் பணியாற்றினார்.
அதில் கிடைத்த நாற்பது ரூபாய் மாத வருமானத்தில் பத்து ரூபாயை வீட்டு செலவுக்கு தாயாரிடம் கொடுத்துகொடுப்பார் மிகுதி முப்பது ரூபாவையும் படிப்புக்கு செலவிடுவார் .காந்தீயக் கொள்கையில் மயங்கி சாத்வீகமாக வாழத் தலைப்பட்டார் .பொது லிகிதர் சேவையில் ஈட்டுபட்ட பொழுது அலுவலகத்தில் கதர் ஆடையில் பாதரட்சை இன்றி கடமை புரிந்தவர் .அவ்வளவுக்கு காந்தியின் கொள்கைகளில் தீராத அபிமானம் கொண்டவர் .தனக்கு நியாயம் எனப்பட்டதை நேரடியாகவே கூறுபவர் .இதனால் பல எதிர்ப்புக்கள் இருந்த பொழுதிலும் பலர் ஆதரவாக என்றும் இருந்தனர் .லிகிதர் வேலையில் இருக்கும் பொழுது லண்டன் intermediate exam in arts எழுதி தேர்ச்சி பெற்று கொண்டார் .அந்தக் காலத்தில் ஆயுர்வேத டாக்டர் சாம்பசிவம் அய்யர்வாள் என்கிற பிராம்மணர் ஆயுர்வேதக் கல்லூரியில் விரிவுரையாளராக இருந்தார் .அந்த அய்யரிடம் சமஸ்கிருதம் கற்று வந்தார் .பிரதியுபகாரமாக அயாரின் பிள்ளைகளுக்கு பாடங்களின் வழிகாட்டியாக (Tution )உதவி வந்தார் .
அதே சமயம் பொருளாதாரம் தமிழ் தர்க்கம் சார்ந்த B .A படிப்பிலும் திறமை தேர்வு கண்டார் .வருமான வரி ,குடிசன தினைக் கழகங்களில் லிகிதர் வேலையை 1965இல் துறந்து கல்வி சார் திணைக்கழ கத்தில் கலைச்சொல்லாக்க பணிக்கு பொறுப்பு ஏற்றார் .1973 ஆண்டில் பதவி ஓய்வு கண்டார் .அதன் பின்னரும் கலைச் சொல்லாக்கப் பணியில் ஈடுபட்டார்
மேலும்
இளவயதில்
ஆயுள்வேதக் கல்லூரியில் விரிவுரையாளராகப் பணியாற்றிய மருத்துவர் சாம்பசிவ ஐயரின் மகள் ஞானகலாம்பிகை என்பவரைக் காதலித்து 1952 இல் புரட்சித் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு முருகன், கண்ணன் எனும் இரண்டு புதல்வர்கள் உள்ளனர்..சற்று விளக்கமாகக் கூருவதாயின் .
சாம்ப சிவஅய்யரின் ஞானகலாம்பிகையை காதலித்து 1952 இல் கடுகி மணம் புரிந்த இவர் களுக்கு நீண்டகாலமாக பிள்ளைபேறு கிடைக்கவில்லை .ஈற்றில் 1962 1964 களில் முருகன் ,கண்ணன் என்று இவருக்கு பிள்ளைகள் பிள்ளைகள் பிறந்தன ..
மனைவி ஞானம் இரத்தினம் இலங்கை வானொலியிலும் தேசியத் தொலைக்காட்சித் திட்டமிடல் குழுவிலும் இயங்கிய பிரபல கலை, இலக்கிய ஊடகர் ஆவார்.
இவரால்
புலவர் போற்றிசை - இவரது ஆசான் புலவர் சிவன் கருணாலய பாண்டியனாரின் மறைவையொட்டி வெளியிடப்பட்ட பாவாரம்
சத்திய விஞ்ஞானம் (சிவன் பாண்டியனாருடன் இணைந்து)
முருகவேள்
கவிதை நேரங்கள்
நாட்டிய அரங்கு - 12 நாட்டிய நாடகங்களின் தொகுப்பு
நாடக அரங்கு - 3 நாடகங்களின் தொகுப்பு:
மேகலையின் விசிறி - ஆஸ்கார் உவைல்டு எழுதிய "Lady Windermere's Fan" எனும் நாடகத்தின் மொழிபெயர்ப்பு
மன்னன் ஈடிபசு - சோபக்கிளீசு எழுதிய நாடகத்தின் தமிழாக்கம்.
ஒத்தெல்லோ (வானொலி நாடகம்)
பகவத் கீதை
போன்ற வை நூலாக்கம் பெற்றன
1937 இல் அரசப் பொது எழுத்தர் சேவை சோதனையில் தேர்ச்சி பெற்று கொழும்பு வருமான வரி அலுவலகத்தில் பணியில் அமர்ந்தார். பணியில் இருந்தவாறே தனிப்பட்ட முறையில் உயர்கல்வி கற்றார். இலண்டன் பல்கலைக்கழக இடைத்தர சோதனையில் தமிழ், சமற்கிருதம், மெய்யியல் பாடங்களை எடுத்து சித்தியடைந்தார். தொடர்ந்து தமிழ், பொருளாதாரம், மெய்யியல் ஆகிய பாடங்கள் படித்து இளங்கலைப் பட்டமும் பெற்றார்.
வருமானவரித் திணைக்களத்தில் இருந்து குடிமதிப்பு புள்ளிவிபரத் திணைக்களத்திற்கு மாற்றம் பெற்றார். 1955 இல் சுயமொழித் திணைக்களத்தில் சேர்ந்தார். இங்கு பாடநூல்களைத் தமிழில் மொழிபெயர்க்கும் பணியில் ஈடுபட்டார். இத்திணைக்களத்தினால் மேற்கொள்ளப்பட்ட கலைச்சொல்லாக்கப் பணிகளிலும் இவர் பெரும் பங்களித்துள்ளார். 1973 இல் அரச சேவையில் இருந்து இளைப்பாறினாலும், கல்வி வெளியீட்டுத் திணைக்களத்தின் கலைச்சொல்லாக்கக் குழுவில் தொடர்ந்து பணியாற்றினார். அதன் பின்னர் மார்க என்ற கல்விசார் நிறுவனத்தில் பகுதி நேர அலுவலராகச் சேர்ந்து சிறுவர்களுக்கான அறிவியல் நூல்களைத் தமிழாக்கம் செய்யும் பணியில் 1981 இல் மார்ச் 21 இல் இறக்கும் வரை ஈடுபட்டிருந்தார்.
இவர்
கவிதை, நாடகம், இசை நாடகம், நாட்டிய நாடகம் ஆகியவற்றில் பங்காற்றியுள்ளார். இவரது உரைச்சித்திரங்கள் இலங்கை வானொலியில் ஒலிபரப்பாகியுள்ளன.
பத்திரிகைகளில் இவரது கவிதைகள், கட்டுரைகள் வெளிவந்தன.
கவிஞர் முருகையனுடன் இணைந்து 'நோக்கு' என்ற பா ஏடு ஒன்றை மும்மாதங்களுக்கு ஒருமுறை வெளியிட்டு வந்தார்.
இவருக்கு விசாலாட்சி என்கிற தங்கையும் கனகசபாபதி(கனடா ) என்கிற தம்பியும் இருந்தார்கள் .கஷ்டமான குடும்பச் சூழல் .தாயார் கொடுக்கும் பணத்தை மிச்சம் பிடித்து தனது படிப்புக்கு வாசிப்புக்கு பயன் படுத்திக் கொண்டார் .
இவரது தந்தையின் உழைப்பு குடும்பத்துக்கு போதாமையாக இருந்தது .
இணுவில் கோவில் வாசலில் கந்தர் கடை மிகவும் பிரசித்தி பெற்றது அங்குதான் இவரின் தகப்பனார் ஊதியம் பெற்றார் .
இதனால் கால் நடையாகவே பள்ளி சென்று வந்தார் .
கல்வி கற்ற காலத்தில் புலவர் பாண்டியா னாரிடம் தமிழ் கற்று இன்னும் மேதாவி ஆகினார் .
புலவர் பாண்டியனாரின் புகழ் பாடும் பல நூல்களை எழுதி பதிப்பித்தார் இப்படி இவர் எழுதிய பல நூல்கள் இவரின் மறைவை தொடர்ந்து அச்சேறாமல் இருந்தன .இவரின் காதல் மனைவி ஞானாம்பிகை அவரின் ஆசைகளை நிறைவேற்றி வைத்தார்
இலங்கை வானொலி விசில் கடமை செய்த ஞானம் அவர்கள் தற்பொழுது அவுஸ்திரேலிஜாவில் இருப்பதாக அறிந்து அவருடன் தொடர்பு கொள்ள என்னால் முடியவில்லை .
இப்படியாக இணுவில் மண்ணின் மைந்தர்களை தந்த என் தாய கத்தை வணங்கி இப்பதிவை நிறைவுசெய்கிறேன்
இவரின் புகழை மன்னன் பெராயிரவரின் ஆறாம் தலை முறையாகிய முது பெரும் புலவர் இணுவையூர்
வை.க.சிற்றம்பலம் பாடல் பாடி மகிழ்வித்திருக்கிறார் .அந்த பாடலை தேடி எடுத்து உங்களுக்காக பதிவிடுகிறேன்
நன்றி
வாழ்க தமிழ்
மேலும் இவரின் துணைவியாரின் வரலாறு பிறிதாக எழுதுகின்றேன்
Manikkavasagar Vaitialingam




கருத்துகள்
கருத்துரையிடுக