சித்தன்கேணி என அழைக்கப்படும் ஊர் யாழ் நகரிற்கு வடமேற்காக 15KM தூரத்தில் வலிகாமம் மேற்கு வலயத்தில் சங்கானை பிரதேச செயலகத்திற்குட்பட்ட ஒரு கிராமமாகும்.
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
சித்தன்கேணி என்ற பெயருக்கு காரணம் என கூறப்படும் வாய்வழிக்கதை: ஒரு காலத்தில் இவ்விடத்தில் பிரபலமான சித்தர்கள் ஒன்று கூடி வழிபாடுகளை நடத்தினரெனவும் அவர்கள் இறைவனை வழிபடும் நோக்குடன் கேணி ஒன்றை அமைத்தாகவும் அதன் காரணத்தாலேயே இவ்வூருக்கு இப்பெயர் அமைந்தாகவும் கூறப்படுவதுண்டு. சித்தர்கள் அமைத்து வழிபட்டதாக கூறப்படும் அந்த பழமை வாய்ந்த கேணி தற்போதும் காணப்படுகின்றது. அக் கேணிக்கருகில் ஒரு வைரவராலயமும் அமைத்து அப் பிரதேச மக்கள் வழிபாடுகளை நடத்தி வருவதுடன் பூசாரி(வீர் சைவர் அல்லது பண்டாரிகள் ) என அழைக்கப்படும் அந்தணர்களால் முக்கால பூசை வழிபாடுகளும் இடம்பெற்று வருவது குறிப்பிடத்தக்க விடயம் ஆகும்.
இவ் ஊரில் விசம் தீண்டி யாரும் இதுவரை இறந்ததில்லை இது ஆச்சரியம்! ஆனால் உண்மை.பாம்புகளின் அட்டகாசம் இங்கு இல்லை .
சித்தர் வாழ்ந்த ஊர் என்பதால் சித்தன் பெயரைக் கொண்டுடே சித்தன் கேணி என்ற பெயர் வந்தது. சித்தனால் வெட்டப்பட்ட கேணிக்கு அடியில் விசக்கல் சித்தர்களால் தாக்கப்பட்டுள்ளது.
சித்தர்களால் சித்தன் கேணியில் தாக்கப்பட்டுள்ள விசக்கல்லு சக்தி வாய்ந்தாகயுள்ளது என்றும் இதனாலேயே இவ்வூரில் விசஜந்துக்களான பாம்பு பூரான் போன்றன தீண்டினாலும் எவரும் இறப்பதில்லை.மேலும் இந்த ஊரில் மிகக் கொடிய விடம் வாய்ந்த திரு நீலகண்டம் என்னும் தேள் நிறைய உண்டு ,பல கொடிய விசைப் பாம்புகள் சாதரணமாக உலாவரும் .
இங்கு வாழும் மக்களும் தமது ஊரில் விசம் தீண்டி யாரும் இறப்பதில்லை என உறுதிபட கூறுகின்றனர்
சித்தர்காலத்தில் சித்தர்களால் பூயிக்கப்பட்ட சிவலிங்கம் பிற் காலத்தில் ஒரு கோவில் அமைத்து பிரதிஸ்ட செய்யப்பட்டு வழிபாடு ஆற்றப்பட்டது. .இக் கோயிலே சித்தன் கேணி சிவன் கோயில்லாகும் இ;ன்று மகோஸ்சவம் நடைபெறும் பெரிய ஆலயமாக விளங்குகிறது. இது தவிர இவ்வூரின் மத்தியில் பிள்ளையார் ஆலயமும் அமைந்துள்ளது. இயக்கை எழில் நிறைந்த வயல்கள் வீதியோரத்தில் அழகிய மரங்கள் அழகிய கட்டங்கள் என சிறப்பாக உள்ள ஊர் இவ்வூர் சித்தன் வாழ்ந்ததால் சிவபூமியாகவும் புண்ணிய பூமியாகவும் திகழ்கிறது.
இங்கு ஊரின் சிறப்பை நிறைய எழுத முடியும் ,ஆனால் பலர் இந்த ஊரின் கொலை பற்றியே தகவல்களை தர முயல்வ தால் இடத்தை விட்டு நகர்ந்து கொள்கின்றேன்

கருத்துகள்
கருத்துரையிடுக