வைகுந்தவாசன்
இலங்கையில் யாழ்ப்பாண மாவட்டத்தில் அளவெட்டி எனும் ஊரில் ஏப்ரல் 15, 1920
இல்
பிறந்தார். இலங்கை அரச சேவையில் எழுத்தராகப் பணியாற்றி, அரசு எழுத்தர்களின் தொழிற்சங்கத்தில் உறுப்பினராய் இணைந்து அதன் பொதுச் செயலாளரானார். 1950களில் மக்கள் குரல் என்ற இலங்கையின் முன்னணி இதழின் ஆசிரியராகவும் பணியாற்றினார். தொழிற்சங்கவாதியாக இருந்தபோது சட்டம் பயின்று 1960 இல் இங்கிலாந்து சென்றார். பின்னர் 10 ஆண்டுகள் இலங்கை உயர் நீதிமன்ற வழக்கறிஞராக 1971 வரை பணியாற்றினார். ஐக்கிய இடதுசாரி முன்னணியின் சார்பில் இலங்கை நாடாளுமன்றத்துக்காக 1965 தேர்தலில் காங்கேசன்துறை தேர்தல் தொகுதியில் போட்டியிட்டார்
1971 இல் சாம்பியா நாட்டில் மாவட்ட நீதிபதியாகப் பதவியேற்று சென்றார். 1973, 1975 ஆம் ஆண்டுகளில் இடம்பெற்ற பொதுநலவாய நீதிபதிகளின் மாநாடுகளில் சாம்பியாவின் சார்பில் கலந்து கொண்டார். இதன் பின் ஓய்வு பெற்று இலண்டன் சென்று வழக்கறிஞராகப் பணியாற்றினார். ஆகத்து 1978 இல், இங்கிலாந்தில் பாரிஸ்டராகப் பணியாற்றியபோது நியூயோர்க்கில் நடைபெற்ற அமெரிக்க வழக்குரைஞர்கள் கழகத்தின் மாநாட்டில் பிரித்தானியாவின் பிரதிநிதிகளில் ஒருவராகக் கலந்து கொண்டார்
ஈழத்தமிழர்களின் பிரச்சனையை ஐக்கிய நாடுகள் அவையின் கவனத்தில் கொண்டு வந்து தமிழீழ தேசத்தினைத் தனிநாடாக அங்கீகரிக்குமாறு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் வியாழக்கிழமை நியூயோர்க் நகரில் ஐநா பொதுச்சபைக் கூட்டத்தில் உரையாற்றியவர்.
எப்படி என்றால் தன்னம்பிக்கையும் துணிவுமே காரணம்
ஐக்கிய அமெரிக்காவில் நியூயோர்க் நகரில் இடம் பெற்ற அமெரிக்க வழக்கறிஞர்கள் சங்க ஆண்டு மாநாட்டில் கலந்து கொள்ளவென அமெரிக்காவுக்குச் சென்றார். அதே நாட்களில் ஐக்கிய நாடுகள் கூட்டத் தொடர் இடம்பெற்றுக் கொண்டிருந்தது. இந்தக் கால கட்டத்தில் அவர் ஐக்கிய நாடுகளின் இந்தியக் குழுவுடன் பழகும் வாய்ப்பைப் பெற்றார்.
இந்தச் சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி தமிழீழத்தின் குரலை ஐநா சபையில் ஒலிக்க ஒரு சந்தர்ப்பத்தை அவர் உருவாக்கினார். 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 5 ஆம் நாள் நண்பகலில் சைப்பிரஸ் நாட்டுத் தலைவரின் ஒரு மணி நேர உரையைத் தொடர்ந்து சுரினாம் நாட்டு பிரதமரின் உரையையும் பொதுச் சபையில் 150 நாடுகளைச் சேர்ந்த 2000 பேராளர்கள் வரை கேட்டுக் கொண்டிருந்தார்கள். இவர்களில் உலக நாடுகளின் - அரசுத்தலைவர்கள், பிரதமர்கள், வெளிநாட்டு அமைச்சர்கள் எனப் பலரும் பங்கு கொண்டிருந்தார்கள்.
இந்த வேளையில் அப்போதைய இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் சாகுல் ஹமீது பேச நிகழ்ச்சி நிரலில் அறிவிக்கப்பட்டிருந்த வேளையில் தனது பேச்சை நிகழ்த்த கிருஷ்ணா வைகுந்தவாசன் திட்டம் தீட்டினார்.
உலக நாடுகளைச் சேர்ந்த உயர்மட்டத் தலைவர்கள் சுமார் 2000 பேருக்கு மேல் கூடியிருந்த அந்த உலகின் உயர்சபையில் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் எப்படி இருப்பார் என்று எவருக்குமே தெரியாத சூழ்நிலையில் ஐக்கிய நாடுகள் அவையின் பொதுச் சபைத் தலைவர் இலங்கையின் வெளிநாட்டு அமைச்சரை உரையாற்ற அழைத்த நேரத்தில் தடித்த தலை நரைத்த வைகுந்தவாசன் பேராளர் வரிசை ஒன்றிலிருந்து எழுந்து சென்று மேடையேறியபோது இலங்கையின் பிரதிநிதிகளைத் தவிர வேறுயாருமே வைகுந்தவாசனை அறிந்திருக்கவில்லை.
அன்றையதினம் பொதுச்சபைக் கூட்டத்துக்குத் தலைமை தாங்கியவர் கொலம்பியாவைச் சேர்ந்த "இன்டேல்சியோ லிவியானோ" என்பவராவார். அவரும் வைகுந்தவாசனை இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் என்றே எண்ணிக்கொண்டார். அதனால் மிக வேகமாக மேடையில் ஏறிய வைகுந்தவாசனுக்கு சிரம்தாழ்த்தி வணக்கம் செய்தார்.
இலங்கையின் வெளிநாட்டு அமைச்சர் ஐ.நாவில் பேசுவதற்குத் தனது இருக்கையை விட்டு எழும்புவதற்கு முன்னரேயே கிருஷ்ணா வைகுந்தவாசன் எழுந்து சென்று மிகவும் கம்பீரமான தொனியில் உலக சபையில் சொல்ல வேண்டிநினைத்ததைச் சொல்லி விட்டார்.அவர் சொன்னது இது தான் .
எனது பெயர் கிருஷ்ணா சிறி லங்காவுக்கும் இந்தியாவுக்கும் இடையே இருக்கும் 25 இலட்சம் மக்களைக் கொண்ட பலம் பொருந்திய தமிழீழத்திலிருந்து வந்திருக்கின்றேன். தமிழீழம் போன்ற அடக்கி ஒடுக்கப்பட்டுள்ள சிறிய தேசங்கள் உலகின் ஆக உயர்ந்த மன்றமான இந்தச் சபையில் தமது முறையீடுகளை வைக்க முடியாதென்றால் நாங்கள் எங்கேதான் போவது? தயவுசெய்து ஒரே ஒரு நிமிடம் என்னைப் பேசுவதற்கு அனுமதியுங்கள். சிறிலங்கா அரசாங்கம் தனது இனக்கொலைக் கொள்கையைத் தொடருகின்றது...என்றார்
இவ்வளவும் பேசி முடித்ததும் ஒலிவாங்கி நிறுத்தப்பட்டது. அவரைப் பாதுகாப்பு அதிகாரிகள் அங்கிருந்து வெளியேற்றி விட்டார்கள். இதைத் தொடர்ந்து அவரைச் சூழப் பெரும் எண்ணிக்கையிலான தொலைக்காட்சி ஊடகவியலாளர்களும் பத்திரிகையாளர்களும் சூழ்ந்து கொண்டார்கள். அமெரிக்காவின் நியூயோர்க் டைம்ஸ் இதழின் நிருபர் முதலில் அவரிடம் கேள்விக் கணை தொடுத்தார். "நீங்கள் உங்கள் பேச்சில் தமிழீழம் பற்றிக் குறிப்பிட்டீர்களே - இந்த நாடு உலக வரை படத்தில் எங்கே இருக்கிறது?" எனக் கேட்டார். அதற்கு வைகுந்தவாசன் பின்வருமாறு பதில் கொடுத்தார்.
“ நான் குறிப்பிடும் தமிழீழம் இந்தியப் பெருங்கடலில் தென்னிந்தியாவுக்குத் தெற்கேயும் இலங்கைக்கு வடக்கேயும் பாக்கு நீரிணையை அண்மித்ததாகவும் வங்காள விரிகுடாக் கடலை ஒரு பக்க எல்லையாகவும் கொண்டிருக்கிறது. அங்கு 25 லட்சம் தமிழ் பேசும் மக்கள் வாழ்கிறார்கள். அவர்களை இலங்கை அரசாங்கம் இனப் படுகொலைக்குள்ளாக்குகிறது. ”
இதைத் தொடர்ந்து நியூயோர்க்கில் இருந்து வெளிவரும் "இந்தியா எப்றோட்" என்ற ஆங்கில ஏட்டின் பி.பி.கூப்பர் என்பவர் வைகுந்தவாசனை விரிவான முறையில் பேட்டி கண்டு 1978 ஆம் ஆண்டு அக்டோபர் 20 இதழில் நேர்காணலை பிரசுரித்திருந்தார். மேலும் பல ஊடகவியலாளர்கள் வைகுந்தவாசனின் பேட்டிகளைத் தமது பத்திரிகைகளில் வெளியிட்டிருந்தார்கள்.
மேற்படி சம்பவத்தை விபரமாக எழுதலாம் .வாசிப்பதற்கு பலர் கஸ் டப் படுவதால் இரத்தினைச் சுருக்கமாக பதிவு செய்கிறேன் .இங்கே திடடமிடல் மற்றும் அணுகு முறை சிறப்பாக நோக்கற்பாலது .
அப்போதைய இலங்கையில் நடந்து கொண்டுருந்த கோரங்களை உலகம் அறிய வேண்டும் என்பதற்காக ஒரு தனி மனிதர் செய்த புத்திசாலித்தனமான முயற்சி இது.
அங்கீகரிக்கப்பட்ட நாடுகள், பட்டியலில் உள்ள தலைவர்கள், இது போக தேர்ந்தெடுக்கப்பட்ட பார்வையாளர்கள் கொண்ட ஐக்கிய நாட்டு சபை கூட்டத்தின் ஒரு தமிழர் ஆங்கிலேய கணவான் போல் உள்ளே நுழைகிறார்.
எந்த அனுமதி சீட்டும் அவரிடம் இல்லை. அவர் அழைப்பாளர் பட்டியலிலும் இல்லை. எந்த நாட்டின் சார்பாளர்களின் பட்டியலிலும் இல்லை.
ஆனால் எப்படியும் உள்ளே நுழைந்து உரையாற்றி "தமீழழம்" என்ற வார்த்தையை பதிவு செய்து விட வேண்டும். மொத்த நாட்டு தலைவர்களுக்கும் தெரிவித்து விட வேண்டும். பின்னால் வரும் விளைவுகளை பிறகு பார்த்துக்கொள்ளலாம் என்று முடிவோடு உள்ளேயும் நுழைந்து விட்டார்.
ஒரு வாரமாக வாசலின் ஒரு ஒரமாக நின்று மொத்த ஐ.நா இயக்கத்தையும், அனுமதிக்கும் முறைகளையும் வெளியில் நின்று கொண்டு பார்த்துக்கொண்டு இருந்தார்.
1978 அக்டோபர் 5 பகல்பொழுது.,அவர் அணிந்துருந்த கோட் சூட், கையில் வைத்துருந்த சிறிய கோப்புகள் அடங்கிய சூட்கேஸ் போன்ற மொத்த அவருடைய தோற்றமும் ஒரு நாட்டின் பிரதிநிதி போல் தோற்றமளித்த காரணத்தால் வாசலில் நின்றவர்களின் பார்வையில் இருந்து எளிதாக தப்பி உள்ளே நுழைந்து விட்டார்.
அவர் உள்ளே நுழைந்த நேரம் மதிய இடைவேளை உணவுக்கான நேரம் நெருங்கிக்கொண்டு இருந்தது.
ஐ.நா. பொதுப்பேரவையில் ஒன்றன் பின் ஒன்றாக ஒவ்வொரு நாட்டு பிரதிநிதிகளும் மேடையேறி உரையாற்றிக்கொண்டுருந்தனர். சைப்ரஸ். அதற்கடுத்து ஸ்ரீலங்கா வெளியுறவுத்துறை அமைச்சர் வந்து உரையாற்ற வேண்டும்.
ஸ்ரீலங்கா வெளியுறவு அமைச்சருக்கான அழைப்பு மேடையில் இருந்து அழைத்த போது எவரும் சற்றும் எதிர்பாரா தருணத்தில் மேடையில் ஏறியவர், ஒலிப்பெருக்கி முன் நின்ற உரையாற்றத் தொடங்கினார்.
"பேரவைத் தலைவர் அவர்களே, உலகத் தலைவர்களே!
அருள் கூர்ந்து என்னை ஒரு மணித்துளி பேசுவதற்கு அனுமதியுங்கள்.
ஸ்ரீலங்காவில் தமிழ் ஈழம் போன்ற ஓடுக்கப்படும் சிறுபான்மை மக்களை கொண்ட நாடுகள், உலக நாடுகளின் உச்சப் பேரவையான இங்கே எங்கள் இன்னல்களைக் கூறாமல் வேறு எங்கே போய் எடுத்துக் கூறுவது?
என் பெயர் கிருஷ்ணா என்ற வைகுந்த வாசன். இந்தியாவிற்கும் ஸ்ரீலங்காவிற்கும் இடையே உள்ள 35 லட்சம் மக்கள் தொகையைக் கொண்ட "தமிழீழம்" என்ற நாட்டில் இருந்து பிரதிநிதியாக வந்துருக்கின்றேன்.
ஸ்ரீலங்கா அரசு சிறுபான்மை இனத்தை துன்புறுத்தி ஒடுக்கும் கொள்கையைத் தொடர்ந்து கடைபிடித்து வருகிறது. தனிநாடாக வாழ்வதற்கு எங்களுக்குள்ள உரிமையை நாங்கள் பயன் படுத்துவதற்கு அறிவித்துள்ளோம்.
தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பகுதியில் சிங்களர் உருவாக்கும் வனமுறைப் போராட்டங்கள் மிகுந்த இன்னல்களை எங்களுக்கு உருவாக்கிக் கொண்டுருக்கிறது.
உலகத் தலைவர்களாகிய நீங்கள் இதில் தலையிட்டுத் தீர்வு காணாவிட்டால், நாளை எங்கள் பிரச்சனையும் பாலஸ்தீன விடுதலை இயக்கம் போல் சைப்ரசு போராட்டம் போல, உருவாகும். உருவெடுக்கும்."
ஆங்கிலத்தில் மடமடவென்று தெள்ளத்தெளிவாக சுருக்கமாக மிக விரைவாக உரையாற்றி முடித்த போது மிகப் பெரிய நிசப்தமும் தொடர்ந்து சலசலப்பும்.
நிமிடத்திற்குள் உரையாற்றிய வேகமும், தெளிந்த ஆங்கில வார்த்தைகளும் சபையை புரட்டிப்போட்டது. பணியாளர் ஓடிவந்து ஒலிப்பெருக்கியை நிறுத்துவதற்கு முன் தன்னுடைய உரையை முடித்து இருந்தார். இலங்கையின் வெளியுறவு அமைச்சர் வந்து சேர்வதற்குள் தான் பேச விரும்பியதை முழுமையாக சொல்லிவிட்டார்.
இதுவரையிலும் அங்கே அமர்ந்து இருந்த
இந்திரா காந்தி உடன் தலைவர்களுக்கும் இந்த "தமிழீழம்" என்ற தெரியாத வார்த்தையை அவர்களின் உதடுகள் உச்சரித்த போது காவலர்கள் தன்னை நோக்கி வருவதற்குள் மின்னலென வாசல் புறம் ஓடி மறைந்தார். பிறகு இதை பெரிதுபடுத்தாமல் விட்டுவிட்டார்கள்.
அப்போது நடந்த இந்த திடீர் குறுக்கீட்டை, பன்னாட்டு வானொலிகளும், தொலைக்காட்சிகளும், லண்டன் பிபிசி வானொலியும் ஒலிப்பரப்பின. நியூயார்க்கில் இருந்து வெளிவரும் "INDIA ABROAD " என்ற தினசரியில் செய்தியாளர் திரு. கூப்பர் என்பவர் பின்வருமாறு எழுதினார்.
"தமிழீழ விடுதலை முழக்கத்தை முதன் முதல் ஐ.நா. பேரவையில் ஒலித்த திரு. வைகுந்தவாசனின் தீரச்செயல் மிகமிகப் பாராட்டத் தக்கதே"
1978 இற்குப் பின்னர் அதாவது ஐ.நா வில் அத்து மீறிப் பிரவேசித்து பாதுகாப்பு அதிகாரிகளால் வெளியேற்றப்பட்டு ஒரு சர்ச்சைக்குரியவரான பின்னர், 1980 இல் திருமதி இந்திரா காந்தியை புது டெல்லி சென்று சந்தித்திருக்கிறார் திரு வைகுந்தவாசன்.
தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் இலண்டன் கிளையின் செயலாளராகப் பணியாற்றினார்என்பது யாவரும் அறிந்ததே .
நாடுகடந்த தமிழீழ அரசை நிறுவும் முயற்சிக்கு ஆதரவு தேடும் பொருட்டு இந்தியா சென்றிருந்த போது 1982 நவம்பர் 5 இந்திய அரசினால் நாடு கடத்தப்பட்டு இங்கிலாந்துக்குத் திருப்பி அனுப்பப்பட்டார்.
நான் கண்ட நவசீனா
"ஐ.நா வில் தமிழன் - என் முதல் முழக்கம்!"என்ற இரு நூல்களை எழுதியுள்ளார்





கருத்துகள்
கருத்துரையிடுக