காதலர் தினம்

^^^^^^^^^^^^^^^^^
என்பது மக்கள் பலராலும் பிப்ரவரி 14 அன்று கொண்டாடப்படும் ஒரு கொண்டாட்ட நாளாகும். இந்நாளில் காதலர்கள் தங்கள் காதலை தெரிவித்துக் கொள்வது மரபாக இருக்கிறது. வாழ்த்து அட்டைகள், இனிப்புகள், மலர்கள் ஆகியவற்றை இந்நாளில் காதலர்கள் பரிமாறிக் கொள்கிறார்கள். வேலன்டைன் என்ற பெயருடைய இரு கிறித்துவத் தியாகிகளின் பெயர்களை அடுத்து இந்நாள் வேலன்டைன் நாள் என்றும் காதலர்களே பெரும்பாலும் இந்நாளைக் கொண்டாடுவதால் காதலர் நாள் என்றும் காதலர் தினம் என்றும் அழைக்கப்படுகிறது. காதலர்கள் தவிர பலரும் தங்கள் அன்பை தெரிவித்துக் கொள்ளும் நாளாகவும் இது இருப்பதால் அன்பர்கள் நாள் என்றும் அழைக்கப்படுகிறது.
இது ஒரு வியாபர தந்திரம் என்பது கீழைதேசத்தோர் புரிந்து கொள்ளவில்லை
மேற்கு கத்தயோரின் வியாபார தந்திரத்தை உடனடியாக புரிந்து கொண்ட சீன
காதலர் தினப் பரிசுப்பொருட்களை உற்பத்தியாக்கி மேலை நாடுகளுக்கு மலிவாக ஏற்றுமதி செய்து முதல் தர இடத்தைப் பிடித்துக் கொண்டது
பிப்ரவரி 14 தேதியின் கீழ் முற்காலத்திய தியாகிகள் பட்டியலில் வாலண்டைன் என்று குறிப்பிடப்பட்டுள்ள மூன்றாவது புனிதர் ஒருவர் பற்றியும் கத்தோலிக்க கலைக்களஞ்சியம் குறிப்பிடுகிறது. அவர் தன்னுடன் இருந்த பல கூட்டாளிகளுடன் சேர்ந்து ஆப்ரிக்காவில் புதைக்கப்பட்டார், ஆனால் இதற்குமேல் இவரைப் பற்றி வேறு எந்தத் தகவலும் இல்லை,
வாலண்டைனால் தாக்கம் கொண்டு அவருடன் விவாதம் செய்த கிளேடியஸ் அவருடைய உயிரைக் காப்பாற்றும் விதமாக அவரை ரோமானிய புறச்சமயத்திற்கு மாற்ற முயற்சி செய்துள்ளார். அதை மறுத்த வாலண்டைன் அதற்குப் பதிலாக கிளேடியஸை கிறித்துவ மதத்திற்கு மாற்ற முயற்சி செய்தார். இதன் காரணமாக அவர் மரண தண்டனை விதிக்கப்பட்டார். அவரது மரண தண்டனைக்கு முன்பாக, அவரது சிறைக் காவல் அதிகாரியின் குருட்டு கண்களைக் குணப்படுத்தும் அற்புதத்தை செய்துகாட்டியதாகக் கூறப்படுகிறது
இதனைக் கொண்டாடவே இந்த திகதி அறிவிக்கப்பட்டது
இதுவே உண்மை
ஆனால் நாம் வசந்த விழா என்ற ஒரு தினத்தைக் கொண்டாடியிருக்கிறோம்
இது பற்றி தகவல்கள் தெரிந்தோர் கூறினால் நன்றாக இருக்கும்


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




திருநீற்றின் மகிமை
^^^^^^^^^^^^^^^^^^
முடி சார்ந்த மன்னரும் மற்றும் உள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பலாய் வெந்து மண்ணாவதும் கண்டு பின்னும் இந்த
பிடி சார்ந்த வாழ்வை நினைப்பது அல்லால் பொன் அம்பலவர்
அடி சார்ந்து நாம் உய்ய வேண்டும் என்றே அறிவார் இல்லையே
மரணம் பற்றிய நினைவு வாழ்வின் மீதான பற்றைக் குறைக்கிறது. வாழ்வின் எதார்த்தத்தைப் புரிய வைக்கிறது.
அதனைப் புரிந்துகொண்ட மனிதன் கிடைத்திருக்கும் குறுகிய வாழ்வை சரியான முறையில் வாழவே விரும்புவான்.
அதனால்தான் ஆன்றோர்கள் தம் தோழர்களுக்கு மீண்டும் மீண்டும் மரணம் குறித்து நினைவூட்டிக் கொண்டேயிருந்தார்கள்.


%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


சுடுகாட்டிலோ, இடு காட்டிலோதான் நாம்
அனைவரும் வித்தியாசமின்றி சந்திக்கிறோம்
அதற்குள் அடிதடி சண்டைகள் எதற்கு ?
மண் ஆசை பெண் ஆசை பொன் ஆசை
மனமே
ஏன் ?
சுடலை ஞானம் என்பது இது தானே
சமரசம் உலாவும் இடமே
நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே...!
சமரசம் உலாவும் இடமே
நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
சாதியில் மேலோர் என்றும்
தாழ்ந்தவர் கீயோர் என்றும் பேதமில்லாது
எல்லோரும் முடிவில் சேந்திடும் காடு
எல்லோரும் முடிவில் சேந்திடும் காடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
தொல்லையின்றியே தூங்கிடும் வீடு
உலகினிலே இதுதான்
நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
ஆண்டி எங்கே? அரசனும் எங்கே?
ஆண்டி எங்கே? அரசனும் எங்கே?
அறிஞ்சன் எங்கே அசடனும் எங்கே
அறிஞ்சன் எங்கே அசடனும் எங்கே
ஆவிப்போனபின் கூடுவார் இங்கே
ஆவிப்போனபின் கூடுவார் இங்கே
ஆகையினால் இதுதான்
நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
சேவைசெய்யும் தியாகி சிங்காரபோகி
சேவைசெய்யும் தியாகி சிங்காரபோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
ஈசன் பொற்பாதம் தன்னை நாடிடும் யோகி
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
எல்லோரும் இங்கே ஒன்றாய் உறங்குவதாலே
உண்மையிலே இதுதான்
நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
சமரசம் உலாவும் இடமே
நாம் வாழ்வில் காணா சமரசம் உலாவும் இடமே
ரம்பையின் காதல் என்ற தமிழ் திரைப்படத்தில் ஒரு அருமையான பாடல்இது
அடிசேர் முடியினர் ஆகி அரசர்கள் தாம் தொழ
இடிசேர் முரசங்கள் முற்றத்து இயம்ப இருந்தவர்
பொடிசேர் துகளாய்ப் போவர்கள் ஆதலில் நொக்கெனக்
கடிசேர் துழாய் முடிக்கண்ணன் கழல்கள் நினைமினோ
என்கிறார் நம்மாழ்வார்
முடிசார்ந்த மன்னரும் மற்றுமுள்ளோரும் முடிவில் ஒரு
பிடி சாம்பராய் வெந்து மண்ணவதுங் கண்டு பின்னும் இந்தப்
படிசார்ந்த வாழ்வை நினைப்பதல்லால் பொன்னின் அம்பலவர்
அடிசார்ந்து நாம் உய்யவேண்டும் என்றே அறிவாரில்லையே.
ஆண்ட அரசர்களும் இறுதில் இறந்த பின்னர் எரிக்கப்பட்டு ஒரு கைப்பிடி சாம்பல் ஆகிவிடுவர். இதைப் பார்த்த பின்னரும், பலரும் போகும் வழிக்குப் புண்ணியம் சேர்க்காமல், மேலும் மேலுமாசைகளைப் பெருக்கி வாழ மக்கள் விரும்புகின்றனர். திருத் தில்லை அம்பலத்தில் ஆடும் இறைவனின் அடிகளை நாடும் நாட்டம் வரவில்லையே என்கிறார் பட்டனத்தார்
பிறக்கும்பொழுது கொடுவந்ததில்லை
பிறந்து மண்மேல்
இறக்கும்பொழுது கொடுபோவதில்லை
இடை நடுவில்
குறிக்கும் இச்செல்வம் சிவன் தந்ததென்று கொடுக்கறியா
திறக்கும் குலாமருக்கு
என் சொல்லுவேன்?
என்கிறார் பட்டனத்தார்
கட்டி அணைத்திடும் பெண்டீரும் மக்களும்
காலத்தச்சன்
வெட்டி முறிக்கும் மரம் போல் சரீரத்தை வீழ்த்திவிட்டால்
கொட்டி முழக்கி அழுவார்
மயானம் குறுகிய அப்பால்
எட்டி அடி வைப்பரோ இறைவா?
மனையாளும் மக்களும்
வாழ்வும் தனமும் தன் வாயில் மட்டே
இனமான சுற்றம் மயானம் மட்டே,
வழிக்கு ஏது துணை ?
தினையாமனவு எள் அளவாகினும்
முன்பு செய்த தவம்
தனை ஆள என்றும்
பரலோகம் சித்திக்கும்
இறைவன் இருக்கிறான் அவன் ஏகனே
பாதைகள் மாறுகின்றன
ஆனால் பயணங்கள் மாறுவதில்லை
ஆதலால் ஒன்று என்று இரு; தெய்வம் உண்டு என்று இரு
உயர் செல்வம் எல்லாம் அன்று என்று இரு;
பசித்தோர் முகம் பார்
நல் அறமும் நட்பும் நன்று என்று இரு
; நடு நீங்காமலே நமக்கு இட்ட படி
என்றுன்றிரு;
மனமே உனக்கு உபதேசம் இதே!
ஆகவே நன்மை செய்ய
எம்மை பழக்கிக் கொள்வோம்

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


நாம் எதிர்பார்க்காதவற்றையும் வாழ்வு கொண்டு வந்துவிடுகிறது. எதிர்கொள்ளும் புதுப்புது அனுபவங்கள் சில சமயங்களில் நம் கண்ணோட்டங்களைக்கூட மாற்றிவிடுகின்றன.
கனவுகள் எப்படி தர்க்கத்திற்கு அப்பாற்பட்டவையோ அப்படித்தான் நம் வாழ்க்கையில் நிகழும் சில நிகழ்வுகளும். அப்படிப்பட்ட நிகழ்வுகளை ஒவ்வொருவரும் மீண்டும் மீண்டும் எதிர்கொள்ளத்தான் செய்வார்கள்.
வாழ்வு அதன் போக்கில் சென்று கொண்டேயிருக்கிறது. நாம் வலுக்கட்டாயமாக அதன் போக்கில் இழுத்துச் செல்லப்பட்டுக் கொண்டிருக்கிறோம்.

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%


மனிதன் களிமண் போன்றவன்
^^^^^^^^^^^^^^^^^^^^
மனிதர்களில் ஒவ்வொருவரையும் ஒருவகையில் அவர் இன்ன இயல்பினர், அவருக்கு இன்னின்ன தனித்தன்மைகள், பலவீனங்கள் இருக்கின்றன, அவர் இப்படித்தான் செயல்படுவார் என்றெல்லாம் மிக எளிதாக வகைப்படுத்திவிடலாம்.
இந்த வகையில் நாம் அவர்களை முழுமையாகப் புரிந்து கொள்ளலாம். அவர்களின் செயல்பாடுகளை சரியாகக் கணிக்கலாம். ஆனால் இன்னொரு வகையில் ஒவ்வொருவரும் ஒரு தனி உலகம். சில சமயங்களில் அவர்கள் நம் கணிப்புகளை, எதிர்பார்ப்புகளை பொய்யாக்கி விடுவார்கள்.
அவர்களின் சில செயல்பாடுகள் நம்மை வியப்பின் உச்சிக்கு கொண்டு செல்லலாம் அல்லது பேரதிர்ச்சியில் ஆழ்த்தலாம். இந்த வகையில் மனிதன் ஒரு புரியாத புதிர்.ஆனாலும் புதுமை செய்ய வைக்கலாம்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%




கலைகள் எல்லாம் உயர் மனிதப் பண்புகளை நம்முள் விதைக்கக்கூடியவை. எதிர்மறை மனிதப் பண்புகளை நம்மிடமிருந்து அகற்றுவதற்கு கலை, இலக்கியங்கள் அவசியத் தேவை. உண்மையில், கலைகளின் செயல்பாடும் நல்ல மனிதர்களை உருவாக்குவதுதான் என்பதில் எனக்கு முழு நம்பிக்கை உண்டு.
எனவே ஒவ்வொருவரும் இந்தியாவில் சென்று கலைகளை கற்று வர முன் வரல் வேண்டும் .thiru வீரமணி அய்யரின் கூற்று .அதை நிறைவேற்ற இளைஞர்கள் திட சங்கற்பம் கொள்ளல்வேண்டும்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%





கோவில்கள் குளறுபடித்தலங்கள் ஆகக் கூடாது .
ஊரிலே கோவிலுக்கு காணி தானம் பண்ணியவன் ,பாடசாலைக்கு காணியை தானம் பண்ணியவன் என்று உரித்துடையவர்கள் இருக்க
அவர்களை ஒதுக்கி வைத்து விட்டு ,முன்னாலே வந்த செவியை பின்னாலே வந்த கொம்பு மறைப்பதாக பல செவி வழி செவ்விகள் கிடைக்கப்ப் பெற்றேன் .
உண்மை தான் என்பது ஊர்ஜிதமானவையே .
.இப்படியான சம்பவங்கள் இனிமேலும் நடக்காமல் நல்லதையே செய்யுங்கள்

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%





தார்மீகப் போராட்டங்கள்
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
தண்டி (Dandi), இந்தியாவின், குஜராத் மாநிலத்தின் நவ்சாரி மாவட்டத்தில் , நவ்சாரி நகரை ஒட்டி அமைந்த கடற்கரை கிராமம்.
1930 ஆம் ஆண்டின் உப்பு சத்தியாக்கிரகத்தின் போது மகாத்மா காந்தி, மிதுபென் பெட்டிட் மற்றும் சரோஜினி நாயுடு
1930ஆம் ஆண்டில், உப்பு மீதான வரியை நீக்கக் கோரி, பிரித்தானிய அரசுக்கு எதிரான உப்புச் சத்தியாகிரகப் போராட்டத்தின் ஒரு பகுதியாக மகாத்மா காந்தியடிகள் தலைமையில், அகமதாபாத் நகரத்திலிருந்து தண்டி கடற்கரை கிராமம் வரை தொடர்ந்து 24 நாட்கள் ஆயிரக்கணக்கான தொண்டர்களுடன் ஊர்வலமாக நடந்து, தண்டி கடற்கரையில் உப்பை அள்ளினார்






%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%



















கருத்துகள்