அஷ்ட பந்தனம்
12 ஆண்டுகளுக்கு ஒருமுறை சிலைக்கு அஷ்டபந்தனம் சாத்தப்பட்டு வருகிறது. கோவில் அமைவிடம், பூஜைகள் எவ்வாறு நடத்த வேண்டும் என்பது குறித்து ஆகமவிதிமுறைகள் இருக்கின்றன. பொதுவாக கோவிலை கட்டி முடித்த பிறகு, சிலை பிரதிஷ்டை செய்யப்படும். ஒரு பீடத்தின் மீது சிலையை வைக்கும்போது அது, அசையாமல் இருப்பதற்காக, அஷ்டபந்தனம் என்ற 8 விதமான பொருட்கள் கலந்த மருந்து சாத்தப்படும்.
அந்த மருந்து, சிலையை பீடத்துடன் அழுத்தமாக இணைத்து பிடித்துக்கொள்ளும். அஷ்டபந்தன மருந்து கலவை தயாரிப்பதற்கு, கொம்பரக்கு, சுக்கான் தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, வெண்ணெய் ஆகிய 8 பொருட்கள் தேவைப்படுகின்றன.
இந்த 8 பொருட்களையும் குறிப்பிட்ட வரிசை முறைப்படி ஒவ்வொன்றாக சேர்த்து, உரலில் இட்டு குறிப்பிட்ட பதம் வரும்வரை இடிக்கப்படும். மருந்துகளை கலந்து இடிக்கும் உரல், உலக்கை வைக்கும் பாத்திரங்கள் ஆகியவை தூய்மையாக இருப்பதுடன், அவற்றை தயாரிப்பவர்கள் உடல் மற்றும் மன தூய்மையோடும், இறை சிந்தனையோடும் இருக்க வேண்டும். மேலும் பொருட்களின் அளவு, இடிக்கும் நேரம் ஆகியவையும் ஆகம விதிப்படி கடைபிடிக்கப்படுகிறது.
கடவுளின் மூர்த்தங்களை பிரதிஷ்டை செய்யும்போது அவை இம்மியளவுகூட அசையாமல் நிலை நிறுத்துவது அவசியமாகும். அதற்கான மருந்துதான் அஷ்டபந்தனம் என்று அழைக்கப்படுகிறது, அதாவது எட்டு வகையான பொருட்களால் பந்தனம் செய்வது. அவை என்னென்ன ?
'கொம்பரக்குச் சுக்கான்தூள் குங்கிலியம் கற்காவி
செம்பஞ்சு சாதிலிங்கம் தேன்மெழுகு - தம்பழுது
நீக்கி எருமைவெண் ணெய்கட்டி நன்கிடித்து
ஆக்கல் அட்டபந்தனம் ஆம்'
அதாவது கொம்பு அரக்கு, சுக்கான்தூள், குங்கிலியம், கற்காவி, செம்பஞ்சு, சாதிலிங்கம், தேன்மெழுகு, எருமை வெண்ணெய் ஆகியவையே அவை
இவற்றைப் பதமாக கிட்டித்து சரியான பதத்தில் மருந்தாகத் தயாரிப்பார்கள். பொதுவாக அஷ்டபந்தன முறை பின்பற்றப்பட்டாலும் சில தலங்களில் தங்கத்தைக் கொண்டு சொர்ணபந்தனமும் செய்யப்படுகிறது.இவை குறிப்பிட்ட காலம் வரையே கெட்டித்து நிற்கும்.இல்லாவிடில் சிலைகள் ஸ்திரமில்லாமல் ஆட ஆரம்பிக்கும் எனவே 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை கும்பாபிஷேகம் நடக்கவேண்டும்.
கோயிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்வார்கள். ஒரு பீடத்தின்மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, பீடத்திலிருந்து அகலாமல் இருப்பதற்காக, `அஷ்ட பந்தன மருந்து' சாத்துவார்கள். இந்த அஷ்ட பந்தன மருந்து, தெய்வ மூர்த்தத்தைப் பீடத்துடன் அழுந்தப் பிடித்துக்கொள்ளும்.
இந்த மருந்தை 100 ஆண்டுகள் வரை கெடாதவாறு தயாரிக்க முடியும். ஆனாலும், 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாகத் தயாரித்து, தெய்வ மூர்த்தங்களுக்கும் பீடத்துக்கும் இடையில் சாத்தி, கும்பாபிஷேகம் செய்வதென்பது நடைமுறையில் இப்போது வழக்கமாகியுள்ளது.
கும்பாபிஷேக பத்திரிகைகளில் ‘அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்து விட்டு ‘அது என்ன அஷ்டபந்தனம்?’ என்று பலருக்கும் மனதில் கேள்வி எழுந்தது .. அது குறித்து இது என்ன வடமொழி கைகலப்பு என்று பலர் கூறுவது வேதனையே .
இன்று வெளி நாட்டில் வாழும் நாங்கள் அந்தந்த நாட்டு மொழிகளையும் கற்று கலந்து பகிர்ந்து பேசி தமிழே இல்லாமல் பேசுவதைப் பார்க்கிறேன் .ஆனால் தமிழ் தான் ஆதி மொழி என்று பதிவு செய்யும் உங்களுக்கு வடமொழியும் தமிழில் இருந்து தான் உதயமானது என்ற உண்மை விளங்காமல் இருக்கிறதே .அது தான் நீங்கள் சிந்தித்துப் பார்க்கவேண்டும் .அன்றாட வாழ்வில் வேறு மொழியின் தாக்கங்கள் தவிர்க்க முடியாத ஓன்று .இஸ்ரவேல் காரனைப்போல தன் இனத்து மொழியை அட்சர சுத்தியோடு பேச உங்களால் ஒரு போதும் முடியாது .அப்படி பேசப்படும் நாடகங்களையோ சீரியல்கலையோ பார்க்காமல் இருக்க முடியாத நீங்கள் .எப்படி தமிழ் பற்று உள்ளவர்கள் என்று கூற முடியும் .எந்த ஒரு சிறு பிரச்சனைகளையும் பூதாகாரமாக்கத் தெரிந்த நீங்கள் குடும்பத்திலும் சரி வெளியிடங்களிலும் சுமுகமாகப் பேசி தீர்த்துக் கொண்டீர்களானால் எவ்வளவோ பிரச்சனைகள் தவிர்க்கப்பட்டிருக்கும்
எல்லோரும் மணியை கழுத்தில் கட்டிக் கொண்டு மணிகட்டிய பூனைகளாக அடக்கமில்லாமல் அநாகரீகமாக நடந்து கொள்கிறோம் .ஒற்றுமையே இல்லாமல் கூச்சல் போட்டு பண்பாடு அவையடக்கம் இல்லாமல் ஆதிவாசிகளாக கற்காலத்தை நோக்கி போகிறோம் என்பது தெளிவு .
விவாதங்கள் பட்டிமன்றங்கள் முறைகள் எவ்வளவோ நன்மை பயக்கும் .முயன்று பாருங்கள்
சைவ சமயத்து தமிழன் இஸ்லாமியனாகவும் கிரித்தவனாகவும் பலபிரிவு சார்ந்த மதங்களையும் தழுவி வருகிறான் .
ஆனாலும் அவன் தமிழனே .அப்படி சிந்தித்தால் எங்களுக்குள் பேதங்கள் வரநியாயமில்லை (வேறு ஒரு பதிவில் பார்ப்போம் )
அமைக்கப்பட்ட கோவில்களில், சம்பந்தப்பட்ட தெய்வ திருமேனிகளின் மீது தெய்வ சக்திகளை எழுந்தருளும்படி செய்வதற்கான வழிமுறைகளை செய்வது ‘கும்பாபிஷேகம்’ ஆகும். அது ஆவர்த்தம், அநாவர்த்தம், புனராவர்த்தம், அந்தரிதம் என்ற பொதுவான நான்கு வகைகளில் உள்ளது.
‘ஆவர்த்தம்’ என்பது புதிய கோவிலில் இறைவனின் திருவுருவத்தை அமைப்பதாகும். ‘அநாவர்த்தம்’ என்பது இயற்கை சீற்றங்களால் சேதமடைந்த கோவில்களை புதுப்பித்து, மறு பிரதிஷ்டை செய்வதாகும். ‘புனராவர்த்தம்’ என்பது காலத்தால் சிதிலமடைந்த கோவில்களை புதுப்பித்து புனர் நிர்மாணம் செய்வதாகும். ‘அந்தரிதம்’ என்பது மனிதர்களின் செயல்களால் ஏற்பட்ட குறைபாடுகளை சரி செய்து கோவிலை மீண்டும் புதுப்பிக்கும் பணியைச் செய்வதாகும்.
பல நேரங்களில் கும்பாபிஷேக பத்திரிகைகளில் ‘அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம்’ என்று குறிப்பிடப்பட்டிருப்பதை பார்த்திருப்போம். ‘அது என்ன அஷ்டபந்தனம்?’ என்று பலருக்கும் மனதில் கேள்வி எழுந்திருக்கலாம்.
கோவில் எழுப்புவதற்கான இடத்தைத் தேர்வு செய்வதில் இருந்து, ஆலயம் எப்படி அமைய வேண்டும் என்பது வரை பல ஆகம விதிமுறைகள் இருக்கின்றன. கோவிலைக் கட்டி முடித்த பிறகு, தெய்வ மூர்த்தங்கள் பிரதிஷ்டை செய்யப்படும். ஒரு பீடத்தின் மீது தெய்வ மூர்த்தத்தை வைத்து, அந்த இடத்தில் இருந்து சிறிதும் அசையாமல் இருப்பதற்காக, அஷ்டபந்தனம் என்ற எட்டு விதமான பொருட்கள் கலந்த மருந்து சாற்றப்படும். அந்த மருந்து, தெய்வ திருமேனியை பீடத்துடன் அழுத்தமாக இணைத்து பிடித்துக்கொள்ளும். பொதுவாக, 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை தெய்வ மூர்த்தங்களுக்கு அஷ்டபந்தனம் சாற்ற வேண்டும் என்று ஆகம விதிகள் குறிப்பிட்டுள்ளன.
உயிர்கள் அனைத்தும் நலமாக இருக்க வேண்டுமென்றால், கோவில்களில் உள்ள மூல தெய்வ மூர்த்தம், அதன் ஆதார பீடத்தில் ஆடாமல் அசையாமல், நிலைத்து நிற்க வேண்டும். அப்படி இருந்தால்தான் மக்களுக்கு நன்மைகள் நடக்கும். மூல மூர்த்தி முதல் அனைத்து தெய்வ திருமேனிகளும் பீடத்தில் நிலையாகவும், அசையாமலும் இருக்க வேண்டும் என்பதன் அடிப்படையில்தான் ‘அஷ்டபந்தன மருந்து’ சாற்றப்படுகிறது.
அஷ்டபந்தன மருந்து கலவை தயாரிப்பதற்கு, ‘கொம்பரக்கு’, ‘சுக்கான் தூள்’, ‘குங்கிலியம்’, ‘கற்காவி’, ‘செம்பஞ்சு’, ‘சாதிலிங்கம்’, ‘தேன்மெழுகு’, ‘எருமை வெண்ணெய்’ ஆகிய எட்டு பொருட்கள் தேவைப்படுகின்றன. இந்த எட்டுப் பொருட்களையும் குறிப்பிட்ட வரிசை முறைப்படி ஒவ்வொன்றாக சேர்த்து, உரலில் இட்டு தக்கபடி இடித்து, குறிப்பிட்ட பதம் கொண்டதாக தயாரிக்கப்படும். பதமாக உள்ள மருந்துதான் ஆதார பீடத்தில் இருக்கும் இறைவனின் திருமேனியை நிலைநிறுத்தும் வகையில் பிடிப்புடன் செயல்படும்
மருந்துகளைக் கலந்து இடிக்கும் பாத்திரங்கள், உரல், உலக்கை ஆகியவை தூய்மையாக இருப்பதுடன், அவற்றை தயாரிப்பவர்கள் உடல் மற்றும் மனத் தூய்மையோடும், இறை சிந்தனையோடும் இருக்க வேண்டும் என்பதும் ஆன்மிக நியதியாகும். எந்தெந்த பொருட்களை எந்தெந்த அளவு சேர்க்க வேண்டும், எவ்வளவு நேரம் இடிக்க வேண்டும் என்பதற்கான கால அளவுகளும் மருந்து தயாரிப்பில் கடைப்பிடிக்கப்படுகிறது.
சுமார் 100 ஆண்டுகள் வரை கெடாமல் இருக்கும் விதத்தில் அஷ்டபந்தன மருந்தை தயாரிக்கும் வழிமுறையும் இருப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும், ஒரு மாமாங்கம் என்ற 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புதிதாக மருந்து தயாரித்து, அதை தெய்வ மூர்த்தங்களுக்கும், பீடத்துக்கும் இடையில் சாற்றப்பட்டு கும்பாபிஷேகம் செய்வது இன்றைய காலகட்ட நடைமுறையில் இருந்து வருகிறது. Manikkavasagar Vaitialingam
கருத்துகள்
கருத்துரையிடுக