முகூர்த்தநேரம் முடிவதற்குள் தாலியை கட்டுங்கோ என்றால் 1 1/2 மணி நேரத்துக்குள் செய்வது என்பது பொருள் .
அன்றைய தமிழன் முட்டாள் அல்ல .ஆனால் இன்றைய தமிழனோ ஒரு நாள் முழுவதும் வைத்து நேரத்தை இழுப்பார்கள்
கொஞ்சம் விளக்கமாக சிந்திப்பதற்கு இப்பதிவு
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ஒரு சாமம் என்பது இரண்டு முகூர்த்தங்கள் (1 1 /2 x 2 = 3 மணி நேரம்).
பகலுக்கு 4 சாமங்கள் இரவுக்கு 4 சாமங்கள். ஒரு நாளுக்கு 8 சாமங்கள்
ஒரு முகூர்த்தம் என்பது நேரம்,
எனவே முகூர்த்தநேரம் முடிவதற்குள் தாலியை கட்டுங்கோ என்றால் 1 1/2 மணி நேரத்துக்குள் செய்வது என்பது பொருள் .
அன்றைய தமிழன் முட்டாள் அல்ல .ஆனால் இன்றைய தமிழனோ ஒரு நாள் முழுவதும் வைத்து நேரத்தை இழுப்பார்கள்
சாமம் என்பது ஒரு கால அளவீடு.அது இரவு நேரத்திற்கு மட்டும் உரியது அல்ல .
சாமம் என்பது பகலிலும் இரவிலும் உண்டு.
60 நொடி = 1 வினாடி
60 வினாடி = 1 நாழிகை ( 1 நாழிகை = 24 நிமிடம் )
71/2 நாழிகை = 1 சாமம் .
8 சாமம் = 1 நாள் .
7 நாள் = 1 வாரம் .
15 நாள் = 1 பக்கம் .
2 பக்கம் = 1 மாதம் .
6 மாதம் = 1 அயனம் .
2 அயனம் = 1 ஆண்டு .
இதுவே நம் மக்களின் கால அளவீடு ( கணக்கீடு ).
இதில் 8 சாமங்கள் கொண்டது 1 நாள்.அதாவது பகலில் 4 சாமம் , இரவில் 4 சாமம். அதாவது ஒரு சாமம் என்பது 3 மணி நேரம்.எனவே,சாமம் என்பது வேளையைக் குறிப்பது என்பது தவறு.
ஒரு நாளைக்கு 60 நாழிகைகள் என்பது கணக்கு.60 நாழிகைகளை 8 ஆல் வகுத்தால் 7 1/2 கிடைக்கும்.7 1/2 நாழிகை ஒரு சாமம்.நான்கு சாமம் சேர்ந்தது ஒரு பகல்.அதேபோல் நான்கு சாமம் சேர்ந்தது ஓர் இரவு.
சோதிடம், பஞ்சாங்கம் முதலியவற்றில் பயன்படுத்தும் 24 நிமிடங்கள் கொண்ட ஒரு கால அளவு.நாழிகை எனப்படும்
பகல் முப்பது நாழிகை; இரவு முப்பது நாழிகை.
எனவே, ஒரு நாளில் (பகல் + இரவு சேர்ந்து) அறுபது நாழிகைகள் உள்ளன.
1 நாழிகை = 24 நிமிடங்கள் = 60 விநாழிகை = 3600 லிப்தம் = 216000 விலிப்தம் = 12960000 பரா = 777600000 தத்பரா
2.5 நாழிகைகள் = 1 ஓரை = 1 மணித்தியாலம் = 60 நிமிடங்கள்
3.75 நாழிகைகள் = 1 முகூர்த்தம்
7.5 நாழிகைகள் = 2 முகூர்த்தம் = 1 சாமம்
60 நாழிகைகள் = 8 சாமம் = 2 பொழுதுகள் = 1 நாள்
15 நாள் = 1 பட்சம் = 0.5 மாதம்
1 மனித ஆயுள் வட்டம் = 120 வருடங்கள் = 2 வட்டங்கள் = 240 அயனங்கள் = 1440 மாதங்கள்
இலங்கையில் என் அனுபவத்தில் ஆச்சி அப்பு காலத்தில் பூட்டன் பூட்டி எல்லோரும் இருப்பார்கள்
அப்பொழுது
நுண்ணிய ஓட்டை பானையில் குறையும் நீர் போக எஞ்சிய நீர் நிற்கும் நீரின் அளவைக் கொண்டு நாழிகையைக் கணக்கிட்டுச் சொல்லும் நாழிகைக் கணக்கறி அறிவு உள்ளவர்கள் இருந்தனர்.
ஆதாரமாக முல்லைப் பாட்டைக் கேளுங்கள்
பொழுதளந்து அறியும் பொய்யா மாக்கள்
தொழுது காண்கையர் தோன்ற வாழ்த்தி
எறிநீர் வையகம் வெலீஇய செல்வோய் நின்
குறுநீர்க் கன்னல் இணைத்தென்று இசைப்ப.....
பொதுமக்கள் தன் நிழலைத் தானே அளந்து பார்த்துக் காலத்தைக் கணித்துக்கொண்டனர்.தனது காலுக்குள் வரும் நிழலைக் கணக்கிடும் ஆற்றல் அன்று இருந்தது
சுட்டால் விரல் மடக்கிச் சூரியனை வலமாக்கி
எட்டாம் விரல் இரட்டிக்க – முட்டாய் கேள்
அடியளந்து பார்த்து அலையநீ வேண்டாம்
நொடி அளவில் சொல்லும் இது.
காலடியால் நிலத்தை அளந்து பார்த்து நாழிகையைக் கணக்கிடாமல் கைவிரலை உயர்த்தி நாழிகை கணக்கிடும் முறை இது.
ஆள்-காட்டி விரல் என்னும் சுட்டு-விரலைச் செங்குத்தாக நிறுத்தி, பிற விரல்களை மடக்கி, சூரியன் வலப்புறம் இருக்கும்படி நின்றுகொண்டு, செங்குத்தாக உச்சி நோக்கி நிறுத்தப்பட்டுள்ள சுட்டு-விரலின் நிழல் மடக்கியுள்ள பிற விரல்களின்மேல் விழுமாறு செய்தல் வேண்டும். முற்பகல் 15 நாழிகை. மடக்கியுள்ள விரல்கள் மூன்று. சுண்டு-விரலில் நிழல் விழுந்தால் முதலாவது ஐந்து நாழிகை. மோதிர விரலில் நிழல் விழுந்தால் 5-10 நாழிகை. நடு-விரலில் நிழல் விழுந்தால் 11`-15 நாழிகை. பிற்பகலில் பார்க்கும்போது எதிர்-வரிசையில் அளவீடுகள் அமையும். இதனை முற்பகல் 15 நாழிகையுடன் கூட்டிக்கொள்ள வேண்டும்.
சிலர் காட்டுப் புல்லை,அல்லது விசேடமாக செய்யப்பட்ட உலக்கைகளை நிறுத்தியும் நாழிகையைக் கணக்கிட்டுவந்தனர்.
ஆதாரமாக சொல்வதானால்
காட்டுத் துரும்பு எடுத்துக் கண்டம் பதினாறு ஆக்கி
நீட்டுக் கடந்தது போக நின்றது நாழிகை.
அதாவது
காட்டுத்துரும்பு என்பது காட்டில் காய்ந்து கிடக்கும் அறுகம்புள்.
அதனை இரண்டு இரண்டாக மடக்கி 16 அளவீடுகளைக் குறிப்பதாக மாற்றிக்கொள்.
மடக்கிய அளவீட்டுப் பகுதி ஒன்றில் மடக்கி 'ட' எழுத்தைப் போல் நிலத்தில் நிறுத்து. வெயில் அதன்மீது விழட்டும்.
நிறுத்திய துரும்பின் உச்சியானது கிடைத் துரும்பின் முனையைத் தொடுமாறு ட முனையை மாற்று.
இந்த நிலையில் கிடைநிலையில் உள்ள மடிப்புகளின் எண்ணிக்கையைக் கழித்துவிட்டு நிற்கும் நிலையில் உள்ள துரும்பில் உள்ள மடிப்புகளின் எண்ணிக்கையே அளக்கும் காலத்து நாழிகை ஆகும்.
முற்பகலில் அளக்கும்போது பகல்-பொழுதில் இத்தனை நாழிகை ஆயிற்று என்று நிற்கும் துரும்பின் அளவீடு காட்டும்.
பிற்பகலில் அளக்கும்போது நிற்கும் துரும்பின் அளவீட்டைக் கழித்துவிட்டுக் கிடைத்துரும்பின் அளவு எண்ணிக்கையை, முற்பகலில் கடந்துபோன 15 நாழிகைகளையும் கூட்டிப் பகல்-பொழுது இத்தனை நாழிகை ஆயிற்று எனக் கணக்கிட்டுக்கொள்ள வேண்டும்.
உலக்கைகளை செங்குத்தாக நிறுத்தி கிரகண நேரத்தை கணக்கிட்டார்கள் .கிரகணம் முடிந்ததும் உலக்கை விழுந்து விடும்
இப்போ யாருக்கும் அந்த அனுபவ அறிவு இல்லை . மழுங்கடிக்கப் பட்டு விட்டீர்கள் .
இரவு வேளையில் குறிப்பிட்ட சில விண்மீன்களைப் பார்த்துக் காலத்தைக் கணித்தனர்.
கோழிகளின் கூவல்களை வைத்து சாம நேரத்தையும் புளுணியின் கீச்சொலி வைத்து சூரிய உதயத்தையும் .
ந த்துக் கொத்தனின் சொடுக்கொலியை வைத்து சாமம் நாடு நிசியை கடந்து விட்டதை உணர்ந்தனர் .
ஆந்தையின் அலறலை வைத்து நாடு நிசியையும் ,மயிலின் அகவல்களை வைத்து சூரிய உதயத்தையும் ,கணக்கிட்டோமே அந்த அளவுகள் இப்போ எங்கே ?
ஏன் மறந்தீர்கள் ?எப்படி மழுங்கடிக்கப் பட்டோம் ? இது முகநூளில் பதிவது என் குறிக் கோளல்ல .
உங்களின் சிந்தனைக்கே இந்தப் பதிவு
மேலும் தமிழன் முல்லாளாக இருக்கவில்லை
அவனின் சிறப்புக்கு இன்னும் சில தகவல்களை தரலாம் என நினைக்கின்றேன்
2 கண்ணிமை - 1 நொடி
2 கை நொடி - 1 மாத்திரை
2 மாத்திரை - 1 குரு
2 குரு - 1 உயிர்
2 உயிர் - 1 சணிகம்
12 சணிகம் - 1 விநாடி
60 விநாடி - 1 நாழிகை
2 1/2 நாழிகை - 1 ஓரை
3 3/4 நாழிகை - 1 முகூர்த்தம்
2 முகூர்த்தம் - 1 சாமம்
4 சாமம் - 1 பொழுது
2 பொழுது - 1 நாள்
15 நாள் - 1 பக்கம்
2 பக்கம் - 1 மாதம்
6 மாதம் - 1 அயனம்
2 அயனம் - 1 ஆண்டு
60 ஆண்டுகள் - 1 வட்டம்
இந்த அறுபது ஆண்டுகள் விபரங்களை நீங்கள் அறிவீர்கள் .ஒவ்வொரு சித்திரை மாதத்திலும் புதிய ஆண்டு ஆரம்பமாகிறது
1 நாழிகை = 24 நிமிடம்
2.5 நாழிகை = 1 மணி
3.75 நாழிகை = 1 முகூர்த்தம்
7.5 நாழிகை = 1 ஜாமம்(சாமம்)
8 ஜாமம் = 1 நாள்
7 நாள் = 1 வாரம்
2 பக்ஷம் = 1 மாதம்
2 மாதம் = 1 ருது / பருவம்
3 ருது / பருவம் = 1 அயனம்
2 அயனம் = 1 வருடம்
என்றும் அறிவீர்கள்
இனி உங்களின் அறிவுக்கு வேலை கொடுங்கள் .நான் இதுவரை கூறியவற்றை
ஒருங்கே தொகுத்தால் ..
1 நாள் = 60 நாழிகை = 24 மணி
1 மணி = 2.5 நாழிகை = 60 நிமிடங்கள்
1 நாழிகை = 24 நிமிடங்கள்
1 நாழிகை = 60 விநாழிகை
1 நிமிடம் = 2.5 விநாழிகை = 60 விநாடிகள்
1 விநாழிகை = 24 விநாடிகள்
1 விநாழிகை = 60 லிப்தம்
1 விநாடி = 2.5 லிப்தம் = 100 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 40 செண்டி விநாடிகள்
1 லிப்தம் = 60 விலிப்தம்
1 செண்டி விநாடி = 1.5 விலிப்தம் = 10 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 6.6666 அல்லது 6.7 மில்லி விநாடிகள்
1 விலிப்தம் = 60 பரா
1 மில்லி விநாடி = 8.95 அல்லது 9 பரா = 1000 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 111 மைக்ரோ விநாடிகள்
1 பரா = 60 தத்பரா
1 மைக்ரோ விநாடி = .5 தத்பரா = 1000 நானோ விநாடிகள்
1 தத்பரா = 2000 நானோ விநாடிகள்
இப்படி வருவதை உங்களின் அறிவுக்கண்ணால் உணருங்கள் .
பதிவு நீள்வதால் நிறுத்திக் கொள்கின்றேன்


கருத்துகள்
கருத்துரையிடுக