Dr.K Indrabala

இவரின் சேவையும் தொல்லியலும் 


இந்திரபாலா 1938 அக்டோபர் 22 இல் இலங்கையின் வடக்கே வட்டுக்கோட்டையைச் சேர்ந்த கே. கார்த்திகேசு, கனகாம்பிகை அம்பாள் ஆகியோருக்குப் பிறந்தார்.


 யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு, பேராதனை, இலங்கைப் பல்கலைக்கழகத்தில் படித்து 1960இல் பண்டைய வரலாற்றில் முதல் வகுப்பில் தேறி இளங்கலைப் பட்டம் பெற்றார்

இந்திரபாலா நவாலியைச் சேர்ந்த சி. சோமசுந்தரம் என்பவரின் மகள் பிரியதர்சினியைத் திருமணம் செய்தார்இவர்களுக்கு ஹரிணி, தாரிணி என இரண்டு பெண் பிள்ளைகள் உள்ளனர்


இவர் இலங்கைத் தமிழரின் வரலாறு தொடர்பான வரலாற்று நூல்களை தொல்லியல் சான்றுகளுடன் நிறுவியரும் ஆவார். யாழ்ப்பாணக் கல்லூரியில் தனது ஆரம்பக் கல்வியைப் பெற்ற இவர் தமிழ் மட்டுமன்றி ஆங்கிலம், யேர்மன், சிங்களம், பாளி, சமசுகிருதம், யப்பானியம் என பன்மொழி அறிவு பெற்றவர் .


1960இல் பேராதனைப் பல்கலைக்கழகத்தில் கலைமாணிப் பட்டத்தைப் பெற்ற இந்திரபாலா அதே பல்கலைக்கழகத்தில் 1975 வரை வரலாற்றுத்துறை விரிவுரையாளராகப் பணியாற்றினார். அதன் பின்னர் இன்றைய யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் முதலாவது வரலாற்றுப் பேராசிரியராகப் பணியாற்றியவர் ஆவார்.


லண்டன் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம் பெற்றார். பின்னர் 1977-78 இல் ஜப்பான் நாட்டில் டோக்கியோப் பல்கலைக்கழகத்தில் அதிதிப் பேராசிரியராகவும், ஜப்பான் நிறுவன உயர் புலமையாளராகவும் பணியாற்றியவராவர். பின்னர் 1984 இல் தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தின் முதலாவது தென்கிழக்காசியவியல் பேராசிரியராக நியமனம் பெற்றார்.




1957ஆம் ஆண்டு இலங்கையின் பண்டைய  தலைநகரமான அநுராதபுரத்தில் தொல்லியல் அகழ்வாய்வில் பணியாற்றினார். பின்னர் இத்தாலியத் தொல்லியியலாளரும், இலங்கை அரசின் யுனெசுகோ அறிவுரையாளருமான முனைவர் பி. சி. செசுடியேரியுடன் பணியாற்றினார்.

 1970இல் அமெரிக்கப் பென்சில்வேனியாப் பல்கலைக் கழகத்துத் தொல்லியலாளர் முனைவர் விம்லா பெக்சியுடன் பொம்பரிப்பு, கந்தரோடை அகழ்வாய்வுகளில் பங்குகொண்டார்


.இலங்கையின் வரலாறு தொடர்பாக மகாவம்சம் கூறும் சிங்கள பௌத்தம் சார்ந்த சார்பு நிலைகளின் போதும், இலங்கையின் தமிழரின் வரலாறு தொடர்பான கருத்துக்களையும் தெரிவித்து வந்தவராவர்.

தமிழர்கள் அப்பொழுது பவுத்த மதத்தை தழுவியதும் இங்கு மேலும் ஊர்ஜிதமானது .

 1960 – 1970களில் இலங்கையில் பலவிடங்களிலும் தொல்லியல் அகழ்வாய்வுப் பணியில் தன்னை முழுதாக அர்ப்பணித்தவர் .



யாழ்ப்பாணத்தின் ஆனைக்கோட்டை எனும் இடத்தில் 1980ஆம் ஆண்டு அகழ்வாய்வின் போது, கிறித்துவுக்கு முற்பட்ட உலோக முத்திரை கண்டெடுக்கப்பட்டதிலும் இவரது பங்குண்டு. இவர் இங்கு  இன்றிருந்தால் தமிழ் நாட்டின் கீள டி பற்றி இன்னும் சிறப்பாக ஆய்வுகள் கிடைத்திருக்கும் .


தமிழ்நாடு அரசு தொல்லியல் இயக்குனர் முனைவர் இ. நாகசுவாமியின் அழைப்பின் பேரில் தமிழ்நாட்டில் தொல்லியல் முக்கியம் வாய்ந்த இடங்களான கங்கை கொண்ட சோழபுரம், தராசுபுரம், மாமல்லபுரம் உட்பட பல தொல்லியல் அகழ்வாய்வுப் பணிகளிலும் பங்காற்றிதமிழரின் தொன்மை பற்றி சிறப்பாக  நிறுவியவர் .



ஆதி இலங்கையில் இந்துமதம்

இலங்கையில் திராவிடக் கட்டிடக்கலை (1970)

யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றமும் வளர்ச்சியும்

The Evolution of an Ethnic Identity (2005)

இலங்கையில் தமிழர் (2006)


என்று பலநூல்களை எழுதி இருக்கிறார் 



இலங்கையிலும் தென்னிந்தியாவிலும் நடைபெற்ற (இன்றும் தொடரும்) அகழ்வாராய்ச்சியின் பயனாகவும், சாசனவியல் பற்றிய புதிய அணுகுமுறையினாலும், வரலாறு பற்றிய பார்வையும் மாற்றமடைந்து வருகிறது. இந்த வகையில், பேராசிரியர் இந்திரபாலா, கி.மு. 300ம் ஆண்டு முதல் கி.பி. 1200 வரையிலான, இலங்கைத் தமிழ் மக்களின் வரலாற்றை, புதிய பல வரலாற்றுச் சான்றுகளுடன், 'இலங்கையில் தமிழர்-ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு, பொது ஆண்டிற்கு முன்(கி.மு) 300 முதல் பொது ஆண்டு (கி.பி) 1200 வரை'என்னும், தமது புதிய நூலிலேசிறப்பாக ஆராய்ந்து எழுதி இருக்கிறார் .



1960 களில் திருகோணமலையில் கண்டுபிடிக்கப்பட்ட கல்வெட்டுக்கள் பலவற்றை வாசித்து 'சிந்தனை' என்னும் சமூக விஞ்ஞானச் சஞ்சிகையில் பிரசுரித்தார். 1971 இல் யாழ்ப்பாணத்தில் 'பூர்வகலா' என்னும் சஞ்சிகையை வெளியிட்டு தொல்லியல் வரலாற்றினைப் பதிவுசெய்ததோடு தொல்லியல் பற்றிய விழிப்புணர்வையும் ஊட்டினார். இவர் The Srilanka Journal of South Asian Studies என்னும் ஆங்கில சஞ்சிகையை ஆரம்பித்து வைத்து சமகால அரசியல், பொருளியல், கலாச்சார சிந்தனைகளுக்கேற்றதான தென்னாசியாவின் நிலமைகளைப் பதிவுசெய்ததோடு 'தென்னாசியவியல் சங்கம்' என்ற அமைப்பையும் ஸ்தாபித்தார்.



 யாழ்ப்பாணத்திலும் வேறு சில இடங்களிலும் கண்டு பிடிக்கப்பட்ட தமிழ் கல்வெட்டுக்களை வேறு சிலருடன் இணைந்து “Epigraphica Tamilica” எனும் நூலில் வெளியிட்டுள்ளார்.




 “யாழ்ப்பாண இராச்சியத்தின் தோற்றம்” “இலங்கையில் திராவிட கட்டடக் கலை“, “The Evolution of an Ethnic Identity The Tamils in Sri Lanka C 300 BC to C1200“, “இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு” போன்ற வரலாற்று ஆய்வு நூல்களை எழுதி வரலாற்று ஆய்வுக்கு புத்துயிர் ஊட்டி சிறப்பு செய்தார் .




மேலும் தமிழாய்வுக்காக  சில தகவல்களை இப்பதிவில் சேர்த்துக் கொள்வது நல்லது என நான் கருதுவதால் அதையும் இணைப்பது பொருத்தமானது 

அதாவது 

%%%%



இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடானது தென்னிந்தியாவிலிருந்து மட்டுமல்லாது தென்கிழக்காசியாவிலிருந்தும் பரவியதற்கான சான்றுகள் கிடைத்துள்ளன. கி .மு1000 ஆண்டுகள் தொடக்கம் கி . பி 4 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெருங்கற்காலப் பண்பாடு வளர்ச்சியடைந்த நிலையைக் காணக்கூடியதாக உள்ளது.


இலங்கையில் பெருங்காலத்தின் மிக முந்திய தோற்றப்பாடு அனுராதபுரத்திலும் சிகிரியா அலிகல ஒதுக்கிடத்திலும் கி .மு1000 ஆண்டுகள் தொடக்கம் கி .மு 800 வரையான காலப்பகுதிக்கு உட்பட்ட சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு காபன் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கையின் பெருங்கற்காலப் கலாச்சார மையங்கள் இலங்கையில் இனம் காணப்பட்டுள்ளன. காரைநகர், ஆனைக்கோட்டை , கந்தரோடை, வல்லிபுரம், பூநகரி, மாந்தை, தேக்கம் ,பொம்பரிப்பு , அக்குறுகொட,அனுராதபுரம், கதிர்காமம், இபன்கட்டுவ, அம்பாந்தோட்ட போன்ற இடங்களில் காணப்படுகின்றன.


“யாழ்ப்பாணக்குடா நாட்டிலுள்ள பெருங்கற்கால பண்பாட்டு மையங்களினை இரு பெரும் பிரிவுகளாக வகுத்து ஆராய்ந்தன” என்கிறார் பேராசிரியர் ரகுபதி.



எந்த ஒரு பௌத்த செல்வாக்குகளும் அற்ற நிலையில் வேர் ஊன்றி இருந்த பெருங்கற்கால பண்பாட்டு ஆனைக்கோட்டை , காரைநகர் (பௌத்த வருகை முன்னர் பெருங்கற்கால பண்பாட்டை வளர்த்தெடுத்த மையங்கள்)


பௌத்தமதத்துடன் இணைந்து காணப்பட்ட பெருங்கற்கால பண்பாட்டு மையங்கள் வட இலங்கையின் முக்கியமான தொல்லியல் மையங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை காணப்படுகின்றது.


1980களில் குடாநாட்டில் உள்ள நாற்பது புராதன மையங்கள் அடையாளப்படுத்திய பேராசிரியர் பொ. இரகுபதி அதன் தலைமை குடியிருப்பாக கந்தரோடையை குறிப்பிடுகின்றார்.


ஆனால் இக்குடி குடியிருப்புக்களைப் பெருங்கற்கால மக்களது பண்பாட்டின் சிறப்பாகக் காணப்படும் ஈமசின்னம் கந்தரோடையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இந்நிலையில் ஆனைக்கோட்டையில் கண்டு பிடிக்கப்பட்டது பூர்விக வரலாறு பற்றிய ஆய்வில் ஆனைக்கோட்டை முக்கியம் பெறுகின்றது.


ஆனைக்கோட்டை என்பது இலங்கையின் வடமாகாணத்தின் ஒரு பகுதியாக உள்ள யாழ்ப்பாணக் குடாநாட்டின் வலிகாமம் தென்மேற்கு பிரதேசச் செயலாளர் பிரிவில் அமைந்துள்ள ஊராகும்.


நாவாந்துறைப் பகுதியைச் சீர்செய்வதற்காக கரையாம்பிட்டி மண்மேட்டை வெட்டப்பட்ட பொழுது இதில் காணப்பட்ட பண்பாட்டு எச்சங்கள் 1980களில் பேராசிரியர் இந்திரபாலா தலைமையில் அகழ்வு இடம்பெற்றது.


இங்கு இரண்டு சதுர மைல் பரப்பில் ஆறு குடியிருப்பு மையங்களும், இரண்டு ஏக்கர் பரப்பில் பெருங்கற்கால ஈமச்சின்னங்களும் அடையாளம் காணப்பட்டுள்ளது. இதன் பின்னர் பேராசிரியர் இந்திரபாலா மேற்கொண்ட அகழ்வின் போது இரு இடங்களில் பெருங்கற்கால மக்களது ஈமசின்னங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.


இவ்விரு ஈமசின்னமையங்களும் பத்து அடி இடைவெளியில் நான்கு அடி உயரம் கொண்ட மண்மேட்டில் கண்டுபிடிக்கப்பட்டன. ஈமசின்னமையங்களில் 5 அடி உயரமுடைய இரு மனித எலும்புக்கூடுகள் கிழக்கு மேற்கு திசையை நோக்கிய வண்ணமாக அடக்கம் செய்யப்பட்டிருந்தன.


இதில் இரு கைகளும் கட்டப்பட்ட எலும்புக்கூட்டைச் சுற்றி வைக்கப்பட்ட மட்பாண்டங்களில் கருப்பு சிவப்பு , தனி கறுப்பு சிவப்பு நிற கிண்ணங்கள் வட்டில்கள், பானைகள் என்பன குறிப்பிடத்தக்கவை.


சில மட்பாண்டங்களில் சுறா மீன், மிருக எலும்புகள் நண்டின் ஓடுகள் என்பவற்றுடன் சிற்பி, சங்கு போன்ற பொருட்களும் வைக்கப்பட்டிருந்தன. இப் பண்பாடு இங்கு இரும்பின் பயன்பாடு புழக்கத்தில் வந்ததனை உறுதிப்படுத்த இரும்பு கருவிகளும் , கழிவிரும்புகளும் கிடைத்துள்ளன.



சிற்பி , சங்கு, சுறா மீன் எலும்புகள் இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன. அதே சமயம் ஆனைக்கோட்டை மையம் கடலுடன் கொண்ட தொடர்பையும் காட்டுகின்றன. வடமாகாணத்தினை பொறுத்தவரை இங்கு கிடைக்கப்பட எலும்புக்கூடுகள் இரண்டாவது ஆகும்.


முதலாவது திருக்கேதீஸ்வரத்தில் மறைந்த சண்முகநாதன் மேற்கொண்ட அகழ்வாராய்ச்சியின் போது கிடைத்தது. ஆனைக்கோட்டையில் கண்டுபிடிக்கப்பட்ட பிராமி எழுத்து பொறித்த மட்பாண்டம் லட்சுமி நாணயம் உரோம மட்பாண்டம் என்பவறை ஆதாரமாக கொண்டு இரு ஈமசின்னங்களும் இன்றைக்கு 2300 ஆண்டுகளுக்கு முற்பட்ட பெருங்கற்கால மக்களுக்குரியது என உறுதிப்படுத்த முடிகின்றது.


எலும்புக்கூட்டின் தலைமாட்டின் அருகில் பெறப்பட்ட வெண்கலமுத்திரை வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. இதன்காலம் கி.மு 3 நூற்றாண்டு 1.7 , 1.5 cm நீள அகலம் உடையது .இதன் மேல் வரிசையில் 3 குறியீடுகளும் கீழ் வரிசையில் 3 பிராமி எழுத்துக்களும் உள்ளன.


இது மோதிரத்தின் முன் பகுதியாக இருக்கலாம் எனக் கருதப்படுகின்றது . இது எதனால் செய்யப்பட்டது என்பது தொடர்பாகக் கருத்து முரண்பாடுகள் இருந்து வருகின்றன. பேராசிரியர் கா. இந்திரபாலா இந்த முத்திரையானது உலோக முத்திரை எனத் தமிழக இந்து பத்திரிகையில் 1981 இல் எழுதிய கட்டுரையில் கூறியிருந்தார்.


ஆனால், அவர் எந்த உலோகத்தால் செய்யப்பட்டது என்பதைக் குறிப்பாகக் குறிப்பிடவில்லை. பொ. இரகுபதி (1987) இந்த முத்திரையானது வெண்கலத்தினால் (Bronze) செய்யப்பட்டது என்றுள்ளார்.


ஐராவதம் மகாதேவனும் (2003), பேராசிரியர் சி. பத்மநாதனும் (2006), அது உலோகத்தால் ஆனது என்றுள்ளபோதும், அது எந்த உலோகத்தினால், அல்லது உலோகக் கலவையால் ஆனது என்பதைக் குறிப்பாகக் கூறவில்லை.


எத்துவிதத்திலும் க. இந்திரபாலா 2006ஆம் ஆண்டில் எழுதியிருந்த நூலில், அது Steatite (Soapstone) ஆல் ஆனது என்றுள்ளார். இந்திரபாலாவின் வாசிப்பு, இதனை வாசித்த பேராசிரியர் கா. இந்திரபாலா இம் முத்திரையில் கீழ் வரியில் அடங்கியுள்ள மூன்று எழுத்துக்களையும் இடப்பக்கத்தில் காணப்படும் எழுத்துக்கு மேலுள்ள புள்ளியையும் பிராமிப் பகுதியாகக் கொண்டுள்ளார்.


இதில் இடப்பக்கமிருந்து பார்க்கும் போது முதலாவது எழுத்து "கோ", இரண்டாவது "வே", மூன்றாவது "த". இது முத்திரையிடப் பயன்படுத்தும் அச்சு ஆதலால் இடப்படும் முத்திரையில் இடம் வலமாக மாறிவிடும் ஆதலால் எழுத்து வரிசை "கோ" "வே" "த" என்று அமையும்.


"த" வின் மேலுள்ள புள்ளியை அனுஸ்வரமாகக் கொண்டால் இச் சொல்லை "கோவேந்த" அல்லது "கோவேதன்" என இருவிதமாக வாசிக்கமுடியும் என இந்திரபாலா கூறுகிறார். இரண்டுமே திராவிடப் பெயராகவும், ஒரே பொருள் தருவனவாகவும் உள்ளன.


"கோவேந்த" என்பதை "கோ" + "வேந்த" என இரண்டாகப் பிரிக்கலாம். இரண்டு பகுதிகளுமே தமிழிலும் வேறு சில திராவிட மொழிகளிலும் மன்னன், அரசன் என்னும் பொருள்படுவனவே. சொல்லைக் கோவேதன் என்று எடுத்துக்கொண்டாலும் கூட இது போலவே அமையும்.


மேல் வரிசையில் சூல வடிவக் குறியீடு அடுத்தடுத்து இருமுறை இடம் பெற்றுள்ளது. இக் குறியீடுகள் ஒலிப்பையன்றிப் பொருளையே சுட்டுவனவாதலால் "கோ" என்பதைக் குறித்த சூல வடிவமே, அதே பொருள் கொண்ட "வேந்த" அல்லது "வேதன்" என்னும் சொல்லையும் குறித்தது.


இரகுபதியின் வாசிப்பு பொ. இரகுபதி இதனைச் சற்று வேறுவிதமாக வாசித்துள்ளார். இவர், இந்திரபாலாவால் அனுஸ்வரமாகக் கொள்ளப்பட்டு பிராமியுடன் சேர்த்து வாசிக்கப்பட்ட புள்ளியை முதல் வரியின் ஒரு பகுதியாகக் கொண்டுள்ளார்.


இவர், கீழ் வரி "கோ" "வே" "த" என்பது "கோ" + "வேத்" + "அ" எனப் பிரிந்து "கோவேதனுடைய" என்னும் பொருள் கொடுக்கும் என்றும் இதற்கு இணையாக இரண்டு சூலக் குறியீடுகள் "கோ" "வேத்" என்பவற்றைக் குறிக்க, புள்ளி "உடைய" என்னும் பொருள்கொண்ட "அ" என்னும் உருபைக் குறித்தது என்கிறார்.


மதிவாணனின் வாசிப்பு முனைவர் ஆர். மதிவாணன் பிராமிப் பகுதியை அந்த முத்திரையில் காணப்பட்டவாறே இடமிருந்து வலமாக "தி" "வு" "கோ" என வாசித்து, அது தீவின் அரசன் என்னும் பொருள் தரும் என்றார்.



விஜயனின் வருகையுடன் இலங்கை வரலாற்றை ஆரம்பிப்பது  பெரும்பாலான வரலாற்றாசிரியர் வழக்கம். இதற்கு பாளி இலக்கியங்கள் முன்னோடிகளாக உள்ளன. இவ்விடயம் பல வரலாற்றாய்வாளர்களால் ஆய்வுக்கு எடுக்கப்பட்டு பழைய கட்டுக்கதை வகையானது என்று விளக்கம் அளிக்கப்பட்டாலும் திரும்பவும் திரும்பவும் சொல்லப்பட்டே வருகின்றது. இது போன்ற கதைகள் ஏன் தோன்றுகின்றன என்பதை அறியவேண்டும். இதுபற்றி இலங்கையில் தமிழர் ஓர் இனக்குழு ஆக்கம் பெற்ற வரலாறு எனும் நூலில் கா.இந்திரபாலா விரிவாக ஆராய்ந்துள்ளார். இதனை சமஸ்கிருத மயமாக்கம் எனக் குறிப்பர்.





சமஸ்கிருதமயமாக்கம் என்பதற்கு பிரெஞ்சுப்பேராசிரியர் கொடெஸ் தரும் விளக்கத்தை தருகின்றார் . இந்தியர்களுடைய கோன்மை பற்றிய கருத்துகள் இந்துமதம் மற்றும் பௌத்தம் ஆகியவற்றின் வழிபாட்டு முறைகள் புராணகதைகள் தர்மசாஸ்திரங்களின், கோட்பாடுகள் ஆகியவற்றை அடித்தளமாகக் கொண்டு நன்கமைக்கப்பட்ட ஒரு பண்பாடு, சமஸ்கிருத மொழியின் மூலம் வெளிப்பட்ட வரலாற்றையே இந்த இயக்கத்தின் உட்பொருளாக விளங்கிக்கொள்ளவேண்டும்.


சமஸ்கிருதமயமாக்கம் இந்தியா, இலங்கை, தென்கிழக்காசியா போன்ற இடங்களில் வரலாற்றுத் தொடக்க காலகட்டத்தில் இருந்த குறுநில அரசுகளில் செல்வாக்குப் பெற்ற உயர் குழாத்தினரிடையே பரவி ஏற்பட்ட மாற்றங்களைக் குறிக்கப்பயன்படுகின்றது. சமஸ்கிருதமயமாக்கம் பரவிய இடங்களில் எழுந்த கதைகள் பொது அமைப்பு வடிவத்தையே கொண்டிருந்தன என்பதை விளக்கும் கா.இந்திரபாலா இதன் படிநிலையைக் கூறுகின்றார்.


1. நாகரீகமடைந்த தலைவன் ஒருவன் (பிராமண, சத்திரியதலைவன்) திட்டமிட்டோ தற்செயலாகவோ நகரமையம் ஒன்றுக்குவருதல்

2. அவ்விடத்தில் வாழும் பின்தங்கிய சுதேசிகளை மனிதரல்லாத பிறவிகளாக வர்ணித்தல்.

3. சுதேச உயர்குழாத்தினர்(தலைவர்கள்)புதிதாக வந்த தலைவனுடன் முரண்படல். பின்பு இருசாரரும் அமைதி ஏற்பட்டு ஒருமுக்கியமான சுதேச கன்னியை புதியதலைவன் மணம்முடித்தல்.

4. புதியதலைவன் ஆட்சிப்பொறுப்பை ஏற்று வட இந்தியமுறைப்படி ஒர் அரசமரபை தொடக்கிவைத்தல் பிராமணியசடங்குகளும் கருத்துகளும் ஆட்சிமுறையில் சேர்க்கப்படுதல்.

5. புதிய ஆட்சியாளன் தன்னை வடஇந்திய அரசமரபுடன் இணைத்துக்கொள்ளல் உயர்குழாத்தினர் தம்பெயர்களை சமஸ்கிருத பெயர்களாக மாற்றிக்கொள்ளல் இடப்பெயர்களும் சமஸ்கிருத வடிவம் பெறல்.

இலங்கையிலும் இந்த அமைப்பிலே கதைகள் கூறப்பட்டன. இக்கதைகளை தொல்லியல் சமூகவியல் மானுடவியல் அடிப்படையில் ஆய்வு செய்யவேண்டும் இலங்கையின் சுருக்கமான வரலாறு எனும் நூலில் கொறிங்ரன் சிங்கள இனத்தின் தோற்றம் பற்றி மூன்று வெவ்வேறு கதைகளைக் கூறுகின்றார்.


இது பற்றி எனது மற்றைய பதிவுகளினை நோக்கவும் 


மேலும் எந்த ஒரு பௌத்த செல்வாக்குகளும் அற்ற நிலையில் வேர் ஊன்றி இருந்தபெருங்கற்கால பண்பாட்டு ஆனைக்கோட்டை , காரைநகர் (பௌத்த வருகை முன்னர்பெருங்கற்கால பண்பாட்டை வளர்த்தெடுத்த மையங்கள்)· பௌத்தமதத்துடன் இணைந்து காணப்பட்ட பெருங்கற்கால பண்பாட்டு மையங்கள்வட இலங்கையின் முக்கியமான தொல்லியல் மையங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை காணப்படுகின்றது.


இது ஆய்வு செய்யப்படவேண்டியது 



கீழடிக்கு பிந்திய வெறும் 300 ஆண்டு கொண்ட ஆனைக்கோட்டை மன்னர்கள் நாம்.கரையான் பிட்டியின் சொந்தக்காரர் 1984 ஆண்டு 2600 வருடம் பழமையான மக்கள் என நிருபிக்கப் பட்ட தமிழ் பூர்வீக குடிகள்.மறந்து வாழும் மக்களுக்காக மீண்டும் நினைவூட்டல் அவசியம் எனவும்  பெருங்கற்கால மையங்களில் ஒன்றான ஆனைக்கோட்டைஎன்றும்  ஆனையூரான் எனப்படும் ஜெராட்  தனது பதிவுகளில் குறிப்பது    நோக்கற்பாலது ..





ஆனைக்கோட்டை முத்திரை வரலாற்றுக்கு முற்பட்ட காலமானது பழங்கற்காலம் , இடைகற்காலம், புதியகற்காலம் என வளர்ச்சியடைந்து வந்த நிலையில் வரலாற்றுக் காலத்திற்கான ஆக்கமும் அடிப்படையும் கொடுக்கின்ற வகையில் தோற்றம் பெற்ற ஒரு பண்பாட்டு வாழ்க்கை முறையே பெருங்கற்காலம் ஆகும். அந்த வகையில் பெருங்கற்காலம் என்றால் என்ன எனப் பார்க்கின்ற பொழுது இறந்தோரை அடக்கம் செய்வதற்குப் பெருங்கற்களால் ஆனா ஈமச்சின்னங்களை அமைத்ததால் இக் காலம் பெருங்கற்காலம் எனப் பெயர்பெற்றது.



இச்சின்னங்கள் வெளித்தோற்றத்தினைக் கொண்டு இவை கல்லறை,கல்மேசை,கந்திட்டை,நடுகல் , கல்வட்டம் போன்ற பெயர்களைப் பெற்றன.எனினும் இக்காலமக்கள் முழுக்க முழுக்க கற்களால் மட்டுமே தமது இமச்சின்னங்களைஅமைக்கவில்லை.தாழிகளிலும் குழிகளிலும் இறந்தோரை அடக்கம் செய்தார்கள்.இதனை மணிமேகலையில்‘’சுடுவோர் இடுவோர்தொடுகுழிப்படுவோர் தாழ்வயினடைப் போர் தாழியிற் கவிப்போர் “எனினும் இக் காலம் பெருங்கற்களாலே ஈமச்சின்னங்கள் காணப்பட்டதால் பெருங்கற்கால கலாசாரம் எனப்பட்டது.



இங்கே விட்டுச் சென்ற தடையங்கள் மற்றும் இவர்களைப் பற்றி நாம் அறிய உதவும்சான்றுகள் எனப் பார்க்கின்ற பொழுது கல்லறைகள் ,ஈமத்தாழிகள் , சுடுமண்பாறைகள்,விளையாட்டுப் பொருட்கள் , மட்பாண்டங்கள் , ஆயுதங்கள், பாறை ஓவியங்கள் ,அணிகலன்கள், மணிகள், முத்திரைகள், போன்ற பொருட்கள் உதவுகின்றன.பெருங்கற்காலப்பண்பாட்டிற்குரிய சிறப்பம்சங்களாக இரும்பின் அறிமுகம், நீர்ப்பாசனத்துடன்கூடிய பயிர்செய்கை , கருப்பு சிவப்பு மட்பாண்ட உபயோகம் கட்டமைப்புடையசமூகத்தோற்றம் போன்றன காணப்படுகின்றன.



இலங்கையில் பெருங்கற்காலப் பண்பாடானது தென்னிந்தியாவில் இருந்துமட்டும்மல்லாது தென்கிழக்காசியாவிலிருந்தும் பரவியதற்கானசான்றுகள் கிடைத்துள்ளன. கி .மு1000 ஆண்டுகள் தொடக்கம் கி . பி 4 நூற்றாண்டுக்கு இடைப்பட்ட காலத்தில் பெருங்கற்காலப்பண்பாடு வளர்ச்சியடைந்த நிலையை காணக்கூடியதாக உள்ளது.


இலங்கையில் பெருங்காலத்தின் மிக முந்திய தோற்றப்பாடு அனுராதபுரத்திலும் சிகிரியா அலிகல ஒதுக்கிடத்திலும் கி .மு1000 ஆண்டுகள் தொடக்கம் கி .மு 800 வரையான காலப்பகுதிக்கு உட்பட்ட சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டு காபன் பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.


இலங்கையின் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகள் தென்னிந்தியாபெருங்கற்காலப் பண்பாட்டுடன் தொடர்புபட்டிருந்தாலும் கூடத் தனித்துவமானதாகவும் விளங்குகின்றது.தீவகப் பிராந்தியத்திற்கான இயல்புகளை இலங்கைப் பெருங்கற்காலப் பண்பாட்டு மக்களது கலை மரபுகள் வெளிப்படுத்தி நிற்கின்றன.


உதாரணமாக முருங்கைக்கற்களால் ஆன ஈமக் கோபுரங்கள் , சிப்பியின் படையல்கள் , சுறா முள்ளில்செயப்பட்ட மாலைகள் ,முதலியன தனித்துவமானவை .இலங்கையின் பெருங்கற்கால பண்பாட்டு மையங்களின் பரவலானது வடபகுதியில் இருந்து தென்பகுதி வரை காணப்படுகின்றது.


இருபதுக்கு மேற்பட்ட பெருங்கற்காலக் கலாசாரமையங்கள் இலங்கையில் இனம் காணப்பட்டுள்ளன. காரைநகர், ஆனைக்கோட்டை , கந்தரோடை,வல்லிபுரம், பூநகரி,மாந்தை, தேக்கம் ,பொம்பரிப்பு ,அக்குறுகொட,அனுராதபுரம்,கதிர்காமம், இபன்கட்டுவ,அம்பாந்தோட்ட போன்ற இடங்களில் காணப்படுகின்றன.


எந்த ஒரு பௌத்த செல்வாக்குகளும் அற்ற நிலையில் வேர் ஊன்றி இருந்தபெருங்கற்கால பண்பாட்டு ஆனைக்கோட்டை , காரைநகர் (பௌத்த வருகை முன்னர்பெருங்கற்கால பண்பாட்டை வளர்த்தெடுத்த மையங்கள்)· பௌத்தமதத்துடன் இணைந்து காணப்பட்ட பெருங்கற்கால பண்பாட்டு மையங்கள்வட இலங்கையின் முக்கியமான தொல்லியல் மையங்களில் ஒன்றாக ஆனைக்கோட்டை காணப்படுகின்றது.

எனவே பல்கலைக் கழ கங்கள்  இங்கே தனது கவனத்தை ஆய்வுக்கு செலுத்த வேண்டும் .



இன்றைய காலகட்டத்தில் இத்தகைய பாரம்பரிய வரலாற்றுச் சின்னங்கள் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற ஆர்வத்தில் முழுமூச்சாக ஒரு பகுதியினர் இயங்கிக் கொண்டிருந்தாலும், இன்னொரு பகுதியினர் அவற்றை அழிக்கும் நடவடிக்கையிலும் ஈடுபட்டு வருகின்றனர். 


ஏதாவது புராதனப் பொருட்கள் உங்கள் கைகளில் கிடைத்தால் அதை பல்கலை கழக வரலாற்று மாணவர்களிடம் கையளிக்க வேண்டும் .அது உங்களின் தொன்மைகளை அறிந்து சிறப்புச் சேர்க்க  வழி சமைக்கும் .


போத்தல்  பித்தளை அலுமினியம் அடிபுண்ட சருவச் சட்டி இருக்கா ?என்று வியாபாரிகள் கேட்ட பொழுது நீங்கள் விற்ற பொருட்களில் எத்தனையோ அரிய பொருட்கள்  எம்மிடம் இல்லாமல் போய் விட்டது .




இலங்கையில் பெயர் குறிப்பிட்டுக் கூறக்கூடிய வரலாற்றுத்துறை பேராசிரியர் இந்திரபாலா, பேராசிரியர் கிருஷ்ணராஜா, பேராசிரியர் சிவசாமி, கலாநிதி இரகுபதி, பேராசிரியர் சி. பத்மநாபன், பேராசிரியர் ப. புஷ்பரத்தினம் போன்ற பேராசிரியர்கள் இலங்கை முழுவதிலும் செய்த பல அகழ்வாராய்ச்சிகள் மற்றும் பொதுமக்களிடமிருந்து சேகரித்த பல்வேறு பொருட்களிலிருந்து அல்லது பொதுமக்கள் வழங்கிய தகவல்களிலிருந்து இலங்கை நாட்டில் தமிழர்களின் வரலாற்றின் அல்லது இருப்பின் தொன்மையை உறுதிப்படுத்தியும் பாதுகாத்தும் வந்துள்ளார்கள். இவர்களின் வழியிலேயே  பேராசிரியர் சி. பத்மநாதனும் பேராசிரியர் ப. புஷ்பரட்ணமும் இந்தப் பணியை களஆய்வுகளில் ஈடுபட்டு முழுவீச்சுடன் அர்ப்பணித்தார்கள் .

தொல்லியல் ஆய்வின் மூலம் தமிழர் பகுதிகளில் அவர்களுடைய வரலாற்றைச் சரிவரக் கண்டறியப்படுவதற்கு யாழ்ப்பாண வரலாற்றுத்துறை பல்வேறு நடவடிக்கைகளை அக்காலப் பகுதியில் முன்னெடுத்திருந்தது. 


அடையாளம் காணப்பட்ட பகுதிகளில், வரலாற்றுத்துறை பீடத்தினரால் அகழ்வாய்வு செய்யப்பட்ட தொல்லியல் மற்றும் மரபுரிமைச் சின்னங்கள் பேராசிரியர் இந்திரபாலவினால் கலைப்பீடத்தில் ஒருசிறிய அறையில் பேணிப்பாதுகாக்கப்பட்டு, தொல்லியல் அருங்காட்சியகம் ஆரம்பிக்கப்பட்டது.


ஆனைக்கோட்டை, சாட்டி போன்ற இடங்களில் அகழ்ந்து எடுக்கப்பட்ட பல தொல்லியல் சின்னங்கள் 1987 ஆம் ஆண்டு அசம்பாவிதங்களின்போதுஅங்கிருந்து  காணாமல்போய்விட்டன.   



“2011 ஆண்டு யாழ்ப்பாண பல்கலைக்கழக வரலாற்றுத்துறையும் ‘கலைகேசரி’ சஞ்சிகையும் இணைந்து ஏற்பாடு செய்த ‘யாழ்ப்பாண வாழ்வியல்’ கண்காட்சியின் மூலம், நூற்றாண்டு காலம்காலமாக யாழ்ப்பாண மக்களிடையே பாவனையிலிருந்து, தற்போது அவை பாவனையிலிருந்து மறைந்துவிட்ட பாரம்பரிய பாவனைப்பொருள்கள், சின்னங்கள் என்பவற்றை வரலாற்றுத் துறை மாணவர்கள் குடாநாடெங்கும் சென்று சேகரித்திருந்தார்கள். அவ்வாறு சேகரிக்கப்பட்ட பல அரிய பொருட்கள், தற்போது பல்கலைக்கழக  அரும்பொருள் காட்சிச் சாலையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.  


2016 ஆம் ஆண்டு, மத்திய கலாசார நிதியத்தின் கிளை ஒன்று யாழ்ப்பாணத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டு அதன் பணிப்பாளராக நான், (பேராசிரியர் ப. புஸ்பரத்தினம்) பதவி ஏற்ற பின்னர், மத்திய கலாசார நிதியத்தின் உதவியுடன், இந்த அருங்காட்சியகம், ‘கலாநிதி இந்திரபாலா அருங்காட்சியகம்’ எனப்பெயர் மாற்றம் செய்யப்பட்டது. 


இலங்கையின் வடபகுதியில், 10 ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் தமிழ் மக்கள் வாழ்ந்தார்கள்



1970 ஆம் ஆண்டுகளில் பேராசிரியர் சிற்றம்பலம், யாழ்ப்பாண தொல்லியல் கழகத்தை ஆரம்பித்த காலப்பகுதியில் இருந்து, பேராசிரியர் சிவச்சாமி, பேராசிரியர் சிற்றம்பலம், கலாநிதி ரகுபதி, நூலகர் ஆ. சிவநேசச்செல்வன், பேராசிரியர் கிருஷ்ணராசா, ஆ. தேவராசா, ஆசிரியர் திருவள்ளுவர், நிலஅளவையாளர் சேயோன், பூநகரி உதவி அரசாங்க அதிபர் கிருஷ்ணமூர்த்தி போன்றவர்கள் தொல்லியல் ஆய்வில் ஈடுபட்டு, வடபகுதியில் நடைபெற்ற பலதொல்லியல் அகழ்வாராய்ச்சிகளுக்கு உயிரூட்டியவர்கள்.இவர்களால் சேகரிக்கப்பட்ட பொருட்கள் அருங்காட்சியகத்தில் இருந்தன 



1987 வன்முறையின் பின்னர், அவை எதுவுமே அருங்காட்சியகத்தில் தற்பொழுது இல்லை எனலாம் .


 போர்த்துக்கேயரால் யாழ்ப்பாணக் கோட்டை கட்டப்படுவதற்கு முன்னர், அந்தப்பிரதேசம் இந்துசமுத்திர கடல்சார் வாணிபத்தின் மையமாக இருந்ததற்கான தௌிவான ஆதாரங்கள் கிடைக்கப்பெற்றுள்ளது என்று 


 லண்டனில் உள்ள டர்ஹம் பல்கலைக்கழகத்துடன் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறை இணைந்து, உலகப்புகழ்பெற்ற தொல்லியலாளர் பேராசிரியர் ஹொனிஹரின் தலைமையில், யாழ்ப்பாணக் கோட்டையில் ஆய்வு செய்து நிரூபித்துள்ளனர் .




இலங்கை வாழ் தமிழரின் வரலாற்றுக்குப் புது வெளிச்சமூட்டும் வகையில், திருகோணமலையில் மிக அரிய தமிழ்க் கல்வெட்டு ஒன்று , பேராசிரியர் ப. புஸ்பரட்ணம் தலைமையிலான குழுவினரால் கண்டுபிடிக்கப்பட்டத்தை அறிவீர்கள் 


இக்கல்வெட்டானது திருகோணமலை நகரில் இருந்து ஏறத்தாழ 50 கி.மீ தொலைவில், கோமரன்கடவல (குமரன் கடவைஎன்று  அன்று பெயர் )             பிரதேசத்தில் உள்ள முக்கிய வீதியுடன் இணைந்திருக்கும் காட்டுப்பகுதியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.


இப்பிரதேசம் முன்னர் , கட்டுக்குளப்பற்று நிர்வாகப் பிரிவாக இருந்த போது, இந்த இடம் குமரன்கடவை என அழைக்கப்பட்டது. அதோடு அங்குள்ள காட்டுப்பகுதியில் கல்வெட்டுடன் அதன் சமகாலத்துக்குரிய அழிவடைந்த சிவாலயமும் அதன் சுற்றாடலில் அழிவடைந்த கட்டட அத்திவாரங்களும் காணப்படுகின்றன.


கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டின் வரலாற்று முக்கியத்துவம் பற்றி, யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வரலாற்றுத்துறையின் முதல் தலைவரும் முதல் பேராசிரியரும் தென்னாசியாவின் புலமைமிக்க தொல்லியல், வரலாற்று அறிஞர்களில் ஒருவருமான கலாநிதி கா. இந்திரபாலா கூறுகையில்,


கங்கராஜ காலிங்க விஜயபாகு தேவர் எனக் குறிப்பிடப்பட்டுள்ள மன்னன் மாகன். இவன் கங்கவம்சத்தைச் சேர்ந்தவன் என்பது முன்னரே முன்வைக்கப்பட்ட ஒரு கருத்து. இக்கருத்து இலக்கிய ஆதாரங்களை அடிப்படையாக வைத்து ஊகிக்கப்பட்ட ஒரு கருத்தாகும்.


இப்போது கண்டுபிடிக்கப்பட்ட இக்கல்வெட்டால், இது உறுதிப்படுத்தப்படுகின்றது. காலிங்க விஜயபாகு என்ற பெயர் மாகனுக்கு இருந்தது முன்னரே இலக்கிய ஆதாரங்களால் அறியப்பட்ட செய்தி.


சமகாலக் கல்வெட்டில் அது கொடுக்கப்படுவது இந்த ஆவணத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கின்றது. ஶ்ரீகுலோத்துங்கசோழ காலிங்கராயன் என்பவன் இங்கு இரண்டு முக்கிய செயல்களைச் சாதித்தான் என வரலாறுகளில் கூறப்பட்டுள்ளது.


ஒன்று, அவன் ஈழத்தைக் கைப்பற்றினான். இரண்டாவது, அதன் விளைவாகக் காலிங்க விஜயபாகு தேவர்க்கு வீராபிஷேகம் நடத்தினான். இந்த இரண்டும் புதிய விடயங்கள். மாகன், தென்னிந்தியப் படைகளுடன் ஆட்சியைக் கைபற்றினான் என்பது முன்னரே இலக்கிய ஆதாரங்களில் கூறப்பட்டுள்ளது.


எனினும் இவற்றின் சான்றில் குழப்பம் அதிகம். மாகனுக்கு உதவியது தமிழ்ப் படைகள் என்றும், தமிழ்-கேரளப் படைகள் என்றும், கலிங்கத்துப் படைகள் என்றும் தெளிவற்ற கூற்றுகள் உள்ளன.


இவ்வாறான நிலையில் இக்கல்வெட்டு இதைத் தெளிவுபடுத்த உதவுகிறது. காலிங்கராயன் என்பவன் மாகனுக்கு உதவிய படையின் தளபதி என்பதும், அவன் முழுப் பெயரைப் பார்க்குமிடத்து அவன் சோழநாட்டைச் சேர்ந்த ஓர் உயர்நிலை அதிகாரி என்பதும், ஈழமண்டலம் 'எறிந்து' என்று கூறுவதால், பொலன்னறுவை அரசை வெளியில் இருந்து வந்து கைப்பற்றினான் என்பதும் இக்கல்வெட்டில் இருந்து ஊகிக்கப்படலாம் எனவும் அவர் குறிப்பிட்டார்.


மேலும், காலிங்கராயன் மாகனுக்கு வீராபிஷேகம் செய்தபடியால், அவன் மாகன் திரட்டிவந்த சாதாரணக் கூலிப்படையின் தளபதியாக இருந்திருக்க முடியாது எனவும் அவர் குறிப்பிட்டார்.


அதேவேளை அந்த அதிகாரம் அவனுக்கு எப்படிக் கிடைத்தது? அதனை மாகன் எப்படி ஏற்றுக்கொள்ளக்கூடியதாய் இருந்தது? அவன் சோழ மன்னனுடைய படை ஒன்றின் தளபதியாக இருந்தான் என்றும், மாகன் விண்ணப்பத்துக்கு இணங்கி (ஏற்கெனவே பல முறை இலங்கைக்குப் படை அனுப்பிய) மூன்றாம் குலோதுங்க சோழன் இம்முறை மாகனுக்கு உதவினான் என்றும் ஊகிக்க இடமுண்டு” எனவும் கலாநிதி இந்திரபாலா கல்வெட்டில் உள்ள வாசகங்களுக்கு விளக்கம் அளித்தும் அறிவீர்கள் .


இப்படியான பலதரவுகளை இன்னும் பதிவு வசெய்வதர்க்கு ஆசை .ஆனால் நீங்கள் வாசிக்கவேண்டும் என்பதற்காக இத்துடன் நிறுத்திவிட்டு இன்னொரு பதிவில் தொடர்கின்றேன் 



கருத்துகள்