கவிஞர் கந்தையா காரை நகர்
நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்;
கந்தையா உண்மையில் இவன் கந்த அய்யா தான்
முருகன் தமிழ் வளர்த்தான்
இக்கவியோ பண்டைத்தமிழை
யாழ் மொழியில் பேசும் வல்லாசான்
அடிமை வாழ்வு இல்லறம் அன்றாட வாழ்வு என
நல் தமிழை சிந்திக்க வைக்கும் பேச்சு நடை
இனிக்கும் இவன் கதையில்
தேடி திரிகின்றேன்
இவனை யான் தரிசிக்க
நாமிருவரும் ஆடுகின்றோம்
கண்ணா மூச்சி
விளையாட்டுத்தான்
இவன் ஆசுகவி வரகவிதான் -இவன்
பேச்சு நடையில் தமிழ் இனிக்கும்
கூட்டு வாழ்க்கை தன்னை
எப்படி வாழ்ந்தோம் என்று
இவன் வசனங்கள் இனிதே
அவன் எழுதும் எழுத்துக்களில்
இனிக்கும் அதிமதுரமே தான்
இருக்கும் பொழுதே
வாழ்த்த எண்ணி இக்கவிதை
அவனுக்கு
என் அன்பால் சமர்ப்பணம்
என்றோ ஒரு நாள் இவன் வரலாறு
என் தட்டச்சில்
கணனியில் பதிவாகும்
தேடுகிறேன் இவனை நேரில் தரிசிக்க
கண்டவர்கள் கேட்டவர்கள்
தருவீரோ
இவன் முகவரிதான்
நன்றி
கருத்துகள்
கருத்துரையிடுக