விதவை என்பவள் மேலான தவை

ஆ வாள்


அதாவது மேலான தவத்தை செய்பவள்

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
கைம்பெண், கைம்மை, வைதவியம், அமங்கலி, அமங்கலை, விதவாகாமி, வாழாவெட்டி என்று அழைக்கப்படுகிறாள் இவள் .
வெள்ளை சீலை கசங்காமல் அவதானமாக வாழ்வதற்கு திணிக்கப்பட்ட சட்டம் என்பது மனிதாபி மானம் அற்ற உண்மை
”மனைவி இறந்தபின் வயதான தாத்தாவும்
மறுமணம் பண்ணிக்கிட உரிமையுண்டு – இளம்
மங்கையை முடிப்பதுண்டு, மண்டைவரண்டு – தன்
கணவனை இழந்தவள் கட்டழகியானாலும்
கடைசியில் சாகமட்டும் உரிமை உண்டு – இதில்
கதைகளும் கட்டிவிடும் ஊர்திரண்டு
கற்பின் பலமென்றும் கண்ணகி குலமென்றும்
கச்சிதமாத் திட்டுவாங்க – அதை
அச்சடிச்சும் காட்டுவாங்க – சொன்ன
கருத்துக்கு மாறாகக் கற்பைக் களவாடக்
கன்னக் கோலைத் தீட்டுவாங்க”
இப்படி சொன்னவர் கல்யாண சுந்தரம் பட்டுக்கோட்டை
மனைவியை இழந்த கணவர்களும், அவர்கள் வயது நாற்பது, ஐம்பது என்றாலும் இரண்டாம், மூன்றாம் தாரமாக வருபவர்கள் 20, 25 வயதுக்குள் இருக்கும்படி இளம் பெண்களாகத் தேடிக் கொள்கிறார்கள். பெண்கள் எவ்வளவு இளமையானவர்களாக இருந்தாலும் கணவனை இழந்தால், கற்பென்று சொல்லி விதவையாகவே வாழவேண்டிய கொடுமைதான் வழக்கில் இருக்கிறது.
சிறுவர் பால்ய திருமணங்கள் நடந்த காலங்கள் இப்போ இல்லை
பால்யத்தில் திருமணம் நடந்து, பெண்குழந்தை பூப்படைவதற்கு முன்பே, கணவன் இறந்துவிடும் சந்தர்ப்பங்களும் உண்டு. அத்தருணங்களில் அக்குழந்தைகளுக்கு மொட்டையடித்து காவியுடுத்தி விதவையாக, சகுனக் குறைவென்று சொல்லி அவர்கள் சுதந்திரமாகச் செயல்படத் தடை விதித்து விடுவார்கள். அவ்ர்கள் விரக தாபத்துடன், தங்கள் உணர்வுகளைக் கட்டுப்படுத்தி வாழப் பழக்கப்படுத்திக் கொள்ளவேண்டிய சூழ்நிலை.
கொடுமை அல்லவா ?
”சதி இன்றும் வாழ்கிறது! தனிமைத் தீயில்
சாத்திவைத்துக் கொல்கிறது! விதவை என்னும்
விதியின்றும் இருக்கிறது! வெளியில் செல்ல
விடாததுவாய் வெளுக்கிறது! வேத னையாம்
பொதியின்னும் இருக்கிறது பெண்கள் நெஞ்சில்!
புழுங்கியவர் சாகவிடும் சமூகம் யாரோ?”
ஆனால் இந்துக்கள் மருமனத்த்கை ஆதரிப்பவர்கள் .வேதசாத்திரம் அனுமதிக்கிறது .
இது பற்றி சுருக்கமாகப் பார்ப்போமானால்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
ரிக்வேதம் பத்தாவது மண்டலம் பதினெட்டாவது அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது (10.18). இறந்த மனிதனின் சகோதரர்களும் மற்ற உறவினர்களும் அவன் மனைவிக்கு சொல்வது போல:
‘ ஓ, பெண்ணே உன் கணவனை தகனம் செய்ய அனுமதிப்பாயாக. வாழும் உன் குடும்பத்தாரிடம் செல்வாயாக. உன் பிள்ளைகள் உன் பேரப்பிள்ளைகள் போன்றவர்கள் இருக்கும் உன் வீட்டிற்கு செல்வாயாக. உனது எஞ்சிய வாழ்நாளை மகிழ்ச்சியாக கழிப்பாய். நீ யாரருகில் துயின்றாயோ யார் உன் கையை மணமேடையில் பற்றினானோ அவன் இன்று சலனமின்றி இருக்கிறான்.’
இன்னொன்றும் சொல்கிறது ரிக் வேதம் – விதவைகளுக்கு மறுமணம் உண்டு என்கிறது. இறந்த பெண்ணின் கணவனின் வில்லை எடுத்து கொண்டு இந்த பெண்ணை மணம் செய்ய முடிவுசெய்துள்ளவன் சொல்வது போன்ற ஒரு சுலோகத்தை இவ்வாறு கூறுகிறது –
‘பெண்ணே இதோ சிதையில் இருக்கும் இவன் வில்லை நான் எடுத்து கொண்டேன். இது எனக்கு புகழையும், வலிமையையும், சக்தியையும் அளிக்கட்டும். இங்கு இருக்கும் இந்த உயர்ந்த மனிதர்களுடன் இணைந்து நம்மை எதிர்ப்பவர்களை நாம் வெல்வோம்.’
‘பெண்ணே இறந்த உனது கணவனிடமிருந்து நீங்குவாயாக. உன் கைப்பற்ற தயாராய் இருக்கும் இந்த ஆடவனை சேர்ந்து பிள்ளைகளும் செல்வமும் பெற்று மகிழ்ச்சியாக வாழ்வாயாக” என்று அந்த விதவையை வாழ்த்துகிறது இன்னொரு சுலோகம்.
அதே மண்டலத்தின் பத்தொன்பதாவது அத்தியாயம் இவ்வாறு சொல்கிறது:
” நாம் உறுதியும் தைரியமும் கொண்ட ஒரு புதிய வாழ்வை மேற்கொள்வோம் மகன்களை பெறுவோம் நம்மை வீழ்த்த நினைக்கும் எந்த ஒரு எதிர்ப்பையும் நாம் வெற்றிகொள்வோம்”.
4000 வருடங்களுக்கு முன்பு இயற்றப்பட்டது அன்றைய வாழ்நிலை என்ன என்பதை காட்டும் கண்ணாடி ஹிந்து மதத்தின் ஆணிவேர் இதுவே. வேதங்களை அன்றி ஒரு சனாதன ஹிந்து வேறெதையும் மேற்கோள் காட்ட இயலாது என்றும் மாறா தன்மை உடையது அதனாலேயே சுருதி என்றழைக்கப்படுவது.
கணவன் தொலைந்து போய்விட்டாலோ, மரணமடைந்தாலோ, துறவியாகி விட்டாலோ, ஆண்மையற்று இருந்தாலோ, நடத்தையில் வீழ்ந்தாலோ இந்த ஐந்து சூழல்களிலும் பெண்கள் வேறொரு கணவனைத் தேடிக்கொள்ளலாம் என்று விதிக்கப்பட்டுள்ளது.
– பராசர ஸ்மிருதி, 4.30 (காலம்: பொ.யு 1-3ம் நூற்.)
நமது தர்மசாஸ்திரங்கள் ஒட்டுமொத்தமாக ஆணாதிக்கத் தனமாக இருக்கவில்லை, பல இடங்களில் நாம் வியப்படையுமளவுக்கு பெண்ணுரிமைகளை முன்னெடுப்பதாக இருக்கின்றன என்பதற்கு இந்த சுலோகம் ஒரு சான்று. “கணவனை இழந்தார்க்குக் காட்டுவது இல்.. “ என்று சிலப்பதிகாரம் கைம்பெண்ணின் துயரம் பற்றிப் புலம்புவதற்கு முற்பட்ட காலத்திலேயே இந்த ஸ்மிருதி எழுதப்பட்டிருக்கிறது, இதன் நடைமுறைகள் புழக்கத்திலும் இருந்திருக்கலாம் என்பதைக் கவனிக்க வேண்டும்.
நஷ்டே ம்ரு’தே ப்ரவஜிதே க்லீபே3 ச பதிதே பதௌ
பஞ்சஸ்வாபத்ஸு நாரீணாம் பதிரன்யோ விதீ4யதே.வாலியின் மரணத்திற்குப் பின் சுக்ரீவனுடன் வாழ்ந்தவள் தாரை (வால்மீகி ராமாயணப்படி). ராவணன் மரணமடைந்தவுடன் உயிரை விட்டவள் மந்தோதரி. இருவரையும் மாதரசிகள் என்று தான் நமது மரபு போற்றுகிறது.ஆனால், கம்பர் தாரை விதவைக் கோலத்தில் இருந்ததாக சித்தரிக்கிறாரே என்று கேட்கலாம். வால்மீகிக்கும் கம்பருக்குமிடையில் குறைந்தது 1500 ஆண்டு கால இடைவெளி இருந்திருக்கிறது (ஒப்பீட்டில் நமக்கும் கம்பனுக்குமான கால இடைவெளி 800 ஆண்டுகள் தான்). எனவே இது வடநாட்டு தென்னாட்டு வேறுபாடு அல்ல, *காலகட்டத்தின்* வேறுபாடு. கம்பர் எழுதியது அவர் வாழ்ந்த 12ம் நூற்றாண்டு சோழநாட்டு சமூக நடைமுறைகளையும் கருத்தில் வைத்துக் கொண்டு தானே அன்றி, நேரடியான ராமாயண மரபை அல்ல. இதே ரீதியில் தான், வால்மீகத்தில் வேட்டையாடி உண்ட ராம லட்சுமணர்களை மரக்கறி உணவாளர்களாக கம்பர் ஆக்கியிருக்கிறார்.
காமம் தவிர்க்கப்படவேண்டியதல்ல என்பது பண்டைத்தமிழர் அறிவு. சங்ககாலப்பாடல்களில் தலைவன் தலைவி ஊடல் கூடல் , பிரிவு பற்றி எத்தனை காவியச் செய்யுள்கள் இருக்கின்றன?! ”காமம் காமம் என்ப, காமம் அணங்கும் பிணியும் அன்றே “ என்ற பாடல்கள் இன்றும் நம் அறிவைச் சீராக்குபவை. நம் முன்னோர்கள் காமத்தை ஒரு இயற்கை உந்தம் என்றே கருதினார்கள். இல்லாவிட்டால், ஒழுக்கம் பற்றி எழுதிய அதே திருவள்ளுவர் காமத்துப் பால் எழுதியிருக்க வேண்டிய அவசியமில்லை. காமத்துப் பால் என்பதை இன்பத்துப் பால் எனச் சொல்பவருண்டு. சிற்றின்பத்துப்பால் என எவரும் சொல்வதில்லை.
கோவில்களின் கோபுரங்களிலும், வெளி மதிள்களிலும் காமத்தைச் சித்தரிக்கும் பல சிற்பங்களைக் காணலாம். அதுவும் பல்லாண் சேர்க்கை, பல்பெண் சேர்க்கை எனச் சமுதாயம் தவிர்த்த சில உறவுகளையும் அதில் காணலாம். இது “ஒரே கடவுள்” கொள்கையைக் கொணர்ந்தவர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. இதனை எள்ளி நகையாடியே, காமம் பற்றிய நமது ஆரோக்கியச் சிந்தையை அழித்தார்கள். நாமும் விட்டொழிந்தோம்.
வெளிமதில், கோபுரங்களில் உள்ள சிலைகளைக் கண்டு ஈர்க்கப்பட்டு உள்ளே வருபவர்கள் மெல்ல மெல்ல, அந்த சிற்பங்கள் மாறுவதைக் கண்டு, தன் கிளர்வுகளிலும் , ரசனையிலும் மாறுகிறார்கள்.
இறுதியில் கருவறை மெய்ஞானத்தைக் காட்டுகிறது.
பதின்ம வயதில் (TEEN AGE )ஆண்டாள் பிற ஆழ்வார்களைக் காட்டிலும் நாயக நாயகி பாவத்தில் எழுதியதை, அவள் ஒரு Child prodigy என்பதைப் புரிந்துகொள்வதில் சிரமம் என்ன இருக்கிறது?
‘அந்த காலத்தில் ஒரு பெண் எப்படி இவ்வாறு பாடியிருக்க முடியும்?” ஆண்டாள் ஒரு சாதாரணப் பெண் அல்ல. பெண்ணின் சூடிக்கொடுத்த செயலால் அதிர்கிறார் தந்தை பெரியாழ்வார். ஏன் இப்படிச் செய்தாய்? எனக் கேட்கிறார். அதன்பின்னரே ஆண்டாளின் பெருமை வெளியே தெரிகிறது. அவளது தெளிவான முடிவில், அரங்கநாதனையே அவள் அடைகிறாள். அல்லவா ?
அதாவது பெண்களை அடக்கிய சமூகம் இந்து மதமல்ல
பெண்களை அடக்குகிற சமூகமென்றால், ஆண்டாள் என்ற பாத்திரத்தையே வைணவம் அழித்திருக்கலாமே? ஏன் அவளை முன்வைத்து “ஆழ்வார்கள் தம் செயலை விஞ்சி நிற்கும் தன்மையளாய்” என்று புகழ்கிறது? வேதாந்த தேசிகன் திருப்பாணாழ்வாரை ஏன் நம்பெருமாள், நம்பிள்ளை, நம் சீயர் அளவில் ’நம் பாணன்”, என்கிறார்? கைசிக புராணத்தில் வரும் பாணர் கதாபாத்திரத்தை ‘நம் பாடுவான்’ என்றே பக்தியுடன் அழைக்கின்றனர். இந்த உரிமையைப் பெருமாளுக்கும் ஆழ்வார் கொடுக்கிறார் . இறைவன் நம்மீது மகிழ்ந்து “ அளியன் நம் பயல்” என்று நம்மை அணைத்துக்கொள்ளாமல் ஏன் தாமதப்படுத்துகிறாரன்? எனக் கேட்கிறார்.
ஏனெனில் பக்திக்கு விலக்கானது எதுவுமில்லை. ஜாதியோ, பாலினமோ ஒரு பொருட்டேயல்ல. நம்மாழ்வார் “குலம்தாங்கு சாதிகள் நாலினும் கீழிழிந்து… அடியார் தம்மடியார் இவ்வடிகளே” என்றும் தொண்டரடிப்பொடியாழ்வார் ”ஊனமா யினகள் செய்யும் ஊனகா ரகர்க ளேலும்,போனகம் செய்த சேடம் தருவரேல் புனிதமன்றே“, “அடிமையில் குடிமை யில்லா அயல்சதுப் பேதி மாரில், குடிமையில் கடைமை பட்ட குக்கரில் பிறப்ப ரேலும்… அடியரை உகத்திபோலும்” என்றும் சொல்வதைக் கவனிக்க வேண்டும்..
இன்று இணையத்தில் ஆபாசப்படம் பார்ப்போர்கள் இருக்கிறார்கள் .இவர்களும் எமது சமுதாய அங்கத்தவர்களே
காமம் இல்லாத ஆண் பெண் இல்லை,அவர்கள் தமது மனக்கட்டுப்பாட்டுக்குள் வாழ்வதற்கே சமயம் போதிக்கிறது
நாச்சியார் திருமொழி படித்தால், அக்காமம் கிளர்வாகத் தோன்றாது. அனுபவத்தில் தோய்த்தெழுந்து அதனைத் தாண்டும் ஒரு முதிர்வான உணர்வைக் கொடுக்கும். அதனை அவரவர் மட்டுமே உணர முடியும் .
ஏனெனில் இந்த அனுபவ உணர்வு தன்னிலைப்பட்டது. நம்மாழ்வார் சொல்வது போல்
“எழுவதோர் உரு என்நெஞ்சுள் எழும் ஆர்க்கும் அறிவரிதே”
விதவைகள் யார் ?
இவர்கள் மேலான தவத்தை செய்பவர்கள் .ஆசா பாசங்களுக்கு அப்பால் பட்டு உணர்ச்சிகளை மறுப்பவர்கள் .
இதனால் விதவைகள் மதிக்கப்படுகிறார்கள் ,
ஆனால் பலர் விதவைக்கு இல்லாத பொல்லாத சட்டங்களை திணிப்பது வேதனைக்கு உரியதே .
நாம் இப்பொழுது பல இணையங்கள் திரைப்படங்கள் வெளி நாட்டு கலாசார திநிப்புக்களுக்குள் அடிமைப்பட்டு வாழுகிறோம்
காம உணர்வு இன்றி இருக்க முடியாது. காம உணர்வு அளவோடு இருந்தால் எந்த பாதிப்பும் இல்லை. இது உடலுக்கும் மனதிற்கும் நல்லது. காம உணர்வுகள் அளவிற்கு அதிகமாக இருந்து அதை அடக்க முடியாமல் போகும் பட்சத்தில் பாலியல் பலாத்காரங்கள், கொலைகள், கொள்ளைகள் போன்றவைகள் நடக்கின்றன.
செக்ஸ் உணர்வுகளை அதிகமாக கட்டுப்படுத்தினால் அது வெடித்து வெளிக் கிளம்புமாம். எனவே செக்ஸ் உணர்வுகளை அடக்கினால் மனநோய், தலைவலி உள்ளிட்ட உடலியல் ரீதியான, மனரீதியான பிரச்சினைகள் ஏற்படும் என்கின்றனர் நிபுணர்கள். மனிதர்கள் உணர்ச்சிக் குவியலால் ஆனவர்கள். கோபம், அழுகை, ஆனந்தம், ஆசை, வெறுப்பு, காமம் என பலவித உணர்வுகளுக்கு ஆட்பட்டவர்கள். ஆணும், பெண்ணும் திருமணத்திற்குப் பின்னர் ஒருவருக்கொருவர் மனப்பூர்வமாக இணைந்து காம உணர்வுகளை பகிர்ந்து கொள்வதில் எந்த சிக்கலும் இல்லை. அதே சமயம் காம உணர்வுகள் அதிகமாகி அதை அடக்க முடியாத பட்சத்தில் அதை தவறான முறையில் வெளிப்படுத்துவதன் மூலம்தான் குற்றச் சம்பவங்கள் நடக்கின்றன.
என்பதை எல்லோரும் உணரவேண்டும்
காம உணர்வுகளை அடக்கி வைப்பதன் மூலம் மனநோய், தலைவலி போன்றவை வருமாம். திடீர் ஜுரம், மூட்டுக்களில் வீக்கம், இடுப்புவலி, உடல் பலவீனம், நடுக்கம், மார்புவலி, மயக்கம், போன்றவைகளோடு திடீரென இருதய நோய் கூட வரும்
காம உணர்வுகள் அதிகரிக்கும் முருங்கைக்கீரை, முருங்கைக்காய், வெள்ளைப் பூண்டு, வெங்காயம் போன்றவைகளை சாப்பிடுவதன் மூலம் காம உணர்வுகள் அதிகரிக்கும் என்று கூறப்படுகிறது. அது எந்த ஆய்விலும் நிரூபிக்கப்படவில்லை.ஆனால் சினிமா சொன்னது
முட்டைக்கோஸ், கொத்தமல்லி, புதினா போன்ற உணவுகளுக்கு செக்ஸ் உணர்வுகளை கட்டுப்படுத்தும் .
செக்ஸ் உணர்வுகளை அதிகரிக்கும் ஹார்மோன்களை உடற்பயிற்சியின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.
ஏனென்றால் உடல் உழைப்பு இன்றி உண்டு கொழுப்பவர்களுக்குத் தான் செக்ஸ் ஹார்மோன்கள் அதிகம் சுரக்கிறது .. ஆன்மீக நூல்கள் வாசிப்பது, நல்ல இசையை கேட்பது என அனுபவிப்பதன் மூலம் காமத்தை கரைக்கச் செய்யலாம்.
நாம் சந்திக்கும்... உணரும் உணர்வுகள் எல்லாமே உணர்ச்சிதான். அன்பு, பாசம், கோபம், சினம், ஆனந்தம், இன்பம், துக்கம், ஆசை, காமம், வெறுப்பு, விரக்தி, பயம் இப்படி உணர்ச்சிகளின் பட்டியலுக்கு எல்லையே இல்லை.
இவை எல்லாமே இருந்தால் தான் முழு மனிதன். எந்த நேரத்தில் இந்த குணங்களை வெளிப்படுத்துகிறோமோ, அதற்கு ஏற்றாற்போல்தான் மனிதருக்கு மனிதர் வேறுபடுகிறார்கள்.
ஆணோ பெண்ணோ ஏதாவது ஒரு தருணத்தில் காம வயப்படுவது தவிர்க்க முடியாதது. தக்க துணையுடன் இணைவதுதான் அதற்கு ஒரே வடிகால்.
செக்ஸ் உணர்ச்சி அளவோடு இருக்கும் பட்சத்தில் உடலுக்கும் மனதிற்கும் நல்லதுதான். பெரிய பெரிய குற்றங்கள், கொலைகள், கற்பழிப்புகள் காம உணர்வுகளை அடக்க முடியாதவர்களால்தான் நிகழ்ந்தேறியுள்ளன.
இதற்க்கு உதாரணமாக
இந்தியாவில் நடப்பவையும்
இலங்கையில் கம்பர் மலை ,கோகிலாம்பாள் ,நாய்க்குட்டிவிசரி ,புங்குடுதீவு பாடாசாலை சிறுமி என்று பல சம்பவங்களைக் கூற முடியும்
ஆணாதிக்க சமுதாயத்தின் ஆழத்தில், சிறந்த பெண் என்பவள் தேவதை போன்றும் அப்பாவித்தனமாகவும் இருக்க வேண்டும், மேலும் "பாலியல் உறவு" என்ற பெயரைக் கேட்டாலே பெண்கள் வெட்கப்பட வேண்டும் என்ற தவறான கருத்து இருப்பது போல தெரிகிறது.
ஆண்களில் பலர் ராமாயணத்தில் வரும் அடக்கமான சீதாபிராட்டியின் கதைகளை கேட்டு வளர்ந்தவர் கள். எனவே, "நடத்தை குறித்த சந்தேகம் எழும்போதெல்லாம், தீயில் விழுந்து தன் கற்பை நிரூபிக்கும் சீதை மாதிரியான மனைவியை ஒருநாள் திருமணம் செய்யக்கூடும்" என்று நினைத்தே வளர்ந்திருப்பா ர்கள்..
ஆனால் நிலைமை இப்பொழுது அப்படியல்ல .
காம உணர்வு என்பது உலகில் உள்ள ஜீவராசிகள் அனைத்துக்கும் இயல்பாகவே இருக்கக் கூடியதாகும். யாரும் சொல்லித்தராமலே, பறவைகள் முட்டை இடுகின்றன. விலங்குகள் குட்டி போடுகின்றன. மனிதன் இனப் பெருக்கம் செய்கிறான். இவைகளுக்கு மூல காரணம் காமம்தான் என்கிறனர் ஆராய்ச்சி நிபுணர்கள்.
இதில், மனிதர்களுக்கு உணர்வு அளிக்கும் உறுப்புகளாக அமைந்திருப்பவை ஐம்புலன்கள் தான். அவை, பார்த்தல், கேட்டல், ருசித்தல், வாசனை அறிதல், தொட்டு உணர்தல் ஆகியவை ஆகும்.
இந்த ஐம்புலன்கள் நுகர்வால் இன்பம் அனுபவிக்க உண்டாகும் ஆசையே காமம். மற்ற இன்பங்களைக் காட்டிலும் தொடு உணர்வால் ஏற்படும் இன்பம்தான் மிகச்சிறந்த இன்பமாம். மனிதனுக்குக் காம உணர்வின்றி நிச்சயம் இருக்க முடியாது. உறுதியாகக் காம உணர்வு இருக்கும். அந்த உணர்வு அளவோடு இருக்க வேண்டும்.
விலங்குகள் மற்றும் பிற உயிரினங்கள் எல்லாம் இன விருத்திக்காகதான், அதற்கான பருவத்தில் மட்டுமே ஒன்று சேர்கின்றன. ஆனால், மனிதன் தான், எல்லாக் காலத்திலும், பல இடத்திலும் செக்ஸ்-ஐ மிகச் சிறப்பாக உயர்வாக அனுபவிக்கிறான்.
ஆணும் பெண்ணும் இருவருமே செக்ஸ்-ஐ விரும்புவதால், அவர்களுக்குள் சில நியாயமான விதிமுறைகளை வகுத்துக் கொண்டு செயல்படுகின்றனர். இது தான் அவர்களை விலங்குகளில் இருந்து வேறுபடுத்திக் காட்டி உயர்ந்த நிலைக்கு கொண்டு சென்றுள்ளது.
மேலும், எந்த உயரினமும் செக்ஸ்-ல் முழு திருப்தி அடைவதில்லை. அது போல நிரந்தர உறவும் வைத்துக் கொள்வதில்லை. ஆனால், மனிதன் செக்ஸ்-ல் பூரண இன்பம் பெறுகிறான். ஆக, மனிதன் செக்ஸ்-ல் கொடுத்துவைத்தவன்.
காம உணர்வுகள் அடுத்தவர்களுக்குத் தொல்லை கொடுக்காமல், நமது கலாச்சாரத்திற்கு ஏற்ற வகையில்,
அமைதல் வேண்டும்
விதவைப் பெண்களுக்கு வாழ்வு கொடுக்கப்படல் வேண்டும் என்ற நோக்கத்தில் இப்பதிவை நான் தந்தாலும்
இப்போதைய மாணவர்கள் படிப்புக்காக தமது இளமைப் பருவத்தை தொலைக்காமல்
ஜாதி மத இன மொழி பேதம் நீங்கி
பருவத்தே பயிர் செய்து
இன மொழிப் பற்றோடு
எமது காலாசார விழுமியங்களை மீறாமல்
ஆணுக்கு பெண்ணும் பெண்ணுக்கு ஆணும் துணையாகி
வை யத்தில் வாழ்வாங்கு வாழ எல்லாம் வல்ல இறைவன் அருள் புரிவானாக
அன்புடன் Manikkavasagar Vaitialingam


கருத்துகள்