சோடா மூடி ?
செல்லாக்காசு ஆனகதை யாரையும் புண் படுத்த அல்ல .பெண்களை மதிக்கும் படியே இக்கட்டுரை தொடர்கிறது சமுதாயத்தை பாதிக்கு வகையில் ஆண்கள் இருக்கக் கூடாது என்று அடியேனின் தாய்மையான வேண்டுகோள்
%%%%%%%%%%%%%%%%%%%
தணிக்கை யுடன் தொடர்கிறேன்
பெண் பதுமினி, சித்தினி, சங்கினி, அத்தினி என்று நான்கு வகைப்படும்
பேதை, பெதும்பை, மங்கை, மடந்தை, அரிவை, தெரிவை, பேரிளம்பெண்என்று அவளின் பருவங்களாயு ம் வகைப்படுத்தினார் கள் மாந்தர்.
பேதை : 5 முதல் 8 வயது
. பெதும்பை : 9 முதல் 10 வயது
. மங்கை : 11 முதல் 14 வயது
மடந்தை: 15 முதல் 18 வயது
அரிவை: 19 முதல் 24 வயது
தெரிவை: 25 முதல் 29 வயது
. பேரிளம்பெண்: 30 முதல் 36 வயது என்று வகைப்படுத்தினார்கள்
பிறந்த முதல் பருவம் அடையும் வரை அதவது 0 முதல் 8 வயது வரை சிறுமிகள் எனப்படுவர் இந்த வயதில் இவர்களுக்கு பெண்களுக்கு உரிய வளர்ச்சி இருக்கும்.கன்னி எனறால் பெண்கள் பருவம் அடைந்து திருமணம் ஆகும் வரை நிலை கன்னி என்று அழைக்கப்படுவர்கள்.பெண் எனறால் அவள் திருமணம் ஆகி குழந்தை பேறு பெற்றவர்கள் பெண் என்று அழைக்கப்படுவர்கள்.
இவை தவிர சிறுவயதுப் பெண்ணைப் பொதுவாகச் சிறுமி என்றும், திருமணம் ஆகாத பெண்களைக் கன்னி என்றும் குறிப்பது உண்டு. பொதுவாகச் சிறுமி நிலையைத் தாண்டியவர்கள் பெண்கள் கருதுவதும் சமுதாயத்தில் அழைக்கபட்டு வருகிறது.
குழந்தைப் பருவத்திற்கும், வளர்ச்சி முற்றுப் பெற்ற பருவத்திற்கும் இடைப்பட்ட காலத்தை வளரிளம் அல்லது பருவ வயது என்று கூறுகிறோம், 9 வயது முதல் வயது 16 வரையிலான காலம் தான் வளரிளம் பருவ வயதுக் காலம் ஆகும்
தன்னுடைய உடல் மற்றும் மன வளர்ச்சியில் முக்கிய பங்கு வகிக்கும் பருவம் இது. இந்த பருவத்தில் எடையும், உயரமும் மிக வேகமாக அதிகரிக்கின்றது. இந்த பருவத்தில்தான் நோய்களில் இருந்து பாதுகாப்பு, மனம் மற்றும் சமுதாய நலன்களில் ஏற்படும் சிக்கல்கள் குறித்து ஒரு பெண் தன்னுடைய வாழ்கை ஆரோக்கியமான வாழ்வை பெற உணவு, உடை, தன்சுத்தம், பாதுகாப்பான சுற்றுப்புற சூழ்நிலையில் வாழ்வது பற்றி அதிகமாக அறிந்து கொள்ள வேண்டும் .உணவுக்கட்டுப்பாடு என்று தங்களின் உடம்பைக் கெடுப்பதை இக்காலத்தில் பார்க்கின்றோம்
உடலாலும், மனதாலும் மிக வேகமாக மாறுதல்களை சந்திக்கும் பருவம் இந்த வளரிளம் பருவம். இயக்குநீர்கள் சுரப்பில் ஏற்படும் மாறுதல்களால் பால் உறுப்புகளின் வளர்ச்சியும், உருவ அமைப்பில் மாறுதல்களும் ஏற்படுகின்றன. தன உருவத்தைப் பார்த்து தனக்குள் ஆசைப் படுவதும் தொட்டுப் பார்த்து சங்கோசப் படுவதும் இந்த வயதே .
உடலின் பிற பாங்களைவிட தோள் பகுதி, கால்கள், பாதங்கள் வேகமாக வளர்ச்சி அடைகின்றன. உடல் அமைப்பில் இடுப்பு நன்கு அகன்றும், வயிற்றுப் பகுதி சிறுத்தும் மாற்றம் பெறும். வயிறு, புட்டம், கால்களில் கொழுப்புச் சேர்ந்து உடல் வளர்ச்சி பெறும். இவை சாதாரணமாக ஏற்படும் மாற்றமாகும். இதனால் பெண்களுக்கு உரிய உடல் அமைப்பு ஏற்படுகிறது.
பெண்கள் 9வயது முதல் வயதுக்குள் 16 பருவமடைகின்றனர்.இக்காலத்தில் மாதவிடாய் சுழற்சி அல்லது மாதவிடாய் காலம் தொடங்குகிறது மாதவிடாய்ச் சுழற்சி என்பது பருவம் அடைந்த மகளிர் அனைவருக்கும் வயது காலத்தில் நடக்கும் சாதாரணமான விஷயம். பெரும்பாலும் இக்காலத்தில் பெண்கள் ஆக்க பூர்வமாகவும் செயல்படமுடிகிறது. இந்த சமயத்தில் ஆயத்த மாதவிடாய் பஞ்சு, சுத்தமான துணிகளையே பயன்படுத்த வேண்டும்.இந்த இடத்தில்
பெண் கல்வி என்பது மிகவும் முக்கியமான ஒன்று ஆகும்.பண்டைய காலத்தில் பேத்தி மாரிடமிருந்து பாலியல் கல்வியை கூட்டுக் குடும்ப வாழ்க்கை முறையில் வாய் வழிக் கல்வியாக போதிக்கப்பட்டது .இக்காலத்தில் சிறு பெண்களுக்கு ஏற்படும் சந்தேகங்களை தெளிவாக்குதற்கு இயந்திர வாழ்க்கை வாழும் பெற்றோர்க்கு நேரம் அல்லது புரிந்துணர்வு இல்லை .இந்த இடத்தில் பாலியல் வன் கொடுமை பல இடங்களில் சம்பவிக்க ஏதுவாகிறது .ஆண் மனித இனங்களில்
இரை தேடும் ஆந்தைகள் ,ஓநாய்கள் ,வல்லூறுகள் என்று சிலர் எங்கேயோ பிறந்து விடுகிறார்கள் .துணை போகும் நரிகளாக மனிதர்கள் உண்டு
இவர்களினால் அப்பாவிப் புள்ளி மான்கள் போன்ற சிறுமிகள் சீரழிக்கப்பட்டு விடுகிறார்கள் .
அல்லது குடும்ப வறுமை ,பஞ்சம் ஆறுதல் இல்லாதமை ..இப்படி தவிக்கும் பெண்களைக் கூட இந்த மிருகங்கள் சீரழிவு செய்கின்றன .
பெண்களை அடையவேண்டி கொலைகளைக் கூட செய்யும் மானுடங்கள் உண்டு ..இந்தியாவிலோ இலங்கையிலோ இப்படி ஏமாற்றப்பட்டு நட்டாற்றில் தவிக்கும் அபலைப் பெண்களை ஏற்றுக் கொள்ள மனித மணம் (மனம்)தயங்குகிறது.
இதனால் இவர்களின் வாழ்வு கேள்விக் குறியாகிறது .வாழா வெட்டியாக அலையவேண்டி ஏற்படுகிறது .
வயிற்றுப் பசி என்று ஓன்று இருக்கிறதே
என அவ்வைபசி வந்தால் பத்தும் பறந்து போகும்- அது என்ன பத்து?
"மானம் குலம் கல்வி வண்மை அறிவுடைமை
தானம் தவர் உயர்ச்சி தாளாண்மை - தேனின்
காசி வந்த சொல்லியர் மேல் காமுறுதல் பத்தும்
பசி வந்திடப் பறந்து போம்."
என்று அவ்வை சொன்னார்.
1.மானம்
2.குலம்
3.கல்வி
4.வண்மை
5.அறிவுடைமை
6.தானம்
7.தவம்
8.உயர்ச்சி
9.தாளாண்மை
10.காமம்
ஆம் பசி வந்தால் பத்தும் பறந்து போகும்.
இந்த நிலையில் மேலேயுள்ள பத்து மட்டுமல்ல வாழ்வில் உள்ள பற்றையும் சூழ்நிலைகள் அவளை இழக்க வைக்கின்றன .
அவள் எதை இழந்தாள் ?
பசிக்கொடுமயினால் உடலையே இழந்துவிடுகிறாள் .ஓநாய்கள் குதறி விடுகின்றன .
ஏமாற்றும் வித்தைகள் இந்த ஓநாய்களுக்கு கை வந்த கலை .என்பார்கள்
பணம் பத்தும் செய்யுமல்லவா ? இந்த ஓநாய்களிடம் நீதி கிடைக்குமா ?
நீதிபதி முதல் சாட்சிகள் வரை பணம் பணம் பணம் .ஆதரவற்ற அபலைகள் ஆகி விடுவார்கள்
" பணம் பந்தியிலே குந்திக்கொள்ள
குணம் குப்பையிலே" பிச்சை எடுக்கும் .
பணத்தை பற்றி அறிந்து கொள்ளுங்கள்
இல்லானை இல்லாளும் வேண்டாள்
ஈன்றெடுத்த தாய் வேண்டாள்
செல்லாது அவன் வாயிற் சொல்"
பணம் இல்லை என்றால் கட்டிய
மனைவி மதிக்க மாட்டாள்.
பெற்ற தாய்கூட விரும்ப மாட்டாளாம்.
அவனுடைய பேச்சு சபையில்
எடுபடாது. இதுதான் உலக எதார்த்தநிலை.
"பணமில்லாதவன் பிணம்"
பணம் உள்ளவன் பின்னாலும் பத்து பேர்
பதவி உள்ளவன் பின்னாலும் பத்து பேர்"
பணம் இருந்தால்தான் நாலுபேர் வந்து
நம்மை எட்டிப் பார்ப்பார்கள்.
பணம் இல்லையா இறுதி யாத்திரையின் போது
தூக்கிச் செல்லகூட நாலுபேர்
இருக்கமாட்டார்கள்.
உலகையே ஆட்டிப்
படைக்கும் வல்லமை பணத்திற்கு உண்டு.
கோவணம் கட்டி வந்தால் என்ன...
பட்டு பரிவட்டங்கட்டி வந்தால் என்ன.
உனக்கு
"கோவணத்துல காசு இருந்தா
கோழிகூட பாட்டுப் பாடுமாம் "
பணம் இருந்தால் பின்பாட்டுப்பாட
ஒரு கூட்டம் கூடவே வரும்.
புகழ்ச்சிக்குக் குறைவிருக்காது.
ஆகவே வறுமை
அவள் உடலைக் கொடுக்க, பணம் கை மாறுகிறது
"நாய் வித்த காசு குரைக்கவா செய்யும் ?
கருவாடு விற்றகாசு நாறவா செய்யும்? "
எந்த வழியில் வந்தா என்ன
பணம்...பணம்தான் .
.பணம் கை மாற இந்த உடல் பழக்கப்பட்டு விடுகிறது
ஒரு நாள் கஞ்சிக்குத்தான் இந்தக் கூத்து .
பாவம் இந்த அபலைப்பெண் வாழ வேண்டுமே .
சாதி ஜனம் சமூகம் கடந்து இது தொழிலாகிறது
விபசாரிகள் உருவாவதில்லை .உருவாக்கப் படுகிறார்கள் .
ஒருத்தி வேண்டுமென்றே கெ ட்டுப் போவதில்லை சமூக அநீதி இது
செல்வாக்காக நீங்கள் இருக்கிறீர்கள் என்றால் ஜன ஆதரவு உண்டு அல்லது உங்களிடம் பணம் உண்டு
இந்த பழமொழிகள் வெறுமனே பணத்தின்மீது
வெறுப்புள்ளவர்களால் சொல்லப்பட்டவைகளாகஇருக்கும் என்று சொல்லிவிட்டு மறந்தும் போக
முடியாது.
அனுபவித்து உணர்ந்த உண்மைகள்தான்
பழமொழிகளாக நம்மோடு உலா வருகின்றன.
ஆளாளாளுக்கு பணத்தைப் பற்றிய
கருத்து மாறுபடலாம்.
ஆனால் பணமில்லாமல் எதுவும் நடக்காது
என்ற உலக நிலவரத்தை யாரும் மறுக்க முடியாது.மறைக்கவும் முடியாது.
பேச்சுக்கு வேண்டுமானால் பணம்
என்னடா பணம். குணம்தானே நிரந்தரம் என்று
சொல்லிக் கொள்ளலாம்.பாடிக் கொள்ளலாம்
காசு இன்றைக்கு ஒருத்தன் கையில்
இருக்கும். நாளை இன்னொருத்தன்
கையில் இருக்கும். பணம் நிரந்தரமல்ல...என்று
ஏதேதோ வாய்க்கு வந்ததைதத்துவமாகப் பேசிக் கொள்ளலாம்.
உறவுகளை நிரந்தரமாக உங்களோடு
ஒட்ட வைப்பதற்கு முழுமுதற் காரணியாக
இருப்பதே பணம் தானே .
சபையில் முன் வரிசையில் துண்டு போட்டு
இடம் பிடித்து வைப்பதும் பணம் தானே .
இதை யாராலும் மறுக்க முடியாது.
ஒரு சபைக்கு போகும் பொழுது உன்னிடம் பணம் இருந்தால் ஓடோடி முகமன் கூறி முன் இருக்கைக்கு வழி விடுவது கூட பணத்தின் பெருமை தானே.
மறக்க இயலாது
காசேதான் கடவுளடா- அந்தக்
கடவுளுக்கும் இது தெரியுமடா" என்றான் சினிமாக் கவிஞன்
முட்டாப்பயலை எல்லாம்
தாண்டவக்கோனே- காசு
முதலாளியாக்குதடா
தாண்டவக்கோனே!
.
கட்டியழும்போதும்
தாண்டவக்கோனே- பிணத்தைக்
கட்டி அழும்போதும் தாண்டவக்கோனே - பணப்
பெட்டிமீது கண்வையடா
தாண்டவக்கோனே!" என்றார் பராசக்தி படத்தில் உடுமலை
நாராயணகவி
உங்க நகரங்களில் உள்ள கோவிலில்
"தட்சணை இன்றி அர்ச்சனை இல்லை." தெரியும் தானே .கனடாவில் ஐரோப்பாவில் நிலை இது தான்
இந்தியாவில் சிறப்புத்தரிசனம்
சாமியைப் பார்க்கவும் பணம் வேண்டும்..
ஆக வாழ வேண்டுமோ ? பணம் வேண்டும்
தப்பு நடந்தால் தவறுகள் தொடர்கின்றன விபச்சாரிகள் வயிற்றுப்பாட்டுக்கு தெருவுக்குத் தள்ளப் படுகிறார்கள்
நாணயம் தவறி விடுகிறது
நாணயம் தவறி வீழ்ந்து
வாழ்வதற்காக தனது சக்தி இருக்கும் வரை உருண்டோடி அடங்கி விடுகிறது .
இதனால் தான் நாணயத்துக்கு பணம் என்ற பெயரும் வந்தது .
வாழ்வதற்காக தனது நாணயத்தை இழந்த பெண்ணின் கதையை தான் சுருக்கமாக உங்களின் முன் பதிவிடுகிறேன்
நல்லதோ கெட்டதோ மனித சமுதாயம் தான் மனித இனத்திற்கு எதிரி என்பதை சிறிதேனும் மறந்து விடாதீர்கள்
குமரிக்கண்டம் இருந்தது என்று பெருமை பேசும் தமிழா
உன்னால் ஒரு குமரியை வாழ வைக்க முடிந்ததா ?
உன்னால் ஒரு குமரியின் வாழ்வு சின்னாபினப்பட்டுப் போய் விட்டதா ?
நீ இன்று உன் சமுதாயத்துக்கு செய்த நன்மைகளையும் உன்னால் ஏற்பட்ட தீமைகளையும் படுக்கப்போகுமுன்(துயிலும் முன் ) கொஞ்சம் சிந்தித்துப் பார்ப்பதற்காகவே துயில் என்று ஒரு தமிழ் சொல் உண்டு மறந்து விடாதே
தா ன்னால் உருவாக்கப்பட்ட விபச்சாரிகளை வேசை,அடி சரக்கு, விபச்சாரி என்று தான் சமூகம் வசை பாடுகிறது .
அப்படி சொன்ன காலக.ட்டத்தில் யாழ்ப்பாணத்தில் முனியப்பர் கோவில் பக்கமாக சோடா மூடி கதையை அறிந்து கொண்டேன்
அப்போதெல்லாம் இந்தக் கதைகளைப் பற்றி என் மனம் அசை போட்டதில்லை .வளர வளர சமுதாயப் பார்வை ஆரம்பித்த காலத்தில் ஏன் எதற்கு என்று கவலைப்பட ஆரம்பித்த நேரம் .நயினாதீவை சேர்ந்த யோகா ஆசிரியையிடம் சிங்களம் கற்றுக்கொண்ட நேரம் .அது .நான் பலதரப்பட்ட கதைகளை விவாதித்தேன் .அறிவு பூர்வமான ஆக்க பூ ர்வமான விளக்கங்கள் பல அவரிடமிருந்தே பெற்றுக் கொண்டேன் .
இதனால் நயினாதீவு பற்றி அதனை சார்ந்த தீவுகள் அனைத்தையும் ஆராய்ந்தேன் .பல சம்பவங்கள் உண்டு
எல்லாவற்றையும் விபரமின்றி எழுத முடியாது .அதனால் இத்தோடு இப்படியான கதைகளை நிறுத்திக் கொள்கின்றேன் .முகநூல் நண்பர்கள் விடாப்பிடியாக் கேட்டதற்கு இணங்க சொடாமூடிக் கதையை இரத்தினசுருக்கமாக் கி தருகிறேன் .நல்ல சமுதாயம் அமைய எல்லாம் வல்ல இறைவனை மன்றாடுகிறேன் .
இவளைப் பற்றி விசாரித்து தொகுக்கும் வேலை கடினமானதாகவே இருந்தது .நான் விசாரித்து தொகுக்கும் பொழுது என்னை ஏளனத்துடன் ஏறு கண்ணால் பார்த்த ஆண்கள்இருந்தார்கள்
.இறங்கு கண்ணால் பார்த்த பெண்கள் இருந்தார்கள் .அதில் ஒரு தாய் அவள் அம்பனையில் ஆசிரியை ஆக இருக்கிறார் என்றார் ,
தம்பி எதற்காக விபரம் கேட்டீர் .தான் விபரம் தருகிறேன் ஆனால் எந்த ஊர் போன்ற விபரங்களைப் பதிவிடக் கூடாது என்று கேட்டுக் கொண்டார் .
நான் காரை நகரை விட்டுப் புறப்பட்டதும் ஈமெயில் வாங்கிக் கொண்டு சென்று விட்டார் .
அவர் அனுப்பிய ஈமெயில் பலபத்திரிக்கை விபரங்களை தந்தது.என்னால் அந்த ஈ மைலை வாசிக்க முடியவில்லை .வேதனயாக் இருந்தது .
எனக்கு ஈமெயில் அனுப்பிய ஆசிரியை சோ டாமூடிக்குப் பழ க்கமானவரோ தெரியாது
அதனை சுருக்கி உங்களிடம் தருகிறேன் .
^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^^
1965 கள் முதல் 1980வரையில் யாழ்நகர்ப்பகுதி பஸ் நிலையம், ஆஸ்பத்திரியடி, முனியப்பர் பகுதிகளில் நடமாடிய ஒரு விலைமாதாவார். அக்கால யாழ்நகரை அறிந்தவர்கள் சோடாமூடியையும் சேர்ந்தே அறிவார்கள். யாழ்ப்பாண நகரின் அயற்கிராமத்தவர்கள் கூட சோடாமூடி என்றால் யார் என்ன ஏது என்று அறிந்திருந்தனர்.
சமுதாயத்தினால் பாதிக்கப் பட்ட இப்பெண் வயிற்றுக்காக தன்னை விற்கத் தலைப்பட்டாள் .
தன்னை விற்கும் தொழிலில் ஈடுபட்ட இப்பெண்ணுடன் தொடக்ககாலத்தில் பாலியல் உறவுக்குப்போன ஒருவன் காசுக்குப் பதிலாக சோடாமூடியைக் கொடுத்து ஏமாற்றிவிட்டு ஓடிவிட்டான். இது எங்கும் பரவி இவளுக்கு பெயரே சோடாமூடி என்றாகியது.
சோடாமூடி என்பது பாவித்துவிட்டு (புணர்ந்துவிட்டு) தூரவீசியெறியும் பொருள் என்ற கருத்தில் விலைமாதருக்கான பொதுப்பெயராக ஆகிவிட்டது.
ஒழுக்கம் தவறும் பெண்களை மரியாதை கெடுத்தி மகிழும் உளவியல்கொண்ட மனரீதியாக ஒழுக்கம்கெட்ட சமூகத்தின் உதாரனமானது
மேலும் அந்த ஈ மெயில் தொடர்கிறது
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
மற்றைய அன்னையரைப் போலவே சோடாமூடியின் தாயும் அவளுக்கு ஒரு பெயரை இட்டிருப்பாள். தனக்குப் பிடித்த ஒரு நாமத்தைச் சூட்டி மகிழ்ந்திருப்பாள். ஏனைய தாய்மாரைப் போல குட்டி குஞ்சு கிளி ராசாத்தி கற்கண்டு என்று கொஞ்சியிருப்பாள் ஆனால் அவையெதுவுமே நின்று நிலைக்காமல் சோடாமூடி என்ற இடுகுறிப்பெயரே அவளுக்காகியது. ஒழுக்கக்கேடு அழுக்கு இழிவு வெறுப்பு இவைகளி;ன் திரட்டாய் சோடாமூடி என்ற பெயர் ஆகியது. சோடாமூடி ஒடுக்கப்பட்ட சாதியைச் சேர்ந்தவர் என்று எமது விசாரிப்புகள் காட்டுகின்றன. ஒடுக்கப்பட்ட சாதிப்பிரிவு மக்களுடன்தான் அவளது தொழிலும் வாழ்வும் சகவாசமும் அமைந்திருந்தது. ஆஸ்பத்திரி முன்பு தோடம்பழம் மாம்பழம் விற்பவர்கள், பழைய சந்தையில் பழங்கள் விற்பனை செய்யும் வியாபாரிகள், டாக்சிச் சாரதிகள், முழுவச் சந்தியில் மாடுவெட்டும் தொழில்புரிபவர்கள், முடிதிருத்தும் தொழில் செய்பவர்கள்; மத்தியிலே இவள் காணப்பட்டாள். யாழ்நகரின் கல்வி வாழ்க்கைத் தரம் இவைகளில் பின்தங்கிய, தொழிலின்மையும் வறுமையும் குற்றச் செயல்களும் நிறைந்த இப்பகுதிகளில்தான் சோடாமூடி உயிர்த்திருந்தாள். சோடாமூடி ஆண்களைப் போல் இடுப்பில் கையூன்றி நிமிர்ந்து நிற்பாள். தமிழ்ச்சாதி பெருமைகொண்டாடும் உயர்குலப் பெண்ணின் பக்குவங்களான அச்சம் மடம் நாணம் பயிர்ப்பு என்ற இலக்கிய இழிவுகள் அவளிடம் கிடையாது.
அழுக்கான வெள்ளைச்சேலை, கை கால் காது கழுத்து மூக்குகளில் எந்த ஒரு நகைநட்டும் பொன்னும் பொருளும் கிடையாது. காது துவாரம் தூர்ந்து போகாமலிருக்க மெல்லியதாய் பேப்பரைச் சுருட்டி சொருகியிருப்பாள்.
சோடாமூடி ஆண்கள் பேசக் கூசும் தூசணம் பேசுவாள். வாய் கொடுப்பவர்கள், நையாண்டி பண்ணுபவர்களை தூசணத்தில் கிழித்து நரகலாக்கி அனுப்புவாள். நன்றாக வெத்திலை போடுவாள். தண்ணியடிப்பாள். சமூகம் ஒழுக்கம் நிறைந்தது உயர்வானது என்ற மாயையை அவள் அவமானப்படுத்தினாள். எச்சிலாய்த் துப்பினாள். அவளை விலைமாதாக்கி உயிர்தப்பும்படி விட்டுவிட்ட சமூக அமைப்பின் பொய் ஒழுக்கங்களை மீறிக் காட்டினாள். சோடாமூடி ஐந்து பத்து ரூபாய்களுக்கு போகிறவளாய் அதனூடு சாப்பிட்டுக் குடித்து உயிர்தரிப்பவளாய் இருந்தாள். சனங்கள் அவளைக் கண்டு தூரப் போனார்கள். பெண்கள் அவளைக் காண்பதை பாவமாய்க் கருதினார்கள். வேலையற்றவர்கள், சமூக உதிரிகள், மாணவர்கள், வம்பளக்க விரும்புபவர்கள் சோடாமூடியை இடைவிடாமல் உளவியல்ரீதியில் வதை செய்து வந்தார்கள். வம்பளக்க விரும்புவர்கள் அவளைக் கடந்து தமக்குப் பாதுகாப்பானது என்று கருதும் தூரம் போனவுடன் சோடாமூடி என்று கத்துவார்கள். சத்தமிட்டு விட்டு சைக்கிள் பெடலை பலமாக மிதிப்பார்கள். இரவு நைட்சோ படம் பார்த்;துவிட்டு வருபவர்கள் அவளைப் புண்படுத்தி வேடிக்கை பார்க்க முயல்வார்கள். அச்சமயங்களில் சோடாமூடி "கொம்மாவைக் கொண்டுவந்து
(தணிக்கை )
கொக்காவைக் கொண்டுவந்து
(தணிக்கை )
" என்று கத்துவாள். சீலையைத் தூக்கி
(தணிக்கை __) என்பாள்.
அவள் பலருக்கு ஒரு வேடிக்கைப் பொருள். தம் மன அரிப்புகளையும் சொந்தப் பாலியல் உபாதைகளையும் பரீட்சிக்கும் உயிருள்ள மனிதக் கழிவுப்பொருள். அவளுக்கு எவரும் மனிதப் பெறுமானத்தை வழங்குவதில்லை.
அவள் வயிற்றுக்கும் உயிர்வாழ்தலுக்கும் போராடும் உயிரியாய்க் கொள்ளப்படுவதில்லை. மனித உரிமை, ஜனநாயகம் இவைகளோடு பழகாத யாழ்ப்பாணச் சமூகம் விவசாயச் சமூக உறவுகளின் நம்பிக்கைகளில் குறுகி வாழ்விழந்து கிடந்த சமூகமாகும்.
ஜெயகாந்தன் தன் சிறுகதைகள் நாவல்களில் விலைமாதர்களைப்பற்றி எழுதி எழுத்துக்கலகம் செய்யமுன்பே யாழ்ப்பாணத்தின் தெருக்களில் எதிர்காலத்துக்கான கதைகளை எழுதிச் சென்றவள் சோடாமூடி. பாலியல் ஒடுக்குமுறை நிறைந்த முன்னேற்றமடையாத ஆணாதிக்க சமூகமான தமிழ் மக்கள் மத்தியில் சோடாமூடிகள் படைக்கப்படுவது தவிர்க்கமுடியாத விடயமாகும். இரகசியாக வைப்பாட்டிகள் வைத்துக் கொண்வதற்கு வெட்கப்படாத யாழ்ப்பாண உயர்சாதிச் சமூகம் சோடாமூடிகளை ஆண் ஆதிக்க சமூகத்தின் படைப்பாக விளங்கிக்கொள்வதில்லை. இறுதிக் காலத்தில்
பற்கள் முழுவதும் கொட்டி உடல் உளரீதியில் தளர்ந்துபோய் காணப்பட்டாள். அவளை யாரும் தேடுவதில்லை. அவளும் யாரையும் தேடுவதில்லை. ஆஸ்பத்திரிமுன்பு கடலை வியாபாரம் செய்து வாழ்ந்தாள். இரவில் றோயல் டிஸ்பென்சரி முன்பு படுப்பாள். கடைசிக்காலத்தில் முதுமை சூழ்ந்து நோயுற்று மனிதர்களால் கைவிடப்பட்டு தனித்திருந்த சேடாமூடி அகால மரணமானாள்
(தகவல்களுக்கு நன்றி யோகா நன்றி கண்மண் தீசேர் நன்றி அபிராமன்)
ஆவதும் பெண்ணாலே ,அழிவதும் பெண்ணாலே என்று பலர் கூறுவார்கள்
ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணாலே
அவனே தாழ்வதும் பெண்ணாலே
தெற்கு மதுரையில் கற்பு சுடர் பட்டு
வெந்ததும் பெண்ணாலே
அன்று விளையாட்டு சிறுபிள்ளை
வீர சிவாஜியானதும் பெண்ணாலே
நில் என்று சொன்னதும்
சுள் என்று சூரியன்
நின்றது பெண்ணாலே
சின்ன தாலிக்கயிற்றுக்கு
பாசக்கயிறு அன்று
தோற்றதும் பெண்ணாலே
இந்தியா தங்க பதக்கம்
ஜெயித்ததெல்லாம் பெண்ணாலே
மனம் கெட்டு தசரதன்
செத்து செத்து விட்டு
உயிர் விட்டதும் பெண்ணாலே
அட பத்து தலையிலும்
பித்தம் கொண்டு மன்னன்
கெட்டதும் பெண்ணாலே
பாலைவனம் எங்கும் மூளை கெட்டு
மஜ்னு போனதும் பெண்ணாலே
அந்த ரோமாபுரி அன்று
ரத்தகுளம் என்று
ஆனதும் பெண்ணாலே
இந்தக்கால கட்சிகளும்
இரண்டாச்சு பெண்ணாலே
கை நீட்ட மறுத்த பய
கவிழ்ந்தாண்டி முன்னாலே
ஆவதும் பெண்ணாலே
மனுசன் அழிவதும் பெண்ணாலே
வாழ்வதும் பெண்ணாலே
அவனே தாழ்வதும் பெண்ணாலே
பஞ்ச பாண்டவர்கள் பகை வென்று
கொடி நட்டதும் பெண்ணாலே
நம்ம இந்திரன் சந்திரன் ரெண்டு
பயல்களும் கெட்டதும் பெண்ணாலே
கொள்ளை கொள்ளும்
ஒரு வெள்ளை தாஜ்மஹால்
வந்ததும் பெண்ணாலே
பாண்டிமன்னன் அரன்மனை
மண்ணோடு மண்ணாகி
போனதும் பெண்ணாலே
நல்லதும் கெட்டதும் இங்கே
நடப்பதெல்லாம் பெண்ணாலே
ஆகவே வருங்கால சந்ததிகளே பெண்களை பாது காப்பாக் வாழ் விடுங்கள்
கருத்துகள்
கருத்துரையிடுக