நாய்க்குட்டி விசரியின் உறவினர்கள் இருந்தால் தயவு செய்து என்னை வையக் கூடாது
^%%%%%%%^%^^^^^^^^^^%%%^
அந்த நாட்களில் வீதிகளில் திரிந்தவள் நாய்க்குட்டி விசரி, படித்த பட்டதாரிப் பெண்மணி என்று கூறுவார்கள். மாப்பிள்ளை பேசி வந்தபோது இவனைக் கட்டுவதை விட நாயைக் கட்டலாம் என்று சொன்னதால் நாய்க்குட்டி மேல் செய்வினை சூனியம் செய்ததாக சிறுவர்களாக இருந்த எமக்கு சொல்லப்பட்ட கதை, எந்த நேரமும் தலையில் ஒரு பெட்டி. அதில் பாதுகாப்பாக மூன்று, நான்கு நாய்க்குட்டிகள், வளர்ந்த ஓடியாடித் திரியும் நாய்க்குட்டிகளை இவரோடு என்றுமே காணமுடியாது. வீடுகளில் நாய்க்குட்டிக்கு என்று உணவை கையேந்தி வாங்கி, தானும் உண்டு செல்லும் பெண்மணி இவர். அழகான பருமனான ஆனால், விசரால் அலங்கோலமான பெண்மணியாகத் தான் வீதிகளில் காணமுடிந்தது.
இவள் யார் ?இவளின் பின்புலம் என்ன ?தொகுத்து தருகிறேன் யாரையும் புண் படுத்த அல்ல
அழகம்மா
இவள் தான் இன்றைய தலைப்பு
%%%%%%%%%%%%%%%%%%%%%%%
பெயருக்கு எற்ற அழகியாய் இருந்தவள் அழகம்மா. வேம்படியில் பிரபல இரண வைத்தியர் சாமித்துரையின் ஒரே மகள் அவள். சாமித்துரையின் பூர்வீகம் காரை நகர் கடற்படை முகாமிலிருந்து ஐந்து மைல் தொலைவில் இருக்கும் பருத்தியடைப்பு கிராமம்.
சாமித்துரை வேம்படிக்கு அருகே உள்ள தன் பெரிய கல் வீட்டில் வைத்து “பருதியடைப்பான்” என்ற அடைப் பெயரில் சத்திர சிகிச்சை செய்து ஒரு காலத்தில் புகழ் பெற்றவர்
அழகம்மா வேம்படி மகளிர் கலூரியில் படித்து அதே கல்லூரியில் ஆசிரியையானவள். அவளின் உயிர்த் தோழியாக சினேகிதி வடிவு என்ற விலையுர்ந்த வெள்ளை நிறப் பெண் போமேநேரியன் நாய்குட்டி .
அழகம்மாவைப் போல் அழகிய இரண்டு வயது நாய்குட்டி. அழகம்மா சொல்வதெல்லாம் அதற்குப் புரியும் அவள். சொல் கேட்டு நடக்கும். வடிவை விட்டு அழகம்மா பிரிய மாட்டாள். இரவில் அவள்கூடவே
கட்டிலில் தூங்கும். வடிவுக்கு இறைச்சி என்றால் போதும்..அந்த நாய்க்குட்டி இறைச்சி தின்றே வளர்ந்தது
அழகம்மா படிக்கும் போது அவள் மேல் கண் வைக்காத சென்ட்ரல் காலேஜ் மாணவர்கள் இல்லை என்றே சொல்லலாம். கண் அழகி, மூக்கழகி, பல் அழகி, கூந்தல் ஆழகி இப்படி அவளின் ஒவ்வொரு அங்கத்ததையும் பார்த்து ரசித்த வாலிபர்கள் பலர். ஒரு கூட்டம் அவள் வீட்டை அவளின் பார்வைக்காக ஏங்கி சைக்கிளில் மணி அடித்தபடி அடிக்கடி சுற்றி வரும்
அழகம்மாவுக்கு திருமண வயது வந்தபோது பல திருமணங்கள் பேசி வந்தது. பெண் பார்க்க வந்த போது மாப்பிள்ளை வீட்டாரை அவமானப் படுத்தி அனுப்புவாள். தன் அழகுக்கு பொருத்மானவன் நீ இல்லை என்று பெண் பார்க்க வந்த பல மாப்பிள்ளை மாருக்கு தான் அழகி என்ற கர்வத்தோடு சொல்லி இருக்கிறாள்.
ஒருசமயம் ஆரியகுளத்தடியில் இருந்து பேசி வந்த மாப்பிள்ளையின் பெயர் ஜெயந்தன். அவரின் தந்தை ஜெயராசா சில காலம் கேரளாவில் இருந்த படியால் பில்லி சசூனியம் செய்யும் முறையை கற்றவர். பில்லி சசூனியத்தில் நம்பிக்கை உள்ள சில சிங்கள அரசியல் வாதிகளுடன் அவருக்கு தொடர்புண்டு. அவரின் மகன் ஜெயந்தன் படித்து பட்டம் பெற்ற ஆங்கில ஆசிரியர்.. தந்தையின் ஒரே அன்பு மகன். அழகம்மாவை பெண் பார்க்கப் போன போது அவள் அகங்காகரத்தோடு’ அவனோடு பேசினாள்
.
ஜெயந்தனின் சற்று நிறம் குறைந்தவன்.அழகன் என்று சொல்லமுடியாது. இரக்க சுபாவம் உள்ளவன்.
“ நீர் என் வடிவு நாய் குட்டியின் நிறத்துக்கும் அழகுக்கும் கூட ஈடு செய்ய முடியாதவன். என்னை பெண் கேட்டு என்ன யோசனையோடு வந்திருக்கிறீர் . போம். போய் உமக்குத் ’பொருத்தமமான அழகும் நிறமும் குறைந்த பெண்ணை பாரும்” என்று பேசி அனுப்பினாள். அதன் விளை வை அவள் அபோது அறிந்திருக்கவில்லை.
“ மகளே நீர் அப்படி பேசி இருக்கக் கூடாது. அந்த மாப்பிள்ளையின் தகப்பன் பொல்லாதவன். அவன் என்ன செய்வானோ தெரியாது என்று சாமித்துரை கவலைப் பட்டார். அவர் பயந்த படி பூசனிக்காய். எலும்பு, தலை மயிர். உற்பட சூனியப் பொருட்களும் இறைச்சித் துண்டும் சாமித்துரை வீட்டு ஒரு நாள், வாசலில் வீசப்பட்டிருதது.
அந்த சமபவம் நடந்த சில நாட்களுக்குள். வடிவு பைத்தியம் பிடித்து இறந்தது. அதன் மரணம் அழகம்மாவை வெகுவாக பாதித்தது. சாமித்துரை இறந்த வடிவைப் போல் ஒரு நாய் குட்;டி அழகம்மாவுக்கு சாமித்துரை கொடுத்தும் அதுவும்’ சில வாரங்கள் மட்டுமே உயிரோடு இடுந்தது. கால்நடை மருத்துவர் இறந்த இரு நாய்சளையும்’ பரிசோத்து விட்டு யாரோ நாய் குட்டிகளுக்கு விஷம் கலந்த இறைச்சி கொடுதிருக்கிரார்கள் என்றார்
நாய் குட்டிகளின் அடுத்தடுத்த மறைவுகளால் அழகம்மாவின் மனநிலை பாதிப்படைந்து மன நோயாளியானாள். சாமித்துரையின் ரண சிகிச்சைகள் தோல்வியை ச ந்தித்தது. வருமானம் குறைந்தது. மகளுக்கு வைத்தியம் செய்ய பணம் அவருக்கு இருக்கவில்லை. கவலை யில்; ஒரு நாள் மாரடைப்பில் இறந்தார். அவரைத் தொடர்ந்து அவரின் மனைவி ஆறு மாத காலத்துக்குள் இறந்தாள். அழகம்மா மன நிலை குறைந்த விசரி ஆ னாள். அடிக்கடி வடிவு வடிவு என்று கூவிய படி அவளை சுற்றி உள்ள தெரு நாய் குட்டிகளுக்கு கிடைத்த உணவை கொடுத்து மகிழ்வாள். சிறுவர்கள் அவளுக்கு வைத்த பெயர் நாய் குட்டி’ விசரி.
தலை விரி கோலத்தோடு யாழ்ப்பான நகரில் திரிந்தால். சிறுவர்களின் கல்லெறிக் உள்ளானா ள். அவள் குளிப்பதில்லை. ஒரே துர் நாற்றம். தெரு ’ ஓரங்களில் தூங்குவாள்.
மணிக்கூட்டுக் கோபுரத்தில் இருந்து கே கே எஸ் வீதி வழியாக தெல்லிப்பளை மல்லாகம் சுன்னாகம் பலாலி கோண்டாவில் ஊடாக அவளின் நடைப் பயணம் இருக்கும் .
வெளி ஊருக்கு மாற்றலாகி போயிருந்த ஜெயந்தன் சென்ட்ரல் கல்லூரிக்கு ஆ சிரியராக வந்தான். ஒரு நாள் அவன் அழகம்மாவின் பரிதாபா நிலை’ கண்டு தன் தகப்பன் செய்த தவறான செயலை நினைத்து மனம் வ்ருந்தினான். அவனின்; மனைவி சாந்தி யாழ்ப்பாண வைத்தியசாலையில் வேலை செய்யும் ஒரு மன நிலை வைத்தியர். சாந்திக்கு நடந்தை ஜெயந்தன் சொல்லி அழகம்மாவின் நிலை காண்டு கவலைப் பட்டான். அவளின் உதவியோடு கிளிநொச்சி யில் உள்ள நவ மங்கை வாசம் மன நோய்’ மருத்துவ நிலையத்தில் அழகம்மாவை’ சேர்த்தான்.
அங்கு அவளுடன் உறவாட நாய் குட்டிகள் கிடைக்காத கவலையில் இரு வருடங்களில் இரண்டாம் மாடியில் இருந்து வடிவைத் தேடி குதித்து அழகம்மா இறந்தாள்.
வார்த்தைகளை வெளியில் விடும் பொழுது
அதற்குரிய பலன்களை தேடிக் கொள்கிறார்கள்
Manikkavasagar Vaitialingam
கருத்துகள்
கருத்துரையிடுக