வழுவூர் பி. இராமையா பிள்ளை 

%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%

வழுவூரார் எனச் சிறப்புடன் அழைக்கப்பட்ட வழுவூர் பி. இராமையா பிள்

இராமையா 

மாணிக்க விநாயகம் 

சாம்ராஜ் 

திரிபுரசுந்தரி பெற்றவர்களுடன் 

கொழும்பில் திரிபுரசுந்தரி 

பாக்கியலச்சுமியுடன் 


கொஞ்சும் சலங்கை 



ளை 

 1910 -இல் பிறந்து  1979இல் ம றைந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பிரபலமான பரத நாட்டிய ஆசிரியர்ஆவார் 


பெற்றோர்: பார்த்திபன் - பாக்யத்தம்மாள்.

நட்டுவாங்கம், பரதநாட்டியக் கலைகளை தனது தாய் மாமன்

 மாணிக்க நட்டுவாங்கனாரிடம் இராமையா பிள்ளை கற்றார்.


 இராம நாடக கிருதிகள், தியாகராய சுவாமிகளின் கிருதிகள், பாரதியார் பாடல்கள், குற்றாலக் குறவஞ்சி, அருணாச்சலக் கவிராயர் பாடல்கள், ஊத்துக்காடு வெங்கட சுப்பைய்யரின் பாடல்கள் என்பனவற்றை பரதநாட்டியத்தில் இடம்பெறச் செய்தார். 

பரதநாட்டியத்தில் அழகிய புதிய பாணியை உருவாக்குவதில் இவர் முன்னோடியாக இருந்தார். இது வழுவூர் பாணி என்று அழைக்கப்பட்டது. ருக்மிணி தேவி அருண்டேல் பரதநாட்டியத்தினை பிரபலப்படுத்தினார். ஆனால் ராமையா பிள்ளை அதை மக்களிடம் கொண்டு சேர்த்தார்.அவரது நடன தயாரிப்புகள் மிகவும் பிரபலமாக இருக்கின்றன. 


இன்றும் 

பரதநாட்டியத்தில் புதிய முயற்சிகளை மேற்கொண்டதற்காக இவர் பாராட்டப்படுகிறார்


பிள்ளைகளாக 

மூத்த மகன் சாம்ராஜ் ஆவார். இளைய மகன் மாணிக்க விநாயகம் ஆவார்.






பத்மினி

லலிதா

வைஜயந்திமாலா

ஈ. வி. சரோஜா

பத்மா சுப்ரமணியம்

எல். விஜயலட்சுமி‎

குமாரி கமலா

கமலா இலக்சுமணன்

கனகா சிறீனிவாசன்

நடனக் கல்வியாளர் சுஜாதா விஜயராகவன்

சித்ரா விசுவேசுவரன்

ரமணத்திலகம் (இவர், கவிஞர் வாலியின் மனைவியாவார்) போன்றவர்களின் குருவும் இவரே 



மீரா திரைப்படத்தில் இடம்பெற்ற நடனக் காட்சிகளை இவர் அமைத்திருந்தமை நீங்கள் அறிவீர்கள் .




இசைப்பேரறிஞர் விருது, 1961. வழங்கியது: தமிழ் இசைச் சங்கம், சென்னை

சங்கீத நாடக அகாதமி விருது, 1966. வழங்கியது: சங்கீத நாடக அகாதமி

சங்கீத கலாசிகாமணி விருது, 1979

பத்மசிறீ

கலைமாமணி விருது

நாட்டிய கலா கேசரி


என்று இன்னோரன்ன விருதுகளைப் பெற்றவர் 

இவரது நடனத்தில் செயல்படும் வேகமும் உட்காரும் தோரணைகளும் நிலைகளும் பல வீச்சுக்களில் உள்ளன. அதன் மற்றொரு முக்கிய அம்சம் நடனக்காரர்களின் தலை நீங்கிய உடல் பகுதி, இடுப்பின் மேல் பகுதி லேசாக முன்னோக்கி சாய்ந்து இருக்கும். இதில் ஒரு அடவிலிருந்து அடுத்ததற்கு மாறும்போது திடீர் மாற்றங்கள் ஏதும் இல்லாமல் ஒரு மென்மையான ஓட்டம் இருக்கும். இந்த பாணியில் லஸ்ய கூறுகளை விட தாண்டவம் அதிகமாக இருக்கும்.





 நடிகர் பத்மஸ்ரீ கமலஹாசன் கூட இந்த பாணியின் ரசிகர் ஆவார். இந்தப் பாணி பந்தநல்லூர் பாணிக்குப் பிறகு வளர்க்கப்பட்டது ஆனாலும் (இது நாட்டிய சாஸ்திரத்துக்கு அதன் கொள்கைகளுக்கும் மிகப் பொருத்தமானது ஆகும்) இது ஒரு பெரிய பின்தொடர்வோரை பெற்றது. இன்றைய தேதி வரை பரந்துபட்டு கற்பிக்கப்பட்டு செயல்படுத்தப்படுகிறது.




இன்றும் தனித்து நிற்கும் வழுவூர் பாணி பரதநாட்டியம் , சோழர் காலம் தொட்டே இருந்து வருகிறது, அதை மேலும் பரப்பியது திருவாளர் ராமையா பிள்ளை அவர்கள். வாய்ப்பாடுகளுக்கெல்லாம் நடனம் அமைத்தவர், உதாரணமாக இன்றைக்கும் பரத மேடைகளில் ஒலிக்கும் தியாகராய கீர்த்தனைகள், அருணாசல கவிராயர் மற்றும் முத்துதாண்டவர் கிருதிகள் எல்லாம் இவரால் நடனம் அமைக்கப்பெற்றவை.


ஆங்கிலேய ஆட்சி காலத்தில் தடைசெய்யப்பட்ட பாரதியின் பாடல்களை எல்லாம் பரப்பியது வழுவூரார் தான்..

அப்படிப்பட்ட பாரத நாட்டியத்தை சுருக்கமாகப் பார்ப்போம் 



பரத நாட்டியம் தென்னிந்தியாவுக்குரிய, சிறப்பாகத் தமிழ்நாட்டுக்குரிய நடனமாகும். இது மிகத் தொன்மை வாய்ந்ததும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் பிரபலமானதுமாகும். புராணவியல் ரீதியாக பரதமுனிவரால் உருவாக்கப்பட்டதலாலேயே பரதம் என்ற பெயர் வந்ததாகவும் கூறுவர். அதேவேளை பரதம் என்ற சொல், ப - பாவம், ர - ராகம், த - தாளம் என்ற மூன்றையும் குறித்து நிற்பதாகவும் சொல்லப்படுகிறது. பரதநாட்டியம் என்ற சொல்லில் இருக்கும் "ப" "பாவம்" (வெளிப்படுத்தும் தன்மை) என்ற சொல்லிலிருந்தும், "ர", "ராகம்" (இசை) என்ற சொல்லிலிருந்தும், "த", "தாளம்" (தாளம்) என்ற சொல்லிலிருந்தும் வந்தவையாக கருதப்படுகிறது. இதில் பாவம் உணர்ச்சியையும், ராகம் இசையையும் குறிக்கும். இவற்றுடன் தாளம்ச் சேர்ந்த நடனமே பரத நாட்டியம் ஆகும். வரலாற்று நோக்கில், இந்தியாவின் செவ்விய ஆடல் வகைகளில் ஒன்று பரதநாட்டியம். இக்கலை வடிவம் இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன் தமிழகத்தில் உருவாகியது. கூத்து, ஆடல், நாட்டியம், தாசி ஆட்டம், சின்னமேளம், சதிர் எனப் பல பெயர்களில் இக்கலை வடிவம் அழைக்கப்பட்டது. ஏறக்குறைய கடந்த 70 ஆண்டுகளாக இது ‘பரத நாட்டியம்’ என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. பரதநாட்டியம் தமிழ்நாட்டுக் கோவில்களில் தேவதாசிப் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே ஆகும். நன்கு தேர்ச்சி பெற்றதொரு நாட்டியக் கலைஞரின் முகபாவனையில் நவரசங்களின் பாவனைகளையும் வெளிக்கொணருதலைக் காணலாம்.


இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப்பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு. சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவன் கூட, நடராஜர் வடிவத்தில் இந்த நடனத்தை ஆடியபடி சித்தரிக்கப்படுவது குறிப்பிடத்தக்கது. சிவபெருமான் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம்'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது.


உடல் அசைவுகளும், கை முத்திரைகளையும் சேர்த்தது 'அடவு' என்று வழங்கப்படுகிறது. பல அடவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும். அடவுகள் சுமார் 120 உள்ளன. அவற்றில் கிட்டத்தட்ட எண்பது வரைதான் தற்போது பயன்பாட்டில் உள்ளது. சிதம்பரம் ,மற்றும் மேலக்கடம்பூர் ஆலயத்தில் உள்ள சிற்பங்களில் இவை செதுக்கப்பட்டுள்ளன.


பரத நாட்டியத்திற்கு பாடல், நட்டுவாங்கம், மற்றும் இசைக்கருவிகளின் துணை தேவை. வீணை, புல்லாங்குழல், வயலின், மிருதங்கம் ஆகிய இசைக்கருவிகள் இவற்றில் சில. இசைக்கலைஞர்கள் மேடையின் ஒருபுறமாக அமர்ந்து இசைக்க, நடனம் ஆடுபவர் மேடையின் மையப்பகுதியில் ஆடுவார். நடனம் ஆடுபவர், நாட்டியத்திற்காக பிரத்யேகமாக தைக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள் அணிந்து இருப்பார். மேலும் பரத நாட்டியத்திற்கான நகைகளையும், காலில் சலங்கையும் அணிந்திருப்பார்.



பரத நாட்டியம் பயிற்றுவிப்பதில் பல்வேறு பாணிகள் உள்ளன. அவற்றில் சில, 'பந்தநல்லூர் பாணி', 'வழுவூர் பாணி', 'தஞ்சாவூர் பாணி', 'மைசூர் பாணி', 'காஞ்சிபுரம் பாணி' ஆகியவை ஆகும். இக்கலையின் ஆசிரியர்களில், பந்தநல்லூர் மீனாட்சி சுந்தரம்,வழுவூர் பி. இராமையா பிள்ளை, திருவாளப்புத்தூர் சுவாமிநாதபிள்ளை, தனஞ்சயன், அடையார் லக்ஷ்மணன், கலாநிதி நாராயணன் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர் ஆவர்.


பாரத நாட்டியம் அறிந்தவர்கள் மட்டுமே இத்தகைய பாணிகளை அறிந்திருப்பார்கள் .




பரத நாட்டியக் கலை மூன்று ஆடல் முறைகளைக் கொண்டது. அவை:


நிருத்தம்

நிருத்தியம்

நாட்டியம்  ஆகியவையாகும்.



அபிநயம் என்பது கருத்தையோ உணர்வையோ வெளிப்படுத்த உதவுவது. அபிநயத்தின் மூலம் ஒரு செய்தியை மற்றவர்களுக்கு உணர்த்தலாம். பரத நாட்டியத்தில் நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும். அவை


ஆகார்ய அபிநயம்

வாசிக அபிநயம்

ஆங்கிக அபிநயம்

சாத்விக அபிநயம்

என்பனவாகும்.



பரத நாட்டியத்தில் கைமுத்திரைகள் முதன்மையாகக் கொள்ளப்படும். பரத நாட்டியத்தில் பாடலின் பொருளைக் கைமுத்திரைகள் காட்டும். கை முத்திரைகள் வழி கண் செல்லும். கண்கள் செல்லும் வழி மனம் செல்லும். மனம் செல்லும் வழி உள்ளத்தின் உணர்வு செல்லும். இதனைக் கம்பர்,


"கைவழி நயனஞ் செல்லக்

கண்வழி மனமும் செல்ல"

மனம் வழி பாவமும்

பாவ வழி ரசமும் சேர".


எனக் குறிப்பிட்டுள்ளார்.


ஆங்கிக அபிநயத்தில் அங்கம்,உபாங்கம்,பிரத்தியாங்கம் என்னும் மூன்று சிறப்பு பிரிவுகள் உள்ளன. இவற்றை திரியாங்கம் எனவும் அழைப்பர்.



தலை,கைகள்,மார்பு,பக்கங்கள்,இடை,பாதங்கள் ஆகிய ஆறும் அங்கம் எனப்படும்.சிலர் கழுத்தையும் இதில் சேர்த்துக் கூறுகின்றனர் .புஜங்கள்,முன் கைகள்,முதுகு,வயிறு,தொடைகள்,முழங்கால்கள் ஆகியவற்றை பிரத்தியாங்கம் என்பர்.உபாங்கம் என்பது கண்,விழி,புருவம்,கன்னம்,மூக்கு,தாடை,பல்,நாக்கு,உதடு,முகவாய் ஆகியனவாகும்.

உள்ளத்தில் எழும்பும் உணர்வுகள் காரணமாக உடலில் ஏற்படும் மெய்ப்பாடுகளை உடல் மொழிகளால் வெளிப்படுத்துவது சாத்விக அபிநயமாகும். மெய்ப்பாடுகளை நவரசம் என்று சொல்வர். ஒன்பான் சுவை என்றும் சொல்வர். அச்சம், வீரம், இழிப்பு, அற்புதம், இன்பம், அவலம், நகை, கோபம், நடுநிலை ஆகிய இச்சுவைகளை மெய்ப்பாடுகளால் உணர்த்த வேண்டும். அதாவது கண்கள், உடலசைவு, உடல்நிலை (posture). கை முத்திரைகள், முக பாவம் ஆகியவற்றால் அபிநயித்தல். இது சாத்விக அபிநயமாகும்.எடுத்துக்காட்டாக அச்சமேற்படும் போது உடல் வியர்க்கும்; உடல் நடுங்கும்; கண்கள் சொருகும். இத்தகு மெய்ப்பாடுகளை ஆடலில் காட்டுதல் சாத்விக அபிநயமாகும்.




பரத நாட்டிய நிகழ்ச்சியில் தனிப்பட்ட நாட்டிய உருப்படிகள் (items) உண்டு. ஒவ்வொரு உருப்படிக்கும் பெயர், தனித் தன்மை உண்டு. இவ் உருப்படிகள் ஓர் ஒழுங்கு நிரலில் இருக்கும்.பரத நாட்டிய நிகழ்ச்சி ஆரம்பிக்குமுன் இறை வணக்கம் பாடுவது வழக்கம். பக்க இசையாளர் இதைப் பாடுவர்.முதலில் நிருத்த வகை உருப்படிகள், அதன் பின் நிருத்திய, நாட்டிய வகை உருப்படிகள் தொடரும். உருப்படிகள்


அலாரிப்பு

ஜதிசுரம்

சப்தம்

வர்ணம்

பதம்

தில்லானா

விருத்தம்

மங்களம்  என்பவையாகும்.





சிவபெருமானிடம் இருந்து தோன்றியதுதான் பரதநாட்டியம் என்றும் இதிகாசங்களில் கூறப்படுகிறது. இவர் இடுகாட்டில் கைகொட்டிச் சிரித்துக்கொண்டு உக்ரமமாய் ஆடிய ஆட்டமே பிற்காலத்தில் பரதக்கலையாக மாறியது. இவரே நடனத்திற்கு முன்னோடி என்பதால் நடராஜர் என்று அழைக்கப்பட்டார்.  இந்த நடனத்தை ஆடுபவர்கள் மிகப் பெரும்பான்மையோர் பெண்களேயென்றாலும், ஆண்களும் இதனை ஆடுவதுண்டு.  சைவ சமயத்தவர்களின் முழுமுதற் கடவுளான சிவபெருமான் நடராஜர் வடிவத்தில் ஆடும் நடனம் 'தாண்டவம்' என்று சொல்லப்படுகிறது. மகிழ்ச்சியின் உச்சத்தில் அவர் ஆடும் நடனம் 'ஆனந்த தாண்டவம்' என்றும், அழிக்கும் கடவுளாக அவர் ஆடும் நடனம் 'ருத்ர தாண்டவம்' என்றும் அழைக்கப்படுகிறது. மென்மையான அசைவுகள் மற்றும் பதங்களுடன் பார்வதி ஆடும் நடனம் 'லாஸ்யா' என்று அழைக்கப்படுகிறது. பரதக் கலையை அனைத்து தரப்பு மக்களிடமும் கொண்டு சேர்த்த பெருமை திருமிகு. ருக்மணிதேவி அருண்டேல் அவர்களையே சேரும்.


மேலும் இக்கலையை வளர்ப்பதற்காகவே சென்னையில் கலா ஷேத்ரா என்ற கலைக் கூடத்தை நிறுவினார். இங்கே நடனம் பயின்ற ஆயிரக்கணக்கான பெண்கள் இன்று உலகம் முழுவதும் சென்று பரதக் கலையின் சிறப்பைப் பறை சாற்றி வருகின்றனர். பாடல், நட்டுவாங்கம்,   வீணை, புல்லாங்குழல், நாதஸ்வரம், மிருதங்கம் மகுடி, ஹார்மோனியம், வயலின், ஆகிய இசைக்கலைஞர்களின் துணையோடும் துல்லியமான அடவுகளுடனும், தாளத்தோடு கூடிய ஜதிகளுடனும் நடனத்திற்கென்றே பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட வண்ணப் பட்டாடைகள்,  அணிகலன்கள் கால் சலங்கைகள் போன்றவற்றை அணிந்து பார்ப்பவர்களை பரவசப்படுத்தும் வகையில் பரதநாட்டியக் கலைஞர்கள் தங்களுடைய நிகழ்ச்சிகளை வழங்கி நம் இந்திய நாட்டின் பாரம்பரியமிக்க நடனத்தை பாதுகாத்து வருகிறார்கள்.


தென்னிந்தியாவில் சிறப்பாக  கருதப்படும் பரதநாட்டியம் தமிழ்நாட்டின் தொன்மை வாய்ந்த  நடனமாகும்.  இந்தியாவிலும், உலக நாடுகளிலும் தற்சமயம் பிரபலமாக இருக்கும் பரதக்கலையானது புராணவியல் ரீதியாக பரத முனிவரால் உருவாக்கப்பட்டு, பரதம் என்ற பெயர் தாங்கி வலம் வருவதாகக் கூறப்படுகிறது. 




பரதம் என்ற சொல், ப: பாவம், ர: ராகம்,  த: தாளம்  என்ற மூன்றும் சேர்ந்த கலை வடிவமே பரத நாட்டியம் ஆகும்.  






தமிழ்நாட்டுக் கோவில்களிலும்  அரச சபைகளிலும் பெண்கள் ஆடிய சதிராட்டத்தின் நெறிமுறைப்படுத்தப்பட்ட வடிவமே பரதநாட்டியம் ஆகும்.  நன்கு தேர்ச்சி பெற்ற நாட்டியக் கலைஞர்கள் தங்களுடைய முகபாவனைகளில் நவரச உணர்வுகளை வெளிக்கொண்டுவருவதே இக்கலையின் உலகப் புகழுக்குக் காரணம் ஆகும். மேலும் பரதக் கலைஞர்கள் தங்கள் கை, கால், மற்றும் விரல்களின் உதவியுடன் அபிநயங்கள் மற்றும் முத்திரைகள் மூலமாக முழுநீள கதைக்கும் அதற்குண்டான சுற்றுச் சூழலை விளக்கும் லாவகமும், காண்போரைக் கவர்ந்திழுக்கும் ஒப்பனையும், ஆடை அணிகலன்களும் இன்று வரை மேலை நாட்டவரையும் வியக்க வைக்கும் ஒன்றாக இருந்து வருகிறது.   



இப்படிப்பட்ட பரதக்கலையை தனது பாணியில் உலகுக்கு அறிமுகப்படுத்தியவர் வாழ்வோர் இராமையா பிள்ளை 

அவரின் மைந்தன் மாணிக்க விநாயகம் பிள்ளைக்கு இக்கட்டுரை சமர்ப்பணம் 











கருத்துகள்