கும்பாபிஷேகத்தில் பல வகைகள் உண்டு.



அஷ்டபந்தனம், ரஜதபந்தனம், ஸ்வர்ணபந்தனம் என்று ஒவ்வொரு ஆலயத்திலும் ஒவ்வொரு விதமாக தேவதைகளை பிரதிஷ்டை செய்திருப்பார்கள். பந்தனம் என்றால் கட்டிவைத்தல் அல்லது கட்டுக்குள் வைத்திருத்தல் என்று பொருள் கொள்ளலாம். கும்பாபிஷேகத்தின்போது அஷ்டபந்தனம் என்று சொல்லப்படும் எட்டு வகையான மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட மருந்தினைக் கொண்டு சிலைகளை பிரதிஷ்டை செய்வார்கள். இதற்கு அஷ்டபந்தன மஹா கும்பாபிஷேகம் என்று பெயர்.

12 ஆண்டுகள் கழித்து மீண்டும் பழைய மருந்தினை எடுத்துவிட்டு, புதிதாக அஷ்டபந்தன மருந்தினை சாத்தி கும்பாபிஷேகம் செய்வார்கள். இதனை ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் என்பர்
அதாவது ஜீரண உத்தாரண அஷ்டபந்தன மஹாகும்பாபிஷேகம் என்பர்
கட்டுகயிறு
மகிஷ பந்தனம் - எருமையைக் கட்டும் கயிறு
ரஜதம் என்று அழைக்கப்படுகின்ற வெள்ளியினை உருக்கி சிலையின் அடிப்பாகத்தில் பந்தனம் செய்திருப்பார்கள். இதற்கு ரஜதபந்தனம் என்று பெயர். இவ்வகை ஆலயங்களில் 25 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வது வழக்கம்.
ஆலயங்களில் ஸ்வர்ணம் என்று அழைக்கப்படும் தங்கத்தினை உருக்கி அதனைக் கொண்டு பந்தனத்தை அமைத்திருப்பார்கள். இவ்வாறு ஸ்வர்ணத்தைக் கொண்டு பந்தனம் செய்யப்பட்ட ஆலயங்களில் 50 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்வார்கள். இவ்வாறு அந்தந்த ஆலயத்தில் செய்யப்பட்டிருக்கும் பிரதிஷ்டையின் அடிப்படையில் எத்தனை ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்ய வேண்டும் என்ற விதிமுறை மாறுபடும்.
பொதுவாக இலங்கையில் பெரும்பாலும் ஆலயங்களில் அஷ்டபந்தன கும்பாபிஷேகம் செய்யப்படுகிறது.
12 ஆண்டுகளுக்கு ஒரு முறை பழைய அஷ்டபந்தனத்தை அகற்றிவிட்டு புதிதாக அஷ்டபந்தனம் சாற்றுவதால் ஆலயத்தின் சாந்நித்யம் அதிகரிக்கும் என்ற கூற்று உண்மையே.
செய்வினைகள் ஏழு வகைகளில் செய்யப்படுகின்றன. அவை 1, பந்தனம், 2. ஸ்தம்பனம், 3. மோகனம், 4. ஆகர்ஷனம், 5. உச்சாடனம், 6. உன்மத்தனம், 7. மாரணம் என்ற ஏழு முறைகளில் செய்யப்படுகின்றன
என்பதை அறிவீர்கள்
முதலாவதை மட்டும் தருகிறேன் பந்தனம் என்பது ஒருவர் செய்யும் செய்வினை செய்பவரை பாதிக்காமல் தன்னை சுற்றி கட்டு போட்டு கொள்வது.
இதைதான் ஆலயத்தில் மூலவருக்கு செய்கிறார்கள்
அப்படி கட்டிப்போடப்பட்ட இறைவனுக்கு சக்தியை ஏற்றி இருப்பார்கள் .இந்த முழு சக்தியையும் குருக்கள் தன கட்டுப்பாட்டில் வைத்திருப்பார் .அவர் சொல்வதை அந்த இறைவன் செய்வான்
அதற்காகவே குருக்கள் மூலம் ஆண்டவனிடம் வின்னப்பிக்கிறோம் .இதை அனுபவத்தில் உணர வேண்டும் .
மேலும் விபரிக்க விருப்பமில்லை
ஒருவருக்கு செய்வினை செய்யப்பட்டால் அதனால் அவருக்கு 12 வருட காலம் பாதிப்புகள் ஏற்படும், ஆனால் செய்தவருக்கோ அதனால் 98 வருடங்கள் பாதிப்புகள் ஏற்படும். அவரும் அவருடைய சந்ததியினரும் செழித்து வாழ முடியாது குல நாசமடையும். ஆகையால் தீய காரியங்களை செய்யாமல் இருப்பதே நாமும் நம் வம்சமும் செழித்து நீடூடி வாழ வகை செய்யும்.
மந்திரங்கள் முறையாக ஓதப்படல் வேண்டும் .ஆங்கிலம் கலந்த தமிழ் போல் பேசப்படாது சில கோவில்களில்
அய்யர் விரலால் திரு நீறு கொடுப்பதைப் பார்த்து இவர் மந்திரவாதியா தந்திர வாதியா அ/அல்லது
ஒரு போக்கானவனா அல்லது பக்திமானா என்று கண்டு பிடிக்க முடியும் .
பரம்பரைகளாக பூசாரிகள் வருகிறார்களே /
ஆசாரமானவனா ?
பக்திமானா என்றெல்லாம் இப்போது யாரும் பார்ப்பதில்லை
இரவு பன்னிரண்டு மணி மட்டும் குடித்து வெறித்து விட்டு ,அடுத்தநாள் குளித்து விட்டு கோவிலுக்கு போகும் பக்தி மான்கள் பலரைக் கண்டிருக்கிறேன்
தனது மனைவி மட்டும் பத்தினியாக இருக்கவேண்டும் ஆனால் .அடுத்தவன் பெண்டிர் தனக்கு வைப்பாட்டியாக வேண்டும் என்ற பலயோக்கியர்களைக் கண்டிருக்கிறேன் .
இப்படிப் பல கலி முற்றிய நிலையில் தான் இப்பொழுது இயக்கம் உலகமாக இருக்கிறது

கருத்துகள்