கோர ஒண்ணா பக்றீரியா கண்டறிய ப்பட்டு
பின்னர் டெல் ரா வை உருவாக்கி அது அத்துமீற
பின்னர் ஓமை கோர ஒண்ணா கண்டறியப்பட்டு
இப்போ டெல் ஓமை கோர ஒண்ணா உருவாக்கம் வருகிறது
அப்போ ஒன்றை அழிக்க ஒன்றை உருவாக்குகிறார்களோ ?என்ற ஐயம் எல்லோர் மனதிலும் ஏற்படுகிறது அல்லவா ?
இப்படித்தானே ஆயுதங்களும் ஒன்றை அழிக்க ஒன்றை கண்டு பிடித்தார்கள் .
ஒரு மக்களோடு ஒரு மக்கள் தொடர்பில்லாமல் சின்னாபின்னப்பட்டு அல்லவா வாழ முற்படுகிறார்கள் .
கனடா வில் இருப்பவன் ஊருக்கு போக எத்தனை சட்ட திட்டங்கள்
உணவகத்துக்கு சாப்பிடப் போகவே கேள்விகள் ஆயிரம்
சொந்த மகளை அரவணைக்கக் கூட முடியாத தாய்மார்கள்
தன்னிச்சையாக சுய இச்சைகளாக சுய ஆதீனமான சுய நலம் கலந்த வாழ்க்கை
அதற்குள் நீ பெரிதோ ?அல்லது நான் பெரிதோ ?
எனது உனது தனது என்கிற மன நிலைகள்
உலகத்தை விட்டு நீ போகும் போது உன்னுடன் காதற்ற ஊசி கூட வராது என்று உலகிற்கு உணர்த்தியவர் பட்டினத்து அடிகள்.
வாது உற்ற திண் புயர் அண்ணாமலையார் மலர்ப் பதத்தைப்
போது உற்ற போதும் புகலும் நெஞ்சே
இந்தப் பூதலத்தில்
தீது உற்ற செல்வம் என்?
தேடிப் புதைத்த திரவியம் என்?
காது அற்ற ஊசியும் வாராது காண் உன் கடைவழிக்கே.
நாம் இறந்த பிறகு, ஒரு உடைந்த ஊசி கூட நம்மோடு வராது. பெரிய தத்துவம் இல்லை. எல்லோருக்கும் தெரிந்தது தான்.
இந்த ஒரு வரியை படித்தவுடன், இருந்த சொத்தை எல்லாம் ஊராருக்கு அள்ளி கொடுத்துவிட்டு , பட்டினத்தார் ஒரு கோவணத் துணியுடன் வீதியில் இறங்கி விட்டார்.
அறிவின் உச்சம்.
நாமாக இருந்தால் என்ன செய்வோம் ?
"ஹா...இதெல்லாம் கேக்க நல்லா இருக்கு. நடை முறை வாழ்க்கைக்கு ஒத்து வருமா " என்று தோளை குலுக்கி விட்டு வேறு வேலையை பார்க்கப் போய் விடுவோம்.
இருக்கிற செல்வத்தை எல்லாம் ஊருக்கு கொடுத்துவிட்டு வீதியில் நம்மால் நடக்க முடியுமா ? நடக்கிற காரியமா ?
பட்டினத்தார் நடந்தார்.
பட்டினத்தாரோ, என்னோடு வராத செல்வத்தை நான் ஏன் வாழ் நாள் எல்லாம் தேடிக் கொண்டிருக்கிறேன். இவ்வளவையும் சேர்த்து வைத்து என்ன செய்ய ? கொண்டு போக முடியாது. அனுபவிக்கவும் முடியாது. பின் எதற்கு என்று நினைத்தார்.
வீதியில் இறங்கி விட்டார்.
இறங்கியவர் சொன்னதை நாம் நினைத்துப்பார்க்க வேண்டு ம்
நாபிளக்க பொய்பேசி
நவநிதியம் தேடி
நலனொன்றும் அறியாத நாரியரைக் கூடி
பூப்பிளக்க வருகின்ற புற்றீசல் போல
புலபுலென கலகலெனப் புதல்வர்களை பெறுவீர்
காப்பதற்கும் வகையறியீர் கைவிடவு மாட்டீர்
கவர்பிளந்த மரத்துளையிற்
கால்நுழைத்துக் கொண்டே
ஆப்பதனை அசைத்துவிட்ட குரங்கதனை போல
அகப்பட்டீரே கிடந்துழல அகப்பட்டீரே
எவ்வளவு ஆணித்தரமான உண்மைகள்
பணத்தாசையும், பெண்ணாசையும் பிடித்து அலைந்து தனக்குத் தானே குழிவெட்டிக் கொள்வது ஏன் ?
இன்னாருக்கு இன்ன இடத்தில் பிறக்கப்போகிறோம் என்பது யாருக்காவது முன்கூட்டியே தெரியுமா என்ன? பணத்தின் மூலமாக உடலை விலைபேசலாம்
உடலும் ஓரிரவு மட்டும் தானே உனக்கு வாடகைக்கு கிடைக்கும்
காலப்போக்கில் பெண், பொன், மண் திகட்ட ஆரம்பிக்கிறது இதுநாள் வரை நீ சக்கரைப் பாகுவைத்தான் தேன் என்று நினைத்துக் கொண்டிருந்தாய்?.
மீனுக்கு தான் கடலில் இருக்கிறோம் என்ற தன்னுணர்வு வருமா?
நீ கனவு காண்கிறாய் என்பது விழித்த பிறகு தானே உனக்குத் தெரிகிறது.
வாழ்க்கையும் சொப்பனம் தான். சோதனையும், கஷ்டங்களும் உனக்கு அடிமேல் அடி கொடுத்து நொந்த பின்பு தான் உன் மணம் விழித்துக்கொள் கின்றது .
பெண்ணாசைக்கு நீ ஆட்பட்டு செக்குமாடு மாதிரி இங்கேயே அலைகிற மனதை நெறிப்படுத்த தவறியது தான் உன் குற்றம் .
மணணாசைஅ அடுத்த குற்றம்
பொன்னாசை மேலதிக குற்றம்
நடைபெறும் சம்பவங்கள் அனைத்தும் உனக்கு ஒருபாடம்
ஆனால் நீ அதை புரிந்து கொள்ள மாட்டாய்.
நாசி வழியாகத்தானே சுவாசிக்கிறோம்.
அதற்காக வந்தது தான் கொரோனா என்று சிலர் கூறுகின்றார்கள்
உன் வாழ்க்கைக்கு மறுபக்கம் உள்ளது. மரணம் அதைத் தெரியப்படுத்தும்.
அணை போட்டுத் தடுத்தாலும் நதி கடலை நாடத்தானே செய்கிறது.
அதுபோல ஆத்மாவும் உலகத்தை விட்டு வெளியேறும் .
ஒருசிலர் தானே உலகத்தைத் துறக்கிறார்கள்.
சந்நியாசி உலகத்தைத் துறந்தவன் மட்டுமல்ல உலகத்தைப் பொறுத்தவரை அவன் இறந்தவன்.
உன் நடைமுறை வாழ்க்கையை நேர்படுத்திக் கொள்ளாமல் கடவுள் அருவமா, உருவமா என்று வாதிடுவதில் என்ன பயன். எத்தனை பிறவிகளாக வணங்குவதையே தொழிலாகக் கொண்டிருப்பாய் அவனை நோக்கி ஒருஅடி எடுத்து வைக்க வேண்டாமா?
இந்துவா ? கிறித்தவனா ? முஸ்லிமா ?
நீ யாராக இருந்தால் எனக்கென்ன .
நீ ஒரு நாளா வது மனிதனாக வாழ்ந்தாயா ?
மதத்தில் இத்தனை தெய்வங்கள் எதற்கு ?
நோய் வந்ததால் அல்லது வந்தால் தானே
கடவுளைத் தேடி ஓடுகிறாய்
நீ வாழ்வை ஒழுங்காக வாழ்ந்திருந்தால்
மரணத்தைக் கண்டு ஏன் அச்சப்பட வேண்டும்.
உனக்கு கடவுள் நம்பிக்கை இல்லாவிட்டாலும் பரவாயில்லை
மனிதரில் தெய்வமாக வாழ முயற்சி செய்
Manikkavasagar Vaitialingam
கருத்துகள்
கருத்துரையிடுக