முளைத்து மூன்றிலை விடலை என்றால் என்ன ?




உயிர் ஒரு செயலில் தோய்ந்து அழுந்தியியங்கி, அதன் வழியாகப் பெறும் அறிவுநிலை, உளநிலை, இயக்கநிலை ஆகிய மூநிலை உணர்வு நிலைபற்றியே பெரியோர்கள் சொன்னார்கள்
நாம் பள்ளிகளுக்கும் கல்லூரிகளுக்கும் சென்று, அங்கு எப்படிப் படிக்காமலும் பயிற்சி பெறாமலும் இருத்தல் கூடாதோ, அப்படியே ஒருயிர் தமக்குற்ற துய்ப்புக்கருவியாகிய இவ்வுடலுடன் இந்நிலவுலகத்திற்கு வந்து, பயிற்சி பெறாமல் இருத்தல் கூடாது. எனவே, இங்குப் பிறவியெடுத்த ஒவ்வோருயிரும் இங்கு வாழ்கின்ற வரையில் ஏதாவது தமக்குற்ற ஒரு செயல் வழி இயங்கிப் பயின்று, அதால் இன்பதுன்ப நுகர்ச்சி பெற்று, தம் அறிவுணர்வும் மனவுணர்வும் இயக்கவுணர்வும் மிகவும் விரிவும் விளக்கமும் பெறும்படி செய்து கொள்ளுதல் வேண்டும். அவ்வாறு பிறவி பெற்று ஏதாமொரு செயலில் ஈடுபடாத உயிர் பள்ளிக்குச் சென்று படிக்காமல் காலத்தை வீணே கழிக்கும் மாணவனைப் போன்றதாகும். அஃது, அப்பள்ளித் தேர்வுகளில் தோல்வியுற்றுத் தோல்வியுற்று நெடுங்காலமும் கடைத்தேறாத மாணவனைப் போல் இவ்வுலகச் சுழற்சியில் சிக்கிச் சுழன்று திக்கித் திணறிக் கிடக்க வேண்டியதுதான். எனவேதான் வினையே மக்களுக்கு உயிர் வாழ்க்கை என்று குறிக்கப்பெற்றது.
ஆவியானது காற்றுப்போ ன்றது
திண்மம், திரவம் , வாயு என மூநிலை உண்டு.
திரவம் நடு நிலை ஆனதால் இதற்குள் யாவும் அடக்கம்.
மனித வாழ்வும் அப்படியே
மூநிலை களால் ஆனது
பெரும்பாலும் மரங்களை அடையாளம் காண்பதே அவற்றின் இலைகளை வைத்துத் தானே?
அவ்வாறே மனித வாழ்வும் முளைக்கின்ற வயதில் வைத்து அதாவது சிறு வயதில் மன ம் வாக்கு காயங்களினால் ஏற்படும் நிலைகளை வைத்து கணிக்கப்படுகிறது ,இச்சிறுவன் எப்படி எதிர்காலத்தில் இருப்பான் என்று தீர்மானிக்கப்படுகிறது .
ஒரு மரத்தின் மனநிலையை அவற்றின் இலைகளைக் கொண்டே அறிந்து கொள்ளமுடியும் எனத் தோன்றுகிறது. இளந்தளிர், கொழுந்து, முதிர்ந்த இலை, பழுத்த இலை, இப்படி இலையின் பல நிலைகளைக் கொண்ட ஒரு மரத்தின் ஒவ்வொரு நிலையிலும் அதன் ஒவ்வொரு மனநிலையைப் பிரிதிபலிப்பது போலத்தான் தோன்றுகிறது. மரத்திற்கு மனம் உண்டா? மரமும் உயிர்தானே இருக்காதா என்ன? பருவகால மாற்றத்தினை உணர்ந்து தானே, அதற்கேற்ப அவை தமது இலைகளைக் களைந்து புதிதாக தளிர்களை பிரசவிக்கின்றன. ஆக தாவரங்களுக்கும் உணரும் திறன் உண்டென்பது புலனாகிறதல்லவா?
அதாவது ஒவ்வொரு படைப்புக்கும் உயிர்கள் உண்டு .
மண்ணைபிளந்து மேலே வரும் செடி விதையைப் பிளந்து, சூரிய ஒளியில் சுவாசிக்க ஆரம்பிக்கும் அந்த சிறிய இளந்தளிர்கள் வளர்ந்து கொழுந்தாகி, பின் முதிர்ந்த இலையாகி கடைசியில் பழுத்த இலை கீழே விழுந்து சருகாகிறது.
இது தானே மனித வாழ்வு .
இலை பச்சைநிறத்தை இழந்து பழுத்த இலையாகிறது. அதற்கு முன் இலையிலுள்ள ஊட்டச்சத்துக்கள் அனைத்தையும் மரக்கிளையானது உறிஞ்சிக்கொண்டு தற்காலிகமாக இலையுடனான தொடர்பை துண்டித்துக் கொள்கிறது. பழுத்த இலை கீழே விழுகிறது .காற்றில் அலைகிறது .(முதியவர்களைப்போல _)
கீழே விழுந்தாலும் அது மரத்துடனான உறவை துண்டித்துக் கொள்வதில்லை. விழுந்த இலை மட்கி உரமாகிறது. மண்ணிலுள்ள அவ்வுரத்தையே மரத்தின் வேர்கள் ஈர்த்துக் கொண்டு வளர்கின்றன. தனது இனத்துக்காக இலைகள் தம்மையே அற்பணி க்கின்றன .முதிர்ந்த வயோதிபர்கள் ஆனாலும் தனது சந்ததிக்காக போராடுகிறது வயோதிபம்
இந்த வயோதிபம் புகையிலை வெற்றிலை தேயிலை என்கிற மூன்று இலை களை விட்டு விடாமல்
திண்ணையில் இருந்துகொண்டு
சொல்லி வைத்த வாசகம் தான்
முளைத்து மூன்றிலை விடலை ..என்று
புரிந்ததா ?
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்