பி விக்கினேஸ்வரன் இணுவிலில் பிறந்தவர்

இவன் யார் ?விளையாட்டு வீரனா
நாடக நடிகனா ?
ஊடக வியல் ஆளுநனா ?











பதிலை உங்களிடமே விட்டு விடுகிறேன்
%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%%
இவர் இணுவிலில் பிறந்ததால் அந்த ஆத்மீக பூமியில் உள்ள ஆண்டவன் அனுக்கிரகம் அவரிடம் இருக்கிறது
இவர் ஆரம்பக் கல்வி நடேஸ்வராக்கல்லூரியில் படித்தார் .
தாயார் கமலாதேவி வயலின் மேதை .உருத்திராதிபதி என்கிறமேதயிடம் இவரின் தாயார் வயலினைக் கற்றுக் கொண்டார்
தகப்பனார் டி எஸ்டேட் இல் மேற்பார்வையாளர்
இப்படியான காலகட்டத்தில் கலைப் பேரரசு டீ பொன்னுத்துரை அவர்களின் அனுசரணையும் .வி வி வைரமுத்து அவர்களின் தரிசனங்களும் இவரின் ஆழ்மனதில் கலை ஞானத்தை வளர்த்தது
BH அப்துல்கமீதின் இசையும் கதையும் ஒளி நாடாக்களை ஒளிலி வடிவில் ஒளி பரப்புத்துறைக்கு பரிணாம வளர்ச்சி கண்டவர் விக்கினேஸ்வரன்
, காங்கேசன்துறையைவாழ்விடமாகக் கொண்டவர். இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஆரம்பத்தில் நிகழ்ச்சித் தயாரிப்பு உதவியாளராக (1970) இணைந்து கொண்ட இவர், பின்னர் தமிழ்ச்சேவையில் நாடகப்பகுதியின் தயாரிப்பாளராக (1979)பொறுப்பேற்றார். இவர் காலத்தில் வானொலி தமிழ் நாடகத்துறை மிகுந்த வரவேற்பைப் பெற்றது. ரூபவாகினி ஆரம்பிக்கப்பட்ட பின்னர் அங்கும் தமிழ் நிகழ்ச்சிப் பிரிவில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகச் சேர்த்துக் கொள்ளப்பட்ட(1982) இவர், திருமதி ஞானம் இரத்தினம் ஓய்வு பெற்ற பின்னர்
தமிழ்ப் பிரிவுக்கு பொறுப்பாளராக (1984) நியமிக்கப்பட்டார். தற்போது கனடாவில் வசிக்கும் இவர் தனியார் நிறுவனமொன்றில் பணியாற்றுவதோடு, கனேடிய தொலைக்காட்சி நிறுவனமான TVI யில் நிறைவேற்றுத் தயாரிப்பாளராகவும், TVI தொலைக்காட்சியிலும், CMR வானொலியிலும் செய்தி வாசிப்பவராகவும் செயற்படுகின்றார்.என்று அறிந்தேன் .
தொடர்புகிடைக்காத படியால் முடிந்தவரை ஊர்ஜிதமற்ற செய்திகளை தவிர்கின்றேன் .
இலங்கை வானொலியில் தமிழ் நாடகத் தயாரிப்பாளராக இருந்த காலத்தில் பல வானொலி நா டகங்களை எழுதியுமிருக்கிறார். 'ரசமஞ்சரி' போன்ற சஞ்சிகை நிகழ்ச்சிகளை தயாரித்தவர்.
இவர் எழுதிய "வாழ்ந்து பார்க்கலாம்" என்ற வானொலித் தொடர்நாடகம், கனடா தமிழோசை வானொலியிலும்(1995), கனேடிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்திலும் ஒலிபரப்பு செய்யப்பட்டது. பின்னர் இது நூல்வடிவிலும் வெளிவந்தது.
இலங்கையில் தொலைக்காட்சி நாடகங்களை எழுதி இருக்கிறார் அவற்றில்
ரூபவாகினியில் முதன்முதலாக தயரிக்கப்பட்ட தொலைக்காட்சி நாடகம் என்ற பெருமையை இவர் தயாரித்த ஜெயமோகன் எழுதிய "கற்பனைகள் கலைவதில்லை" பெற்றது.
கற்பனைகள் கலைவதில்லை
கண்ணாடி வார்ப்புகள்( மேடை நாடகவடிவில் படமாக்கப்பட்டது)
நிஜங்களின் தரிசனம் ( இவரே எழுதியது)
உதயத்தில் அஸ்தமனம் ( யாழ்ப்பாண்த்தில் படமாக்கப்பட்டது)
நீண்ட கனவு ( இவரே எழுதியது)
மலையோரம் வீசும் காற்று ( மலையகத்தில் படமாக்கப்பட்டது)
நம்பிக்கை
சமூக சேவகி
காத்திருந்தவன்
என்பவை சிறப்புடையவை
கனடாவில் மனவெளியின் அரங்காடல் நாடக விழாவிற்காக பல நாடகங்களை நெறிப்படுத்தி மேடையேற்றியிருக்கிறார்.
நா. சுந்தரலிங்கத்தின் 'அபசுரம்'
பி. விக்னேஸ்வரனின் 'இனி ஒரு எதிர்காலம்' (2001)
இயூஜின் அயனஸ்கோவின் 'நாற்காலிகள்' குறிப்பிடத்தக்கவை
இவரின் நாற்சார் வீட்டை அறியாதவர்கள் இலர் .
இலங்கை திரைப்படக் கூட்டுத்தாபனம் நடத்திய திரைப்படப்பிரதிக்கான போட்டியில் இவர் எழுதிய ' கிராமத்து இதயம்' என்ற பிரதி சிறந்த தமிழ்ப் பிரதிக்கான விருதைப் பெற்றது.
ரூபவாகினி நிலையமானது இலங்கையில் கல்வி சம்பந்தமான நிகழ்ச்சிகளை வழங்குவதற்காகவே ஜப்பான் அரசாங்கத்தினால் அனபளிப்பாக வழங்கப்பட்டது. தொலைக்காட்சித்துறை தேசிய அளவில் புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட பொழுது உடனடியாக அதற்கான ஊழியர்களை பெறுவதே சிரமமானதாக இருந்ததினால் நேரே முன்னால் இருந்த இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் இருந்துதான் நிர்வாகிகள் முதல் தொழில் நுட்பவியலாளர்கள், தயாரிப்பாளர்கள் என்றெல்லாம் பெறப்பட்டார்கள்.
இவர்
தயாரித்த முதலாவது தொலைக்காட்சிப்படைப்பு- பாலேந்திரா, ஆனந்தராணி நடித்த பிரபலமான மேடை நாடகமான "கண்ணாடி வார்ப்புகள்"தான். இந்த மேடை நாடகத்திற்காக கதிர்காமத்தம்பி என்பவர் உருவாக்கியிருந்த மேடை அமைப்பையே பின்னணியில் வைத்து மேடைநாடகத்தை அப்படியே படமாக்கி , தொலைக்காட்சியில் ஒளிபரப்புசெய்யப்பட்டது .
"கற்பனைகள் கலைவதில்லை" என்ற தொலைக்காட்சி நாடகம்.
ஜெ.ஜெயமோகன் எழுதிய இந்த பிரதியை தொலைக்காட்சிக்கு ஏற்றவாறு மாற்றங்கள் செய்து
நடராஜசிவம், விஜயாள் பீற்றர், சாந்தி சச்சிதானந்தன் ஆகியோர் நடிக்க
தெகிவளை கடற்கரையிலும் அதனை அண்மிய இல்லங்களிலும் படப்பிடிப்புநடாத்தப்பட்டது
யாழ்ப்பாணத்தில் வாழும் கலைஞர்களைப் பயன்படுத்தி ஒரு தொலைக்காட்சி நாடகத்தை உருவாக்கவேண்டும் என்ற இவரின் விருப்பத்துக்கு ரூபவாகினி நிர்வாகம் சம்மதம் கொடுக்க . திருமதி ஞானம் இரத்தினம் அவர்கள் தலைமையில் ஒரு பெரிய தயாரிப்புக் குழுவே புறப்பட்டது.
ராஜேஸவரன், றேமண்ட், குமுதினி, ராஜி இம்மானுவேல், கமல்ராஜ் , கே.எஸ்.பாலச்சந்திரன், எஸ்.எஸ்.கணேசபிள்ளை, பாக்கியம் கந்தசாமி, நிலானி நாகரட்ணம் போன்ற கலைஞர்கள் நடிக்க
கந்தரோடை முதல் வழுக்கி ஆற்றின் வயல்கள் ,என்று தொடக்கி தையிட்டி மயிலிட்டி காங்கேசன் துறை என்று பலஇடங்களில் படமாக்கப்பட்டதே
உதயத்தில் ஓர் அஸ்தமனம் என்னும் நாடகம் .
இவர் இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தில் ஒரு தொழில்நுட்ப வியலாளராக இணைந்து கொண்டபொழுது ஒலிபரப்புத்துறையின் பலமுன்னோடிகளான
சானா (சண்முநாதன்)
எஸ்.புண்ணியமூர்த்தி, வீ.ஏ.கபூர், எஸ். நடராஜன்,எஸ்.பி.மயில்வாகனம்,கே.எஸ்.நடராஜா, திருமதி ஞானம் ரட்னம்,திருமதி பொன்மணி குலசிங்கம், சி.வி.இராசசுந்தரம் போன்றோரின் ஆசீர்வாதத்தில் வளர்ந்தார்
இன்று இவரின் பதிவை இத்துடன் நிறுத்திவிட்டு இன்னொரு விபரமான பதிவில் விபரமாக இவர் பற்றி தருகிறேன்
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்