கோயில் கோபுரத்தில் ஏன் காமத்தை வெளிப்படுத்தும் வகையில் பல ஆபாச சிலைகள் இருக்கின்றன .

பாலியல் கல்வி என்பது நொண்டிச்சாட்டு புதுமண தம்பதிகளை கோயிலுக்கு அனுப்பி வைத்து, தங்களின் இல்லற வாழ்வை எப்படி தொடங்க வேண்டும் என தெரிந்து கொள்ள ஏதுவாக இருக்க இது போன்ற சிலை செதுக்கபட்டதாக கூறப்படுகின்றது.மேலும் மனத்தைக் கட்டுப்படுத்தி
காமம், ஆசை உள்ளிட்டவற்றை விடுத்து யார் கோபுரத்தை பார்க்கின்றாரோ அவரே உயர்நிலை அடைய முடியும் என்பதை குறிக்கும்
காமத்தை தூண்டு சிலைகள் மட்டுமே கோபுரங்களில் வைக்கப்படுவதில்லை. அதோடு பெண் கர்ப்பமாக இருப்பது போன்றும், ஒவ்வொரு மாதத்தில் குழந்தை எப்படி வளர்ச்சி அடைந்திருக்கும் என்பதை உணர்த்தும் வகையிலும் சிலைகள் உள்ளன
அதற்குரிய தெளிவான விளக்கங்களும் சிற்பங்களாக இருக்கும் எந்த சாமிக்குரிய கோயிலோ அதற்குரிய அவதாரங்கள், திருவிளையாடல்கள் அடங்கி சிற்பங்களுடன் கோயில் கோபுரம் கட்டப்படுகின்றன.
உதாரணமாக இந்திய
மத்திய பிரதேசம் சத்தார்பூரில் அமைந்துள்ள கஜுராஹோ கோயில் காம கோயில் என அழைக்கப்படுகின்றது. இதில் பல்வேறு காமத்தை வெளிப்படுத்தும் சிற்பங்கள் வடிக்கப்பட்டுள்ளன.
கோபுரம் என்பது தற்போதைய பரவலான வழக்கில் இந்துக் கோயில்களின் நுழை வாயில்களில் அமைந்திருக்கும் கட்டிட அமைப்பைக் குறிக்கும்.
ஒரு கோயிலில் இருக்கக்கூடிய கோபுரங்களின் எண்ணிக்கையும் பலவாறாகக் காணப்படுகின்றன. ஒரேயொரு கோபுரத்தைக் கொண்ட கோயில்களும், 16 கோபுரங்களைக் கொண்ட கோயில்களும் உள்ளன.
கோயில்களில் உயர்ந்து நிற்பனவெல்லாம் கோபுரங்கள் அல்ல. வட நாட்டுக் கோயில்களிலும், தமிழ் நாட்டின் ஆறு தொடக்கம் 10 ஆம் நூற்றாண்டு வரையான காலப்பகுதிகளில் கட்டப்பட்ட கோயில்களிலும் உள்ள உயர்ந்த பிரமிட் வடிவ அமைப்புக்கள் விமானங்கள், அல்லது சிகரங்கள் எனப்படுகின்றன
. இவை கருவறைக்குமேலேயே கட்டப்பட்டிருக்கும்.
ஆனால் கோபுரங்கள் கோயிலைச் சூழவுள்ள சுற்று மதில்களில் அமைந்துள்ள வாயில்களில் கட்டப்பட்டிருக்கும். தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழபுரம் கோயில் ஆகியவற்றில் பெரிய அளவில் காட்சி தருபவை விமானங்கள் ஆகும்.
கோபுரம் என்ற சொல் முற்காலத்தில் கோயில் நுழைவாயில் அமைப்புக்களை மட்டுமன்றி, நகரங்கள், அரண்மனைகள் ஆகியவற்றின் வாயியில் கட்டப்பட்ட அமைப்புக்களையும் குறித்தது.
மானசாரம் என்ற கட்டடக்கலை நூல் 32 வகையான சிற்ப நூல்களை சுட்டிகாட்டுகிறது.
1. விசுவகர்மீயம்
2. விஸ்வம்
3. விஸ்வசாரம்
4. பிரபோதம்
5. விருத்தம்
6. மயமதம்
7. துவஷ்டாதந்த்ரம்
8. மனுசாரம்
9. நளம்
10. மானவிதி
11. மானகல்பம்
12. மானசாரம்
13. பெகுஸ்ருதம்
14. சிருஷ்டம்
15. மானபோதம்
16. விஸ்வபோதம்
17. ஆதிசாரம்
18. விசாலாக்ஷம்
19. விஸ்வகாஸ்யபம்
20. வாஸ்துபோதம்
21. மகாதந்தரம்
22. வாஸ்துவித்யாபதி
23. பாராசரீயகம்
24. காலயபம்
25. சைத்யம்
26. சித்திரம்
27. ஆவர்யம்
28. சாதகசார சம்ஹிதை
29. பானுமதம்
30. ஐந்திரமதம்
31. லோகக்னம்
32. சௌரம்
மனுசாரம் என்ற சிற்ப-கட்டடக் கலை நூலில் இருபத்தெட்டு சிற்ப நூல்களின் பெயர்கள் பின்வருமாறு உள்ளது
1. ஈசானம்
2. சித்ரகாஸ்யபம்
3. பிரயோகம் மஞ்சரி
4. பெருஹிதம்
5. பௌத்தமதம்
6. கௌதமம்
7. குலாலம்
8. வாசிஷ்டம்
9. மனோகல்பம்
10. பார்க்கவம்
11. மார்க்கண்டம்
12. கோபாலம்
13. நாரதீயம்
14. நாராயணீயம்
15. காஸ்யபம்
16. சித்ரபாமளம்
17. சித்ராகுல்யம்
18. தேசிகம்
இப்படி
இவைகளில் பெரும்பாலானவை இன்றில்லை. இன்று நம்மிடையே கீழ்க்கண்ட நூல்களே தங்கியிருக்கின்றன.
1. மயமதம்
2. விஸ்வகர்மீயம்
3. மானசாரம்
4. ஐந்திரமதம்
5. மனுசாரம்
6. காஸ்யபம்
இவை சிற்பக்கலை பற்றியும், கட்டடக்கலை பற்றியும் ஒருமித்துப் பேசும் முழு நூல்களாம். இவற்றுக்கு வாஸ்து சாஸ்திரம் என்றும் பெயர்.
சாரஸ்வதீயம், பிராம்மீயம், சகளாதிகாரம் போன்ற நூல்கள் சிற்ப அமைப்பு இலக்கண நூல்களாக அமைகின்றன.
முற்காலச் சிற்பிகள் இலக்கியங்களாகப் படைத்த கலைச் சின்னங்கள் பலவுள. இவையாவும் நமக்குக் கிடைத்த இலக்கணம் என்றால் மிகையல்ல.
மாமல்லபுரம் குடைவரைக் கோயில்களும், ஒரு கல் கோயில்களும், கட்டுமானக் கோயில்களும் எந்தச் சிற்பநூல் துணைக் கொண்டு எழுப்பப் பட்டன.அதாவது
சிற்பக்கலை வளர்க்க ஆசாரியார்கள் இருந்தார்கள் .மான்யம் வழங்கப்பட்டது
பெருந்தச்சன் என்பவனே இன்றைய நாளில் சிற்பி என்றும், ஸ்தபதி எனவும் அழைக்கப்படுகின்றனர். ஸ்தபதி எனப்படுவோர் கல், மண், மரம், செம்பு, சுதை, கடுசர்க்கரை, செங்கல், தந்தம், மெழுகு, வண்ணம் ஆகிய பத்து வகைப் பொருள்களில் ஏதேனும் ஒன்றில் உருவங்கள் படைக்கும் கைவினைஞர் ஆவார். பொருள்களின் தன்மையினால் செய்முறை வேறுபடலாம். ஆனால் இலக்கணம் கலை நுட்பம் யாவும் பொதுவானவையாகும்.
பொதுவாக கோயிலானது கருவறை, அந்தராளம், அர்த்தமண்டபம், சாவகாச அந்தராளம், மகா மண்டபம், திருச் சுற்றுக்கோயில்கள், திருச்சுற்று, வாகன மண்டபம், திருமதில் என்றவாறு அமையும்
கோயில்கள் நமது உடம்பின் வடிவிலேயே அமைவதாய் உள்ளது. அதாவது கிடந்த மனித உடம்பில் உள்ள பாதங்கள் மண்டபமாகவும், தொடை நிருத்த மண்டபமாகவும், தொப்புள் பலிபீடமாகவும், மார்பு மகா மண்டபமாகவும், கழுத்து அர்த்த மண்டபமாகவும், சிரசு கர்ப்பகிரகமாகவும் அமையப் பெற்றுள்ளன.இதை எனது முன்பதிவுகளில் காணலாம் .
அதிட்டானம் முதல் தூபி வரை உறுப்புகள் முறையே அடி, கால், தோள், கழுத்து, தலை, முடி ஆகிய மனித உடலின் உறுப்புகளுக்கு ஒப்பிடுவர்
இந்துக்கள் தம் ஆத்ம தேடலின், ஆத்மீக தாகத்தின் வடிகால்களாகவே கலை ஞானத்தை தம் எதிர்கால தலமுறையினருக்கு விட்டுச்சென்றனர்.
ஆயகலைகள்
அறுபத்து நான்கு என்பது மரபு. அவற்றுள் சிறந்தவை நுண்கலைகள் இவை கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் என்பனவாகும். இவை ஒருகலைஞனின் உள்ளார்ந்த ஆற்றலாக வெளிப்படுபவை.
தமிழர்கள்
மிகத்தொன்மையான காலம் தொட்டே கட்டிடம், சிற்பம், ஓவியம், இசை, நடனம், நாடகம் ஆகிய நுண்கலைகளைப் பொன்னெனப்போற்றி வளர்த்து வந்திருக்கின்றனர். இக்கலைப்படைப்புக்கள் உலகையே வியக்கவைக்குமளவிற்கு கலைத்துவம் மிக்க அற்புதமான படைப்புகளாக விளங்குகின்றன .
மனிதன் படைத்த கலைகளுள் மிகச் சிறந்தது சிற்பக்கலை என்பர். வரலாற்றுக்கு முற்பட்ட காலத்திலிருந்தே இக்கலை வளர்ந்து வருகின்றது. மனித நாகரீகத்தையும் அதன் வளர்ச்சியையும் எடுத்துக்காட்டும் சான்றுகளில் சிற்பக்கலையைவிட சிறந்தது வேறொன்றில்லை. நாடுகளின் தொன்மை வரலாற்றை அம்மக்கள் வளர்த்த சிற்பக்கலை வழியாகவே பெரிதும் அறிய முடிகின்றது.
கண்ணால் கண்ட உருவங்களையோ கற்பனை உருவங்களையோ வடிவமைத்துச் செய்வது சிற்பம் எனப்படும். அதனை வடிப்பவன் சிற்பி எனப்படுவான்.
கல், உலோகம், செங்கல், மரம், சுதை, தந்தம், வண்ணம், கண்டசருக்கரை, மெழுகு என்பன சிற்பம் வடிக்க ஏற்றவை என பிங்கல நிகண்டு கூறும். கல்லில், கருங்கல், மாக்கல், பளிங்குக்கல், சலவைக்கல் என்பனவும் உலோகங்களில் பொன், வெள்ளி, வெண்கலம், செம்பும் ஏற்றனவாகக் கருதப்பட்டன.
வடிவம் முழுவதையும்-முன்புறம் பின்புறம் இரண்டையும்-காட்டும் சிற்பங்களை “முழுவடிவச் சிற்பங்கள்” என்றும் வடிவத்தின் ஒருபுறம் மட்டும் காட்டும் சிற்பங்களைச் “புடைப்புச் சிற்பங்கள்” என்றும் வகைப்படுத்துவர்.
கோயில்களில் காணப்படும் முதன்மைத் தெய்வத் திருமேனிகளும் உற்சவச் திருமேனிகளும் முழுவடிவச் சிற்பங்கள் ஆகும்.
சிற்பாசாரிகளால் செதுக்கப்படுபவை சிற்பம், அவற்றிட்கு சிவாச்சாரியர்கள் மந்திர தந்திர, யந்திர அனுஷ்டாணங்களைச் செய்து இறைநிலைப்படுத்தும் போது எழுபவை விக்கிரகம்.
“மனிதனது உணர்வுகளை ஆத்மீகத்தின் பால் ஈடுபாடு கொள்ளச்செய்யும் முயற்சியின் ஒரு பயனாக அமைவதே திருவுருவ வழிபாடு ஆகும்”
இப்படியான் இந்நிறத்தான் இவன் இறை எனக் கூறமுடியாத, ஓர் உருவம் ஒரு நாமம், ஓர்வடிவம் இலானுக்கு பல் உருவம் பல நாமம் கற்பித்து கல்லில் செதுக்கியும் பொன், வெள்ளி, ஈயம், பித்தளை, செப்பு முதலாய உலோகத்தால் வார்த்தும் வழிபடும் முறையே விக்கிரக வழிபாடு எனலாம்.
சித்தத்தை சிவன்பால் வைத்து சித்தநிலையால் சிந்திய அருள் வாக்குகளை தன் அகக் கண்ணிலே அமர்த்தி மந்திர ஜபம் செய்து அதை மனதிலே நிறுத்தி தன்விரல் நுணிகளின் வழியே சிற்றுளி கொண்டு சிற்பத்தை பிரசவிப்பான் சிற்பி. இக்கலையில் வல்லுநரை “ஸ்தபதி” என அழைப்பர். அவனால் படைக்கப்பட்ட “விக்கிரகம்” பக்குவ நிலைப்படா ஆன்மாக்கள் கட்புலனுக்கு உட்படுத்தி பக்குவப்பட கால்கோள்கிறது.
விக்கிரகம் என்பது வி+கிரகம் எனவரும். “வி” என்பது மேலான எனவும் “கிரகம்” என்பது இல்லம் எனவும் பொருள்கொண்டு “இறைவனின் மேலான இல்லம்” எனப்பொருள் புலப்படுத்தப்படுகின்றது.
விம்பம், விக்கிரகம், மூர்த்தி பேதம், பிரதிமை, படிமம் போன்ற பல சொற்களால் திருவுருவம் அழைக்கப்படுகின்றது. “திரு” என்பது தெய்வத்தன்மை எனவும்“ உருவம்” என்பது அழகிய வடிவம் எனவும் பொருள் கொள்ளப்பட்டு “தெய்வத்தன்மை பொருந்தி அழகிய வடிவமே திருவுருவம்” ஆகும்.
“திருவுருவங்கள் இறைவனை மனத்தால் கிரகிப்பதற்கு உறுதுணையாக அமைவன அத்துடன் இறைவனைப்பற்றிய புராணங்கள் கூறும் தத்துவப் பொருள் செறிந்த தெய்வீக வரலாற்றை அறிவதற்கும் உணர்வதற்கும் பெருந்துணை புரிவன. திருவுருவங்களும் அவற்றிட்கு நிகழும் கிரியைகளும் வழிபடுவோனது உள்ளத்திலே படிப்படியாகப் பரம்பொருள் தத்துவச் சிறப்பினை உணரவைப்பன சமய அனுபவத்தை வளர்பபதற்கு அவை உதவுவன”
அப்படிப்பட்ட சிறப்பினை உடைய விக்கிரகக் கலைபற்றி அறிய உதவும் சான்றுகளாக தொல்பொருட் சின்னங்கள், நாணயங்கள், கல்வெட்டுக்கள், இலக்கியங்கள் எனும் வரலாற்றியல் மூலாதாரங்களை ஆதாரப்படுத்த முடியும்.
உதாரணமாக சிற்பக்கலைகள் கல்வெட்டுக்கள் தான் வரலாற்று ஆதாரங்கள் .இதனால் தான் இந்து மக்களின் கோவில்கள் அழிக்கப் படுகின்றன
அண்மையில் கூட தமிழ் நாட்டில் ஆஸ்திக நாஸ்திகப் பிரச்சனைகள் கைதூக்கின .யானை தலையில மண்ணைக் கொட்டியதுபோல கோவில் ஓன்று தரைமட்டமாக்கப்பட்டது .தி மு க உடனே கோவிலைக் கட்டிக் கொடுத்தால் பிராயச்சித்தமாகும்
இல்லையேல் குடும்பமெனும் பரம்பரையே இல்லாது போய் விடும்
இப்பொழுது வெளிநாடுகளில் கோவில்கள் கட்டுப்பட்டு வருகின்றன .ஒரு நாள் இவர்கள் அடித்து விரட்டப்பட்டால் ?
அ ங்கு வாழ்ந்ததற்கான அடையாளம் கோவில்களே .
மொஹாஞ்சதாரோவிற் கிடைத்த வெண்கலத்தாற் செய்யப்பட்ட நடனமாதின் உருவம் சிந்துவெளி மக்களின் சிற்ப அறிவைப் புலப்படுத்துகின்றது.
இங்கு கிடைத்துள்ள திமில் பருத்த எருது, குட்டியுடன் இருக்கும் குரங்கு, தனித்திருக்கும் குரங்கு, சிவயோகியின் வடிவம், தரைப்பெண் வடிவங்கள் என்பன அக்கால மக்களின் சிற்ப அறிவை அறிய உதவுகின்றன.
சிந்துவெளிக் கலாசாரத்தின் பின் உருக்கொண்ட வேத கால கலாசாரம் அருவ வழிபாட்டை ஆதரிப்பதால் அங்கு எத்தகைய தொல்பொருட் சான்றுகளும் கிடைத்திலது .
எனினும் வேதகாலத் தெய்வங்களான சூரியன், இந்திரன் ஆகியோரது சிற்பங்கள் பாஜாவில் உள்ள பழையவிகாரையின் விறாந்தையில் உள்ளன. இதிலிருந்து மெளரியருக்கு முற்பட்ட சிற்பக்கலையின் சிறப்பை ஊகிக்க முடியும்
வடஇந்திய வரலாற்றில் சிற்பக்கலையின் உன்னத வளர்ச்சிக்கான சான்றுகளை குப்தர்கால சிற்பங்களில் காணமுடியும் குசானர் கால லிங்க வழிபாட்டின் தொடர்ச்சியாக லிங்கத்தை ஒருமுகத்துடனும், நான்கு முகத்துடனும் படைத்து வழிபடும் மரபினைக் குப்தர்கள் பேணினர். மேலும் திருமாலை அவதாரச்சிற்பமாக வடிக்கும் மரபு இங்கேயே தோற்றம் கண்டது.
வட மதுரையில் உள்ள திருமாலின் சிற்பம், உதயகிரி குகைவாயிலில் உள்ள திருமாலின் வராக அவதார புடைப்புச் சிற்பம், பித்தரக் கோன் கோயிலில் காணப்படும் புராணக் கதை கூறும் சுடுமட் சிலைகள், தசாவதாரக் கோயிலில் நுழைவாயிலின் இருபுறமும் உள்ள கங்கை யமுனை சிற்பங்கள் என்பன குப்தர்களின் சிற்பக்கலைக்கு தக்க சான்றெனலாம்.
தமிழ்நாட்டுச் சிற்பங்களின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலை இலக்கணங்கள் அவற்றில் அளவாய் அமைந்துள்ள நிலையாகும். இவ்விரு கலைகளுமே கோயில்களால் வளர்க்கப்பட்டமையால், இவை எளிதாக கைவரப்பெற்றன. சிற்ப வடிவங்கள் நின்றாலும் அமர்ந்தாலும் கிடந்தாலும் வேறெந்த அமைதியில் தோன்றினாலும், அவை பெரும்பாலும் ஆடற்கலை இலக்கணத்தையொட்டி அமைந்திருப்பதைக் காணலாம். சிற்பிகள் ஆடற்கலை இலக்கணத்தை நன்கறிந்து தம் கலைஉணர்வு, கற்பனைத் திறன் கலந்து அமைப்பதால், தெய்வத் திருமேனிகள் நிறுவப்படும் இடத்துக்குத் தக்கவாறு கலையழகை மட்டுமன்றி அவ்வடிவ அமைப்புகளின் உட்கருத்தையும் உணர்த்தும் வகையில் உள்ளன.
சிற்பக்கலை பண்டைக்காலம் முதற்கொண்டே தமிழரால் வளர்த்தெடுக்கப்பட்டுள்ளது. சங்க காலத்தில் மண், மரம், தந்தம்,கல் ஆகியவற்றில் சிற்பங்கள் செதுக்கப்பட்டன.
மண்ணில் சிற்பங்கள் உருவாக்கியவர்கள் “மண்ணீட்டாளர்கள்” எனப்பட்டனர். அக்காலத்தில் இறந்த போர் வீரர்களுக்கு கற்களால் சிலை அமைக்கும் வழக்கமும் இருந்தது.
போர் வீரர்கள் மண் மீட்பாளர்கள் என்ற ளைக்கப்பட்டனர் .
நமது சிற்பங்கள் அயல்நாட்டுச் சிற்பங்களைப்போன்று, வெறும் அழகிய காட்சிப் பொருள்களாக மட்டும் இல்லாமல், காட்சிக்கும் அப்பால் சென்று கருத்துக்களையும் உணர்சிகளையும் ஊட்டுகின்றன.இதனால் தான் வீரபாண்டிய கட்டப்பொம்மன் முதல் பண்டாரவன்னியன் சங்கிலி போன்ற மாவீரர்களின் சான்றுகள் அளிக்கப்படுகின்றன .இராஜ ராஜ சோழனின் சமாதி கூட அழி க்கப்பட்டு ஒரு கல்லு மட்டுமே சான்றாகி நிற்கிறது
“நம் நாட்டுச் சிற்பக்கலை மரபின் சிறப்பியல்புகளில் ஒன்று ஆடற்கலையின் இலக்கணங்களையும் இக்கலையில் புகுத்தியதாகும்.”
தென்னக வரலாற்றில் சங்க காலத்திலும் அதற்கு முன்னரும் மண், சுதை, மரம், உலோகம் என்பவற்றினால் சிற்பங்கள் ஆக்கப்பட்டமையினை அறியமுடிகின்றது. இந்நிலையினையே சங்க மருவிய காலத்திலும் காணமுடிகின்றது.
“வழுவறு மரனும் மண்ணும் கல்லும்
எழுதிய பாவையும் ……”என்கிறது மணிமேகலை
மேலும்
“மண்ணினுங் கல்லினும் மரத்தினும் சுவரினும்
கண்ணிய தெய்வம் காட்டுநர்”
என்கிறது
“சேரன் செங்குட்டுவன் வடநாடு சென்று கனக விசயரை வென்று இமயத்திலிருந்து கல் கொணர்ந்து கண்ணகிக்குச் சிலை எடுத்தான்”
சங்க காலத்தில் உலோகத் திருமேனிகளும் வழக்கிலிருந்தன. “இவை பொன் புனைந்த பாவைகள்” என மதுரைக்காஞ்சி (வரி;410) குறிப்பிடுகின்றது. “பொற்சிலை” பற்றிய குறிப்பு ஒன்று குறுந்தொகையிற்
(292:3-4)காணப்படுகின்றது
நெல்லை மாவட்டத்தைச் சார்ந்த ஆதிச்ச நல்லூரில் நடைபெற்ற அகழ்வாய்வில் தாய்க்கடவுள், நாய், கோழி ஆகிய செப்புத்திருமேனிகள் கண்டெடுக்கப்பட்டன. இவை வரலாற்றுக் காலத்திற்கு முன்பே தமிழகத்தில் உலோகத் திருமேனிகள் இருந்தன என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
சங்கமருவிய காலத்திலும் மாங்காட்டு மறையவன். திரு வேங்கட மலையில் திருமாலின் கிடந்த வண்ணத்தையும் திருவரங்கத்தில் செங்கண்நெடியவன் நின்ற வண்ணத்தையும் கண்டதாகக் கூறுகின்றான். (சிலப்பதிகாரம் )
தமிழகத்தில் பல்லவர்களின் மாமல்லக் குகைக் கோயில் சிற்பங்கள் வரலாற்றுப் புகழ் பெற்றவை. இவை உலக அரங்கில் சிற்பக்கூடம் என்ற சிறப்பினை மாமல்ல புரத்திற்கு கொடுத்ததெனலாம்.
பல்லவ சிற்பம் என்றாலே ஒரு தனி பாணி – மிகவும் இயல்பான தோற்றம் , அதிலும் ஒரு கம்பீரம், சிற்பியின் கலைத்திறன் ஆகமங்கள் என்ற கட்டுப்பாடுகளுக்குள் அடைக்கும் முன்னர் பிறந்த படைப்பு.
மல்லையில் அற்புத புடைப்பு சிற்பத்தை பார்க்கமுடியும்.மல்லை மகிஷாசுர மர்த்தினி மண்டபத்தில் உள்ள மகிஷாசுர மர்த்தினி சிற்பமும், சேஷ சயன பெருமாள் சிற்பமும். ஆகும்.
சிற்பக் கலைக்கு மெருகேற்றிய பல்லவ மன்னன் ராஜசிம்ம ன் காலத்து சோமஸ்கந்தர் வடிவங்கள் பல இடங்களில் உள்ளன. மல்லை கடற்கரை கோயிலில் அற்புதமான வடிவம் ஒன்று உள்ளது. மல்லை கடற்கரை கோயில் உண்மையில் மூன்று ஆலயங்கள் கொண்டது. முதலில் இருந்த சயன பெருமாள் கோயில், அதனை ஒட்டி ராஜ சிம்ம ன் எடுப்பித்த ராஜசிம்மேஷ்வரம் மற்றும் ஷத்ரியசிம்மேஷ்வரம் என்ற இரு சிவ ஆலயங்கள்,
கீழ் உள்ள சோமஸ்கந்தர் வடிவம் ராஜசிம்மேஷ்வர ஆலயத்தில் உள்ளது.
மேலும் நாயன்மார்கள் பாடலிலிலும் பல்லவர் சிற்பங்களின் பாங்கினைக் காணமுடியும்.
மூவிலைவேற் கையானை மூர்த்தி தன்னை
முதுபிணக்கா டுடையானை முதலா னானை
ஆவினிலைந் துகந்தானை அமரர் கோனை
ஆலால முண்டுகந்த ஐயன் றன்னைப்
பூவினின்மேல் நான்முகனும் மாலும் போற்றப்
புணர்வரிய பெருமானைப் புனிதன்றன்னைக்
காவலனைக் கழுக்குன்ற மமர்ந்தான்றன்னைக்
கற்பகத்தைக் கண்ணாரக் கண்டேன் நானே.
என்ற அப்பர் பாடலடியினைச் சான்றாகக் குறிப்பிட முடியும்.
பொதுவாக செப்புத் திருமேனி என்றவுடன் நாம் சோழர் காலம் என்றே நினைப்போம். எனினும் அவர்களுக்கு முன்னரே பல்லவர் காலத்தில் பல அற்புத செப்புத் திருமேனிகள் வடிக்கப்பட்டன. சான்றாக சோமஸ்கந்தர் செப்புத் திருமேனியை குறிப்பிட முடியும். இந்த சிற்பம் அதன் அமைப்பு, அணிகலன் , வாகு போன்ற பலவற்றை கொண்டு சோழர் காலத்திற்கு முற்பட்ட காலம் என்று அடையாளம் கொள்ளப்படுகிறது.
அதன் அளவை முதலில் மனதில் கொள்ள வேண்டும். சோழர் கால சோமஸ்கந்தர் வடிவங்களில் பாதி உயரமே உள்ளது இந்த சிற்பம். அளவு மட்டும் அல்ல, அதில் அமர்ந்திருக்கும் திருக்கோலமும் சற்று வித்தியாசமாக உள்ளது. இவற்றைக் கொண்டே இது சோழர் காலத்துக்கு முந்தைய சிற்பம் என்று கருதப்படு்கிறது. முருகர் வடிவம் தொலைந்துபோய் விட்டது.
பாண்டியர் கால சிற்பங்களும் தமிழகச் சிற்பங்களின் கலைத்திறனுக்குச் சான்றாய் விளங்குகின்றன. தமிழகத்தில் சோழர்காலக் குடந்தை நாகேசுவரர் கோயில், தஞ்சைப் பெரிய கோயில், கங்கை கொண்ட சோழீச்சுரம், தராசுரத்து ஐராவதேசுவரர் திருக்கோயில் ஆகியவற்றிலுள்ள சிற்பங்கள் உலகப் புகழ் பெற்றவை. இவை சிற்பக் கலை வளர்ச்சியையும், அக்கலையில் தமிழகச் சிற்பிகள் பெற்றிருந்த பெருந்திறனையும் உலகுக்கு உணர்த்துவன.
வெண்கல வார்ப்புக் கலையில் முக்கியமாக பஞ்சலோகங்களை மிகப் பெரிய அளவில்
வைத்துக் கொண்டு கலவையினால் செய்து, கோட்பாடுகள், தத்துவங்கள், சிற்ப
சாஸ்திரங்கள் ஆகிவற்றிற்கு ஏற்ப முதலில் மெழுகில் தயாரித்துப் பிறகு, களிமண்
ஒட்டிப் பின்னர் மெழுகி உருக்கி எடுத்து இடைவெளியில் உருக்கப்பட்ட உலோகத்தை
அழகுபட வார்க்கின்ற கலையை இன்றும் உலகம் அனைத்தும் மெய்சிலிர்த்து வியக்கும்
அளவுக்குச் சோழர்கள் உருவாக்கியிருக்கிறார்கள்.
தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் தற்போது காணப்படும் உலோகத் திருமேனிகள் பண்டைக் காலத்து வார்ப்புக் கலையின் சிறப்பினை எடுத்துக் காட்டுவனவாகத் திகழ்கின்றன
இரண்டாம் இராசராசனின் கலைப்படைப்பாய் எழுந்த ஐராவதேசுவரர் திருக்கோயில், சிற்பக்கலைச் சாதனைகளின் உச்சம் என்பர். அழகிலும் நுணுக்கத்திலும் ஆற்றலிலும் மிக உன்னத நிலையிலிருந்தே இச்சிற்பக் கலையின் எச்சமாக கம்போடியாவின் ‘அங்கோர் வாட்’ கோயில்களிலும் இந்திய நாட்டு ‘லெம்பா பந்தாய்’ பள்ளத்தாக்கிலும் சிதைவுற்றிருக்கும் சிற்பங்களே சீரிய எடுத்துக்காட்டுகள்.
உலகில் உள்ள வரலாற்று சின்னங்களில் ஒன்றாக ஐ.நா. சபை தேர்ந்தெடுத்துள்ள தாராசுரம் ஐராவதீஸ்வரர் கோவில் பல்வேறு வரலாற்று சிறப்புகளை கொண்டது.
காலத்தால் அழியாத நூறாயிரம் சிற்பங்களின் கலைக்கூடமாக ஆயிரம் ஆண்டுகளை கடந்து நிற்கும் இந்த அதிசய ஆலயம் இரண்டாம் ராஜராஜ சோழனால் கி.பி.12-ம் நூற்றாண்டில் கட்டப்பட்டது. கோவில் மண்டபங்களின் மேல் கூரையிலும், தூண்களிலும் எண்ணற்ற நடனமாடும் சிற்பங்கள் கண்ணையும், கருத்தையும் கவர்கின்றன. இத்தலத்தினை சிற்பங்களை பார்வையிடுவதற்காகவே தினந்தோறும் ஏராளமான வெளிநாட்டு பயணிகளும், வெளிமாநில பயணிகளும் வருகின்றனர். தமிழகத்தில் மிக பிரமாண்டமுறையில் முழுவதும் கருங்கற்களால் ஆன விமானங்களைக் கொண்ட கோவில்கள் நான்கில் இந்த கோவிலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது. நாட்டிய முத்திரைகளை காட்டி நிற்கும் சிற்பங்களும், தேர் போன்று வடிவிலமைந்த மண்டபமும் அரிய, சிறிய, மிக சிறிய, சிற்பக் கலைப் படைப்புகளும் இக்கோவில் புகழுக்கு ஓர் மணிமகுடமாகும்.
இந்த ஆலயத்தின் நுழைவு பகுதியில் நந்தி தேவர் மண்டபத்துடன் அமைந்துள்ள கொடிமரம் அருகில் பலி பீடத்தில் ஏறுவதற்கு உரிய 7 படிக்கட்டுக்கள் உள்ளன. அந்த படிக்கட்டில் வேறு ஒரு சிறிய கருங்கல்லில் தட்டினால் அந்த படிகளில் சப்த சுரங்களின் நாதம் எழும்புவது அதிசயம். மாடக்கோவிலான இத்தலத்தின் ராஜகம்பீர மண்டபத்தில் அமைந்துள்ள ஒவ்வொரு தூண்களிலும் அமையப்பெற்றுள்ள ஒவ்வொரு படைப்பு சிற்பங்களும் இதிகாச புராண நிகழ்வுகளை நினைவு கூரும். அதில் ஒரு அங்குல நர்த்தன விநாயகர், அம்மையப்பன், கஜசம்ஹார மூர்த்தி சிலை வடிவங்கள் காணும் கண்களை வியக்க வைக்கிறது.
மேலும் இந்திரனை சுமந்த ஐராவதம் என்னும் வெள்ளை யானைகள், சிங்கங்கள் வேட்டையாடுவது போல் அமைந்த யானைகள், அன்னப்பறவை, அன்னப்பட்சி, இரண்டு பாம்புகள் ஒரு எலியை பிடிக்கும் காட்சி என்று ஒரே கல்லில் அமைந்த சிற்பங்கள் நம்மை பிரமிப்பில் ஆழ்த்திவிடுகிறது.
அதிகார நந்தி, கண்ணப்பர், யோகசரஸ்வதி, மகாலட்சுமி, கங்காதேவி ஆகிய தெய்வ திருமேனிகள் இக்கோவிலுக்கு மெருகூட்டுகிறது. மூன்று முகங்கள் எட்டுகைகளுடன் அர்த்தநாரீஸ்வரர் பார்வதி தேவிசிற்பம் காணத்தகுந்தது. வடக்கு பிரகார திருசுற்று மாளிகையில் அமையப்பெற்றுள்ள 63 நாயன்மார்களின் வாழ்வில் நடைபெற்ற வரலாற்று சுவடுகளை சுமந்த திருஉருவங்களின் படைப்பு சிற்பங்கள் யாவும் மிக சிறப்பாக வடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
நடன மாந்தர்களின் படைப்பு சிற்பங்கள் மிக அற்புதமாக உயிர்த்துடிப்புடன் அமைந்துள்ளது. வேறு எங்கும் காண முடியாத புத்தர் வடிவ திருமேனியை வணங்கும் விஷ்ணு பிர்மா தேவனின் வடிவங்கள் அமைந்துள்ளதும். மேற்கட்டி கூரை விதானத்தில் அமைந்துள்ள சதுர, செவ்வக, வட்டம் என பல்வேறு வடிவமைப்புக்குள் பல கற்றளி படைப்பு சிற்பங்கள் அமைந்துள்ளதை போல் வேறு எங்கும் காண முடியாது. குறிப்பாக நூற்றுக்கால் ராஜகம்பீர மண்டபம் அதில் வெளி வாங்கிய சிற்பத் தேர் மண்டபம் ஆகிய மண்டபங்களில் உள்ள தூண்களில் முத்திரை பதித்துள்ள சிற்பங்கள் கண்டவர்களின் நித்திரையிலும் நினைவில் நிற்பவை. இந்தியா தொல்பொருள் ஆய்வுத்துறையினர் இங்குள்ள சிற்பங்களை பாதுகாத்து பராமரித்து வருகிறார்கள். மேலும் மிகவும் பழமையான, மிக நுட்பமான, சிற்பங்கள் பலவற்றை தஞ்சை சரஸ்வதி மகாலில் உள்ள அருங்காட்சியகத்தில் வைத்து பாதுகாக்கப்பட்டு வருகிறது. ஆண்ட ராஜராஜ சோழ மாமன்னனின் அர்ப்பணிப்பில் சிறப்பு மிக்க சிற்பிகளின் எல்லையில்லா கற்பனை திறமையில் உருவான சிற்பங்கள் காண்போர்களை வசீகரிக்கும் ஒரு அற்புதகலை பொக்கிஷமாகும் என்று சொன்னால் அது மிகையாகாது. தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் இந்த கோவில் அமைந்துள்ளது.
இந்தியாவுக்கு செல்பவர்கள் இக்கோவிலுக்கு செல்வது சிறப்பாகும் .
பதிவு நீள்வதால் இந்த13 வது பாகத்தை நிறுத்தி அடுத்த பதினாலாவது பதிவில் தொடர்கிறேன் பார்க்கவும்
Manikkavasagar Vaitialingam


கருத்துகள்