B.H. அப்துல் ஹமீத்




%%%%%%%%%%%%%%%%%%%
அப்துல் ஹமீது கொழும்பு நகரில் தெமட்டகொடை என்ற புறநகர்ப் பகுதியில் ஹசன், ஹாசியா உம்மா ஆகியோருக்கு நான்காவது மகனாகப் பிறந்தவர். இவருக்கு மூத்தவர்கள் மூவரும் ஆண் சகோதரர்கள். இவருக்கு மூன்றரை வயதிருக்கும் போதே தந்தையார் காலமாகி விட்டார். தாயார் கடையப்பம் தயாரித்து தர அதை இவர் சுமந்து விற்று வருவா
ஆரம்பக் கல்வியை தெமட்டகொடை தமிழ் மகா வித்தியாலயத்தில் கற்றார். ஆ. பொன்னுத்துரை, பண்டிதர் சிவலிங்கம் ஆகியோரிடம் அவர் அங்கு தமிழ் கற்றார். பள்ளியில் படித்த காலத்திலேயே நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தார். 1960ம் ஆண்டில் கொழும்பு விவேகானந்தா சபை மண்டபத்தில், வீரபாண்டிய கட்டபொம்மன் நாடகத்தில் நடித்து லடிஸ் வீரமணியின் பாராட்டைப் பெற்றார்
சிறுவனாக இருந்த போது இலங்கை வானொலியில் சிறுவர் மலர் நிகழ்ச்சிகளிலும், பின்னர் வ. ஆ. இராசையாவின் நிகழ்ச்சித் தயாரிப்பில் இளைஞர் மன்ற நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டார். இக்காலகட்டத்தில் வானொலி நிலையக் கலைஞராகத் தெரிவு செய்யப்பட்டார். இளைஞர் மன்றத்திற்கும், கல்விச் சேவை நிகழ்ச்சிக்குமாக நாடகம், உரைச்சித்திரம் தயாரிக்கவும் குரல் கொடுக்கவும் வாய்ப்புகள் வந்தன. பதினெட்டு வயதிலேயே வானொலி அறிவிப்பாளராக நியமனம் பெற்றார். இவருடன் எஸ். நடராஜசிவம், ஜோக்கிம் பெர்னாண்டோ, இருதய ஆனந்தராஜ், ராஜேஸ்வரி சண்முகம் ஆகியோரும் தெரிவாகினர்
இலங்கையில் தயாரான கோமாளிகள் திரைப்படத்தில் நடித்த இவர் தென்னிந்திய சினிமாவிலும் தனது செல்வாக்கை நிலைநிறுத்தியுள்ளார். கே. எஸ். ரவிகுமாரின் "தெனாலி", மணிரத்தினத்தின் " கன்னத்தில் முத்தமிட்டால்" திரைப்படங்களில் இவரது பங்களிப்பு இருந்தது.
பல மெல்லிசைப் பாடல்களையும், திரைப்படப்பாடல்களையும் எழுதியுள்ளார்.
செய்தி வாசிப்பாளராக, நேர்முக வர்ணணையாளராக, நிகழ்ச்சித் தயாரிப்பாளராக, நாடக கலைஞராக பல்வேறு பணிகளிலும் காலூன்றினார்.
இலங்கை வானொலியின் வர்த்தக சேவையில் அறிவிப்பாளராக இருந்த காலத்திலேயே ஏராளமான நிகழ்ச்சிகளை வர்த்தகசேவையிலும், தேசியசேவையிலும் தயாரித்து வழங்கியிருக்கிறார். இவர் தயாரித்த நாடகங்கள் இரண்டு சேவைகளிலும் ஒலிபரப்பாகியுள்ளன.
சில்லையூர் செல்வராசனின் 'றோமியோ ஜூலியற்' கவிதை நாடகம்
எஸ். ராம்தாசின் 'கோமாளிகள் கும்மாளம்'
கவிஞர் அம்பியின் 'யாழ்பாடி' - இந்த நாடகம், இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனத்தின் பவள விழாவின்போது இறுவட்டாக வெளியிடப்பட்டது.
'ஒரு வீடு கோவிலாகிறது - நடிகர்திலகம் சிவாஜி கணேசனால் பாராட்டப் பெற்றது.
தென்னிந்திய கலைஞர்களும் பங்குபற்றிய எம். அஷ்ரப்கானின் ' அனிச்ச மலர்கள்'
'சக்கரங்கள்
கே. எஸ். பாலச்சந்திரனின் 'கிராமத்துக் கனவுகள்'போன்ற வானொலி நாடகங்களை தயாரித்து வழங்கினார் .
பாட்டுக்கு பாட்டு" முதலான வேடிக்கை வினோத நிகழ்ச்சிகளை வானொலி மூலம் அறிமுகப்படுத்தியவர் இவரே. இத்தகைய நிகழ்ச்சிகள் கடல் கடந்து இந்தியாவிலும் வரவேற்பைபெற்றன .
பி.எச்.அப்துல் ஹமீது பணியாற்றியபோது விசாலாட்சி ஹமீது என்ற அறிவிப்பாளரும் இருந்தார். பெரும்பாலானவர்கள் இருவரையும் கணவன் மனைவி என்றுதான் நினைப்பார்கள். அந்தக் குழப்பம் வரக் கூடாது என்பதற்காக அந்த இருவரும் பங்குபெற்ற நிகழ்ச்சிகளில் பி.எச் அப்துல் ஹமீத் விடைபெறும்போது உங்களிடமிருந்து விடை பெறுபவர் சகோதரி விசாலாட்சியுடன் உங்கள் அன்பு அறிவிப்பாளர் பி.எச்.அப்துல் ஹமீத் என்பார். அப்போது "சகோதரி" என்பதை அழுத்திச் சொல்வார். இருந்தாலும் அவரைப் பார்க்கிறவர்கள் எல்லாம் விசாலாட்சி உங்கள் மனைவியா என்று கேட்பார்களாம்.
கணீர் குரலும் தெளிவான தமிழ் உச்சரிப்பும் இவரை கொழும்பிலிருந்து தமிழுக்குக் கூட்டி வந்தது. சன் டிவி, ராஜ் டிவி, கலைஞர் டிவி என ஒரு ரவுண்ட் வந்தவர் ஏராளமான மேடை நிகழ்ச்சிகளையும் தொகுத்துள்ளார். தமிழ் உச்சரிப்புக்காகவே தொலைக்காட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு இவரை அழைத்தன. ஏ.ஆர். ரஹ்மான் உள்ளிட்ட ஏராளமான திரைத்துறைப் பிரபலங்களையும் பல்வேறு சேனல்களுக்காக இவரே பேட்டிகளும் கண்டுள்ளார்.
நிகழ்ச்சி அறிவிப்பாளர்களை எடுத்துக்கொண்டால் நடராஜ சிவம், ராஜேஸ்வரி சண்முகம், கோகிலா சிவராஜா, புவனலோசினி துரைராஜசிங்கம், ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம், மயில்வாகனம் சர்வானந்தா, கே.எஸ்.ராஜா, பி.எச்.அப்துல் ஹமீத், சில்வஸ்டர் எம்.பாலசுப்பிரமணியம், சந்திரமோகன், அனுசுஜா ஆனந்த ரூபன்,ஜி.பால் ஆண்டனி ,ஜெயகிருஷ்ணா, எஸ்.எஸ்.நாதன், ஜோக்கிம் பெர்னாண்டோ, விசாலாட்சி ஹமீத் ,ஜோசப் ராஜேந்திரன் என்று வளர்ந்து ,செய்தியை வாசிக்கும் நடேச சர்மா வரை
ஹமீதை அன்பாலே நேசித்தார்கள் காரணம் அவரது கண்ணியமே .
பொதிகைத் தென்றல்’ ஒரு நிகழ்ச்சி. அதை ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்தான் தொகுத்து அளிப்பார். திரைப்பாடல்கள் எந்த அளவுக்கு இலக்கியத் தரமாக உள்ளன என்ற கோணத்தில் அதைக் கொடுப்பார்.யாரும் எதிர்பார்க்காத கோணங்களில் எதிர்பார்க்காத இடங்களில் இருந்ததெல்லாம் தகவல்களை எடுத்துக்கொண்டு வழங்குவார். எங்கிருந்தோ தோண்டி சுரங்கத்திலிருந்து எடுத்துக் கொண்டு வந்து கொடுப்பது போல் அவரது தகவல்கள் இருக்கும். சங்க இலக்கிய வரிகள் திரைப்பாடலில் எங்கெல்லாம் இடம்பெற்றுள்ளது என்பதை எடுத்துக்காட்டி நயம் பாராட்டி உரைப்பார்..அவருக்கு உதவி ஆலோசனைகளை வழங்கியவர் ஹமீது அவர்களே .
‘பாட்டுக்குப் பாட்டு’. அந்த நிகழ்ச்சி ரசிகர்களின் பேராதரவைப் பெற்றது. இது ஒரு போட்டி நிகழ்ச்சியாகும். பாடல் தொடங்கும் முதல் எழுத்தை பி.எஸ்.அப்துல் ஹமீத் கூற, போட்டியாளர் அந்த எழுத்தில் ஆரம்பிக்கும் பாடலைப் பாட வேண்டும். இது உலகம் முழுக்க அறிந்த நிகழ்ச்சியாக தொலைக்காட்சி மூலம் மறு வடிவம் பெற்றது.
பலருக்கும் பாடல் பல்லவிகள் தெரியலாம். முழுப் பாடல் தெரியாது. ஆனால் ஹமீத் ஆயிரக்கணக்கான பாடல்களை மனதில் பதிய வைத்துக்கொண்டு போட்டியாளர் பாடும்போது திணறினால் வரிகளைக் கூறி சரிசெய்வார். அவரது நினைவாற்றல் வியக்கவைக்கும்.
உமாவின் ‘வினோத வேளை’ என்றொரு நிகழ்ச்சி. அறிவிப்பாளர் கே எஸ் .ராஜா தொகுத்து வழங்குவார். இது மேடையில் நடக்கும் நிகழ்ச்சி என்று நினைக்கிறேன். பார்வையாளர்களின் ஆரவாரக் கைதட்டல் ஒலியுடன் நிகழ்ச்சி இருக்கும். போட்டியாளர், அறிவிப்பாளர் கே.எஸ்.ராஜாவுடன் தொடர்ச்சியாக இரண்டு நிமிடங்கள் பேச வேண்டும். ஆம் ,இல்லை என்று பதில் அளிக்கக் கூடாது.
வார்த்தைகளுக்கு இடையே ஐந்து வினாடிகள் மௌனம் சாதிக்கக் கூடாது. ஒரே வார்த்தையை மூன்று முறைக்கு மேல் கூறக்கூடாது. சுற்றிவளைத்துப் பேசக்கூடாது. இப்படிப்பட்ட நிபந்தனைகளோடு பேசவேண்டும். பார்க்க சாதாரணம் போல் தோன்றும். ஆனால், பலரும் தோற்றுப் போய் விடுவார்கள். யாராவதுதான் சாமர்த்தியமாகப் பேசி ஜெயிப்பார்கள். மிகவும் சுவாரஸ்யமான நிகழ்ச்சி இது. மேடையில் நடக்கும்போது அந்தக் கூட்டத்தில் பார்வையாளர்களாக நாமும் அமர்ந்து பார்த்த அனுபவத்தைத் தரும். எந்த நிகழ்ச்சியாக இருந்தாலும் தனது தனித்தன்மையால் ஒளிரச் செய்பவர் கே.எஸ்.ராஜா.
தான் வழங்கும் நிகழ்ச்சிகளிலும் பார்வையாளரைப் பங்கேற்க வைக்கும் நிகழ்ச்சிகளிலும் தன் திறமையால் அதை சுவாரஸ்யப்படுத்திவிடுவார். விறுவிறுப்பான வேகமான பேச்சும், உச்சரிப்பும், உரையாடும்போது அவரது சொல்லாடலும் அனைவரையும் கட்டிப் போட்டு வைத்திருந்தன. ‘மதுரக் குரல் மன்னன்’ என்று அழைக்கப்பட்டார். கே.எஸ்.ராஜா வந்துவிட்டாலே நிகழ்ச்சியில் தனது முத்திரையைப் பதிக்காமல் போகமாட்டார். அவர் தொகுத்தளிக்கும் திரைப்படம் சம்பந்தப்பட்ட ‘திரைவிருந்து’, தமிழ்த் திரைப்படம் சார்ந்த விளம்பரங்கள் என ஒவ்வொன்றிலும் தெரிவார். ‘உங்கள் விருப்பம்’ நிகழ்ச்சியில் மற்றவர்களைவிட அதிகமான நேயர்களின் பெயர்களை இடம்பெறச் செய்வார். அவ்வளவு வேகமாக வாசிப்பார்.
கே எஸ் ராஜாவின் உந்து சக்தியாக இருந்தவர் ஹமீது .
இவரின் அறிவிப்புத்துறையின் உள்நுழைவே சற்று வித்தியாசமானது.
வானலையில் தனது குரலும் ஒலிக்காதா என்று ஏங்கிய சின்னஞ் சிறு வயதில் இலங்கை வானொலி கலையகத்திற்கு செல்லும் வாய்ப்பு அப்துல் ஹமீத்துக்கு எதிர்பாராதவிதமாக கிட்டியது.
இலங்கை வானொலியில் அக்காலத்தில் ஒலிபரப்பப்பட்ட 'சிறுவர் மலர்' நிகழ்வை பார்ப்பதற்கான சந்தர்ப்பம் இவரது சிநேகிதன் ஜோசேப் எட்வர்ட்டுக்குக் கிட்டவே, அவருடன் இவரும் இணைந்து அந்நிகழ்வை பார்க்கச் சென்றுள்ளார்.
அன்றைய தினம் 'பச்சைமலைத்தீவு' நாடகத்தில் பூதம் பாத்திரமேற்று நடிக்கவிருந்தவர் சமூகமளிக்கவில்லை. நாடகத்தையும் இடைநிறுத்த முடியாத இக்கட்டானதொரு சூழ்நிலை. இந்நிலையில், நாடகத்தை பார்வையிட வந்த பார்வையாளர்களிடம் குரல் தேர்வு நடத்தப்பட்டது. அங்கேதான் இவருக்கான அதிர்ஷ்டமும் கிட்டியது.
குரல் தேர்வின் இறுதியில் அந்நாடகத்தில் பூதம் பாத்திரமேற்று நடிப்பதற்கான வாய்ப்பு இவருக்கு கிட்டியது. இதுவே அவர் உலக அறிவிப்பாளராக மிளிருவதற்கு ஆரம்பப்படியாக அமைந்தது. அப்போது அவருக்கு 10 வயது.
''அறிவிப்பு பணியில் ஈடுபடுபவர்களால்தான் தாய்மொழியும் வளர்க்கப்படவேண்டும். அன்று இலங்கை வானொலியில் அறிவிப்புத்துறையில் ஓர் உச்சரிப்பு பிழைவிட்டாலும், அதற்கான தண்டனை மிக வலுவனாதாக இருந்தது. அப்படித்தான் நாங்கள் அன்று எங்கள் தாய்மொழியை எல்லோருக்கும் கொண்டு சென்றோம். இன்று அறிவிப்புத்துறையில் உள்ளவர்கள் அதனை சரியாக செய்கின்றார்களா என்பதே கேள்விக்குறிதான்? இன்றைய அறிவிப்பாளர்கள் தமிழ்மொழியை மட்டுமன்றி வேற்றுமொழிகளையும் கலந்து சம்பாஷனை வடிவில் அறிவிப்புசெய்வதால் எதிர்காலத்தில் கொச்சைத் தமிழ் மட்டுமே நிலைக்கப்போகிறது...'' என்பது இவரது அறிவிப்புத்துறை சார்ந்த ஆதங்கம் ஆகும்.
இந்தியாவில் தமிழ் நாட்டில் நடப்பது போலதமிழ் உச்சரிப்புக் கொடுமை உலகத்தில் தமிழர்கள் வாழும் எந்தப் பகுதியிலும் இல்லை
மும்மதங்களைச் சார்ந்து மொழியால் ஒன்றிணைந்த தமிழ் உள்ளங்களே……. எப்போதுமே இவ்வாறு விளிப்பதுதான் என் வழக்கம். ஆதியில், ஒரே இனக் குழுமமாகவிருந்து, பின்னாளில் வெவ்வேறு மதங்களைத் தழுவியுள்ளோம் என்பதுதானே உண்மை. மதம் மாறலாம், இனம்மாற முடியுமா?.
என்று கூறி அதன் வழி நடப்பவர் ஹமீது அவர்கள் தான் .
தமிழர்களாகிய நாம் முஸ்லிம்களாக இந்துக்களாக கிறித்தவர்களாக வாழுகிறோம் .எல்லோரும் ஒரு தாயின் பிள்ளைகளே என்று தினமும் சொல்வார்
நாளைப் பொழுது நல்லபொழுதாக அமைய எல்லோருக்கும் பொதுவான இறைவனை வேண்டி வணக்கம் கூறி விடை பெறுபவன் உங்கள் அறிவிப்பாளன் அப்துல் ஹமீது என்று கூறியே விடை பெறுவது அவரின் வழக்கம்
Manikkavasagar Vaitialingam

கருத்துகள்