ஆலயம் ஆகினும் வீடு ஆகினும் அமைக்கும் பொழுது அதற்குரிய விதிகளை கவனத்தில் கொள்ளல்வேண்டும்

ஒரு வண்டில் சில்லு செய்யும் பொழுது 22/7 என்றது விதி ப்படியே அமைக்கப்படும் .மாறினால் சில்லாக இருக்காது .அப்படியே வீட்டு நிலைகளும் படிகளும் கிணறுகளும் ,திசைகளும் கவனத்தில் கொள்ளல் வேண்டும் .
சில ஊர்களில் இது பற்றிக் கவனம் எடுப்பதில்லை
மனையின் மையப்பகுதியான பிரம்மஸ்தானத்தில் தேவர்கள் வசிப்பதாக வாஸ்து சொல்கிறது. அதனால், பழைய காலங்களில் வானம் பார்த்த வகையில் பிரம்மஸ்தானத்தை திறந்த வெளியாக விடப்பட்ட வீடுகள் அமைக்கப்பட்டன. அத்தகைய பெரிய வீடுகள் இன்றும்
கேரளாவிலும் இலங்கையிலும் நாற் சார் வீடுகளாக அமைக்கப்பட்டு இருக்கின்றன .
ஆலயங்களும் தனக்கும் விதிகளைக் கொண்டுள்ளது .கவனத்தில் கொள்ளப்படல் வேண்டும்
வாஸ்து சாத்திரம் மாமுனி மாயன் அவர்களால் உருவாக்கப்பட்டது. இலங்கையில் குபேரன் ஆட்சிக்காலத்தில் பசுமை செழித்தோங்கியது விவசாயத்தின் மூலம் செல்வ வளம் பெருகியது. அதனால்தான் குபேரனுக்கு ஆன வண்ணம் பச்சை என்று உள்ளது. குபேரன் ஆட்சிக்கு பிறகு இலங்கையை ஆண்டவன் இராவணன். ராவணனின் மனைவி மண்டோதரி, மண்டோதரியின் தந்தை தான் இந்த மாமுனி மாயன். அதாவது ராவணனின் மாமனார்.
இவரே கட்டுமான தொழில்நுட்பத்திற்கான அடிப்படையை உருவாக்கியவர். இவர் இலங்கையில் வாழ்ந்ததால் இலங்கையின் நில அமைப்பை வைத்து வாஸ்து சாஸ்திரத்தை உருவாக்கினார். மாயன் நாகரிகத்தை சேர்ந்தவர்கள் இவரின் வம்சாவளிகளே.
இந்த மாயன் சாஸ்திரம் உலகில் மாயா சாத்திரம் என்கிறார்கள் .
Ist möglicherweise ein Bild von außen und Baum

கருத்துகள்